Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

6/30/2011

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)


னிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா?

மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார். ஒன்று ஆண். மற்றது பெண். 

பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது. 

இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள். இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ டியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது.

மனித முகம் உடைய பாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது. உதவி கிங்தமிழ் .

எனக்கு  நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிறீர்களா?

6/28/2011

சுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசியங்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


அன்பு  உறவுகளே இந்தக் கட்டுரையைப் பொறுமையாக படியுங்கள்.. நேரத்தைக் காரணம்காட்டி ஒதுக்காதீர்கள். அவ்வளவு முக்கியமான கட்டுரை என்றே நான் நினைக்கிறேன். இந்த கட்டுரையை வெப்துனியாவில் படிக்கும்போதே இதன் முக்கியத்துவம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் முக்கியத்துவத்தை நீங்களும் பதிவு செய்யுங்கள்..

நமது நாட்டில் சில நேரங்களில் வெளியாகும் கூர்மையான சிக்கல்கள் ஊடங்களில் செய்தியாக வெளிவந்து, விவாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும்.

'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் !? இல்லையென நிருபிப்பாரா?


த்திய அமைச்சர்கள், தங்கள் பெயரில் இருக்கும், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், பணம், நகை இவற்றின் விவரத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்' என, ஆணை பிறப்பித்திருக்கிறார், 'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங். 

அமைச்சர்களின் உறவினர்கள், பிரதமரின் அனுமதியின்றி, வெளிநாடுகளில் வேலை பார்க்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். முன்பு மாநில முதல்வராகவோ, அமைச்சராகவோ பதவி வகித்திருந்தால், அப்போது திரட்டிய சொத்துக்களையும், கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என, அதே பிரதமர் சொல்லியிருக்கிறார். 

6/27/2011

ஈழத்தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்க‌ளின் உணர்வுபூர்வ அ‌ஞ்ச‌லி


லங்கை இராணுவத்தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ஈழத்தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆ‌ம் தே‌தியை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது. 

6/26/2011

இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா ?


மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று  திருச்சியில் ஹோட்டல் பெமினாவில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.

இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார்.

அவர், ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள்

மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது... நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம்....

ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்...எத்தனையோ கஷ்டங்களை

சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்....

தனி நாடு கேட்டார் பெரியார்...சுய ஆட்சி கேட்டார் அண்ணா .... நாங்கள் அப்படி கேட்கவில்லை.... ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....

ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது...ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்... என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே .... எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான்...ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா .....எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.

குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு ... என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு...

சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது...பல கொடுமைகள் நடத்தப்படும்

காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது... இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே

தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..

இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் ... அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள்... ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள்... இதற்க்கு தீர்வு என்ன...சுதந்திரமான தனி ஈழம் தான்... அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும்... என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..

உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள்... ஈழம் எப்போது.... சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள்.... நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ?

வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம்...தன் மானத்தோடு வாழ்வோம்....’’ என்று பேசினார். உதவி நக்கீரன்.

6/25/2011

மெல்லிதயம் கொண்டோரே...


சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்...வாரீர்...

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.

6/24/2011

நேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட


யிலாசனம், கோஹினூர் வைரம் போன்றவை, நம்முடைய தேசிய சொத்துக்கள். அவை, வெள்ளையரால் கொள்ளையடிக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தை அலங்கரிக்கின்றன. 

தற்போது, ஜனநாயக நாட்டில், அரசியல் தொழில் செய்வோர், பொன்னாக, பொருளாக வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரத மாதாவை அலங்கோலப் படுத்துகின்றனர். 

நிஜம்தான் அது .. நிழல் அல்ல ...


நிஜம் படுத்திருக்கையில் 
நிழல் எங்கோ 
தலைமறைவாகிவிட்டது...!

தேடும் முயற்சியில் 
குடும்பத்தினர்,
உறவினர்கள்,
நண்பர்கள் 
நிஜத்திடம்
சொல்லிச் சொல்லி அழுகின்றனர்...!

பாவம் 
அது என்ன செய்யும்..!

த்தனை நாள் 
நிழல் தான் 
நிஜத்தை
இயக்கிக் கொண்டிருந்தது 
அது இல்லாமல் 
இது எப்படி அழும்?

திரிகள் துரோகிகளின் 
ஒருவித சந்தொஷங்களிலும்
நட்புகள் அன்புகளின்
துயரங்களிலும் 
துய்த்துப்  போன நிஜம்
கண்மூடியே
ஒன்றும் தெரியாதது போல் 
கிடப்பது நாடகமா?

ருவார்த்தை  சூடாகச் 
சொன்னால் போதுமே 
சுர்ர்ர் என்று 
ஏறுமே இதுக்கு...!

பிறப்பிலிருந்து வளர்ந்த 
நாட்களின் கயிறை 
கையில் வளைத்து 
சுருட்டிக்கொண்டு 
சென்றவன் யார்?

சென்றவன் சொல்லாமல் போன
மர்மம என்ன?

ழுது அழுது, கண்கள் வீங்கி 
இருப்பவர்களைப் பார்த்தாவது 
இறங்குவானா இவன் ?

பிறந்ததிலிருந்து
குளிக்கும்போது கைகால்களை 
ஆட்டிக்கொண்டே குளித்ததை...

ப்போது 
நான்கு பேர் தூக்கி 
பெஞ்சில் கிடத்தி 
குளிப்பாட்டுகின்றனர்...!

யாருக்கும் தீங்கிழைக்காததால்
அவர் நல்லவரென்று
நால்வர் முன்வந்து 
தூக்கிச் சென்று;

ண்ணுக்கடியிலோ
நெருப்புக்குள்ளோ மூடி 
தொலைத்துவிட்டு வீடு 
திரும்புவது;

நிஜத்தைதான்
நிழலையல்ல...!

6/23/2011

ஆறிலும் சாவு...! நூறிலும் சாவு ...!


இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு.

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள். 

முதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை!!!


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும், லேப் - டாப் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தமது உரையில் உறுதி செய்துள்ளார் கவர்னர். நேற்று அதற்கான முயற்சிகளும் நடந்துள்ளது. 

அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வில், அம்பு இருந்தால் மட்டும் போதாது; அதை பயிற்றுவிக்க, துரோணர் போன்ற ஆச்சாரியரும் தேவை. அப்போது தான், போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.

செய்யுமா  இந்த அரசு?

6/22/2011

ஒரு சந்தோசம்? அவளிடம் பேசிவிட்டோம்..!
ன்னைக் கட்டுப்படுத்த 
முயன்றும் 
என் கால்கள் நகரவில்லை 
என்னை மீறி 
என்னுள்ளிருந்து
ஒரு குரல் ...

வளை நோக்கி
ஹலோ ! நலமா?
எப்படி இருக்கிறீர்கள்?

வளின் மறு பேச்சிற்கு 
இடமளிக்காமல்
நானும் தொடர்ந்தேன்...

த்தனை மாதங்கள்
ஆயிற்று 
உங்களைப் பார்த்து...

ரி, இப்போதும் 
அங்கேயே 
வேலை செய்கிறீர்களா?
சம்பள உயர்வு 
கொடுத்தார்களா?

வள் முகம் 
ஒரு மாதிரியாக மாறியது
வெறுப்பில் 
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 
ஏதோ பேச வர 
அதை பொருட்படுத்தாமல் 
நானும் தொடர ...

ம்மா எப்படி 
இருக்கிறார்கள்.
தம்பி, தங்கை 
சுகம்தானே...

மாப்பிள்ளை பார்த்தார்களே 
உனக்கு 
திருமணம் ஆகிவிட்டதா?

விடாமல் கேட்டுக் 
கொண்டிருந்த நான் 
சிறிது நிறுத்தி 
அவள் முகத்தைப் பார்த்தேன்...

நீ யார்?
உன்னை நான்
பார்த்த மாதிரி இல்லையே?
என்றாள்...!

நானும்தான் 
உன்னை இதுவரை 
பார்த்தது இல்லை 
என மனதில் 
நினைத்துக் கொண்டு
" ஓ .. அது நீங்க இல்லையா சாரி...!"
என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

6/21/2011

இரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா?


மூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல்.

உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:

ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன?


ஐக்கிய நாடுகள் அவை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று. உள்நாட்டுப் போர், நாடுகளுக்கு இடையிலான போர், வறுமை, உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு காரணங்களால் வாழ்வைத் தேடவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் - எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு - இருப்பையும், பிழைப்பையும் தேடி நாடற்று அலையும் மக்களை ஐ.நா. பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது.

எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி, அவர்களுக்கு அகதிகள் என்ற நிலையை அளிப்பதன் மூலம், அவர்களையும் மானுட பற்றோடும், உரிமைகளோடும் அரவணைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் 2000ஆவது ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஒப்புக்கொண்டு ஏற்ற தீர்மானம் எண் 55/76 படி இந்நாள் உலக அகதிகள் நாள் ஆனது.

6/20/2011

காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய ????


ழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் தவிர்த்து, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்' என்கிறது, ஐக்கிய முன்னணி அரசு!

இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை

ஊழல் செய்தார் என, இந்திராவுக்கு எதிராக, அலகாபாத் கோர்ட் தீர்ப்பு சொன்னதால் தானே, இந்திரா கொதித்தெழுந்து, நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், மகா ஊழல் செய்து, சொத்து சேர்த்த விவரங்கள், பத்திரிகைகளில் வெளிவந்து, நாறிப்போனது தெரியாதா? 

வி.வி.கிரி ஜனாதிபதியாக இருந்தபோது, வழக்கு விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டது மறந்து விட்டதா?பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தானே, பெரிய அளவில் ஊழல் செய்கின்றனர். இந்த லட்சணத்தில், பிரதமரையும், நீதிபதிகளையும் விலக்கு அளிக்கச் சொல்வது, எந்த வகையில் நியாயம்? 

மன்மோகன் சிங் கடுமையாக நடந்து கொண்டிருந்தால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேறியிருக்க முடியாதே!ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும். சாதாரணக் குடிமகன், சீதை மீது குற்றம் சொன்னதால், ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பினானே!காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய வேண்டுமானால், யாருக்கும் கருணை காட்டக்கூடாது. 

6/19/2011

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?


2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. 

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. 

6/18/2011

சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!***********************************************************************************

அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு

ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?

ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************

இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

என்ன சொல்றீங்க?

உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?

***********************************************************************************

கருப்பசாமி : உங்களுக்கு போன் பில் எவ்வளவு வரும்?

வெள்ளைச்சாமி : ஏன் கே‌க்குற? எ‌ப்பவுமே ஒண்ணே ஒண்ணுதான் வரும்!

***********************************************************************************

சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

ஏன் அப்படிச் சொல்றீங்க?

கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!

***********************************************************************************

காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?

அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!

***********************************************************************************

கவலப்படாதீங்க சார் நாம அ‌ந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!

அடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்‌சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?

***********************************************************************************

6/17/2011

முதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை!?

 டந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் கூறும் பாடம் இதுதான்... 

அங்கொருவர், இங்கொருவர் விரும்பலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்போக்கும், இலவசங்களுக்கு எதிரானது. இலவசங்கள், தரமானதாக இருக்கவே இருக்காது. முதல்வர் ஜே - வும் இலவசங்களை கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என எதிர் கேள்வி கேட்கவேண்டாம். இந்த இலவச கலாசாரத்தை அறிமுகப் படுத்தியவர்கள் யார் என்று சிந்தியுங்கள் நண்பர்களே..

இலவசமாக, ஜரிகைக் கறைப் போட்ட பட்டுப்புடவை, பட்டு வேட்டியா வழங்குகின்றனர்? 

நான் சாப்பிடப் போகும் நேரத்தில், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். "வாங்க, சாப்பிடலாம்' என அழைத்தேன். அவரோ, "இப்பதான் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்' எனக் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, அவர் மனைவி வந்தார். "என் கணவர் இங்கே வந்தாரா? சாப்பிடாமல் வந்துட்டாருங்க' என, பரிதாபமாக கூறினார்.

மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம். 

ஆட்சியாளர்களிடம், நல்ல நடத்தையை மக்கள் எதிர்பார்க்கின்றனர், இலவசங்களை அல்ல. 

அதனால்தான், 'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே, மலர்தலை உலகம்' என, புறநானூறு கூறுகிறது. அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, எக்காலத்திலும் சரி, மக்கள் இயல்பு ஒன்று தான்.

நல்லாட்சி  புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.

அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!


இந்தப் பதிவு நண்பர்  வைகை அவர்களின்  மனக்குமுறல் .. இதை படிக்கும் போது நமக்கும் இதே மனநிலைதான்.. நண்பர்களே தயவு செய்து முழுவதும் பொறுமையாக படித்து தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.


சிங்கிள் மேனுக்கு பொறக்காத சிங்கள நாய்கள்!


குறிப்பு - இந்த பதிவு எப்போதும்போல் சாதாரண மனநிலையில் எழுதிய பதிவல்ல.. சிங்கள நாய்களின் வெறியாட்டங்களை படம்பிடித்த காணொளிகளை பார்க்க வேண்டாம் என்று இரண்டுநாள் கடத்தி.. நேற்று இரவு அதை பார்த்தேன்.. 

அதன் வெளிப்பாடுதான் இந்த குமுறல்! இதில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருக்கலாம்.. உங்களுக்கு தவறென்று தோன்றினால் இத்தோடு தவிர்த்துவிட்டு சென்று விடுங்கள்! நான் சொல்வது சரி என்று தோன்றினால் தொடர்ந்து செல்லுங்கள்!சிங்கள பேடி  நாய்களே! 
எம் குலப்பெண்கள் வீரத்தோடு போராடும்போது அவள் துப்பாக்கிக்கு பதில் சொல்லதெரியாத பேடிகள்... இறந்துகிடக்கும் என் சகோதரியின் மார்புகளை அறுப்பேன் என்கிறாய்?.. உனக்கு பாலூட்டிய உன் தாயின் மார்புகளை அறுத்து எறிய வேண்டியதுதானே? 

உயிரோடு இருக்கும் வரை என் சகோதரியின் தலை மயிரை கூட தொட முடியாத நீ?.. அவள் இறந்த பிறகு ஆடை களைந்து பார்க்கிறாய்.. வெட்க்கமாக இல்லை?.. பிணத்தோடு புணர்ச்சி கொள்ளும் ------------- மகன்களா? 

இது யார் கொடுத்த தைரியம்? உன் ராஜபக்சேயா?.. அவன் மனைவியும் ஒரு நாள் இறப்பாள்.. அவனிடம் சொல்லிவிட்டு அவள் ஆடைகளையும் கலைந்துபார்! அவளுக்கும் அதுதான் இருக்கும்! இன்னும் முனங்கி கொண்டிருக்கிறாள் என்று கேலி பேசும் நாய்களே.. அவள் அப்போது முனங்கியதுகூட வலியால் இருக்காது! 

வெறி நாய்களின் வேட்டையை தடுக்காமல் செல்கிறோமே என்ற ஆற்றாமையில் இருக்கும்! இறந்து கிடக்கும் பிணங்களில் கூட இவள்தான் அழகு என்கிறாயே? என் சகோதரிகள் அத்தனை பேரும் அழகுதாண்டா! உன் சகோதரி அழகாக இல்லையென்றால் போய் ராஜபக்சேவிடம் கேள்! அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!

 
ஏன்டா ராஜபக்சே நாயே? உனக்கு யார்கொடுத்த தைரியம் இது? வேசியாக பிறக்க வேண்டியவன் ஆண்மகனாய் பிறந்துவிட்டாய்! வேசிதான் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டாள்! அதுபோலதான் நீயும்.. சீனா..பாகிஸ்தான்..இந்தியா.. இப்படி உன் நாட்டின் கற்ப்பை கூறு போட்டு விற்கும் வேசி நீ! 

இந்த கானோளிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? நீ ஏன் சொல்ல வேண்டும்? அதான் உன் அடிமை இந்தியா இருக்கிறதே? இப்போது பார் நான் உன்னை திட்டுவதற்கு கூட இந்திய இறையாண்மைக்கு ஊறு என்று ஏதோ ஒரு அல்லக்கையோ இல்லை கதர்சட்டையோ பாய்ந்துவரும்! பரதேசிகள்.. 

நீ வீசும் எலும்பு துண்டை நக்குவதற்கு இந்தியாவில் ஆள் இருக்கும்வரை நீ இப்பிடித்தான் எம் பெண்களின் ஆடைகளை களைந்து கொண்டிருப்பாய்.. நீ என் சகோதரிகளின் பாதங்களை நக்கி கழுவும் காலமும் வரும்! கட்டபொம்மன் காலத்தில் இருந்து தமிழனின் சாபக்கேடு காட்டிக்கொடுப்பது! எட்டப்பனில் இருந்து கருணா வரை! அட அல்லக்கைகளா... நான் இலங்கை கருணாவை சொன்னேன்! பெயரில்கூட என்ன ஒற்றுமை? 


 
தமிழின தலைவரே! நீங்கள் இந்த காணொளிகளை பார்த்தீர்களா? அதுசரி.. உங்களுக்கு ஏது நேரம்? திஹார் ஜெயிலில் ஒரு பூவை வைத்தால் கூட வாடிவிடும்" இது நீங்கள் சொன்னது! ஊழல் செய்து சிறையில் இருக்கும்போதே இப்படி பேசுகிறீகளே? என் சகோதரிகள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் அப்பனுக்கு பிறந்ததுதான் அவள் தவறா? 
நானும் நேற்றிலிருந்து பார்க்கிறேன்.. இதைப்பற்றி ஒரு அறிக்கை கூட வரவில்லை.. அது எப்படி வரும்? இதை பற்றி பேசினால் உங்கள் மௌனங்களையும் பேச வேண்டும்! சிங்கள நாய்கள் இப்படி வேட்டையடியதுதான்.. 


நீங்கள் சொன்ன மழை விட்டும் தூவானம் விடாதா? பார்வைக்கு வந்த தூவானமே இத்தனை என்றால்? பார்வைக்கு வராத கொடுமையெல்லாம் எத்தனையோ? கேவலம் பதவிக்காத்தானே அமைதி காத்தீர்கள்? 


அந்த பதவியை நாங்கள் பறித்து விட்டோமே? இனியாவது மௌனம் கலைக்க கூடாதா? ஓ ..மத்தியில் இருக்கிறதோ? அட அல்லக்கைகளா.. எல்லோரும் சொம்பு தூக்கிட்டு போங்க ஐயா டெல்லில இருந்து தீர்த்தம் வாங்கி கொடுப்பாரு.. மறக்காம வாங்கிட்டு வாங்க!


அன்னை சோனியாவே! இந்தியாவுக்காக உயிர் துறந்தார் என் புருசன்னு சொல்லியே.. ஒரு இனத்தையே அழிக்க துணை போனதை எப்படி எடுத்துக்கொள்வது? உமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர்கள சொன்னேன்! ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்கு மேல உச்சா போனாக்கூட சொல்லிட்டு போற நல்லவர்கள்! இந்த காணோளிக்கும்  பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! 

உலக நாடுகளே விழித்துக்கொண்டு கண்டிக்கும்பொழுது ராஜபக்சேவுக்கு தடுக்கு தூக்க வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் இந்திய பாதுகாப்பு என்பார்கள்.. 500 இந்திய மீனவர்களை இதே இலங்கைதான் கொன்றது... நீங்கள் எங்களை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்? அந்த பக்கம்  சீனா அணைகட்டுவதை கண்டிக்க வக்கில்லாமல் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்! நீங்கள் எதிர்காலத்தில் எங்களை பாதுகாப்பீர்கள் என்று நம்பிக்கை இல்லை! ஆனால் நிழல் காலத்தில் எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள்.. அது போதும்!

கடைசியாக தமிழக முதல்வரே! உங்கள் தீர்மானத்தை வரவேற்கிறோம்.. இருண்டுபோன வாழ்வில் இது ஒரு வெளிச்சப்புள்ளி.. ஆனால் இந்த வெளிச்சத்தையும் காகிரசுடன் கூட்டணி என்ற காற்றை வைத்து அணைத்து விடாதீர்கள்! போர் என்றால் பொது  மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று சொன்னவர்தான் நீங்கள்.. ஆனால் இன்றைக்கு உங்களை நம்பித்தான் ஆகவேண்டும்..வேறு வழியில்லை!  காங்கிரசுடன் கூட்டணி என்று சின்ன ஊசலாட்டம் இருந்தால் தயவுசெய்து அந்த காணொளிகளை பாருங்கள்..பிறகு முடிவெடுங்கள்!

 
ஊழல் செய்த பணத்தில் ஊடகங்கள் வைத்திருந்தால் இப்போது தமிழ் நாட்டில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்! மன சாட்சி இல்லாத மர மண்டைகள்! வட இந்திய ஊடகங்களை பத்தி சொல்லவே வேண்டாம்.. நடிகை உள்ளாடை போடலைனா ஒன்றை பக்கம்.. சமாதில குத்தாட்டம் போட்டா கவர் ஸ்டோரி! 


ராகுல் காந்தி குடிசைல சாப்ட்டா ஸ்கூப் நியூஸ்! 
அட பதர்களா? ஹிட்லர் கொன்னாரு.. கொதருனாருன்னு வரலாற படிக்கிறீங்களே? அத ஒருத்தன் அப்பிடியே செய்யிறானே அத ஏன்டா எவனுமே சொல்ல மாட்டேங்கிறிங்க? கருப்பு பணம் வச்சிருக்க பத்திரிக்கைகாரன் கருப்பு பணத்த  மீட்ப்போம்னு நியூஸ் போடறான்! உங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்கடா.. என் சகோதரிகளின் இந்த கோலத்த பார்த்துட்டு முடிவெடுங்கடா... !
 

இதை பார்த்துட்டு எந்த அல்லக்கை.. கதர்சட்ட வந்து குதிச்சிங்க.. இந்த பதிவுல இல்லாத அசிங்கமான வார்த்தையெல்லாம் சேர்த்து திட்டுவேன்! போங்கடா..போய்.. உன் வீட்ல உள்ள பொம்பள புள்ளைகலாவது பத்தரமா பார்த்துக்கங்க!

6/16/2011

எச்சரிக்கை !!! காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் மன்மோகன் சிங் !!!


காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.

விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்? குடிசை வாழ் குப்பனும், சுப்பனும் போல, இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை? எல்லாரையும் போல, இவர்களுக்கும் தலா ஒரு ஓட்டு தானே! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் கூறித்தானே சுதந்திரம் பெற்றோம்!ஊழலில் திளைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையிலுள்ள காங்கிரசுக்கு, இது ஒரு கடைசி வாய்ப்பு. 

எந்த வில்லங்கமும் ஏற்படுத்தாமல், லோக்பால் சட்டத்தை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்றி, செயல்படுத்த வேண்டும்.இல்லாவிடில், சுதந்திரம் பெற்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.

இன்றைய காங்கிரஸ் ஆட்சி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும், அடுத்து வரப்போகும் ஆட்சி, கண்டிப்பாக இச்சட்டத்தை நிறைவேற்றும். அதுவும், முன் தேதியிட்டு அமல்படுத்தி, ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும் இது காலத்தின் கட்டாயம்.

சிந்தியுங்கள்  உறவுகளே...

6/15/2011

சட்டசபைக்கு செல்வாரா கருணாநிதி?


முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கும், இந்நாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கும், ஒரே ஒரு விஷயத்தில், மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அது, ஒருவர் தமிழக முதல்வராக இருக்கும் போது, மற்றவர், சட்டசபைக்குச் சென்று பணியாற்றுவதை புறக்கணிப்பது தான். 

எனவே, இம்முறை சட்டசபையை புறக்கணிக்கும் அச்சுழற்சி, கருணாநிதிக்கு உரியது.திருவாரூர் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற கருணாநிதி, தன் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்காகவும் பணியாற்ற, சட்டசபைக்கும் தவறாமல் செல்ல முன்வர வேண்டும்.
செய்வாரா  முன்னாள் முதல்வர்?

6/14/2011

ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!


தையோ தேடுகையில்
யதேச்சையாய்க் கிடைத்தது
நான் உனக்கு
அனுப்பாமல் விட்ட
கவிதைக்   கடிதம்  ஒன்று ...!

சில செய்திகளை
சொல்லியிருக்கக் கூடும்
சில இடைவெளிகளை
நிரப்பியிருக்கக்கூடும்
அந்த  கடிதம்  ...!

னுப்பவும் இயலாமல்,
கிழிக்கவும் முடியாமல்,
அந்தக்  கவிதைக்  கடிதம்
இப்போதும்  என்னிடமே,
இருக்கிறது ....!

ரு  காதலின் சவப்பெட்டியாய் ...!

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?


ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி ‌விர‌க்‌தியுட‌ன் கே‌‌ட்டு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2009ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு‌ம், இல‌ங்கை இராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம் போ‌ர் உ‌ச்சக‌ட்ட‌த்தை அடை‌ந்தபோது ம‌த்‌திய அர‌சி‌ல் அ‌ங்கு‌ம் வ‌கி‌த்து வரு‌ம் ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் போ‌ரை ‌நிறு‌த்த‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள் எ‌ன்று ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் கூ‌க்கு‌ர‌ல் எழு‌ப்‌பியபோது செ‌விட‌ன் கா‌தி‌ல் ஊ‌திய ச‌ங்குபோல‌த்தான் இரு‌ந்தா‌ர் கருணா‌நி‌தி.

த‌ற்போது இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்காக கட‌ந்த 1977 ஆ‌‌ம் ஆ‌ண்டு சென்னை‌யிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி நடத்தினே‌ன், 1983ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்ட‌‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தே‌ன் எ‌ன்று‌ கூ‌று‌ம் கருணா‌நி‌தி, ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்தபோது 2009ஆ‌ம் ஆ‌ண்டு இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக எ‌ன்ன செ‌ய்தா‌ர் எ‌ன்பதுதா‌ன் த‌ற்போதைய கே‌ள்‌வி.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம் உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌‌றி மெ‌ரினா க‌ட‌ற்கரை‌யி‌ல் உ‌ள்ள அண்ணா நினைவிடத்தி‌ல் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணா‌நி‌தி, ‌சில ‌ம‌ணி நேர‌த்‌திலேயே இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌‌றினார் என்று சொ‌ல்‌‌லி‌வி‌‌ட்டு போரா‌ட்ட‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு ம‌திய உணவு‌க்கு ‌வீ‌ட்டு‌க்கு செ‌ன்று‌வி‌ட்டா‌ர். 


உ‌ண்ணா‌விரத‌த்தை முடி‌த்து‌வி‌ட்டு செ‌ன்ற அடு‌த்த‌ ‌நி‌மிடமே பாதுகா‌ப்பு வளைய‌த்தில் இ‌ரு‌ந்த த‌மி‌ழ் ம‌க்களை அ‌ந்நா‌ட்டு இராணுவ‌‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட கு‌ண்டுகளை கொ‌த்து‌க் கொ‌த்தாக ‌வீ‌சிக் கொ‌ன்றது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து வருகிறதே என்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கருணா‌நி‌தி‌யிட‌ம் கே‌ட்டபோது, “மழை ‌வி‌ட்டுவிட்டது, ஆனால் துவான‌ம் ‌விட‌வி‌ல்லை” எ‌ன்றா‌ர்.


சிந்தியுங்கள்  உறவுகளே.......

6/13/2011

நீயும்.... நானும்.....


அத்தியாயம்- ஒன்று

ற்றங்கரை ஓரத்தில் 
மணல் குவித்து 
வீடு கட்டி - அதில் 
விடியும் வரை குடியிருந்து 
விளையாண்ட கதை...!

கூட்டாஞ்சோறு சமைக்க
உங்க வீட்டில் ஒரு படி அரிசியும்
எங்க வீட்டில் கொஞ்சம் உப்பும் புளியும்
திருட்டுத்தனமாய் எடுத்து வந்து 
கூட்டாஞ்சோறு சமைத்துக் 
கூடி நின்று தின்ற கதை...!

தமிழன் சினிமாவிற்கு அடிமையா?

மிழ்நாட்டின் பின்னடைவுக்கு தமிழர்களின் சினிமா மோகம்தான் காரணம் என ஒருசில அரசியல்வாதிகள் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறவர்கள் தங்களது வாக்கு வங்கியை பங்கு போடுவதால் ஏற்பட்ட எ‌ரிச்சலில் அவர்கள் செய்யும் பிரச்சாரம் இது. விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கையில் சினிமா மோகம் என்ற ஒற்றை கருத்துடன் அவர்கள் கூவுவது அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டிவிடுகிறது.

ஆனாலும் அவர்கள் கூறும் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. கலைத்துறையானாலும், அரசியலானாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனி மனித வழிபாடும், சினிமா நட்சத்திரங்களை அரசியல்வாதிகளாக உருமாற்றும் முனைப்பும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்த இரண்டும் அதிகமுள்ள மாநிலமாக முன்பு ஆந்திரா விளங்கியது. கட்சியை நடத்த முடியாமல் பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தை சிரஞ்சீவி காங்கிரஸுடன் இணைத்த நிகழ்வு, ஆந்திர மக்களின் விழிப்புணர்வை காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தின் அழிவை முன்னிறுத்தி நமது சினிமா மோகத்தை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

ஆந்திராவில் அளப்ப‌ரிய ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சிரஞ்சீவி. அவரளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட சினிமா நட்சத்திரம் அங்கில்லை. விஜயசாந்தியும்கூட ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டே அரசியல் அரங்கில் தொடர முடிகிறது. பெரும் மக்கள் ஆதரவு உள்ள சிரஞ்சீவியால்கூட கட்சியை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பது சினிமா மோகத்தை அம்மாநில மக்கள் விலக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற ஆரோக்கியமான அம்சத்தின் முதல் வெளிப்பாடு. ஆனால் தமிழகம்...?

ஐம்பது வயது வரை நடிகைகளின் தொப்புளில் பம்பரம்விட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென கட்சி ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் போது எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் பின்னால் செல்கிறோம். 25 வருடங்களாக திரையுலகில் நீடித்தும் ஒரு சிறந்த படத்தை தர இயலாதவர்கள் எப்படி நல்லாட்சி தருவார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை. சிரஞ்சீவியால் ஆந்திராவில் கட்சியை நடத்தவே முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார்.(நன்றி வெப்துனியா)

இந்த வித்தியாசம் எப்படி வந்தது? இத்தனைக்கும் சிரஞ்சீவி அளவுக்கு ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு செயல்பாட்டில் தன்னையோ தனது ரசிகர்களையோ ஈடுபடுத்திக் கொண்டவரல்ல விஜயகாந்த். ச‌ரி, ஏதேனும் உருப்படியான போராட்டம்? பொருளாதார அறிவு? ஏதேனும் சாதனைகள்? ம்ஹும்... எதுவுமில்லை. 
சிந்தனை  செய்வோம் உறவுகளே....

6/12/2011

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா!?


சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, ‘’இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது’’ என்று தெரிவித்தனர். 

2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்டி


த்து வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற்றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர்ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர் களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு ஆகியவைகள்தான். 

அதனால்தான் தமிழகம் வெற்றி சிகரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதில் மிகப்பெரிய சாதனையாக, இந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிலிடத்தை பெற்று தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் திவ்ய தர்ஷினி. அவரது வெற்றி இத்தேர்வுக்கு தயார் செய்துவரும் 'நன்றி - பொது அறிவு உலகம்' வாசகர்களுக்கு  அளித்த சிறப்புப் பேட்டியை உங்களுக்காக இங்கு வெளியிடுகிறோம்.

வாழ்த்துகள். உங்களின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் முதல் ரேங்க் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தை முதன்மையாக்க நான் ஒரு காரணமாக இருக்கும் போது, அது மிகவும் சந்தோஷத்தை தருகிறது. தமிழ்நாட்டிற்கு என்னால் பெருமை சேரும் என நினைக்கிறேன்.

உங்கள் படிப்பை பற்றி கூறுங்கள்.....

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நான் சென்னையில் உள்ள அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். பின்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் லாவில் சட்டம் படித்தேன். படிப்பை முடித்த பின்னர் வங்கி போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிக்கு சேர்ந்தேன். இப்போதுவரை வங்கியில் பணிப்புரிந்து வருகிறேன்.

சட்டம் படித்த நீங்கள் ஏன் சிவில் சர்வீசஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?

சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென விரும்பினேன். அதற்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நல்ல ஏணிப்படியாக இருக்கும் என நினைத்தேன். அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வை தேர்ந்தெடுத்தேன். இதன் மூலமாக ஏதாவது நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன். கண்டிப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற உங்களின் படிப்பு இரகசியம் என்ன?

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தந்த நம்பிக்கை, இதோடு எனது வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் பிரபாகரன் சார். அவர் இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வெற்றியில் எந்த அளவிற்கு பெற்றோர்களும் நண்பர்களும் பங்காற்றினர்?

அவர்கள் இந்த வெற்றியை அடைவதற்கு பல விதங்களில் உதவியாக இருந்தனர். இந்த வெற்றியை அடைவதற்கு நம்பிக்கை, தைரியம், ஊக்கம் மற்றும் சுதந்திரம் கொடுத்தனர்.

இந்த தேர்வுக்கு எவ்வளவு நேரம் தீவிரமாக படித்தீர்கள் ?

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிப்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். நான் இந்த தேர்விற்கு ஆண்டு முழுவதும் கடின உழைப்பை செலுத்தினேன். தினமும் நான்கு மணி நேரம் படிப்பேன். வாரத்தில் ஐந்து நாட்கள் படிப்பேன் அவ்வளவுதான்.

பொது அறிவு தாளுக்கு எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களை படித்தீர்கள்?
தினமும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்களை படித்துவிடுவேன். அதற்கடுத்து பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிடும் யோஜனா, குருஷேத்திரா, சி.எஸ்.ஆர் இயர்புக் ஆகியவற்றை படித்தேன்.

இந்த தேர்வில் உங்களின் விருப்பப் பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?


பிரிலிலிமனரி தேர்வில் பொது நிர்வாகம் விருப்பப்பாடத்தையும், மெயின் தேர்வில் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய இரண்டையும் விருப்பப்பாடங்களாக தேர்ந்தெடுத்தேன்.

இந்த விருப்பப்பாடங்களை தேர்ந் தெடுத்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பொது நிர்வாகம் எனக்கு மிகவும் பிடித்த விருப்பப்பாடம். இதற்கு அனைத்து நூல்களும் எளிதாக கிடைக்கிறது. இரண்டாவது விருப்பப்பாடமான சட்டம் எனது கல்லூரி பாடம். இதனால் தேர்வுக்கு தயார்செய்ய எளிதாகவும் இருந்தன.

இந்த தேர்வை எத்தனை முறை எழுதினீர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வை முதல் முறையாக எழுதியபோது பிரிலிலிமனரி தேர்விலேயே வெற்றி பெறமுடியவில்லை. எனது இரண்டாவது முயற்சியில்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறேன்.

பொது அறிவு தாள்களுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பொது அறிவுக்கான பல நூல்களையும், இண்டர்நெட்டிலிலிருந்து தேவையான குறிப்புகளையும் தயார் செய்து படித்தேன். மொழித் தாள்கள் மற்றும் கட்டுரை தாளுக்கு விசேஷமான தயாரிப்பு எதையும் செய்யவில்லை.

நேர்முகத் தேர்வு எப்படியிருந்தது?

இண்டர்வியூ போர்டு மிகவும் இயல்பாக இருந்தது. தன்னம்பிக்கையுடன் இருந்தேன். பல கேள்விகள் இயல்பாகவும் நுட்பமாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன். மிகவும் திருப்திகரமாக இருந்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை...

புதிதாக வந்துள்ள சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் அப்படி ஒன்றும் கடினமானதல்ல. பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு படித்தால் வெற்றிப்பெற முடியும். அதனால் இந்த தேர்வுக்கு படிப்பவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு வேண்டும். இவை நிச்சயம் வெற்றிப்பெற உதவும்.
 

6/11/2011

தமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங்., பரபரப்பு புகார்


"தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் தென் மாநிலங்களில் ஓட்டு வங்கியை இழந்து விட முடியாது என்பதால், இந்த மாநிலங்கள் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் ஓட்டு வங்கியை இழப்பது சரியல்ல. அதனால், இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர், அரசு கருவூலத்திற்கு ஏற்படுத்திய மிகப்பெரிய இழப்பால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியால், தி.மு.க., தலைமையிலான அரசு செய்த நல்ல பணிகளையும் மறந்து, மாற்று கட்சிகளுக்கு ஓட்டளித்துள்ளனர். ஊழல் விவகாரத்தில், தி.மு.க.,வுடன் தொடர்புடைய பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்ய மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இழந்த புகழை காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அத்துடன் கீழ்மட்ட அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.முக்கிய நபர்கள் தொடர்புடைய பல ஊழல் வழக்குகளை விசாரணை நிறுவனங்கள் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்த விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளன. விசாரணை நிறுவனங்கள், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சமின்றி செயல்படும். எந்தவிதமான இடையூறும் இருக்காது என்பதற்கு, இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஒரு உதாரணமாகும்.இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...


பூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து  கொண்டிருந்தோம்.

வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.

ந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.

ந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .

நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!

நன்றி: சந்தியாவின் முத்தம் .
ஆசிரியர்: கவிதா.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்(2008).

6/10/2011

ஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்? பரபரப்பு செய்தி


2ஜி ஊழல் வழக்கு கனிமொழியை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரத் தொடங்கி உள்ள நிலையில்,அவர்களாகவே கழுத்தை பிடித்து தள்ளுவதற்குள் நாமே முந்திவிடலாம் என்ற எண்ணத்தில்தான் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை இன்று அவசரமாக கூட்டினார் கருணாநிதி.

ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கட்சியினரின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டார் கருணாநிதி.

கனிமொழி தாக்கல் செய்த பிணை மனு கோரிக்கை,டெல்லி நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டவுடன் கருணாநிதி மிகவும் மனமுடைந்து போனார்.

மகள் சிறையில்; கூடவே தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காவு கேட்கும் ஏர்செல் விவகாரம் என்று அடுத்தடுத்து திமுகவின் இமேஜை காலி செய்யும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில்,அடுத்ததாக மு.க. அழகிரியையும் குறிவைத்து, குறிப்பாக தா.கிருட்டிணன் கொலை வழக்கில், வில்லங்கம் ஏதாவது அரங்கேறலாம் என்ற அச்சம் கருணாநிதியை வாட்டுகிறது.அப்படி ஒன்று நிகழும் பட்சத்தில் அழகிரியையும் அவமானப்படுத்தி அமைச்சரவையிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் நிர்ப்பந்திக்கும்.

மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றும், காங்கிரஸ் இப்படி முதுகில் கத்தி சொருகுகிறதே என்ற ஆதங்கமும், கோபமும்தான் இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்ற மனநிலைக்கு கருணாநிதியை தள்ளியதாக தெரிகிறது.

உடனடியாக திமுகவின் மத்திய அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைப்பது என்ற முடிவை கருணாநிதி ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும்,கனிமொழி பிணை மனு மீதான தீர்ப்புக்காகவே அவர் காத்திருந்ததாகவும் கூறும் அறிவாலய வட்டாரங்கள், தமது இந்த முடிவை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலுவை கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்துதான் பாலு நேற்றிரவு பிரதமரை சந்தித்து கருணாநிதியின் முடிவை தெரிவித்ததாகவும், கூடவே திமுகவுக்கு எந்தவிதத்திலும் உதாவமல் கைவிட்டது குறித்த கருணாநிதியின் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்ததாகவும் தெரிவிக்கின்றன.

மேலும் திமுக முடிவை பிரதமரிடம் தெரிவித்த பாலு, சோனியாவை சந்திக்காததன் மூலம், காங்கிரஸ் மீது திமுகவுக்கு இருக்கும் கசப்புணர்வை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு நேற்று இரவு தெரிவித்த தகவல் உடனடியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வந்த உத்தரவின் பேரிலேயே,"காங்கிரஸ் சந்தேஷ்" என்ற காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவையிலிருந்து திமுக விலகும் முடிவை பிரதமரிடம் தெரிவித்த பாலு, சோனியாவை சந்திக்காதது, காங்கிரஸ் மீது திமுகவுக்கு இருக்கும் கசப்புணர்வை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தற்போது பிரதமரை டி..ஆர். பாலு சந்தித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகும் முடிவை முன்கூட்டியே தெரிவித்தது கூட, தமிழக சட்டசபை தேர்தலின்போது தொகுதி பங்கீடு விடயத்தில் எழுந்த கருத்துவேறுபாட்டை காரணம் காட்டி,காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் சமரசமானது போன்று இந்த முறை இல்லை என்று கூறுவதற்கும், முடிவை முன்கூட்டியே தெரிவித்து பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் தடுக்கவுமே (கனிமொழியில் சிறையில் இருப்பதால் கூடுதல் சிக்கல் ஏதும் கொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்) என்று கூறுகிறது அறிவாலய வட்டாரம்.

இந்நிலையில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு நேற்று இரவு தெரிவித்த தகவல் உடனடியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வந்த உத்தரவின் பேரிலேயே,"காங்கிரஸ் சந்தேஷ்" என்ற காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது இன்று கூட உள்ள திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் அக்கட்சி, இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நிச்சயம் தங்களை விமர்சிக்கலாம் என்பதாலும், தேர்தல் தோல்விக்கு அதுதான் முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டலாம் என்பதாலும், அக்கட்சி விமர்சிப்பதற்கு முன்னர், நாம் முந்திவிட வேண்டும் என்ற தந்திரத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தலையங்கம் எழுதப்பட்டதாக தெரிகிறது.

அத்துடன் தமிழகத்தில் திமுகவை கழற்றிவிட்டு, ஜெயலலிதாவின் அதிமுகவுடனோ அல்லது விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளுடனோ கூட்டணி வைக்கும் நோக்கத்துடன், தென்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி மற்றும் அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த தலையங்கம் அறிவுரை கூறுகிறது.

வருகிற 13 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ள ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கம் வெளியாகி இருப்பது, தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக ஜெயலலிதாவை வளைக்க திட்டமிட்டு காங்கிரஸ் காய் நகர்த்தி வருவதாகவே டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்து, வரும் நாட்களில் இந்த கூட்டணி மாற்றம் வேகம் பிடிக்கலாம்! 

நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்குமட்டும்?!


ம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .

சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்

நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.

பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.

வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.

வை சில வேலை
நிஜங்களாகலாம்.

சில வேலை
பொய்களாகலாம்.

ம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!

6/09/2011

இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)


முதல் இரு பகுதிகளை படிக்க

ரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான்  நினைத்தேன்..

னால் 
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.

ன் கண்கள் 
என்னையே 
குறி வைத்தன.

னக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.

சில 
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.

ப்போதாவது 
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.

காதலனை 
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம் 
என்றாய்.

னதிற்குள்
மழைத்துளி பெய்தது போல் 
இருந்தது எனக்கு.

ன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!

ருநாள்  சந்திப்பில்...

டற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி 
எது பிடிக்கும்? என்றாய்.

நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும் 
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும் 
என்றேன்.

ப்போது 
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.

நாட்கள் நகர்ந்துப் போனது...

ன்றொருநாள் 
அவசரமாய்  ஓடி வந்து
நீ சொன்ன 
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?

தொடரும்...

6/08/2011

ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்!?


ச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது ச‌ரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது.

ச‌ரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநா‌ட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும் உயிரோடு இருப்பது போல் கதை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர். 

தலைவர்  பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா?

அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன?


"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார். 

அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது

கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான். 

அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா? 

தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்? 

"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.

இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)


இது  பகுதி - 2

ரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !

னதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட  தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.

ன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை 
நான் 
ஆக்கிரமித்துக் கொண்டேன்.

தோ வருகிறாய் 
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி 
திரும்பிப் பார்த்தாய்.

ப்போதும் நீ 
பேசவில்லை
உன் உதடுகள்  தான் 
ஒரு புன்னகை 
புரிந்துவிட்டு போனது.

தில் 
என்னையே மறந்துப் போனேன்
என்  காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?

மீண்டும் கலவரமானேன்!!!

ன்று
இரவு முழுவதும் 
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக 
விடிந்தது...!

மீண்டும் உன்முன் 
உதயமானேன்,
நீ  என்னை 
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

ரிதான் 
என் நம்பிக்கை 
மீண்டும் ஒருமுறை 
தோற்றுப் போனது !!?

தொடரும்..