இந்த வருடம் 'எண் 1ஐ' அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய இரண்டு தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப் படுகிறது.
மேலும் 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. 11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது.நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக் கூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன.
இந்த ஆண்டின் போன அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்.
இதோ இன்னும் ஒருநிமிடத்தில் இந்த அதிசய நாளுக்கு(1-11-11)நாம் விடைக்கொடுக்கப் போகிறோம். மேலும் இன்னொரு அதிசய நாளான 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது காத்திருப்போம்.










