Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

2/28/2011

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?


மக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!

***********************************************************************************


னம் வளர்க்கும்
தற்கொலை படைகள்
இலைகள்...!

***********************************************************************************


பாலின் மேலாடை
பார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!

***********************************************************************************


டுத்த வீட்டு அண்ணன்
மாலை போட்டு இருக்கிறார்...
பத்து வயதுக்கு மேலேயும்
அறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?

***********************************************************************************

 
ந்த வகையிலாவது
எவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!

***********************************************************************************

முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்...                                                                      2. இந்திய வெளியுறவுத் துறை                                                
                                             3. இனி சன்டேன்னா சினிமாதான்...


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

2/26/2011

விலைவாசி உயர்வு விபரீதம் - பகீர் ரிப்போர்ட்


கைப்பேசி வைத்துள்ள பலருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.  பலருக்கும் இந்த  மீன்கதை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கதையை மேலும் மெருகூட்டிப் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடையில் கூட்டத்துக்குப் பஞ்சமே இருக்காது. இறைச்சி விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் இப்போது கூட்டம் குறைந்துவிட்டது. 

நண்பர் விலை கேட்டார். கிலோ ரூ. 300-க்கு செம்மறிஆடுதான். ரூ. 400 இருந்தால் வெள்ளாட்டுக்கறி. இப்போது ஐயப்பர் சபரிமலை சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் விலை இறங்கவில்லை என்கிறார் இறைச்சிக் கடைக்காரர். மீன் விலை கேட்டார். கட்லா ரூ. 200 என்றதும்  மயங்கிவிட்டார். நாட்டுக்கோழியும் கிலோ ரூ. 300 கூடுதல் விலை. வெள்ளைக்கோழி விலை நூறுதான். இந்த சீக்குக் கோழியை உண்பதைவிட சும்மா இருக்கலாம் என்று அலுத்துப்போன நண்பர், ஒரு தூண்டில் தயார் செய்து குளத்தில் மீன்பிடிக்கப் போனார். 

சிக்கின சில கெண்டைகள். வீட்டுக்கு வந்த நண்பர் மனைவியை அழைத்து மீன்குழம்பு வைக்கச் சொன்னார். அதற்கு அந்த அம்மணி, "" சாமி நான் கடையிலே சாமான் வாங்கப் போனேன். வெங்காயம் கிலோ ரூ. 100, பூண்டு கிலோ ரூ. 600, கசகசா கிலோ ரூ. 300, தேங்காய்1 ரூ. 10, சீரகம் கிலோ ரூ. 400, ரூ. 150-க்குக் குறைவாக எந்தச் சமையல் எண்ணெயும் இல்லை. துவரம்பருப்பு வாங்கப் போனேன், எந்தப் பருப்பு வாங்கினாலும் கிலோ 100 ரூபாயாம். விறகு கிலோ ரூ. 10 -  கேஸ் இல்லை. மண்ணெண்ணெய் இல்லை. எப்படி சாமி சமைப்பது?''

"சரி, அம்மணி இந்த மீனை என்ன செய்ய?''

" நீங்க குளத்திலேயே விட்டுடுங்க சாமி''

அந்த நண்பர் மீண்டும் குளத்துக்குச் சென்று கெண்டை மீன்களைக் குளத்தில்விட்டார். அப்போது அம்மீன்கள் பேசினவாம்:

 ""கலைஞரின் உயிர்காக்கும் திட்டம் வாழ்க''

இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். இரண்டாவது, பற்றாக்குறை. மூன்றாவது காரணமும் உண்டு. போக்குவரத்துச் செலவு.

 பணவீக்கம் மொத்தவிலைக் குறியீட்டெண்ணால்தான் அளவிடப்படுகிறது. கடந்த ஓராண்டில் மொத்த விலைக்குறியீட்டெண் - ஹோல் சேல்ஸ் பிரைஸ் இண்டக்ஸ் - 10 சதவீதம் உயர்ந்துள்ளது. உண்மையில் சில்லறை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கவனித்தால் பணவீக்கம் 30 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்குக் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதங்கள் எழுதுவதுபோல் நமது பிரதமரும், ""இன்னும் ஒரே மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம். விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்'' என்று கி.பி. 2009-லிருந்து மாதம் ஓர் அறிக்கை விடுகிறார். பத்திரிகை நிருபர்களுக்குச் செய்திகள் வழங்கியவண்ணம் உள்ளார்.

இப்படி புதுதில்லியில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தாகம் ஏற்பட்டால் பெப்சி வழங்கும் மினரல் வாட்டரைக் குடித்தவண்ணம் அடிக்கடி ஒன்றுகூடி அமைச்சர்களும் அரசுச் செயலர்களும் கோப்புகளைப் பார்த்து என்ன பயன்?

 உணவு உற்பத்தி உயர விவசாயம் செய்கிறார்களா? விவசாயம் செய்யப் போதிய நிலம் உள்ளதா? உற்பத்தி குறைவது ஏன்? மண்வளம் இழப்பது ஏன்? மண்ணை வளப்படுத்தி வளம்குன்றா விவசாயம் செய்ய என்ன செய்யலாம்? விவசாயிகளின் பிரச்னைகள் என்ன? வேலைக்கு ஆள்கள் கிடைக்காதது ஏன்? நிலம் இருந்தாலும் போதிய பாசன நீர் உள்ளதா? மேல்மட்டக் கிணறு, ஏரி, குளங்களை நிரப்புவது எப்படி? என்று பல கேள்விகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் பதில்களை வழங்க அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். நேரடியாகப் பல கிராமங்களுக்குச் சென்று கிராமங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

வாரம் ஒருநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவது போதாது. விவசாயிகளைத் தேடி ஆட்சியாளர்கள் வந்து நேரில் பார்த்தால்தான் பிரச்னைகள் புரியும். நமது மத்திய விவசாய அமைச்சரைப் பொருத்தவரை விளைநிலங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறவேண்டும். விமானநிலையங்களாக வேண்டும். எண்வழிச் சாலைகளாக வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று நிலம் வாங்கி பருப்பு, புஞ்சை தானியங்களைச் சாகுபடி செய்யலாம் என்று அற்புத யோசனைகளைக் கூறுகிறாரே தவிர, உள்ளூரில் உற்பத்தி உயர வழி செய்வது இல்லை.

 இந்தியாவில் இப்போது அந்நியச் செலாவணி கணிசமாக உள்ளது என்பதால் என்ன பிரச்னை வந்தாலும், உணவு விலை சிகரத்தைத் தொட்டாலும் இறக்குமதி செய்து சரிசெய்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டதால் வரும் வினைகள் இவை. வெங்காயம் பாகிஸ்தானில் விளைகிறது. தக்காளி அமெரிக்காவில் விளைகிறது. துவரை கென்யாவிலும் தான்சேனியாவிலும் விளைகிறது. 

உளுந்து பர்மாவில் உண்டு. கபூலி சென்னா (வெள்ளைக்கடலை) காபூலில், ஆஸ்திரேலியாவில், துருக்கியில் விளைகிறது. (கருப்புக்கடலை இந்தியாவில்தான் விளைகிறது) பட்டாணிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கோதுமை, தாய்லாந்தில் அரிசி, பிலிப்பைன்ஸில் தேங்காய், பிரேசிலில் வேர்க்கடலை, சீனத்தில் எள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி கோப்புகளில் உள்ள விவரங்கள் இப்படித்தான் பேசும்.( நன்றி  தினமணி)

 எந்த நாட்டிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யலாம்? என்று படித்துவிட்டு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள். நிலைமை முன்பு மாதிரி இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் உணவு உற்பத்தியைப் பாதித்துவிட்டது. அந்தந்த நாடுகளிலும் போதிய வழங்கல் இல்லை.

கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைக்காப்புறுதித்திட்டம் - நூறு நாள் வேலைவாய்ப்புக்காக பணம் புழங்குகிறது. இரண்டாவதாக, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் உறுப்பினர்களுக்கு 1 வட்டிக்கடன் வழங்குவதன் மூலம் பணப்புழக்கம் உள்ளது. உண்மையில், இப் பணப்புழக்கத்தால் விவசாயத்தில் உற்பத்தி உயர வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உண்மையில் விவசாயத்துக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்திவிட்டது. வேலை செய்யாமலேயே நூறுநாள் சம்பளம் கிடைத்துவிடுகிறது.

 ஒரு மணிநேரம் உருப்படியாக வேலை செய்தால் பெரிய விஷயம். இந்த வேடிக்கையை தினம் பார்க்கிறேன். மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வழங்கப்படும் "மைக்ரோ ஃபைனான்ஸ்'' கிராமங்களில் சிலர் மட்டுமே கந்துவட்டி செய்த காலம் போய், கந்துவட்டி பெரிய அளவில் பெண்களின் தொழிலாக மாறிவிட்டது. யாரும் விவசாயத்துக்கோ, வேறு தொழில் உற்பத்திக்கோ சுய உதவிக்குழுவின் பணம் முதலீடுகளாக மாறிப் பயன் தராமல், உபயோகமற்ற செலவுகளுக்கே உதவுகிறது. கந்துவட்டிப் பெண்களிடம் மாட்டுபவர்களுக்கு வேறு நரகம் வேண்டாம்.

 மேற்படி விஷயத்தை இங்கு நான் கூறுவதற்கு வேறு காரணமும் உண்டு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏழைகள் பணக்காரர்களாகி அவர்கள் தேவை உயர்ந்துவிட்டதால் விலை உயர்ந்துவிட்டதாம். விலை ஏற்றத்துக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கும் நிபுணர்கள் இப்படி முடிச்சுப் போடுகின்றனர்.

 உண்மையில் அப்படிப் பெற்ற பணம் கந்துவட்டிக்குப் போகிறதே தவிர, வெள்ளைப்பூண்டும், வெங்காயமும், தக்காளிப் பழத்தையும் அப்போதும் வாங்கினார்கள். இப்போதும் வாங்குகிறார்கள்.

 பணம் எங்குதான் புழங்கவில்லை? திட்டமிடப்பட்ட பல செலவுகளுக்கும்தான் பணம் புழங்குகிறது. கருப்புப்பணம் எங்கெல்லாமோ புழங்குகிறது. பணப்புழக்கத்தால் பணமதிப்பு குறைந்து பொருள்விலை கூடுவது இயல்பு. அமைப்புரீதியான தொழிலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் சம்பளம், டி.ஏ. உயர்வு காரணமாகவும் பணம் புழங்கி வீக்கமடையவில்லையா?

 ஆனால், அடிப்படையான விஷயம் தேவைக்கு ஏற்ப ஒரு பொருளின் வழங்கல் இல்லாததுவே. அதாவது பொருளின் பற்றாக்குறை. பொருளின் பற்றாக்குறையுடன் பணவீக்கமும் சேர்ந்து எட்டமுடியாதபடி விலைஉயர்வு விண்ணை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

பணவீக்கத்துக்கு நிகராகப் பொருள் உற்பத்தி உயர்ந்தால் விலை ஏறுவது கட்டுப்படும். உணவுப்பொருள் விஷயத்தில் அரிசி, கோதுமைபோல் மக்காச்சோளத்துக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை. மக்காச்சோளம் ஏற்றுமதியும் ஆகிறது. ஆனால், மக்காச்சோளத்தின் விலை ஏற்றம் குறைவு. 

சில்லறை விலை ரூ. 13 அல்லது ரூ. 14 தான். கடந்த ஆண்டு வரையில் ரூ. 12 தான். மக்காச்சோளத்தின் முக்கியத்தேவை கோழி - மாட்டுத்தீவனம். பின் மனிதத்தேவை. மக்காச்சோளம் உற்பத்தி பெருகியதைப்போல் வெள்ளைச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, உளுந்து, துவரை, கடலை, பாசிப்பயறு, மசூர், பட்டாணி உற்பத்திகள் ஏன் உயரவில்லை?

 பணவீக்கம் விலை ஏற்றத்துக்குரிய காரணம் என்றால் நோட்டு அச்சடிப்பதையும், கருப்புப்பணத்தையும் நிறுத்தினால் போதுமே. அமைப்புரீதியான பணக்காரத் தொழிலாளர்களாயினும், அமைப்புரீதியற்ற ஏழைத் தொழிலாளர்களும் சரி, வரக்கூடிய வருமானம் அனைத்தையும் உணவு வாங்கச் செலவழிப்பதில்லை. ஒருசாரார் டாஸ்மாக் கடைகளில் சாராயத்துக்குச் செலவழிக்கிறார்கள். ஒருசாரார் மருத்துவத்துக்குச் செலவழிக்கிறார்கள். மருத்துவத் தேவை, குடித்தேவை மற்றும் வேலை வாங்க லஞ்சம் கொடுக்கும் புதிய தேவைகளுக்காக ஒருசாரார் கந்துவட்டிக்குப் பணம் வழங்குகிறார்கள். சிலர் கல்வித் தேவைக்கும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கலாம்.

பணவீக்கத்தில் பணத்தின் தேவைதான் அதிகமாகிப் பணமே ஒரு பொருளானதே தவிர, உண்மையான வேளாண் உற்பத்தி உயரவில்லை. வேளாண் உற்பத்திக்குரிய வழிமுறைகளை நன்கு திட்டமிட வேண்டும். அதேசமயம், மண்வளத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் வழங்கல் பெருகி விலைவாசி குறையும்.

முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்...                                                                      2. இந்திய வெளியுறவுத் துறை
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

2/25/2011

ராஜபட்ச ஒரு மோசடிப் பேர்வழி: ஜே.வி.பி. விமர்சனம்


திபர் ராஜபட்ச இலங்கையில் வசிக்கும் முதல்தர மோசடிப் பேர்வழி என்று எதிர்க்கட்சியான ஜே.வி.பி.,.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மதுபானம் மற்றும் பாலியல் தொழில் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யும் ராஜபட்சவை போன்ற மோசடிப் பேர்வழி இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் சோமவங்ச கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ராஜபட்ச வெறும் விளம்பரத்திற்காக மட்டும் புத்த நம்பிக்கையுடையவராக காட்டிக் கொள்கிறார் என்றும், எந்தவித கொள்கை கோட்பாடுகளையும் கடைபிடிப்பதில்லை என்றும், சோமவங்ச விமர்சித்துள்ளதாக அந்த இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி.

அறிவியலும், சில காதல் கவிதைகளும்...


தெல்லாம்
இந்த உலகத்தில்
உருகும்  சக்தி படைத்தவை?
மெழுகாய்,
உனை நினைக்கும்போது
கரையும்....
என் மனதைத் தவிர...!


நீ...
அறிவியல் பிரிவு

படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?


பெண்ணே
அன்று  நீ கொடுத்த
சிரிப்பை
இன்று
என் இதயம் மூலம் எடுப்பது
“ ஒவ்வோரு விசைக்கும் சமமான
எதிர்விசை ஒன்றுன்டு”
எனும்
நியூட்டன் விதியா?


ற்றுமுன் அவள்  நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
ஆனால்
பூமி அதிர்ச்சி வந்தது போல
ஏன்  இன்னும் அதிர்கிறது
‌என் இதயம்...!


நீ வரும் நேரம்
தாமதமானால்
பூவா?தலையா?
விளையாட்டு
பூ.. தான் எப்பவும்
விழுகிறது அன்பே..
நீ வந்து கொஞ்சம்
தலைகாட்டு...!

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. இந்திய வெளியுறவுத் துறை
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  


2/24/2011

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை


மெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.

திலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?

ந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?

ந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.

மெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை.

னால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?( அமெரிக்கா செய்த அவமானங்கள் அனைவரும் அறிந்ததே, அதை சேர்த்தால் பதிவு பெரிதாகிவிடும்)

ப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? 

ளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.

லங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

னால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

ங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?

லங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.(நன்றி தினமணி)

பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. சித்தாள் வாழ்ந்த இடம்
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

2/23/2011

ஒரு மனசாட்சியின் மரணம்
ரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது -
ஆயினும்...........
கால் சுளுக்கிக் கொண்டது...!

ன் செயல் மெதுவாகவே
ஊடுருவியது நெஞ்சில்-
ஆயினும்...........
காயப்பட்டு விட்டது உயிர்....!

ண்பா!
படிப்பு கேட்டாய்
“ சாப்ட்வேர் ” என்றதும்
ஸ்நேகமாய் சிரித்தாய்...

ம்பளம் கேட்டாய்
சொன்னேன்...!

ர் கேட்டாய்
சென்னை என்றேன்...!

றவினர் பற்றி
உரசிப் பார்த்தாய் ...!

போய்விட்டாய் நேற்று...

ஜாதகக் கட்டுடன் வந்தாய்
தங்கை வரனுக்காய்...
என் ஜாதகமும் கேட்டாய்...!

றுபடியும்.,
பூர்வீகம் சொத்து
ஜாடையாய் கேட்டாய்...!

ன் போட்டோ  பார்த்து
புன்னகையில்
அஜீத் என்றாய்...!

ரு நாள்
விருந்துக்கு அழைத்து
ஒரு கிலோ  எடை கூட்டினாய்...!

ங்கையை அறிமுகம் செய்து
அவள் கனவில்
என்னை தைத்தாய்
என்  நெஞ்சில்
அவளை விதைத்தாய்...!
னிதாவின் மாடர்ன் ஆர்ட் ”
புரியாத பெயின்டிங்கை
புலம்பிவிட்டு போனாய்...!

னிதா போட்ட கோலம்”
இடியாப்பக் கோடுகளை
என் மீது  திணித்தாய்...!

ங்கை  சமைத்த குழம்பு ”
உணவு இடைவேளையில்
லஞ்சமாய் கொடுத்தாய்...!

ரவுக் கனவுகளில்
இருவரையும் சரசிக்கவிட்டு
ஏக்கக்  கூண்டில்
குருவியை அடைத்தாய்;
இப்போது
சிறகுகள் வேண்டும்.... இல்லை
திருமணம் வேண்டும்...!

த்திரிக்கை அடிக்க
பணம் கேட்டாய்
கொடுத்தேன்...!

ந்தல் அட்வான்ஸ்
மேளம், தாலி முன்பணம்
வெற்றுச் “செக்” காய்
வாங்கிப் போனாய்...!

மோதிர அளவுக்கு
விரலைக் கேட்டாய்;
கடிகார அளவுக்கு
கை கேட்டாய்...!

“ஷு ” அளவுக்கு
கால் கேட்டாய்;
அச்சு திருத்துமுன்
அப்பா பேர்கேட்டாய்;

ஓ.......................!
கடைசியில் அதையும்
கேட்டுவிட்டாய் நண்பா !

ஜாதி,

நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
என் நெஞ்சும் கூடத்தான்.

ன் தங்கை இப்போது
கல்யானமாகாத விதவை,

போ..... நண்பா......போ !
இன்னும்
ஜாதக கட்டுகளுடன் -
விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
விளம்பரம் கொடு.......!

ம்.......
ஒரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது
ஆயினும்...........முந்தைய பதிவுகள்: 1.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்
                                            2. சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                             3.  என் தேசம் எரிந்துபோகுமா?                  
                                           

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  
 

2/22/2011

இலவசங்களும்... முரண்பாடுகளும்...மீபத்தில் சென்னையில் உள்ள “ கோர்ட்டை”  பார்வையிட்ட தலைமை நீதிபதி இக்பால், கடும் அதிருப்தியடைந்துள்ளார். கோர்ட் ஹாலில் நாற்காலிகள் இல்லை; சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை; தரமான கழிவறை வசதி இல்லை என்பதே, அவருடைய அதிருப்திக்கு காரணம்.

ல லட்சக்கணக்கான இலவச, "டிவி' வழங்கும் அரசு, கோர்ட்டின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராதது வேதனை அளிக்கிறது' என, அதைக் கண்டு மனம் வெதும்பி வருத்தப்பட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. 

தேபோல, காவல் துறையில் கூட, காலியிடங்கள் நிறைய உள்ளதால், அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.கிராமப்புறங்களில், இலவச பஸ் பாஸ் இருந்தும் கூட, தகுந்த நேரத்தில் பஸ்கள் இல்லாததால், தனியார் பஸ்களிலும், ஆட்டோக்களிலும், கட்டணம் செலுத்தி, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

நூல் விலை உயர்வு, மின் வெட்டு, ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால் கடுமையான நெருக்கடியில், விசைத்தறி கூடங்கள் சிக்கித் தவிக்கின்றன. "மின் கட்டணத்தில் சிறிதளவேனும் சலுகைகள் வேண்டும்' என, போராடி வரும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு, அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது. 

ப்படி அரசு கொடுக்கும் இலவசங்களுக்கும், மக்கள் நடைமுறைக்கும் பொருத்தம் இல்லாத சூழ்நிலை தான், தமிழகத்தில் நிலவுகிறது.கூலி தொழிலாளிக்கும், அவர் வேலை பார்க்கும் கோடீஸ்வர முதலாளிக்கும் இலவச "டிவி!'இப்படிப்பட்ட முரண்பாடுகளை களைந்து, மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்யாததால் தான், இவ்வளவு இலவசங்களை வழங்கியும், ஆட்சியாளர்கள் மேல், மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது..
நன்றி  தினமலர்.

முந்தைய பதிவுகள்: 1.பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்
                                              2.சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                               3. என் தேசம் எரிந்துபோகுமா?                  
                                           

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

ணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. 

ள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

னியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது

கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

ளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம்.

புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
 
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.( நன்றி  தினமலர் ).

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும் தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


முந்தைய பதிவுகள்: 1.சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                               2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                              3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..


2/21/2011

சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்ட கவிதைகள்

ம்பது கம்பெனிகளும்
மூன்று வெளிநாட்டு 
வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
“நாங்கள் கட்டியது” என்று சொல்லி
கட்டும்போது இருந்த இடம்,
சமைத்த இடம், தூங்கிய இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே. 

முற்றிலும் மாறிப்போய்,
தான்  உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும்  இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
‌என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/20/2011

உலகக் கோப்பை அணிகள் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை 
அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. 
அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.

 இந்தியா


பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது.  பௌலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி. நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக்,  கௌதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

பந்துவீச்சு என்று எடுத்துக்கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதிய வரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.

பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின்  பௌலிங் உள்ளது என்பது பலவீனம்.

சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.

ஆஸ்திரேலியா

பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.

 எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம்.  நான்காவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.

பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.

சிறப்பு: தொடர்ந்து 3 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்ததுபோல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசைதிருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 இங்கிலாந்து

பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.

பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.

சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.

 மேற்கிந்தியத் தீவுகள்

பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.

பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.

சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

 தென் ஆப்பிரிக்கா

பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.

பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிûஸயே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.

சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்தபோதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம்  தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

 நியூசிலாந்து

பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.

பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.

 இலங்கை

பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.

லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு  பௌலிங்கில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.

பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.

சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 பாகிஸ்தான்

பலம்:
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.

பலவீனம்:
சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.

சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர். (  நன்றி நாளிதழ்கள்).

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..


2/19/2011

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் விபரீதம்


ரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது என்றே நினைக்கிறேன்..

னியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.ஏன் அதற்குள்ளே ஐக்கியமாகி விடுகின்றனர்.

பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார், மருமகள், நாத்தனார் உறவுக்குள்) கொடுமைப்படுத்தப்படுவது, தவறான உறவுமுறை ஆகிய கலாசார சீரழிவு மிக்க காட்சிகள் அதிகரித்து வருகின்றன.


பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள சின்னத்திரையில் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம். பல குடும்பங்களில் இத் தொடர்களை மையமாக வைத்து சண்டைகள்  நடப்பதாக செய்திதாள்களில் பார்க்கிறோம்.

சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா?ன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்னவாக இருக்கும்?  இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கருத்து கூறுங்கள்..

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/18/2011

என் தேசம் எரிந்துபோகுமா?


ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!

முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் 
மட்டுமே
பாதுகாப்பு...!

டாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!

மாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!

ன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?

ராசரி
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
ன் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இதை படித்தால் சிரிப்பு வருமா?
                                         2. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/17/2011

இதை படித்தால் சிரிப்பு வருமா?


சிரியர் மனைவி
இறந்ததற்காக
விடுமுறை...!
நண்பன் கேட்டான்
அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?

*************************************************************************************

ம்பதாயிரம்
கொடுத்தேன்
வேலை கிடைத்தது
லஞ்ச  ஒழிப்புத்  துறையில்...!

***********************************************************************************

மாணவர்களே
யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!
நாங்கள் யாராவது
படிப்பில் ஈடுபடுகிறோமா?

மேடையில் அரசியல்வாதி...!

***********************************************************************************

அவன் பேசினான்
அவள் கேட்டாள்
திருமணமான முதல் ஆண்டு...!


அவள் பேசினாள்
அவன் கேட்டான்
இரண்டாம் ஆண்டு...!


இருவரும் பேசினார்கள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்
கேட்டார்கள்
இது மூன்றாம் ஆண்டு...!

***********************************************************************************

இன்னும்
ஒரே ஒரு வார்த்தை
என்னை திட்டினால்
நான் விதவையாகிவிடுவேன் !!!
கணவனுடன் சண்டையில்,
மனைவி...!!!

***********************************************************************************தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/16/2011

மரத்தில் பணம் காய்க்குமா ?


ணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று பணம் கேட்டு நச்சரிக்கும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் கூறுவது வழக்கம்.

னால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன. 

துபோல கட்டடங்களில் மேல் தளங்களில் தோட்டம் அமைப்பதும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களில் தோட்டம் அமைப்பது, உள்புறத்தை அலங்கரிக்க தொட்டிகளில் செடிகளை வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை அனைவராலும் எளிதில் மேற்கொள்ள முடியாது. இதற்கு நிச்சயமாக சிறப்புப் பயிற்சி தேவை. தோட்டக்கலைத்துறையில் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே இதைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இதனால் இந்தப் படிப்பு முடித்தவர்களை தேடிப்பிடித்து தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன பல நிறுவனங்கள்.

செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.

விதை ஒன்னு டிராப்ட்ல இருக்கு அதை போடனும்தான் நினைச்சேன்.. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நம்ம ரஹீம் கஸாலி அண்ணனைப் பார்த்து எப்பவோ  எங்கோ படிச்சதை போட்டுட்டோமில்ல.. தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..