ஒன்றரை அடி உயரமும் 2-3 கிலோ எடையுடன் பிறந்த நம்மைத் தாய்ப்பாலுக்குப்பின் இப்போதுள்ள உருவத்துக்கு வளர்த்தவர்கள் விவசாயிகள்தானே?
இந்த ஆழமான உண்மையைப் பாரதப் பிரதமர் முதல் கடைசிக் குடிமகன்வரை எல்லோரும் சௌகரியமாக மறந்துவிடுகின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத் துறை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்; பசுமைப் புரட்சிக்குப் பின் புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை; விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் விவசாயிகளிடம் செல்ல வேண்டும், என்றெல்லாம் பேசுவாரா?
பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத் துறை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்; பசுமைப் புரட்சிக்குப் பின் புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை; விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் விவசாயிகளிடம் செல்ல வேண்டும், என்றெல்லாம் பேசுவாரா?
இவர் மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியா, உணவு அமைச்சர் பவார் எனப் பலரும் இதே கருத்தை எதிரொலிக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால், விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று முழங்கும் மன்மோகன் சிங் அரசு ஒரு சந்தர்ப்பத்தில்கூட விவசாயிகள் வாழ்வு எப்படியுள்ளது என்றோ, விவசாயிகள் வருவாய் எவ்விதமுள்ளது என்றோ பேசியதில்லை. ( நன்றி ஒர் தினசரி)
அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை.
ஒரு பல்கலைக்கழகம்கூட தன் சொந்தக்காலில் நின்று தற்சார்பில் வாழ்ந்த விவசாயிகள் வாழ்வு ஏன் இப்படிச் சிதைந்துபோனது என்று ஆராயவில்லை. ஆங்கிலேயரின் சுரண்டல், அடிமை ஆட்சியின்போது விளைந்ததில் பெரும் பகுதியை வரியாகப் பிடுங்கிக் கொண்ட போதும்கூட நிகழாத அளவிலான தற்கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏன் நிகழ்ந்திருக்கின்றன என யாரும் யோசிக்கக்கூடத் தயாராக இல்லை.
இந்த அவலத்தைப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்கூட அலசவில்லை. இது போன்றதொரு அவலம் - இதில் நூறில் ஒரு பங்கு அவலம் தொழில் துறையிலோ, சேவைத் துறையிலோ நிகழ்ந்திருந்தால் அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல்பக்கச் செய்தியாகி இருக்கும். தொலைக்காட்சிகளில் முக்கிய நேரத்தில் விவாதப் பொருளாகியிருக்கும்.
இந்தியா போன்றதொரு, 110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது. தனக்கான உணவைக் கையேந்திப் பெற முடியாது. சுதந்திரமாக இருக்க முடியாது. நம் விவசாயிகள் பிற தொழிலில் உள்ளவர்களைவிட கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.
அதற்குத் தேவை மேலோட்டமான நடவடிக்கைகள் அல்ல. வேளாண்மைத் திட்டங்களில் அடி முதல் நுனி வரை மாற்றம் தேவை. பார்வையில் மாற்றம், சிந்தனையில் மாற்றம் தேவை, மக்கள் மீதான ஆத்மார்த்தமான அக்கறை தேவை. இந்திய விவசாயிகளுக்காகப் பரிந்து பேச, அவர்களது பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்க யாருமில்லையே, ஏன்?
எல்லாம் வரும். எல்லாம் கிடைக்கும். என்ன சொல்லி என்ன, அழுத பிள்ளைக்குத்தானே பால்? புரியும் என்று நினைக்கிறேன்...
விவசாயிகளை பற்றிய இப்பதிவிற்கு உங்கள் கருத்து என்ன?
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும். நன்றி..
நேற்றைய பதிவு : என்னடா உலகமிது...
நல்ல பதிவு, பதிவர் சதுக்கபபூதம் (சென்ற வார தமிழ்மண நட்சத்திர பதிவர்) இது குறித்து ஒரு பதிவு சிறப்பாக எழுதி உள்ளார். முடிந்தால் வாசியுங்கள்.
ReplyDeleteநச் பதிவு. வாக்களித்துவிட்டேன்
ReplyDeleteவேளாண்மைத் திட்டங்களில் அடி முதல் நுனி வரை மாற்றம் தேவை. பார்வையில் மாற்றம், சிந்தனையில் மாற்றம் தேவை, மக்கள் மீதான ஆத்மார்த்தமான அக்கறை தேவை. இந்திய விவசாயிகளுக்காகப் பரிந்து பேச, அவர்களது பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்க யாருமில்லையே...
ReplyDeleteஉண்மைதான் அழுத பிள்ளைக்குத்தான் பால்....வாழ்த்துக்கள் நண்பரே..
நல்ல அலசல்...
ReplyDeleteநல்ல பதிவு, பதிவர் சதுக்கபபூதம் (சென்ற வார தமிழ்மண நட்சத்திர பதிவர்) இது குறித்து ஒரு பதிவு சிறப்பாக எழுதி உள்ளார். முடிந்தால் வாசியுங்கள். // thanks..
ReplyDeleteரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteநச் பதிவு. வாக்களித்துவிட்டேன்
// Thanks for comments..
ரேவா சொன்னது…
ReplyDeleteவேளாண்மைத் திட்டங்களில் அடி முதல் நுனி வரை மாற்றம் தேவை. பார்வையில் மாற்றம், சிந்தனையில் மாற்றம் தேவை, மக்கள் மீதான ஆத்மார்த்தமான அக்கறை தேவை. இந்திய விவசாயிகளுக்காகப் பரிந்து பேச, அவர்களது பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்க யாருமில்லையே...
உண்மைதான் அழுத பிள்ளைக்குத்தான் பால்....வாழ்த்துக்கள் நண்பரே..
// Thanks ..
சங்கவி சொன்னது…
ReplyDeleteநல்ல அலசல்...
//நம்ம பக்கம் வந்ததற்கு நன்றி..
அதான் அன்னையும் பிரதமரும்,ஜனாதிபதியும் முதல்வரும் எல்லோரும் சொல்லிவிட்டார்களே ஊழலை ஒழிப்போம், ஊழலுக்கு இடம் கொடுக்காதீர்கள், என்று . அப்புறம் உங்களுக்கு என்ன கேடு? எந்த நாட்டில் யார் ஊழல் செய்கிறார்கள் என்று பொது மக்களாகிய நாம் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒழித்து (நம்மையே) விட்டு போகிறார்கள். அப்புறம் ஏது விவசாயிகள் தற்கொலை?
ReplyDeleteகிணற்றுத் தவளை சொன்னது…
ReplyDeleteஅதான் அன்னையும் பிரதமரும்,ஜனாதிபதியும் முதல்வரும் எல்லோரும் சொல்லிவிட்டார்களே ஊழலை ஒழிப்போம், ஊழலுக்கு இடம் கொடுக்காதீர்கள், என்று . அப்புறம் உங்களுக்கு என்ன கேடு? எந்த நாட்டில் யார் ஊழல் செய்கிறார்கள் என்று பொது மக்களாகிய நாம் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒழித்து (நம்மையே) விட்டு போகிறார்கள். அப்புறம் ஏது விவசாயிகள் தற்கொலை?// Thanks..
சுடும் உண்மைகள்!!! நாம் (இந்தியா) சரியான பாதையில் தான் செல்கிறோமா என்று சிந்திக்கவேண்டிய நேரம் இது. //110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது// நிதர்சனமான உண்மை.
ReplyDeleteஇன்ட்லியில் எர்ரர் வருகிறது. தமிழ்மணப் பட்டை இல்லையா தலைவரே.
ReplyDeleteவசந்தா நடேசன் சொன்னது…
ReplyDeleteசுடும் உண்மைகள்!!! நாம் (இந்தியா) சரியான பாதையில் தான் செல்கிறோமா என்று சிந்திக்கவேண்டிய நேரம் இது. //110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது// நிதர்சனமான உண்மை.// Thanks for comments.
அரபுத்தமிழன் சொன்னது…
ReplyDeleteஇன்ட்லியில் எர்ரர் வருகிறது. தமிழ்மணப் பட்டை இல்லையா தலைவரே.
// indli - இன்னொறுமுறை முயற்சி செய்யவும், tamilmanam நம்ம ரஜீனிசார் மாதிரி எப்ப வேலைசெய்யும்ன்னு தெரியாது. 2 மணிசேரம் கழித்து முயற்சி செய்யவும். நன்றி..
நல்ல பதிவு.இன்ட்லி,தமிழ் 10 வாக்களித்துவிட்டேன்
ReplyDeleteஆயிஷா சொன்னது…
ReplyDeleteநல்ல பதிவு.இன்ட்லி,தமிழ் 10 வாக்களித்துவிட்டேன்//
வாக்களித்ததற்கு நன்றி.. Tamilmanam என்னாச்சு..
நல்ல பதிவு
ReplyDeleteSpeed Master கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு// Thanks..
நல்ல பதிவு..
ReplyDeleteஎன்னுடைய ஓட்டை நீங்களே போட்டாச்சா..
இல்லை நான் போடனாமா?
விவசாயம் சம்பந்தப்பட்ட நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
ReplyDeleteவிவசாயம் சம்பந்தப்பட்ட நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
ReplyDelete>>>அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை.
அருமை. ஓட்டு போட்டாச்சு.
ReplyDeleteவிஜய் சொன்னது…
ReplyDeleteஅருமை. ஓட்டு போட்டாச்சு.
// Thanks விஜய்.
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteவிவசாயம் சம்பந்தப்பட்ட நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
// Thanks.
அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை.
ReplyDelete.....இதை ஒரு பிரச்சனையாகவே யாரும் கருதவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இது வேதனையான விஷயமே.
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteவிவசாயம் சம்பந்தப்பட்ட நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
>>>அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை.
// நன்றி நண்பா! உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது!
நல்ல பதிவு கலக்குங்க
ReplyDeleteyosikka vendiya visayam
ReplyDeleteஉணவுகொடுக்கும் தொழிலைப் புறக்கணித்துவிட்டு மற்ற தொழில்களே மதிப்பு என்று நினைக்கத்தொடங்கிவிட்டோம்.
ReplyDeleteவருந்தத்தக்க விஷயம்தான்.
நல்லபதிவுக்கு நன்றி மாணவரே!
நல்ல விஷயத்திற்க்கான பதிவு, ஆரம்ப கேள்வியே சுளீர் ரகம்..
ReplyDeleteஅழுத பிள்ளைக்குத்தானே பால்?//
ReplyDeleteகண்டிப்பாக நண்பரே! யாருமே கண்டுகொள்ளாத விஷயங்களைப் பற்றி எழுதுகின்ற உங்கள் சமூக அக்கறை வியப்பைத் தருகிறது!
அரசாங்கம்தான் வாழும் குடிமக்களின் உணவு உடை உறையுள் ஆகியவற்றிக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் நண்பரே, அருமையாக எழுதி உள்ளீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் ...
ReplyDelete//இந்தியா போன்றதொரு, 110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது//
ReplyDeleteநிதர்சனமான உண்மை
நல்லதொரு அலசல்.. தொடருங்கள் நண்பரே
ReplyDeletekonjam virivaaga eluthvum.
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு கலக்குங்க// Thanks
karurkirukkan கூறியது...
ReplyDeleteyosikka vendiya visayam// thanks..
சுந்தரா கூறியது...
ReplyDeleteஉணவுகொடுக்கும் தொழிலைப் புறக்கணித்துவிட்டு மற்ற தொழில்களே மதிப்பு என்று நினைக்கத்தொடங்கிவிட்டோம்.
வருந்தத்தக்க விஷயம்தான்.
நல்லபதிவுக்கு நன்றி மாணவரே!// thanks for comments..
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDeleteநல்ல விஷயத்திற்க்கான பதிவு, ஆரம்ப கேள்வியே சுளீர் ரகம்..// Thanks..
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDeleteநல்ல விஷயத்திற்க்கான பதிவு, ஆரம்ப கேள்வியே சுளீர் ரகம்..// Thanks..