Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
9/19/2018
11/20/2014
10/14/2014
10/11/2014
10/24/2013
10/12/2013
10/07/2013
"இந்த நாள் இனி என் வாழ்வில் வரவேக் கூடாது...!?"
விவரம் அறியாத
வயதில்
இந்தக்
காலண்டர் தாளைக்
கிழித்து
விபூதி மடித்துக் கொண்டேன்...!
விவரம் தெரிந்தப்
பருவத்தில்
அதற்காக
கத்துக் கிடந்த
நாட்கள் பல...!
இப்போதெல்லாம்
பிப்ரவரி மாத
காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!
இப்போது அதை
நான் கிழிப்பதில்லை...
அதுதான்
என்னை....!
source Aaraa.
9/26/2013
9/16/2013
9/13/2013
8/07/2013
8/02/2013
ஆண்டவா ஆண்களுக்கும் வைத்துவிடு மார்பகத்தை...?!
படித்ததில் பிடித்த கவிதை.
இதன் வெற்றி இதை எழுதியவற்கே உரியது.
கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்...
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்...
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்...
“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்,
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின்இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...
ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!
7/14/2013
7/02/2013
Subscribe to:
Posts (Atom)


















.jpg)










