பள்ளியில்
மதிய சாப்பாட்டு நேரத்தில்
சாப்பிடும் தட்டு கொண்டுவராதபோது
கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாப்பிட்டதுண்டு...
தேவையின் போது
உன் உடையை நானும்,
என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு...
இருவரும் யாராவது
ஒருவர் வீட்டில் தங்கி,
இரவெல்லாம்,
தேர்வுகளுக்காக படித்ததுண்டு...
நகர பேருந்து நெரிசலில்
உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு...
சில நேரங்களில்
எடுக்கும் முடிவுகளுக்காக
சண்டை போட்டாலும்,
சட்டென சமாதானம் ஆனதுண்டு...
என் பிராக்டிகல் ரெகார்டில்
நான் எழுதியதை விட
நீ எழுதியதே அதிகமாக இருந்ததுண்டு...
நான் செய்த தவறுகளுக்காக நீயும்,
உன் தவறுகளுக்காக நானும்
பல தடவைகள் தண்டனைகள் வாங்கியதுண்டு...
ஆனால் இன்றோ
நீ...
எங்கோ இருக்கிறாய்..
நான் இங்கே...
இருவரும்,
அவரவர் வாழ்க்கையின்
பிரச்சனைகளை எதிர்நோக்கி...!!!
கனமான வரிகள்...அருமை.
ReplyDelete//சாப்பிடும் தட்டிற்கு// இதுமட்டும் இடிக்கிறது
ஆறுதலுக்கு நட்பு இருக்கும் போது எந்தப் பிரச்சனை வந்தால் என்ன...? போனால் என்ன...?
ReplyDeleteஉண்மைதான்... இருப்பினும் நட்பு எப்போதும் உயிர்ப்புடன் தானிருக்கும்...
ReplyDeleteஎல்லாம் சிலகாலம்தான் . நட்பின் நினைவுகள் மட்டும் நிலைத்திருக்கும்
ReplyDelete