Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

3/07/2011

தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்....

 
மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். 

தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது.எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை.

ரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அதைப் படித்தாயா? இதைப் படித்தாயா? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் பக்கமே போகாதீர்கள்.

தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் "ரிலாக்ஸ்' செய்யுங்கள்.  மனத்தை உங்கள் மகிழ்ச்சியான அனுபவத்துக்கு இட்டுச் செல்லுங்கள்."என்னால் மிக நன்றாகத் தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது' என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். 

கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம்.அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். 

ன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை இரண்டு வண்ணப் பேனாக்களையாவது பயன்படுத்துங்கள்.

விடைகளில் அவசியமில்லாத வார்த்தைகள் உள்ளனவா? எங்கு கவனக்குறைவால் தவறு ஏற்படும்?  எந்தெந்த  பாயிண்ட்டுகளுக்கு அடிக்கோடு இடவேண்டும்? குறைந்த நேரத்தில் எவ்வளவு சுருக்கமாக விடையளிக்கலாம்? என்பது குறித்து ஆசிரியரிடம் அறிவுரையை  முன்பே கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
 
யமில்லாமலும், நமக்கு  அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் என்கிற நம்பிக்கையோடும் தேர்வு எழுதுங்கள்.. வெற்றி  உங்களுக்கே...
வாழ்த்துக்களுடன்.....



முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                               3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா
 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

12/17/2010

நிகழ்வுகள் - டிசம்பர் 16, இன்று டிசம்பர் 17

நிகழ்வுகள் - டிசம்பர் 16, இன்று டிசம்பர் 17

டிசம்பர் 17

  • 942 - நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.
  • 1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
  • 1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
  • 1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
  • 1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
  • 1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • 1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
  • 1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
  • 1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
  • 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1967 - ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • 1970 - போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
  • 1973 - ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
  • 1983 - லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1986 - போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

  • 1908 - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)
  • 1959 - ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்
  • 1972 - ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்
  • 1975 - சுசந்திகா ஜயசிங்க, இலங்கையின் ஓட்ட வீராங்கனை

இறப்புகள்

  • 1947 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)
  • 1967 - ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)
  • 1975 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)
  • 1979 - சேர் ஒலிவர் குணதிலக்க, இலங்கையின் மகா தேசாதிபதி

சிறப்பு நாள்

  • பூட்டான் - தேசிய நாள் (1907)
  • ஐக்கிய அமெரிக்கா - றைட் சகோதரர்கள் நாள்
  • பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

டிசம்பர் 16

  • 1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
  • 1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
  • 1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
  • 1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
  • 1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
  • 1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
  • 1835 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
  • 1857 - இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
  • 1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1922 - போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
  • 1960 - ஐக்கிய அமெரிக்க விமானம் நியூ யோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
  • 1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

  • 1770 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)
  • 1866 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)
  • 1917 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

  • 1916 - கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)
  • 1999 - ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

சிறப்பு நாள்

  • பாஹ்ரேன் - தேசிய நாள் (1971)
  • வங்காள தேசம் - வெற்றி நாள் (1971)
  • கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)
  • நேபாளம் - அரசியலமைப்பு சட்ட நாள் (1962).


12/15/2010

இன்று - டிசம்பர் 15

இன்று - டிசம்பர் 15
 நிகழ்வுகள்
  • 1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
  • 1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
  • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
  • 1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
  • 1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
  • 1914 - ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஹார்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
  • 1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
  • 1967 - ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
  • 1970 - தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
  • 1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
  • 1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.
  • 1997 - தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
  • 2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
  • 2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

பிறப்புக்கள்

  • 37 - நீரோ மன்னன், ரோமப் பேரரசன் (இ. 68)
  • 1832 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)

  • 1852 - ஹென்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1908)
  • 1936 - சோ. ந. கந்தசாமி, தமிழறிஞர்
  • 1971 - ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

  • 1675 - ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
  • 1950 - சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)
  • 1966 - வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

12/14/2010

இன்று - டிசம்பர் 14

இன்று - டிசம்பர் 14

நிகழ்வுகள்

  • 1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
  • 1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
  • 1884 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
  • 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
  • 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
  • 1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
  • 1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
  • 1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
  • 1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
  • 1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • 1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
  • 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
  • 1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
  • 2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக  அறிவித்தார்.
  • 2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
  • 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1503 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
  • 1546 - டைக்கோ பிரா, டேனியப் பிரபு (இ. 1601)
  • 1895 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (இ. 1952)
  • 1924 - ராஜ் கபூர், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 1988)
  • 1946 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)
  • 1953 - விஜய் அமிர்தராஜ் இந்திய டென்னிஸ் வீரர், நடிகர்.
  • 1979 - சாமர சில்வா, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர்

இறப்புகள்

  • 1799 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முதலாவது அரசுத் தலைவர். (பி. 1732)
  • 2006 - அன்டன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)

சிறப்பு நாள்

  • இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்

12/13/2010

இன்று - டிசம்பர் 13

இன்று - டிசம்பர்13

நிகழ்வுகள்

  • 1577 - சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
  • 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.
  • 1888 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 1937 - சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
  • 1949 - இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
  • 1959 - மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.
  • 1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
  • 1974 - மோல்ட்டா குடியரசானது.
  • 1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
  • 1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
  • 2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
  • 2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

இறப்புகள்:

  • 1557 - டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
  • 1944 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)
  • 1987 - நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)

சிறப்பு நாள்

  • மோல்ட்டா - குடியரசு நாள் (1974).

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

டிசம்பர் 9: தான்சானியா - விடுதலை நாள் (1961)
  • 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
  • 1979 - பெரியம்மை  நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
  • 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
டிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்
  • 1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
  • 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி ஸ்பெயின் கியூபாவை அங்கீகரித்தது. குவாம், பிலிப்பீன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றை அமெரிக்காவுக்கு $20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது.

  • 1901 - சுவீடன் வேதியியலாளர் அல்பிரட் நோபல்  நினைவாக முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.








டிசம்பர் 11: புர்கினா பாசோ - குடியரசு நாள் (1958)
  • 1882 - மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறப்பு.
  • 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
  • 1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது இனந்தெரியாத ஒருவரினால் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
  • 2004 - கருநாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி  மறைவு.


டிசம்பர் 12: கென்யா - விடுதலை நாள் (1963)
  • 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

  • 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக நடிகருமான தியாகி விஸ்வநாததாஸ்  மறைவு.
  • 1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
  • 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.


12/08/2010

நிகழ்வுகள்

நிகழ்வுகள்
 

டிசம்பர் 6:  
  • பின்லாந்து - விடுதலை நாள் (1917); ஸ்பெயின் - அரசியல் சாசன நாள்; புனித நிக்கலஸ் நாள்.
  • 1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

  • 1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி   இடித்து அழிக்கப்பட்டது.
  

டிசம்பர் 7
    • இந்தியா - கொடி நாள்

      • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
      • 1988 - ஆர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.

      • 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
      டிசம்பர் 8:  
      • ருமேனியா - அரசியல் சாசன நாள்.
      • 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாட்சி ஜெர்மனியர் முதன் முதலாக நச்சு வாயுவைப் பயன்படுத்தினர்.

      • 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன்  சுட்டுக் கொல்லப்பட்டார்.
      • 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
      • 1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
      • 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
      • 1881 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
      • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
      • 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
      • 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
      • 1941 - பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது.
      • 1941 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது.
      • 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
      • 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
      • 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
      • 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
      • 1963 - மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1969 - கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1972 - சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
      • 1982 - சுரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிரான பலர் கொல்லப்பட்டனர்.
      • 1982 - சூரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
      • 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
      • 1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
      • 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
      • 1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

      பிறப்புக்கள்

      • கிமு 65 - ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]]
      • 1935 - தர்மேந்திரா, இந்திய நடிகர்
      • 1946 - சர்மிளா தாகூர், இந்திய நடிகை
      • 1947 - தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
      • 1976 - நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை
      • 1985 - டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்.

      இறப்புகள்

      • 1980 - ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர.

      சிறப்பு நாள்

      • ருமேனியா - அரசியல் சாசன நாள்
      • பல்கேரியா - மாணவர் நாள்
      • ஆஸ்திரியா - பொது விடுமுறை
      • மோல்டா - பொது விடுமுறை
      • பனாமா - தாயார் தினம்.

      12/05/2010

      இன்று - டிசம்பர் 5

      நிகழ்வுகள்

      • 1082 - பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான்.
      • 1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
      •   1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
      • 1497 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
      •     1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
      •   1848 - கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
      • 1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
      •    1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
      • 1933 - யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
      •    1934 - இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
      •   1936 - சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
      •   1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
      •   1941 - இரண்டாம் உலகப் போர்: கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் ஜெர்மனிய ஆக்கிரமிப்புக்க்கு எதிராக மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
      •   1957 - இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
      •   1958 - STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
      • 1969 - அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
      •    1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
      • 1978 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
      •     1983 - ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
      •   1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
      •   2003 - தெற்கு ரஷ்யாவில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
      •   2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
      •   2006 - பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
      •    2006 - இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
      பிறப்புக்கள்

      •   1782 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது  குடியரசுத் தலைவர் (இ. 1848)
      •   1901 - வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
      •   1901 - வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1976)
      •     1966 - தயாநிதி மாறன், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சர்
      •   1985 - ஜாஷ் ஸ்மித், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
      இறப்புகள்

      •   1791 - மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756)
      •   1879 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் தந்தை, (பி. 1822)
      •     1926 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
      •   1950 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
      •     1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)
      சிறப்பு நாள்

      •    தாய்லாந்து - தேசிய நாள், தந்தையர் நாள்.
      •   பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் - புனித    நிக்கலஸ் மாலை.

      12/03/2010

      இன்றைப்பற்றி அறிவோம் - டிசம்பர் 3

      நிகழ்வுகள்

      • 1592 - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
      • 1800 - மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.
      • 1818 - இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
      • 1854 - அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
      •   1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
      •      1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
      •    1917 - 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
      •  1944 - கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
      •  1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
      •      1971 - இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
      •    1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
      •    1976 - ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
      •   1978 - வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
      •  1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
      •  1989 - மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
      •  1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
      •    1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
      •  2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

      பிறப்புகள்

      •   1795 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)
      • 1884 - ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)

      இறப்புகள்

      •    1552 - புனித பிரான்சிஸ் சவேரியார், மதப் போதகர் (பி. 1506)

      சிறப்பு நாள்

      •     அனைத்துலக ஊனமுற்றோர் நாள்.

      12/02/2010

      இன்று டிசம்பர் 2

      இன்று டிசம்பர் 2

      நிகழ்வுகள்
      •  1755 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை   விளக்கம் தீ விபத்தில் அழிந்தது. 
      • 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
      •   1805 - நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
      • 1843 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
      • 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.
      •  1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
      • 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
      •  1908 - பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
      • 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
      •  1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
      • 1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
      • 1954 - சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
      •  1956 - பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
      •  1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
      • 1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
      • 1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
      • 1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
      • 1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
      • 1980 - எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

      • 1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
      • 1990 - ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
      •  1993 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
      •  1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
      • 2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
      • 2005 - போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
      •  2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
      • 2006 - பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
      பிறப்புக்கள்

          * 1910 - ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
          * 1933 - கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
          * 1979 - அப்துல் ரசாக், பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
          * 1982 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
          * 1981 - பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப் இசைப் பாடகர் (பாடகி)
          * 1973 - மோனிகா செலஸ், டென்னிஸ் வீராங்கனை.
          * 1973 - யான் உல்ரிச், செருமானிய மிதிவண்டி வீரர்.

      இறப்புகள்

          * 1547 - எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)
          * 1552 - புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
          * 1911 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
          * 1933 - ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்
          * 2006 - வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)
          * 2008 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
      சிறப்பு நாள்
          * லாவோஸ் - தேசிய நாள்
          * ஐக்கிய அரபு அமீரகம் - தேசிய நாள் (1971)
          * ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்

      12/01/2010

      இது  என்னுடைய 50 வது பதிவு.

      மிக குறைந்த பதிவிலேயே 800 க்கு மேல் ஹிட்ஸுகளை வாரி வழங்கி  கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..

      நான் இந்த வாரம் சபரிமலை யாத்திரை செல்வதால் பதிவிடுவதில் சிரமமே...

      இன்று ....

      டிசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958), உலக எய்ட்ஸ் நாள் (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)
      • 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
      • 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
      •  1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
      உலக எய்ட்ஸ் நாள் 

      உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்.

      உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் 

      இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
      1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது ,இதில் 270,000 குழந்தைகள்.

      AidsRusStamp1993.jpg
      சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

      டிசம்பர் ஒன்றாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

      எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின.
      முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

      2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.
      ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

      1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (உலக எய்ட்ஸ் பிரச்சாரம்) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

      உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2010
      1988    தொடர்பாடல்
      1989    இளைஞர்
      1990    எய்ட்சும் பெண்களும்
      1991    சவாலை பகிர்ந்து கொள்ளல்
      1992     சமூகத்தின் ஈடுபாடு
      1993    செயலாற்றுதல்
      1994    எய்ட்சும் குடும்பமும்
      1995    உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து       கொள்ளல்
      1996    ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
      1997    எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
      1998     மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
      1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
      2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
      2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
      2002 வடு மற்றும் பாகுப்பாடு
      2003 வடு மற்றும் பாகுப்பாடு
      2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
      2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
      2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
      2007      எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
      2008      எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
      2009     எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
      2010     எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று

       



      இன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT)

      இந்திய தொழில்நுட்பக் கழகம் - Indian Institutes of Technology(IIT): 

      இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (இ. தொ. க) (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். முதலில் இந்தியாவில் கரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்ப்பூர், மதராசு (இப்பொழுது சென்னை), தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இக் கழகங்கள் உருவாயின. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டியர் எனவும் விளிக்கப்படுகிறது.

      இக் கழகங்கள் தொடங்கிய வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்: 

      கரக்பூர் (1950; இ. தொ.கவாக 1951), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), தில்லி (1961; இ. தொ.கவாக 1963), குவகாத்தி (1994), ரூர்க்கி (1847; இ. தொ.க-வாக 2001), புவனேசுவர் (2008), காந்திநகர் (2008), ஐதராபாத் (2008), பட்னா (2008), பஞ்சாப் (2008) மற்றும் இராசத்தான் (2008).
      இந்திய அரசு மேலும் மூன்று இ.தொ.கழகங்களை இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் திறக்க அறிவித்துள்ளது. சில இ.தொ.கழகங்கள் யுனெசுக்கோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இ.தொ.கவும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்; மற்றவற்றுடன் ஒரு பொது இ.தொ.க அவையால் இணைக்கப்பட்டுள்ளன. இவ் அவை ஆட்சிப் பொறுப்புகளை மேற்பார்வை இடுகின்றது.

      இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டபடிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். தவிர ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவரும் உள்ளனர். இ.தொ.க முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது பணி அமெரிக்க காங்கிரசினால் பாராட்டப்பட்டுள்ளது.



      The Indian Institutes of Technology (popularly known as IITs) are institutions of national importance established through an Act of Parliament for fostering excellence in education. There are fifteen IITs at present, located in Bhubaneswar, Bombay (Mumbai), Delhi, Gandhinagar, Guwahati, Hyderabad, Indore, Kanpur, Kharagpur, Madras (Chennai), Mandi, Patna, Punjab, Rajasthan and Roorkee. 

      Over the years IITs have created world class educational platforms dynamically sustained through internationally recognized research based on excellent infrastructural facilities. The faculty and alumni of IITs continue making huge impact in all sectors of society, both in India and abroad. Institute of Technology, Banaras Hindu University (IT-BHU), Varanasi and Indian School of Mines (ISM), Dhanbad, are the oldest institutions in India and are known for their immense contributions towards society at large and for science and technology in particular.

      The primary objectives behind such institutions are to:
       
      • Build a solid foundation of scientific and technical knowledge and thus to prepare competent and motivated engineers and scientists.
      • Create environment for freedom of thought, cultivate vision, encourage growth, develop personality and self- discipline for pursuit of excellence.
      • Kindle entrepreneurial streak.
       
      All of the above help to prepare the students admitted to these institutions for successful professional and social lives. Today, alumni of these institutions occupy key positions in industry and academia in India and abroad.
      Each institute has well-equipped modern laboratories, state-of-the-art computer network and well stocked technical library. Teaching methods rely on direct personal contact between the teachers and the students and the use of traditional and modern instructional techniques. Students live in a pleasant and intellectually stimulating environment with people having similar goals and aspirations, which is an exciting and unique experience.
       
      Credit-based academic programmes offer flexibility to students to progress at their own pace. A minimum level of performance is necessary for satisfactory progress. The medium of instruction is English. These institutions offer courses leading to Bachelor's degree in a number of engineering, technological and scientific disciplines.
       
      M.Sc. Integrated courses in pure and applied sciences and M.Tech. Integrated courses in a few disciplines are also offered by some of these Institutions. In addition, some IITs offer Dual-Degree M.Tech. programmes.
      The admissions to the Undergraduate Programmes at these institutions for all Indian and Foreign nationals are made through the Joint Entrance Examination (JEE).
       
      Visit official web site :

      1. IIT, Bombay      : http://www.iitb.ac.in/
      2. IIT, Guwahati    : http://www.iitg.ernet.in/
      3. IIT, Delhi            : http://www.iitd.ac.in/
      4.  IIT, Madras       : http://www.iitm.ac.in/
      5.  IIT, Kanpur       : http://www.iitk.ac.in/
      6. IIT,Roorkee      : http://www.iitr.ac.in/
      7. IIT, Kharagpur  : http://www.iitkgp.ac.in/

      The newly started IITs from 2008 are:
      • IIT Gandhinagar, Gujarat (IIT Bombay)  
      • IIT Punjab ( IIT Delhi), courses
      • IIT Patna, Bihar (IIT Guwahati)  
      • IIT Rajasthan (IIT Kanpur)  
      • IIT Bhuvaneswar, Orissa (IIT Kharagpur)  
      • IIT Hyderabad, Andhra (IIT Madras) .
       























































      11/26/2010

      இன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழகம்

      இன்றைய பொன்மொழிகள்:
      • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
      • பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
      • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
      • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
      • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
      • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
      • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
      • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
      • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
      • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.    
      இன்று இதை தெரிந்து கொள்‌வோம்:

       இந்திய அறிவியல் கழகம்

      இந்திய அறிவியல் நிறுவனம் இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

      நிர்வாகம்

      1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம்ஆவார்.

      கல்விப் பிரிவுகள்

      உயிரியல் பிரிவு

      • உயிர் வேதியியல்
      • சூழல் அறிவியல் மையம்
      • நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
      • மூலக்கூற்று உயிர் இயற்பியல்
      • மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்.

      வேதியியல் பிரிவு

      • கனிம மற்றும் இயல் வேதியியல்
      • பொருட்கள் ஆய்வு மையம்
      • என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
      • கரிம வேதியியல்
      • திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்.

      மின்னியல் பிரிவு

      • மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
      • கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
      • மின் தொடர்புப் பொறியியல்
      • மின் பொறியியல்

      கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு

      • வானியல் மற்றும் வான் இயற்பியல்
      • சமகாலவியல் கல்வி மையம்
      • தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
      • உயராற்றல் இயற்பியல் மையம்
      • கருவியியல்
      • கணிதவியல்
      • இயற்பியல்.

      இயங்கியல் பிரிவு

      • வான்வெளிப் பொறியியல்
      • வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
      • விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
      • புவி அறிவியல் மையம்
      • Center for Sustainable technology
      • வேதிப் பொறியியல்
      • குடிசார் பொறியியல்
      • பருவமாற்ற ஆய்வு மையம்
      • மேலாண்மைக் கல்வி மையம்
      • பொருட்கள் பொறியியல்
      • இயங்கியற் பொறியியல்.
      இயக்குநர்கள்
      • மோரிஸ் டிராவர்ஸ், FRS, 1909–1914
      • சர் அல்பிரேட் கிப்ஸ் பௌர்னே , FRS, 1915–1921
      • சர் மார்ட்டின் அன்சுலொவ் போர்ஷ்டேர், FRS, 1922–1933
      • சர் சந்திரசேகர வேங்கடராமன் , FRS, 1933–1937
      • சர் ஜே. சி. கோஷ் , 1939–1948
      • எம். எஸ். தச்கேர் , 1949–1955
      • எஸ். பாகவந்தம் , 1957–1962
      • சத்தீஷ் தவன் , 1962–1981
      • டி. கே. பானர்ஜீ , 1971–1972
      • எஸ். ராமசேஷன், 1981–1984
      • சி. என். ஆர். ராவ், FRS, 1984–1994
      • ஜி. பத்மநாபன் , 1994–1998
      • கோவர்தன் மேத்தா , 1998–2005
      • பத்மநாபன் பலராம், 2005– இன்று வரை.
       இன்று....... 

      நிகழ்வுகள்
      • 1778 - ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
      • 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
      • 1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
      • 1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
      • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு சப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
      • 1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
      • 1949 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
      • 1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
      • 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
      • 1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய் மதியை விண்ணுக்கு அனுப்பியது.
      • 1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
      • 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
      • 2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

      பிறப்புக்கள்

      • 1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
      • 1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
      • 1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
      • 1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
      • 1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)
      • 1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.

      இறப்புகள்

      • 1930 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1851)
      • 2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை.
      இன்றைய சிரிப்பு



      ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
      டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.

      "அப்பா...நான் படிக்கப் போகலை,"  "ஏன்டா?"
      "கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"     "ஆ...!"



      பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
      வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
      பெற்றோர் : அப்படியா!!
      வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.