நிகழ்வுகள்
டிசம்பர் 9: தான்சானியா - விடுதலை நாள் (1961)
- 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
- 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
டிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்
- 1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி ஸ்பெயின் கியூபாவை அங்கீகரித்தது. குவாம், பிலிப்பீன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றை அமெரிக்காவுக்கு $20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது.
- 1901 - சுவீடன் வேதியியலாளர் அல்பிரட் நோபல் நினைவாக முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
டிசம்பர் 11: புர்கினா பாசோ - குடியரசு நாள் (1958)
- 1882 - மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறப்பு.
- 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
- 1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது இனந்தெரியாத ஒருவரினால் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
- 2004 - கருநாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி மறைவு.
டிசம்பர் 12: கென்யா - விடுதலை நாள் (1963)
- 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
- 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக நடிகருமான தியாகி விஸ்வநாததாஸ் மறைவு.
- 1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
- 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"