Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/31/2010

ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே - இந்தியா: 2010 

ஜனவரி
4.    ஆந்திராவில் தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த்.
5.    வட இந்தியாவில் குளிருக்கு 122 பேர் பலி.
6.    சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கட்சி பதவியை  
       ராஜினாமா.
24.    கர்நாடகம்: கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்.
27.    இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தம்: முகேஷ்அம்பானி. 

பிப்ரவரி

8.    காஷ்மீரில் பயிற்சியின்போது பனிப்பாறைகள் சரிந்து 17 ராணுவ வீரர்கள் 
       மரணம்.
8.    முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு- மேற்குவங்க அரசு     முடிவு.
13.    புனே-ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி.
21.    தனித்தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்      
         தீக்குளித்த வாலிபர் மரணம்.
22.    பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய், கேஸ் விலை கடும் உயர்வு.
25.     பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் குடியுரிமை வழங்கியது.  

மார்ச்

2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளா, திரிபுராவில்      
       மோட்டார் வாகன, ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு 
        மாட்டுவண்டி யில் சென்றார் சந்திரபாபு நாயுடு.
8.    மகளிர் மசோதா தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி.
8.    மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்- லல்லு, முலாயம் அறிவிப்பு.
9.    மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறியது.
17.    சிஐடியு அகில இந்திய மாநாடு சண்டிகரில் எழுச்சியுடன் துவங்கியது.

ஏப்ரல்

1.    6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி 
       உரிமைச்சட்டம்.
1.    மக்கள் தொகை கணக்கெடுப்பு-ஜனாதிபதி துவக்கி வைத்தார்.
16.    கொச்சி கிரிக்கெட் அணி ஏலம்: சசிதரூர் பதவி விலகக் கோரி அமளி.
17.    பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே இரண்டு இடங்களில்            
         குண்டுவெடிப்பு.
19.    எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு     
         அனுமதி மறுப்பு - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம்.
20.     மேகாலயா முதல்வராக முகுல் சங்மா பதவியேற்பு.
22.     அமைச்சர் அழகிரி சபைக்கு வராதது ஏன்?- நாடாளுமன்றத்தில்  அமளி.
24.     பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு.
27.     விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய அரசை கண்டித்து     
          இடதுசாரிக்     கட்சிகள் உட்பட 13 கட்சிகள் நாடு தழுவிய பொது       
          வேலைநிறுத்தம்.
27.     விலை உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்   
            வெட்டுத்தீர்மானம் - ஆதரவு 201, எதிர்ப்பு 289. 

மே

2.    பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக பாஜக அமைச்சர் ஹாலப்பா  ராஜினாமா.
3.    மும்பையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம்.
4.    மம்தா கட்சி மத்திய இணை அமைச்சர் சிசிர்அதிகாரி, வங்க       
       தேசத்திலிருந்து ஆயுதம் கடத்தல்-நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு.
6.    மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்   
       காசப்புக்கு தூக்கு தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
28.  மேற்குவங்கத்தில் ரயில் தண்டவாளங்களை மாவோயிஸ்டுகள்  குண்டு
       வைத்து தகர்த்தனர்- மும்பை ரயில் கவிழ்ந்து 71 பயணிகள்     சாவு.
30.  ஜார்கண்ட் முதல்வர் பதவியிலிருந்து சிபுசோரன் ராஜினாமா.  

ஜூன் 

1.     ஜார்கண்டில் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
7.     போபால் விஷவாயு வழக்கில் 8 பேருக்கு இரண்டாண்டு சிறை.
9.     நிவாரண உதவி கப்பல்களை தாக்கிய இஸ்ரேலை கண்டித்து  
        இந்தியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
13.   நாகா பிரிவினைவாதிகளின் ஒருமாத தடையால் மணிப்பூர் மக்களின் 
        இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
14.  கங்கை நதியில் படகு மூழ்கி 45 பேர் சாவு.
15.   மணிப்பூர் : நாகா குழுக்கள் தற்காலிக விளக்கம்.
29.   சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.

ஜூலை

6.    ஸ்ரீநகரில் பொதுமக்கள் - போலீஸ் மோதல் 4 பேர் பலி. ஜம்மு- காஷ்மீரில்
       ஊரடங்கு அமல்.
6.    மும்பையில் கனமழை: இரண்டுகட்டிடங்கள் இடிந்தன.
8.    அசாம் - கேரளாவில் பருவமழைக்கு 53 பேர் பலி.
8.    மாவோயிஸ்ட் பந்த் - சத்தீஸ்கரில் ரயில் நிலையம் தகர்ப்பு.
8    காஷ்மீரில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு நீடிப்பு.
12.  5 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில்  
       வெற்றிப்பயணம்.
14.     மும்பையில் குளோரின் வாயு கசிவு 103 பேருக்கு பாதிப்பு.
16.     தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் கைது.
19.     மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதல்-63 பேர் சாவு 92 பேர் காயம்.
24.    சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி: குஜராத்  
          உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா.
25.     குஜராத் அமித்ஷா கைது.
27.     விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் அமளி, இரு அவைகளும்     ஒத்திவைப்பு.

ஆகஸ்ட்

2.    காஷ்மீர் கலவரம் - பலி 15 ஆனது.
7.    ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழைக்கு பலி 130 ஆக உயர்வு 600 பேர்     மாயம்.
7.    மகாராஷ்டிராவில் ஐந்து விவசாயகிள் தற்கொலை.
9.    ஒரிசாவில் மழை வெள்ளம்: 85 ஆயிரம் பேர் பாதிப்பு.
15.  சுதந்திர தின நிகழ்ச்சி முதல்வர் உமர் அப்துல்லா மீது போலீஸ்காரர் ஷு 
      வீச்சு.
18.    ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு.
18.    உத்தர்காண்ட்: பள்ளி கூரை இடிந்து 18 சிறுவர்கள் சாவு.
21.    உ.பி. தடுப்பூசி போட்ட குழந்தைகள் சாவு.
25.   அமெரிக்காவுக்கு ஆஜரான அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா
        நிறைவேறியது.
26.     மாவோயிஸ்டுகளுடன்பேச்சு நடத்த அரசு தயார்: மன்மோகன் சிங்.
29.     பீகார் போலீசார் மவோயிஸ்டுகளால் கடத்தல்.

செப்டம்பர்

6.      பீகார் சட்டப்பேரவைக்கு 6 கட்ட தேர்தல் அறிவிப்பு.
9.      கேரளா: கலப்பட கள் குடித்து பலி 25 ஆக உயர்வு.
10.    வட மாநிலங்களில் பலத்த மழை லட்சக்கணக்கானோர் பாதிப்பு.
12.    மருத்துவ கல்லூரி ஊழியர்நியமனத்தில் முறைகேடு; கர்நாடக 
         அமைச்சர் ராமச்சந்திர கௌடா ராஜினாமா.
14.    வன்முறையால் காஷ்மீர் எரிகிறது.
14.    ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: அர்ஜூன் முண்டா வெற்றி.
14     அசாம் வெள்ளம்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.
19.    ஒரு வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 108 பேர் பலி.
20.    மத்தியப்பிரதேசத்தில் ரயில்கள்மோதல் - 21 பேர் சாவு.
20.    காஷ்மீர்;அனைத்து கட்சி குழு ஆய்வு.
20.    சத்தீஸ்கர் : 7 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்தினர்.
21.    தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்து 27 பேர் காயம்.
22.    தில்லி நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன.
23.    அயோத்தி: தீர்ப்பு ஒத்திவைப்பு.
30.    அயோத்தி பிரச்சனை: சன்னி வக்பு வாரியம், நிர்மோரி அகாரா  மற்றும் 
          ராம்லல்லா வீரஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு 27 ஏக்கர்நிலம்  சமமாக 
          பிரித்தளிக்கப்படவேண்டும் -அலகாபாத் உயர்நீதிமன்றம்  தீர்ப்பு.  

அக்டோபர்

2.    காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஆரம்பம்.
6.    கர்நாடகம்: எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி - 7 அமைச்சர்கள் உட்பட  19 
       எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்.
11.    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.
21.    பீகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்.   

நவம்பர்

8.    அசாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல் 18பேர் சாவு.
9.    ஆதர்ஷ் முறைகேடு: மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாண் நீக்கம்.
9.    காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி 
        ராஜினாமா.
14.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா.
15.    தில்லியில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து 32 பேர் பலி.
16.    ஸ்பெக்ட்ரம் விவகாரம் - பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
24.    ஆந்திர முதல்வர் ரோசய்யா திடீர் ராஜினாமா.
24.    பீகார்: ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 206 இடங்களில் வெற்றி.
25.    ஆந்திரா; புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு.
27.    2ஜி ஸ்பெக்ட்ரம்: ஆலோசனை தொகையாக ரூ.60 கோடி  வாங்கினேன் - 
         நீரா ராடியா ஒப்புதல்.
30.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணைக்கு 
          உத்தரவிட அரசை வலியுறுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இடதுசாரி 
         கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் முறையீடு.  
  
டிசம்பர்

1.    பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி பிஎஸ்என்எல் 
       அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய     வேலைநிறுத்தம்.
7.    ஸ்பெக்ட்ரம் ஊழல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி   பாஜக
         அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்     தர்ணா.
14.    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.
15.    ஆ.ராசா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ     சோதனை.
17.    ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய
         நிவாரணம் வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
         துவங்கினார்.
22.    பிரித்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி.
22.    ஆந்திராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு   
           தலையிட கோரி அனைத்து கூட்டுக்குழு பிரதமரைச் சந்தித்தது.
23.     கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைவு.
24.     ஆந்திராவில் 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சந்திரபாபு
           நாயுடு முடித்துக் கொண்டார்.  
30      தெலுங்கானா, ஆந்திரா பிரிக்கும் ஸ்ரீகிருஸ்னா கமிட்டி அறிக்கை இன்று
           மக்களவையில்  தாக்கல் செய்யப்படுகிறது.
 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நவ்வாழ்த்துக்கள். 

படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,உலவு ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க..

2 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"