Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/14/2010

இவரை தெரிந்துகொள்வோம் - ராகுல் காந்தி ( Rahul Gandhi - India)

இவரை தெரிந்துகொள்வோம் - ராகுல் காந்தி            ( Rahul Gandhi - India) :

 ராகுல் காந்தி 19 ஜூன் 1970 ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர், அமேதி தொகுதி பிரதிநிதி ஆவார். அவருடைய அரசியல் கட்சியின் பெயர் இந்திய தேசிய காங்கிரஸ் இவர் நேரு-காந்தி குடும்பத்தை சார்ந்தவர், 

இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும்.காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார்.இவரின் உத்திகள் மிகவும் சுவாரசியமானது: அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு, மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினை கொண்டுவர முயற்சித்து வருகிறார்.

இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியில் உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியாபாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய சிறப்புமிக்க பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு மற்றும் மிகவும் சிறப்புமிக்க முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார். காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார்.


இவர் டூன் பள்ளி சேர்ந்து பயிலுவதற்கு முன்னாள் நியூ டெல்லி மாடர்ன் பள்ளி சேர்ந்து பயின்றார். இவர் 1981-83 ஆம் ஆண்டுகளில் தன் தந்தையின் தாயகக் கல்வி நிலையத்தில் சேருவதற்கு முன்னால், பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். 1994 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிப்பை தொடர்ந்து அதே சமயம் ரோல்லின்ஸ் காலேஜ், ப்ளோரிடாவில் இளங்கலை பி.ஏ. பட்டம் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் வளர்நிலைக் கல்வியலில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டம் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பைதிரும்பினார்.

அரசியல் வாழ்க்கை

2003-இல் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.


இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம்வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்


ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004 ல்அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 ல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச் 2004 ல், அறிவித்தார். இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக - இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். 

அப்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது தொகுதி கொண்ட உத்திர பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. 

கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இயைளய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். 

அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும் ஜாதி, மத பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்தனர்.  இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் பிரமுகர்.

ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார்.அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது.  2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திர பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.


ஜனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் "உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.


2006 ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.


2007 ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்புகழ் வாய்ந்த ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.


24 செப்டம்பர் 2007 ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்


இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ல், டெல்லியில் உள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் ல் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

2009 ஆம் தேர்தல்

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார். இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூடங்களில் பங்கேற்று பேசினார்

இவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலை கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

விமர்சனம்

2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டபடிப்பை முடிக்கவில்லை என்று பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.

1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இந்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும்  விமர்சனத்திற்கு உள்ளானது.மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.

2007-இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் "காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது" என்று கூறினார். இக்கருத்து 1992 - ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. 

ராகுலின் இந்த அறிக்கை பி.ஜே.பி.-இன் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை "இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது" என்றனர். இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பி.ஜே.பி.-இன் தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் "அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.

2008 - ன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.வி.கே.சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக் கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு.சூரி அவர்களை நியமித்தவருமான திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் . இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் "அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.

தூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது. ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.

தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்வி கேட்கும் மாணவர்களை "ஏற-இறங்க" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், என்று கூறினார். 

தூய ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, "அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய.ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர்.

ஜனவரி 2009 இல் பிரிட்டிஷ் நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு.மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு.முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும்,பின்னடைவாகக் கருதப்பட்டது. 

MOST SEARCHED POLITICIANS IN GOOGLE INDIA DEC 2010.  

1. Rahul Gandhi

Rahul Gandhi claims the title as the most searched politicians among the Indians. Being a member of a prominent political party he turned the cabinet post, he is the most traveled politician in Indian in the last five years.

Indian media also calls him as one of the top news makers of the country.

And what’s more surprising is the absence of Indian Prime Minister Manmohan Singh in the list.






காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்:

பிரதமர் ஆட்சிக்காலம்
ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய
குல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய
லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய
இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984
ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய
பி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய
மன்மோகன் சிங் 22 மே 2004 முதல் ஆட்சியில் உள்ளார்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"