Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/18/2010

உங்களுக்குத் தெரியுமா ? VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

 VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

 உங்களுக்குத் தெரியுமா ?



  • டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக இணையம் உருவாக்கப்பட்டது.

  • கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவை அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்ளும் மாறுபட்ட தன்னின உண்ணும் நிகழ்வு அறியப்பட்டுள்ளது.

  • 117,000 நபர்களால் பேசப்படும் கிறீ (Cree) மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி

  • காம சூத்திரம் (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.

  • மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற சமூக சேவை அமைப்பு ஆகும்.

  • ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்ந்தது.

  • ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் இணையப் பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

  • நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட கூகிள் லூனர் எக்சு பரிசு வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.

  • மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.

  • விண்வெளிக் குடியிருப்பு என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்நிறைவான மனிதர்வாழிடங்களைக் குறிக்கிறது.

  • பரிவு மசக்கை அல்லது பரிவுச் சினை (sympathetic pregnancy) என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.

  • அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூஅவர்களால் எடுத்துரைக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரித்துவைத்தல்ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

  • தர அமுக்கத்தில் நீரின் உருகுநிலை 0° செல்சியசு, கொதிநிலை 100°செல்சியசு ஆகும்.


  • சங்கத் தமிழ் பெண் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்கள் பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (314, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275) புறநானூற்றில் ஒன்றுமாக (279) இடம் பெற்றுள்ளன.

  • சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.

  • 50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான சுவாகிலி மொழியே ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.

  • செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.

  • மொத்த இசைத் தொழிற்துறை 30-40 பில்லியன் (2004) பெறுமதி வாய்ந்தது.

  • மலேசிய மக்கள், மாங்காய்த் தோப்பு போன்ற ராக் பாடல்களுக்காக அறியப்படும் காசுமீர் இசுரோன் ஒரு மலேசியத் தமிழ் ராக் இசைக் குழு ஆகும்.

  • தமிழ்நாட்டின் மாநில மலர் காந்தள் (Glory lily), மரம் பனை, பறவை மரகதப்புறா.

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.



  • சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் திலாப்பியா வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

  • உலகின் விருப்பமான பழம் தக்காளி. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.

 
 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

1 comments:

  1. தகவல்கள் சேகரிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"