Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

6/13/2012

காங்கிரசும் , கறுப்புப் பணமும்...



இன்றைய தேதியில் உலக அளவில் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டபோதுகூட, நம் இந்திய அரசு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக, பிரதமர் மன்மோகன் சிங் , நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் இப்போது, நிலைமை தலைகீழாக இருக்கிறது. 

ஆனால் இப்போது அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் எனக் காட்டுகின்றனர். இங்குள்ள வரலாறு காணாத விலைவாசி ஏற்றத்தையும், மிகவும் தாராளப் பணப் புழக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதில், எந்தவித மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. 

இந்த அவலட்சணத்தில் பலர் வெளி நாட்டில் மறைத்துவைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர, நிதி அமைச்சர் பிரணாப்பின் அறிக்கை வேறு சிரிப்பை கிளப்புகிறது. அங்குள்ள தொகையும், கழுதையாக இருந்து, இப்போது கட்டெறும்பாகத் தேய்ந்துவிட்டது. இப்போது, அந்தத் தொகையின் மதிப்பு, 4 ஆயிரம் கோடி ரூபாய் தானாம். 

கடந்த 50 ஆண்டுகளாக, அதைப்பற்றிப் பேசிப்பேசி, ஒரு பைசா கூடப் வரவில்லை. பின்னே எப்படி, அங்கே அந்த அளவு கறுப்புப் பணம் இருக்கும்? இன்னும் சில நாட்களில், இந்த இருப்பும் சுத்தமாகக் காணாமல் போய்விடும். அதைக் கொண்டு வர, அங்கே ஒன்றும் இல்லை என்று, பின்பு கூறுவர். 

சரி, உள்நாட்டிலாவது பதுக்கி இருக்கும் திருட்டுப்பணத்தைப் பரிசோதனை செய்து, வெள்ளைப் பணமாக்க முயற்சியாவது செய்வார்களா என்றால், அதுவும் மிகப்ஏமாற்றம் தான். பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம், பெரிய பெரிய பணக்காரர்கள், ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், இப்போதுள்ள எம்.பி.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பயங்கர தாதாக்கள்! 

பொருளாதாரத்தை தலைநிமிர்த்த, நம் பிரதமருக்கு தனிப்பட்ட ஆலோசகர் வேறு. முன்பு இருந்த முன்னாள் பிரதமர்களான லால் பகதூர் சாஸ்திரி மற்றும்  மொரார்ஜி தேசாய் போன்றோருக்கு இருந்த துணிச்சல்,தைரியம், இப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு கிடையாது. இவர்களிடம், புரட்சிகரமான, வளர்ச்சி தரக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை எதையும் எதிர்பார்க்க முடியாது!

வாழ்க நம் ஜனநாயகம்.. வளர்க கையாலாகாத காங்கிரஸ்....!!!!!!