Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

8/30/2011

செங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றினார் ஜெ.தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி,

நம் இந்தியா ஜனநாயக நாடா?


"இந்தியா ஒரு ஜனநாயக நாடு!" இன்று வரை, அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் நாம கரணமும் இது தான். ஆனால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். 

இப்போது, பண நாயகத்தால், ஜனநாயகத்தை விலை பேசும் மாநிலங்களாக, ஒவ்வொன்றும் மாறி வருகிறது. இதற்கு, மத்திய அரசும் விதி விலக்கல்ல. தற்போது, 65வது சுதந்திர தின கொடியை பறக்கவிட, விண்ணில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 

8/29/2011

ஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...


எல்லாருக்கும் பீர் குடிப்பதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா..?

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் முகப் புத்தகத்தில்  சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே.. !?

இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே.

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

கவனிக்கவும்- அருந்துவது.

ஒதுங்கிவிடலாம் மிஸ்டர் பிரதமர்


"நாம், இது வரை கண்ட பிரதமர்களிலேயே, மிகவும் மோசமான பிரதமர்' என்ற பெயரை, "மிஸ்டர் கிளீன்' மன்மோகன் சிங் பெற்றுவிட்டார். 

8/27/2011

ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்!


பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?

ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா?

பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு!

தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்!

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை!

நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்?

8/26/2011

"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு?அழகிரி விரக்தி..


திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று முன்தினம் , திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி சென்றார்.

சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். 

ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?ழுக்கான உடைகள்,
வற்றிய கன்னங்கள்,
தூக்கங்களை
தொலைத்த கண்கள்...

8/25/2011

ஏழைகளாக இருப்பது எதுவரை?"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றார் பாரதி. சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகள் கடந்தும், நம்மால், நம் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லை.

8/24/2011

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?!வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை
அள்ளிப் போட்டு விடாதீர்கள்

8/23/2011

மடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறிஞரே?கடந்த, ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரால் தங்கள் சொத்து, நிலங்களை பறிகொடுத்து தவிப்பவர்கள் குறித்த செய்திகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, அ.தி.மு.க., பொதுச் செயலரான ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.

8/22/2011

ஒரு பெண்ணின் அவலம்..

ரிசு நிலம் ஒன்று 
இங்கு தவிக்கிறது...!


ண்ணகியைக் கூட 
தெய்வமாக வணங்கும் 
தமிழ் நாட்டின்
அழகு தமிழ் பேசும் நான்,
மலடி...!

8/20/2011

இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்

**********************************************************************************
முகப்புத்தகத்தில் கலக்கியவை..

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"

"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"

**********************************************************************************

8/19/2011

“தமிழகத்திலிருந்து வாரீகளா?” அலறுகிறது அமெரிக்க அரசு!


“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.

தி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.

8/18/2011

ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ?


சென்னை வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சிவாவுக்கு மணிமண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது கூறியதாவது:

அட.. எனக்கே அறிவுரையா?


மூடநம்பிக்கைகளுக்கு 
முடிவு கட்டுவோம்...


உயர்ந்தோன், தாழ்ந்தோன்
பேதைமை அகற்றுவோம்..

8/17/2011

உண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா?ஊழலின் உறைவிடமாக, காங்கிரஸ் கட்சி திகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையும் நன்கு உரசிப் பார்க்கும் நிலையில் தான் உள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில், ஊழல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், "எதிர்க்கட்சிகள் யோக்கியமா' என, மன்மோகன் சிங் கூறியிருப்பதும், அவர்களை வசைபாடி உள்ளதும், போற்றத்தக்கதல்ல. தன் நன்மதிப்பை அவர், நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகிறார். 

8/16/2011

காங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...


கடந்த, 44 ஆண்டு பயணத்தில், பார்லிமென்டில், அமைச்சரவை ஒரு வழியாக லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொண்டது. இது, பார்லிமென்ட் கூட்டத்திலும், அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேறி விடும். 

இந்த சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் வரமாட்டார்கள். பிற்காலத்தில் இந்த வரம்பு, அனுமார் வால் போல் நீளலாம்! 

ஊழல் குற்றச்சாட்டில் சோனியா!? - சிக்குவாரா?


ஊழல் குற்றச்சாட்டில் விரைவில் சோனியாவும் சிக்குவார்,” என்று பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வியில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்தால் ஏற்கனவே அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு அருகதை இல்லை.

8/13/2011

இது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free


முகப்பு த்தகத்தில் கலக்கியவை.
மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
மனைவி: ???????????????????

**********************************************************************************

உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க?,
நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா,
காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா.
உப்பு அதிகமாகிடிச்சின்னா என்னை தாளிச்சிடுவா..

8/12/2011

அழகிரி மதுரையை விட்டே ஓட்டமா ? மதுரையில் பரபரப்பு!


இந்தச் செய்தியின் தலைப்பில் இருக்கும் கேள்விதான், மதுரை தி.மு.க.வினரின் தலையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. காரணம் என்னவென்றால், அப்படியொரு வதந்த கடந்த இரு தினங்களாக மதுரையில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது.

“அண்ணன் தற்போதைக்கு மதுரை வரமாட்டார்” என்று அடித்துச் சொல்கிறார்கள் மதுரை தி.மு.க. புள்ளிகள் சிலர்.

மதுரை போலீஸ் அவர் மீது வழக்குத் தொடர்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்றே தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள் வந்து கொட்டுகின்றன என்று சொல்ல முடியாது. இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கைது செய்யும் அளவுக்கு ஸ்ட்ராங்காக ஏதும் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே காவல்துறை உள்வட்டத் தகவல்.

மனைவி காந்தி அழகிரி கோயில் நிலத்தை வாங்கிய விவகாரம் தமக்கு துருப்புச் சீட்டாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தது மதுரை போலீஸ். அந்த விவகாரத்திலும், கையில் உள்ள ஆதாரங்கள் காந்தி அழகிரியைக் கைது செய்யப் போதுமானதாக இல்லை. அந்த விவகாரத்திலும் மேலும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு இருக்கிறது போலீஸ்.

போலீஸ் தன்னைக் கைது செய்வதில் தீவிரமாக இருப்பது அழகிரிக்கும் நன்றாகவே தெரியும். இதனால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி விட்டதால், அதில் பங்கேற்கச் செல்லும் சாக்கில் டெல்லி போய்விட்டார். கூடவே காந்தி அழகிரியையும் அழைத்துப் போயிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இவர்கள் இருவருமே மதுரைப் பக்கம் வரவில்லை. இதனால்தான் அழகிரி மதுரையை விட்டே ஓடிவிட்டதாக மதுரையில் வதந்தி பரவியுள்ளது. நன்றி விறுவிறுப்பு.


கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? கலைஞருக்கு தொண்டன் வினா?


அன்புள்ள தலைவா, வணக்கம். கழகத்தின் செயற்குழுவையும், பொதுக் குழுவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள். 

நமது எதிரிகள் நமது கழகத்தின் செயற்க்குழு, பொதுக் குழு கூட்டங்களில்
‘சகோதர யுத்தம்’ பிரமாதமாக நடக்கும் என்று காத்திருந்தார்கள். 

ஆனால், அந்த யுத்தத்திற்கான சங்கு முழங்கப்பட்டதும், உடனடியாகத் தலையிட்டு, ‘சாகும் வரை கலைஞர்தான் தலைவர்’ என்று பேராசிரியரை விட்டு அறிவிக்கச் செய்து, சகோதர யுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த சாணக்கியத்தனத்தை பாராட்டுகிறேன். யுத்தம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கும் உன் மூளை பின்னணியில் இருந்தால்தான் முடியும் என்பது தெரியாதவர்களெல்லாம் தலைவர்களாக முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை என்பதுதானே தலைவா உண்மை.

அன்புத் தலைவா, கழகத்தின் எத்தனையோ செயற் குழுக்களையும், பொதுக் குழுக்களையும் கண்ட தொண்டன் நான். ஒருபோதும் உள்ளே அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், நீ வெளியே வந்து பத்திரிகையாளர்களையெல்லாம் வாயால் பந்தாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அப்படிப்பட்ட என்னால், கழகம் தோற்றத்திற்குப் பின்னால் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக கோவை வர முடியாமல் போய்விட்டது. 

ஆனால் அந்தக் குறை சனிக்கிழமை நீங்கள் ஆற்றிய உரையைப் பத்திரிகைகளில் படித்துப் பார்த்ததும் போய்விட்டது. “நேர்மறையான விளைவுகளின் காரணமாக இன்று நாம் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம் பெற்றிருக்கின்ற நிலையில்...” என்று நீங்கள் பேசியதை படித்தபோது இரு கண்களில் இருந்து நீர் காவிரி ஆறாகப் பெருக்கெடுத்தது. எவ்வளவு பெரிய தோல்வி அது?


இந்த நிலை (அதாவது படுதோல்வி) நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்”என்று தாங்கள் கூறியிருப்பதைப் படிக்கும் போதுதான் தலைவா சற்று குழப்பம் ஏற்பட்டது. 

நமக்கு நாமே தேடிக்கொண்டது என்று கூறுகிறீர்களே தலைவா? அப்படியானால் அதில் என்னைப் போன்ற தொண்டர்களுக்கும் பங்குண்டு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் நடந்த, நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் அனைத்திலும் தொண்டனுக்கும் பங்குண்டு என்கிறீர்களா? இது நியாயமா தலைவா? இந்தியாவில் எந்த ஊடகமும் இப்படி எங்களையும் சேர்த்து பேசவில்லை, ஆனால் நீங்கள் எங்களுக்கும் பங்கு தருகிறீர்களே? ரொம்ப தாராள மனசு தலைவா உனக்கு.

“அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நாம் பதவிகளுக்காக - பவிசுகளுக்காக - ஆடம்பரங்களுக்காக - அரசியலுக்காக பதிவிகளைப் பெற்று அந்த அரசியலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; நம்முடைய இனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்” என்று புரிந்துதான் பேசினீர்களா, இல்லை புரியாமல்தான் உளறினீர்களா தலைவரே? இப்படி நீங்கள் கூறியதை என்னாலேயே ஏற்க முடியவில்லையே, பிரபல தமிழ் பத்திரிகைகளில் படிக்கும் மக்கள் எவராவது ஒப்புக்கொள்வார்களா?பதவிக்காக இல்லை, இனத்திற்காக என்கிறீர்களே, இதைத்தானே கூறி, சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாவனும் நம்மை கிழி கிழி என்று கிழித்தார்கள்? 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், டெல்லிக்குப் போனீர்கள், என்ன செய்தீர்கள்? ராசாவுக்காக, கனிமொழிக்காக, அழகிரிக்காக, தயாநிதி மாறனுக்காக என்று உங்கள் குடும்பத்து உருப்படிகள் ஒவ்வொன்றுக்கும் காபினெட் பதவி கேட்டு சோனியாவுடன் பேசினீர்கள், சிங்குடன் பேசினீர்கள், அவர்களுடைய தூதர்கள் உங்களை வந்து சந்தித்த போது அவர்களிடமும் பதவிப் பங்கு பற்றியே பேசினீர்கள். 

ஆனால் அப்போதுதான், இலங்கையிலே தமிழினம் அழிக்கப்பட்டது, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன்? அப்படி ஒன்று நடந்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் காட்டிக்கொள்ளவில்லையே. அங்கே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஆணித்தரமாக ஆதாரங்கள் வருகிறது. ஐ.நா. சபைக்காரனும் அறிக்கை கொடுத்துவிட்டான். நீங்களோ இனத்தைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறுகிறீர்கள்? எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா? சிங்கள இனத்தையா, தமிழினத்தையா? கேப்பைக் கூழுல நெய் வடியற கதைய சொல்றீங்களே, நியாயமா? செத்தவங்க ஆத்மா நம்மை மன்னிக்குமா?

“நமக்குக் கிடைத்திருக்கிற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, இலட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறுகிறீர்களே? இதில் எதிர்காலம், சந்ததி, வருங்கால தலைமுறை... அதெல்லாம் புரிகிறது, கொள்கை, இலட்சியம் என்று கூறுகிறீர்களே? அது என்ன தலைவா? புதுசா கண்டு பிடித்திருக்கிறீர்களா?

ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தீர்கள், அதில் நீங்கள் சொல்லும் எந்தக் கொள்கை நிறைவேறியது? எந்த இலட்சியத்தை எட்டினோம்? தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போய் ஆண்டோம், உண்மை. ஆட்சியில் இருந்து ஆற்றியத் தொண்டுக்கு இப்போது ஒரு மூணு, நாலு பேர் திகார் சிறையில் இருக்கிறோம். இதுல என்ன இலட்சியம் இருக்குத் தலைவா? பகுத்தறிவுக்கு எதிரா காது குத்துகிறீங்களே, பெரியாருக்கு அடுக்குமா?

நமது கொள்கை பெரியார் சொன்ன பகுத்தறிவு, சமூக கொள்கை, அப்புறம் அண்ணா சொன்ன தன்னாட்சி... அதாவது கூட்டாட்சிக் கொள்கை. நீங்க கூட அண்ணா மறைந்த பிறகு தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை என்று ஒரு மாநாட்டில் பேசினீர்களே, நினைவிருக்கிறதா? 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம், 2. ஆதிக்கமற்ற சமூதாயம் அமைப்போம், 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், 4. வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம், 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்று முழங்கினீர்களே, அதில் எதை இந்த 5 ஆண்டுக் காலத்தில் சாதித்தோம், சொல்லுங்க தலைவா

அண்ணா வழி, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தந்த வழி. அவர் டெலிபோனை மட்டும் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் கொண்டு போங்கள் என்று முதல்வர் ஆனவுடன் அரசு அதிகாரிகளுக்குக் கூறினார். அவர் மகன் பரிமளம் ஒரு பதவிக்கும் வரவில்லை. அவர் மனைவி ராணி அம்மாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து செத்துப்போனார். இப்படியா தலைவா நீங்கள் இருந்தீர்கள், இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் இல்லாத இடம் கட்சியிலும் இல்லை, ஆட்சியிலும் இல்லை. ஆக்டோபஸ் என்கிறார்களே, அப்படியல்லவா இருக்கிறது நிலைமை? இதில் அண்ணா வழியெங்கே, ஆட்டுக் குட்டி வழியெங்கே?

ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தீர்களா? குடும்ப ஆதிக்கத்தை அல்லவா கொடி கட்டிப் பறக்கச் செய்தீர்கள்? அதைக் கேள்வி கேட்டால், என் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கக் கூடாதா? என்று அங்கலாய்த்தீர்கள். சென்னையிலும், மதுரையிலும், டெல்லியிலும் உங்கள் குடும்ப ஆதிக்கம், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆதிக்கம், இப்போ தலைமறைவு, தேவைதானா?

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். நீங்களா? மனசாட்சியோடு சொல்லுங்கள் தலைவா? இந்தி தெரிந்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் காம்ரமைஸ் பேச நீங்கள் தயாநிதி மாறனை அனுப்பவில்லை? இதுவா இந்தி எதிர்ப்பு? இங்கிலீஸ்ல பேசினால் சோனியா அம்மா கேட்க மாட்டாங்களா? எதுக்கு இந்தி? ஆதிக்கத்திற்கு தேவைப்படுது, அப்படித்தானே?

வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம், சொன்னீங்க. இலவசம் கொடுத்து வறுமை ஒழிப்போன்னு மாத்துங்க. சாராயம் வித்து வர்ற 15,000 கோடி ரூபாய்ல, எல்லாத்தையும் கொடுத்துவிட்டு, வறுமை இருக்கும் வரை இலவசமும் இருக்கும் என்று சொன்னீர்களா? அண்ணா இருந்தால் விடுவாரா உங்களை?

மாநிலத்தில் சுயாட்சி? எப்போது.... எதிர்க்கட்சியா இருக்கும்போது. ஆளும் கட்சியா ஆன பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி, அதிலே உங்க குடும்பத்து பிள்ளைகளுக்குப் பங்கு! இதைதானே கூட்டாட்சின்னு கொஞ்ச நாளைக்கு முன்ன கூட காது குத்த பார்த்தீங்க? நீங்க யாருன்னு முழுமையா மக்கள் புரிஞ்சிக்கிட்டதுதான் தலைவா நமது தோல்வி. இதுக்கு மேல நம்மை நம்பறதுக்கு எந்த மக்களும் இல்லை, என்னைப் போன்ற தொண்டர்களும் இல்ல. ஏதோ அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தக் கொடி போட்ட கரை வேட்டி, தி.மு.க.வில இருக்கிறோம். அதுக்காக எங்களையும் - தமிழ்நாட்டு மக்களா நெனச்சி ஏமாத்தாதீங்க... தலைவா.ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துனுமா? ஆட்சியில இருக்கும்போது அவங்களைப் பற்றி நெனப்பு வரல. இப்போ வருதா? அவங்களையுமா இன்னமும் ஏமாத்தப் போறீங்க... போதும் தலைவா... கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, பாதுகாத்த போராளிகள், வாழ்ந்த நிலம், இருந்த கூரை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் ஈழத்தில் தமிழன். அவன் விதி...விட்டுவிடுங்கள். அவனுள் உள்ள வீரம் அவனைக் காப்பாற்றும்.

அண்ணா வழி எது என்று பார்த்து, இதுக்கு மேலாவது திருந்தி நடப்போம். அடுத்த பொதுக் குழுக் கூட்டத்தில் நேரில் பார்க்கிறேன். உண்மையான தி.மு.க. தொண்டன்.

8/10/2011

ஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்


கறுப்புயூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்றுமுன்புதான் கடந்து போயிருக்கிறது.கறுப்புயூலை என்பதுகாலகாலமாக தென்னிலைங்கையில் வேர்ஆழப்பதிந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்கள்மீதும், தென்னிலைங்கையில் வே லை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள்மீதும் நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் மட்டுமல்ல.அது ஒரு கலவரம் அல்ல.அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு.

8/09/2011

இந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்சா கொண்டேபுடுவேன் (௩ - 3)முஸ்கி :  இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த கவிதை வீதி சௌந்தருக்கு  நன்றி. நியாயமா பார்த்தா திட்டணும். என்ன செய்ய நன்பேண்டா...


முணுமுணுக்கும் பாடல்கள்


1. நன்றி சொல்ல உனக்கு 
2. சந்தமாமா (தெலுங்கு)
3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி .

ஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...!கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் குடும்ப அரசியல் காரணமாக, மக்கள் எழுப்பிய எதிர்ப்பாலைகளால், தம் கட்சி கடுமையான தோல்வியைத் தழுவி விட்டதாக, பா.ம.க., தெரிவித்துள்ளது.

 தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்! 

இவர்களின் கடந்த கால வரலாற்றில், அ.தி.மு.க., தலைமையை எதிர்க்கும் துணிவுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. அத்தகு துணிச்சலும், வீரமும் பா.ம.க., தலைவருக்கு இனியேனும் துளிர் விடுமா என்பது சந்தேகமே; அப்படியிருக்கையில், இவர்களை நம்பி, பிற கட்சியினர் எப்படி கூட்டணியில் சேருவர்?


8/08/2011

என்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7ன்ன பொழப்புடா இது...


மாடெல்லாம் அவுத்துவுட்டு
கருப்புக் குடையை 
கக்கத்துல வெச்சிக் கிட்டு
ஒரு கையில
மூங்கக் கொம்பும்
மறு கையில 
எவர்சில்வ தூக்குல 
பழைய சோத்தையும்
எடுத்துகிட்டு 
ரோட்ல போகும்போது 
நாலு பையனுங்க 
கிண்டல் பண்ணும் போது 
நாண்டுகிட்டு 
சாவனும் போல இருக்கும்..

8/06/2011

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே?

 நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்”


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?

படித்ததில் பிடித்தது..
**********************************************************************************
கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?

சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர்

ஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை

சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.

8/05/2011

விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுவரை கட்சியை எப்படி நடாத்தினாரோ தெரியாது, ஆனால் இப்போது ‘வேறு விதமாக’ கட்சி நடாத்த வேண்டிய சூழ்நிலையை அவருக்கு ஏற்படுத்திவிட்டது ஒரு கடிதம். இந்தக் கடிதம் வந்திருப்பது தேர்தல் ஆணையத்திலிருந்து.

கடிதம் என்ன சொல்கிறது?

“உங்களது கட்சியில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடாத்தி, அவை தொடர்பான ஆவணங்களை இன்னமும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்க நேரிடலாம்”

ஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரித்திரம் ( உண்மைச் சம்பவம்)


1940 ஆண்டுகளின் முற்பகுதியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கம் வலுவான அமைப்பாக வளர்ந்து வந்தது. ரயில்வே தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்தில், தினமும் 12 மணி நேரம் வேலை செய்து வந்தனர்.

வார விடுமுறை என்பதே அவர்களுக்கு கிடையாது. மாதச் சம்பளம் 12 ரூபாய் மட்டுமே! பிட்டர் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு தினக்கூலி 12 அணாக்கள் (75 புதிய காசுகள்); கலாசி வேலை பார்க் கும் தொழிலாளிக்கு 9 அணா 4 பைசா (சுமார் 60 புதிய காசுகள்) தினக்கூலி; எழுத்தர் வேலை செய்பவர்களுக்கு மாதச் சம்பளம் 25 ரூபாய்; வருடத்திற்கு அவர்களுக்கு 1 1/2 ரூபாய் ஊதிய உயர்வு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு மாதச் சம்பளம் 30 ரூபாய். 

8/04/2011

சென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரபரப்பு தகவல்.


சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களசென்னையில் சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க?

ம்மா 
நான் இன்னைக்கு 
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
உங்க கூட 
வேலைக்கு வரேன்...


புத்தகப் பையையும் 
சாப்பாட்டுக் கூடையையும்
ஓரமாய் வைத்துவிட்டு 
அழ ஆரம்பித்துவிட்டாள்
ஆனந்தி...!

8/03/2011

சன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் மரணம்


ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கலாநிதி மாறன், ஏசி குமாரவேல், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் இருவர் ஆகியோரின் பேரில் கொலைமிரட்டல் புகார் கொடுத்தவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது ஜூலை 27ம் தேதி ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.

8/02/2011

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா?


இடைவேளை நேரத்தில்
எல்லோரும் தின்கிறார்கள்
எனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..


பள்ளி செல்லும்போதேல்லாம்
அடம் பிடிப்பான் என் மகன் ..


மனசு கேட்காமல்
வாங்கிக் கொடுத்தனுப்பிய பிறகு


மனசே சரியில்லை ..


என்மகன்
தின்கையில்
பக்கத்துச் சிறுவனிடம்
ஏதேனும் இருக்குமோ இருக்காதோ!!!

8/01/2011

நண்பேன்டா....இந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் தினமாம் .. என் மெயிலுக்கு வந்த நட்பு மொழிகள் உங்களுக்காக..

காதல்:  நான் தான் வந்து விட்டேனே நீ எதற்கு?
நட்பு:  நீ விட்டுச் சென்ற பின் கண்ணீரை துடைப்பதற்கு….!
  • நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட.... 
          தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது..

    • லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ............ .........                                 நட்பு என்பது மிஸ்டு கால்போல, அது வரும்போது அட்டென்ட் பண்ணவில்லை என்றாலும் கூட ,அது இன்பாக்ஸ் இல் அப்படியே இருக்கும்.

    சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருகங்கள்)!- உண்மைச் சம்பவம்..


    சிறு‌மியை கட‌த்‌தி செ‌ன்று இர‌ண்டரை ஆ‌ண்டுகளாக பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை த‌ற்போதுதா‌ன் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்கு வ‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த ‌சிறு‌மி உமாவு‌க்கு (பெய‌ர் மா‌ற்ற‌ம்) மதுரை மாவ‌ட்ட‌ம், ‌திரும‌ங்கல‌ம் அருகே உ‌ள்ள வாகை‌க்குள‌ம் ‌கிராம‌‌ம்தா‌ன் சொ‌ந்த ஊ‌ர்.

    12 வய‌து இரு‌க்கு‌ம் போது அதே ஊரை சே‌ர்‌‌ந்த உற‌வின‌ர் ரா‌ஜ்குமா‌ர் எ‌ன்பவரு‌க்கு அவரது பெ‌ற்றோ‌ர் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌ள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், ‌திருமண வா‌ழ்‌க்கையை வெறு‌த்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு ‌மீ‌ண்டு‌ம் வந்து விட்டாள்.