என்ன பொழப்புடா இது...
மாடெல்லாம் அவுத்துவுட்டு
கருப்புக் குடையை
கக்கத்துல வெச்சிக் கிட்டு
ஒரு கையில
மூங்கக் கொம்பும்
மறு கையில
எவர்சில்வ தூக்குல
பழைய சோத்தையும்
எடுத்துகிட்டு
ரோட்ல போகும்போது
நாலு பையனுங்க
கிண்டல் பண்ணும் போது
நாண்டுகிட்டு
சாவனும் போல இருக்கும்..
இந்த மாடுங்க
எல்லாம்
அவங்க அப்பன் ஊட்டு
ரோடுன்னு நினைச்சிகிட்டு
ரோடு பூரா போகையில
சைக்கிள்ல போறவன்கூட
'மாட்ட ஓரமா ஓட்டுடா
மரமண்ட' அப்படீன்னு
திட்டிட்டு போவான்...
அவன் பேச்சைக்கேட்டு
ரோட்டோரமா
மாட்டை ஒட்டுனா
ஓரமா போற பெரிசுக
'மாட்ட மனுச மேல ஒட்டுறியே
கேனப்பயலே
உனக்கு அறிவிருக்கா? " ன்னு...
அவங்களுக்குப் பயந்துகிட்டு
நடுவுல
ஓட்டினா லாரிக்காரன்
'ஊட்ல சொல்ட்டு வந்திட்டியா'
எனத் திட்டுவான்..
இவங்களைத் தாண்டி
வயக்காட்டு பக்கம் போனா
'எலே மக்கு பயலே
நெல்லு வயலுல விடறியே'ன்னு
வெய்வான்
அந்த காவக்காரன் ...
எலே
எடுவட்டப் பயலே
மாட்ட ஓட்டும்போது
கவனமா ஒட்டுலே
பராக்குப் பாக்காதே
என மொதலாளி
திட்டுவான்...
அந்த டிபன்பாக்ஸ்ச
வரப்புலே வெச்சிட்டு
ஓடிப்போயி
அந்த மாட்ட வெரட்டுரதுக்குள்ள
பசியேல்லாம்
பறந்து போயிடும்...
மாட்ட ஓட்ட
அங்கும் இங்கும் போகையில
காலுல முள்ளு குத்தும்
வர்ற ரத்தத்தை
தொடச்சிக் கிட்டு
அப்படியே போயிடனும்...
உச்சிவெயிலையும்
பாக்கணும்,
அடைமழை பேஞ்சாலும்
அசராம மாடுகளப்
பாத்துக்கணும்...
சூரியன் மறஞ்சப்புரம்
சிதறிகிடக்குற
எல்லா மாட்டையும்
ஒண்ணுசேர்த்து
ஓட்டியாரதுக்குள்ள
எல்லாப் பயகிட்டையும்
மறுபடியும்
வாங்கிக் கட்டிக்கணும்..
வீட்டுக்கு வந்த
மாடுகள
கழனித் தண்ணி காட்டி
வெக்கா போட்டு
தண்ணிக் காட்டையில
பால் கறக்க
வரேன்னு நினைச்சு
பசு மாடு உதைக்கும்
முட்டியில ரத்தம்
பிச்சுக் கிட்டு அடிக்கும்...
மாடு மேய்க்கிறதுல
இத்தனை
சிரமம் இருக்கையில
நீ மாடு மேய்க்கத்தான்
லாயக்குன்னு
தலமொற, தலமுறையா
சொல்லிக்கிட்டு
இருக்காங்க
பள்ளிக் கூட வாத்திங்க...!!!
ம்.. என்ன பொழப்புடா இது ...
மாப்ள மாட்ட வச்சே ஓட்டிய(!) உமக்கு நன்றிகள்!
ReplyDeleteயதார்த்த உண்மையை சொன்னது கவிதை.
ReplyDeleteஎன்ன பொழப்புடா இது...//
ReplyDeleteசமூகத்தின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறீங்க போல இருக்கே,
மாடு மேய்க்கிறதுல
ReplyDeleteஇத்தனை
சிரமம் இருக்கையில
நீ மாடு மேய்க்கத்தான்
லாயக்குன்னு
தலைமொற, தலைமுறையா
சொல்லிக்கிட்டு
இருக்காங்க
பள்ளிகூட வாத்திங்க...!!!//
வாத்தியார் மீது வாத்தியாருக்கு உள்ள கோபம் நியாயமானது தான்.
கிராமிய மொழி நடை கலந்து, காலதி காலமாக எம் சமூகத்தில் உள்ள, ஏசப் பயன்படும் வார்த்தை மீதான கோபத்தின் வெளிப்பாடாகவும்,
மாடு மேய்க்கும் சிறுவர்களின் நிலமையினை தத்ரூபமாகச் சொல்லும் கவியாகவும் உங்கள் கவிதை அமைந்துள்ளது,
யோவ் வாத்தி என்னய்யா ஆச்சு மக்கா....?
ReplyDeleteமாடு மேய்க்கும் தொழிலில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் போது அதை எப்படி ஆசிரியர் குறை கூறலாம்.
ReplyDeleteநீங்கள் மாடு மேய்பபவர் கஷ்டம் தெரிந்த வாத்தியார்.
கவிதையில் நிதர்சனம் நிழலாடுகிறது...
ReplyDeleteஎன்னைப்பொருத்தவரை
உலகில் எந்த வேலையும் சுலபமில்லை சோம்பேறிக்கு
உலகில் எந்த வேலையும் கடினமில்லை திறமைசாலிக்கு
அதையும் தாண்டி சும்மா இருப்பது தான் ரொம்ப கடினம் நண்பரே...
ReplyDeleteஉபயம்...வடிவேல்..
சுருக்கமா இதப்பத்தி சொல்லணும்ன்னா....சூப்பர் !
ReplyDeleteசப்பா இப்பவே கண்ண கட்டுதே மாடு மேய்க்கிரதெண்ட சும்மாவா
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteஎதார்த்த கவிதை...
ReplyDeleteஇயல்பாய் வந்திருக்கு.
என்ன கொடும இது
ReplyDeleteபாவம் :(
மாடு மேய்க்கிறதுல
ReplyDeleteஇத்தனை
சிரமம் இருக்கையில//
கொடுமை.
ASATTHAL
ReplyDeleteஎதையுமே அனுபவிச்சா தான் தெரியும் அதன் அருமையும் கொடுமையும்
ReplyDeleteஅன்பின் கருன் - சிந்தனை அருமை - எத்தொழிலும் எளிதானதல்ல - மாடு மேய்க்க்த் தான் லாய்க்குன்னு சொல்ற வாத்தியார்கள் அது எளிதானது என்ற பொருளில் கூறவில்லை. எளிதாக அவ்வேலை கிடைக்கும் என்ற பொருளில் தான் கூறுவார்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteயதார்த்த உண்மைகள் பளிச்சிடுகின்றன
ReplyDeleteபடகோட்டி கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது...
எத்தொழில் யார் செய்யினும் அத்தொழில்
கருத்தாய் செய்தல் நலமே .....
நன்றி மச்சி
ReplyDelete////மாடு மேய்க்கிறதுல
ReplyDeleteஇத்தனை
சிரமம் இருக்கையில
நீ மாடு மேய்க்கத்தான்
லாயக்குன்னு
தலைமொற, தலைமுறையா
சொல்லிக்கிட்டு
இருக்காங்க
பள்ளிகூட வாத்திங்க...!!!// அப்ப வாத்தியாரேம் ஒருக்கா மாடு மேய்க்க அனுப்ப வேண்டியது தான்.ஹிஹி
நல்ல உரைநடையுடன் கூடிய எளிமையான கவிவரிகள்.உண்மையில் மாடுமேய்ப்பதை எதோ கேவலமான தொழில் என்றுதான் சமூகத்தில் கருத்து நிலவுகின்றது அப்படி சொல்லுபவர்களுக்கு.உங்கள் கவிதையைப்படித்தால் அவர்களுக்கு நல்ல சாட்டை அடியாக இருக்கும்.
ReplyDeleteஎளிமையான நடையில் கவிதை...
ReplyDeleteசூப்பர்...
மாடு மேய்க்கிறதுல
ReplyDeleteஇத்தனை
சிரமம் இருக்கையில
நீ மாடு மேய்க்கத்தான்
லாயக்குன்னு
தலமொற, தலமுறையா
சொல்லிக்கிட்டு
இருக்காங்க
பள்ளிக் கூட வாத்திங்க...!!!//யதார்த்த உண்மைகள் பளிச்சிடுகின்றன
ரொம்ப நல்லாருக்கு.. இதைப்படிச்சப்புறமாவது இனிமே அப்படி திட்டாம இருக்கட்டும் :-))
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.. இதைப்படிச்சப்புறமாவது இனிமே அப்படி திட்டாம இருக்கட்டும் :-))
ReplyDeleteஎன்ன கொடும இது
ReplyDeleteபாவம் :(
உங்கள் பதிவுகளை இங்கும் பதிவு செய்யலாம்
ReplyDeleteEllameyTamil.com
அருமை! நண்பரே...
ReplyDeleteஎன்ன பொழப்புடா இது.
ReplyDeleteசரியான தலைப்பு
சிந்திக்க வைக்கும் கவிதை.
அருமை நண்பா.
இதைப்பார்த்த பின் எந்த ஆசிரியரும்
ReplyDeleteஇந்தக்கேள்வியை கேட்க மாட்டார்கள்.
கருண் ஆசிரியர் எப்படியோ?
ReplyDeleteபசங்களா இனிமே வாத்தியார் மாடு மேக்கத்தான் லாயக்குன்னு சொன்ன, நாம திறமைசாலின்னு சந்தோசப்படுங்க.
ReplyDeleteவாத்தியாரெல்லாம் மாடு மேய்ச்சுப் பாக்கணும்னு சொல்றீங்களா!!
ReplyDeleteஅதானே.நல்லா யோசிக்க வச்சிட்டீங்க.இனி யாராச்சும் மாடுதான் மேய்க்கப்போறாய்ன்னு சொல்லட்டும் பார்க்கலாம்.இந்தக் கவிதையைப் பாடமாக்கி வைக்கவேணும் !
ReplyDeleteமாப்பிள எல்லார் கையிலும் ஒரு மாட்ட கொடுத்திட்டீயே ஓட்டி பாரய்யான்னு.. என்ர தொழிலுக்கு மரியாத கொடுத்த உங்களுக்கு ஒரு சலூட்...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்...
இனி மாடு மேய்க்கப்போறேன்னு மீசைய முறுக்கிட்டு சொல்லுவேன்... என்னதான் திட்னாலும் கடைசியில் அந்த கரவம்பால தண்ணியில கலக்காம அப்ப்டியே குடிச்சுட்டு தெம்பா ஏப்பம் வுட்டா கவலையில்லாம் காத்தா போயிரும்
ReplyDeleteok machi antha vathiya madu meika vida vendiyathuthan
ReplyDelete