அம்மா
நான் இன்னைக்கு
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
உங்க கூட
வேலைக்கு வரேன்...
புத்தகப் பையையும்
சாப்பாட்டுக் கூடையையும்
ஓரமாய் வைத்துவிட்டு
அழ ஆரம்பித்துவிட்டாள்
ஆனந்தி...!
ஏண்டி
சிறுக்கி மவளே
கொழுப்பாடி உனக்கு
ஒன்னாவுது படிக்கும்போதே
இவ்வளவு அடமா?
இரு உன்னைய
அந்த பூச்சிக் காரன் கிட்ட
புடுச்சி குடுக்கறேன் என்றாள்...!
ஆத்தா அடிக்கடி
பூச்சிக்காரேன்,பூச்சிக்காரேன் ன்னு
பயமுறுத்துறியே ?
அவன் எப்படி இருப்பான்
தேம்பியபடி கேட்டாள்
ஆனந்தி...!
முறுக்கிய மீசை,
சிவந்த கண்கள்,
முரட்டு உருவம்,,
எப்போதும் போதையில இருப்பான்
அடிப்பான்,
காலால உதைப்பான்,
தப்பு பண்ணாலும், பண்ணாட்டியும்
போட்டு மிதிப்பான்,
அவன்தான் பூச்சிக் காரன் ...!
அதுவரை அழுது கொண்டிருந்த
ஆனந்தி,
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
பூச்சிக் காரனுக்கு
இவ்ளோ பயப்படறியே
நீ எப்படிம்மா
அப்பாவ கல்யாணம்
கட்டிகிட்ட?
sooperuuuuuuuuuu..
ReplyDeleteநல்லாருக்கு சார் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாத்தியாரே.... நல்ல பகிர்வு.
ReplyDeleteசமத்து ஆனந்தி
ReplyDeleteநிறைய அப்பாக்கள் அப்படியில்லை இப்ப...நல்ல முடிவு...
ReplyDeleteஅப்பாவின் கொடுமை பிள்ளையின் மனதில் பதிந்ததால் வந்த கேள்வி
ReplyDeleteபதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...
ReplyDeleteraittu.
ReplyDeleteபாப்பா கொடுத்த பல்பு !
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஏழ்மைக் குடும்ப சூழ் நிலையினை..கவிதை மனதை நெகிழச் செய்யும் வரிகளோடு, யதார்த்தம் கலந்து தாங்கி வந்திருக்கிறது.
ReplyDeleteஇப்படியும் எத்தனை குழந்தைகள் வாழ்வு, எத்தனை குடும்பங்கள் வாழ்வு குடி போதையின் விளைவால் தள்ளாடுகிறதோ.
அன்பின் கருண் - மழலையின் சிந்தனை எப்படிச் செல்கிறது பார்த்தீர்களா ? வீட்டில் நமது நடவடிக்கைகள் குழந்தையின் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஹ்ம்..கருன் இப்டில்லாம் எழுதுனா நாங்கல்லாம் என்ன எழுதுறது..?
ReplyDeleteகவிதை அருமை கருன்.:-) வாழ்த்துகள் , இயல்புக்கவிதை ...!
கலக்கல் நண்பா
ReplyDeleteபின்னிடீங்க
செண்ட்டிமெண்ட்டா போட்டு தாக்கறீரு?
ReplyDeleteபூச்சிக்காரர்களுக்கு நன்கு உரைக்கட்டும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ
பூச்சிக்காரர்களுக்கு நன்கு உரைக்கட்டும்.
ReplyDeleteநல்ல பகிர்வு சகோ
நல்ல கவிதை கருன் சகோ ...
ReplyDeleteபிஞ்சு மனதின் ஆழத்தில் எத்தனை வேதனை !
எப்போதும் நல்ல அருமையான கவிதை, அழகான பதிவும் கூட.. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..!
ReplyDeleteசூப்பர பாஸ்! அசத்தல்! :-)
ReplyDeleteஎதார்த்தம்.
ReplyDeleteஇயல்பாய் ஒரு கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியாரே...
குழந்தைகளின் முன் எப்படி இருக்க வேண்டும் நடக்க வேண்டும்
ReplyDeleteஎன்பதை அருமையான படைப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள்.
அருமை.
///அதுவரை அழுது கொண்டிருந்த
ReplyDeleteஆனந்தி,
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
பூச்சிக் காரனுக்கு
இவ்ளோ பயப்படறியே
நீ எப்படிம்மா
அப்பாவ கல்யாணம்
கட்டிகிட்ட?// ஹிஹிஹி பாருங்கோ
நல்ல கவிதை வாத்தியாரே....!
ReplyDelete:)ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பூச்சிக்காரர்கள்.
ReplyDeleteஉலகத்தில் பரவிக்கிடக்கும் சமூக்த்தின் அவலம்...
ReplyDeleteகவிதை வடிவில் அசத்தல்..
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
ReplyDeleteபூச்சிக் காரனுக்கு
இவ்ளோ பயப்படறியே
நீ எப்படிம்மா
அப்பாவ கல்யாணம்
கட்டிகிட்ட?// அருமையான வரிகள் .
படிப்பினை மிக்க கவிதை ,
ReplyDeleteஅருமை சகோ :)
குட் பதிவு பாஸ்
ReplyDeleteபூச்சிக்காரன் இப்படியா இருப்பான்.....
ReplyDeletehaaaaha..
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
பூச்சிக் காரனுக்கு
இவ்ளோ பயப்படறியே
நீ எப்படிம்மா
அப்பாவ கல்யாணம்
கட்டிகிட்ட?/
நல்ல கவிதை,,
வாழ்த்துக்கள்///
அவ்வ்வ்....
ReplyDeleteகுழந்தை மனசு எவ்வளவுதெளிவு. நல்ல கவிதை.
ReplyDeleteகடைசி வரிகள்... நச்
ReplyDeleteஅருமை
எதார்த்தமான கவிதை... அருமை...
ReplyDeleteயதார்த்தமான அருமையான படைப்பு..
ReplyDeleteethu kuzhanthaikalidam periyavargal eppadi nadanthu kozhalla vendum enpatharkana nalla padam.
ReplyDelete