Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/18/2011

ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ?


சென்னை வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சிவாவுக்கு மணிமண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது கூறியதாவது:


1996ல் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசுக்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம். ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.

தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து; தனது முழுமனதான ஆதரவையும், உழைப்பையும் தர முன்வந்தார். அதை நரசிம்மராவ் ஏற்கவில்லை.

நான் காலைப்பிடிக்காத குறையாக கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது இழந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப்போதும் என்று கெஞ்சினேன். ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்.


எப்படியெல்லாம் காமெடி பண்றாங்கப்பா?

22 comments:

  1. அப்பாடா... எப்படியோ தமிழகம் தப்பித்தது.. ரஜினியும் தப்பித்தார்,

    ReplyDelete
  2. 1996 ல் ரஜினி கொடுத்த வாய்ஸ் ஆட்சி மாற்றத்தை ஏற்ப்படுத்தியது என்பது உண்மை தான். ஆனால் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே...

    ReplyDelete
  3. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணவில்லையே?

    ReplyDelete
  4. விடுங்க பாஸ் இது அவரது பேராசை ....
    பகல் கனவு

    ReplyDelete
  5. காங்கிரஸ்காரங்க யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்க....

    நல்ல வேளை...

    ReplyDelete
  6. / ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்./

    எல்லாம் கதைதான்...
    காமடி பண்ணுறாங்களா?

    ReplyDelete
  7. சூப்பர் காமெடி வாத்தியாரே!!??

    ReplyDelete
  8. //பாரத்... பாரதி... கூறியது...
    அப்பாடா... எப்படியோ தமிழகம் தப்பித்தது.. ரஜினியும் தப்பித்தார்
    // ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  9. தமிழ் மணம் 8

    ReplyDelete
  10. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

    ReplyDelete
  11. அட இந்த கதை புதுசா இருக்கே!

    ReplyDelete
  12. குமரி அனந்தன் ...குமரி முத்து ஆயிட்டார் போல...

    ReplyDelete
  13. என் பேச்சை கேட்டிருந்தால்,கருணாநிதி மறுபடியம் ஆட்சிக்கு வந்திருப்பார்,ராமதாஸ் ஆட்சிக்கு வந்திருப்பார்.சரத்குமார் கூட ஆட்சிக்கு வந்திருப்பார்.எல்லாம் நேரம் சாமி.அப்படியே எங்க பக்கமும் வந்து போங்க http://bommaiyamurugan.blogspot.com

    ReplyDelete
  14. ரஜனி தப்பீட்டார்

    ReplyDelete
  15. சரிதான் வாத்யாரே!

    ReplyDelete
  16. தப்பிச்சுதுடா தமிழ்நாடு!

    ReplyDelete
  17. ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. //

    அருமையான காமெடி.

    ReplyDelete
  18. இனி என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு
    வராது
    ஈழத் தமிழரை அழித்த அந்த
    கட்சியே விரைவில் இங்கு அழியும்
    இது உண்மை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. இவனுங்க பண்ற லொள்ளு தாங்க முடியல மாப்ள

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"