அன்று, ராஜிவ் மறைவுக்கு பின், நேரு குடும்பத்தில், வேறு ஆள் கிடையாது என்ற காரணத்தால், நரசிம்மராவ் பிரதமராக அமர்ந்தார். அவர் கூட, சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும், இப்படி ஒரு ஊழல் ஆட்சியை தரவில்லை.
ஆனால் இன்றோ, பிரதமர் மன்மோகன் சிங், தன்னை ஊழலுக்கு எதிரானவர் என்று சொன்னாலும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அவர்களை ஊழல் செய்ய விட்டுவிட்ட இவரும், ஒரு ஊழல்வாதியாக காட்சியளிக்கிறார்.
கடந்த, 1989ல், தன் ஆட்சி காலத்திலேயே, ஒரு மக்கள் நலத்திட்டத்திற்கு, 100 ரூபாய் ஒதுக்கப்பட்டால், 83 ரூபாய் ஊழலுக்கு சென்று விடுவதாக, ராஜிவ் கூறினார். ஆனால், இன்றோ ஒதுக்கப்படும் மக்கள் நலத்திட்டங்களின் நிதி அனைத்துமே, ஊழல் அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்கின்றனரோ என நினைக்க வைக்கிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில், எந்த துறையில் வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, அமைச்சர்கள் ஊழல்செய்வதில், லட்சம் கோடிகள் வரை சென்று சாதனை படைத்துவிட்டனர்!
இனி இந்தியா?
இந்தியா இருள்கிறது!
ReplyDeleteவட போச்சே
ReplyDelete//இனி இந்தியா?//
ReplyDeleteநிச்சயம் வல்லரசுதான்
Vazhga india
ReplyDeleteமாப்ள உம்ம பிரச்சன என்ன தலைய மாத்தனும் தலைவலியா மாத்தணுமா....இப்போ டாப்பு தூங்க போயி இருக்கு வந்தப்புறம் கேளுங்க சொல்லுவாங்க!
ReplyDeleteஅவரைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அவர்களை ஊழல் செய்ய விட்டுவிட்ட இவரும், ஒரு ஊழல்வாதியாக காட்சியளிக்கிறார்.
ReplyDeleteசெயல்படமுடியாத பிரதமர்.
இந்தியனின் தலைஎழுத்து இது..
ReplyDeleteபொம்மைப் பிரதமர்.....
ReplyDeleteகாலம் மாறுமென்று காத்திருப்போம்!
ReplyDeleteரைட்டு!
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteஎப்படி இருக்கிறீங்க
அடடா,,
ReplyDeleteமன்மோகனார் ஆட்சியில் இருந்தென்ன பயன்?
இனி ஆட்சி செய்து என்ன பயன் எனும் நிலையினை இந்தியா உணர்ந்து விட்டதா.
வெகு விரைவில் மன்மோகனாருக்கு கலைஞரை வீட்டுக்கு அனுப்பியது போன்று மக்கள் நல்லதோர் தீர்வு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்,
ஒதுங்கி விடலாமே?
ReplyDeleteமன்மோகன்: கண்டிப்பாக,
ராகுல் ரெடியாகிட்டார்.
அவர எங்கயாவது போகச் சொல்லுங்கப்பா ......
ReplyDeleteHe is wm waste minister
ReplyDeleteஒதுங்கிடாம்...
ReplyDeleteஆமா ஆமா திகாருக்கு ஒதுங்கிடலாம்...
//கடந்த எட்டு ஆண்டுகளில், எந்த துறையில் வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, அமைச்சர்கள் ஊழல்செய்வதில், லட்சம் கோடிகள் வரை சென்று சாதனை படைத்துவிட்டனர்//
ReplyDeleteநல்லாச்சொன்னீங்க தல
இன்று என் கடையில்-(பகுதி-4)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்
http://cricketnanparkal.blogspot.com/2011/08/4.html
சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் வாய்ப்பில்லாதவர்கள்
ReplyDeleteஎந்த பதவியில் இருந்தாலும் சாதிக்க முடியாமல் போய்விடும்.
சரி அவரை செயல்பட விட்டால் தானே.
இந்த பொம்மை போனால் இன்னொரு பொம்மையை பிரதமர் ஆக்குவார்கள்..
அது பொம்மைய்யா..
ReplyDeleteமன்மோகனின் மனசாட்சி: என்னைச்சுற்றி அமைச்சர்கள் எல்லோரும் ஊழல் செய்கிறார்கள் என்று எனக்குத்தெரியும். ஆனால் நான் ரொம்ப....நல்லவன். அதான் அவங்க ஊழல் பண்ணும்போது தெரிஞ்சே கண்ணை முடிக்கிட்டேன். நான் யார் ஊழலையும் பார்க்கல. என்ன நம்புங்க. சத்தியா....நான் ரொம்ப நல்லவங்க.
ReplyDeleteரொம்பத் திட்டாதீங்க பாவம் .....ஹி ...ஹி ..ஹி ...
ReplyDeleteதமிழ்மணம் உட்பட அனைத்து ஓடும் போட்டாச்சு சகோ .வாழ்த்துக்கள் .
ஹய்யோ ஹய்யோ கை வீசம்மா கை வீசு
ReplyDelete