Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

3/31/2011

குப்பைக் கூடையும்- அரசியல்வாதிகளும்!!!


கூட்டிப் பெருக்கி
முடியவில்லை
ஒரு குப்பைக் கூடை
வாங்கிவா என்றாள்...!

பேன்ஸி ஸ்டோரிலும் சரி
நடை பாதை 
தள்ளு வண்டியிலும் சரி
அழகு அழகாய்
விதம் விதமாய்
எத்தனைக் கூடைகள்...!

வாங்கி வந்ததும்
வீட்டில்
எங்கு வைப்பது
என்றேன்...!

சுவற்றின் மூலையில்
அல்லது
மேசைக்கு அடியில்
என்றாள்...!

கூடை அழகாய்
இருக்கிறது 
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்?

னக்கு ஞாபகம் வருகிறது
எத்தனைக் கூடைகள்
மேசையின்மீது- நாட்டில்தான்...!

3/30/2011

வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்...


ரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.  


அப்போது அவர்,  ‘’எனக்கு வலி இருக்கு.   வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்)    எனக்கு மனுக்கள் வந்து குவியுது.   ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு.  இதுதானா?  ஏமாத்து உலகம்தானா?  மக்கள் ஏமாந்துதான் போகனுமா?

எத்தனை எம்.எல்.ஏ.  இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க.   மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட.    பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.

மூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார். பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு,  ’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க.  ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க.   உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன். 

எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன்.  தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன்.   நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.

உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்.
 Thanks nakkeran.

உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலாம்!


சுலபமாய்
அறுத்தெறிந்து விடலாம்
பூணூலை...
அணுத்திமிர் அடங்காத
ரத்தநாளங்களை என்ன செய்வாய்...!


***********************************************************************************

வீரியம் தெரியாமல்
யாரோ 
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!


***********************************************************************************
து அகலிகை
எவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!


***********************************************************************************
திர்வரும்
நண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!

***********************************************************************************

3/29/2011

அரசியல் வேண்டாம்ன்னா கேட்கறீங்களா?


சொந்த பந்தங்களை
முதலில் அனுப்பிவிட்டு...
ஒவ்வோரு பொருளாய்
வண்டியிலேற்றி...
காலியான வீட்டை
சுற்றும், முற்றும்
பார்க்கிறேன்...!

தேனும்
மறந்துவிட்டேனா
என்கிற தேடுதலோடு...!

முதல்முறையாக
பார்வையில் படுகிறது
இங்கு
வாழ்ந்தவர்களின்
காலடித் தடங்களும்
சுவாசக் காற்றும்
வீடெங்கும்
சுதந்திரமாய் அலைவதை...!

3/28/2011

அடிமையாக்கும் “சினிமா” எனும் கனவுத் தொழிற்ச்சாலை.


 “சுழன்றும் ஏர் பின்னது உலகம் ” என்றார் வள்ளுவர். இன்று எல்லாரும் திரைப்படத் துறையின் பின்னே என்பது நிதர்சனம். வியாபாரம் செய்ய வந்த அயல் நாட்டுக்காரன், நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாகத் தோன்றிய திரைப்படம், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்.

திரைப்படத்தில் ராமன், கிருஷ்ணன் என்று வேடமிட்டு வந்தவரை, தெய்வமாகவும், அட்டைக் கத்திப் பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும், ஏழை, விவசாயி, உழைப்பாளி என நடித்தவர்களை, தங்களில் ஒருவராக, ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ, அன்றையிலிருந்து நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும், தங்கள் செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி, மெல்ல, மெல்ல அரசியலில் அடி எடுத்து வைத்து, ஆட்சி பீடத்தைப் பிடிக்கத் துவங்கினர்.விபத்தாக நிகழ்ந்தது, விதியாக மாற்றப்பட்டது. நாளடைவில், அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை. 

அதற்குப்பின் நடந்து வருவதெல்லாம், திரைப்படத்துறையினருக்காக, திரைப்படத்துறையினரைக் கொண்டு, திரைப்படத்துறையினரால் நடத்தப்படும், "சினிநாயகம்!'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது போல், ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும், நண்பர்களும், பல்வேறு வகைகளில், திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர். 

அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சியில் தஞ்சம் அடைகின்றனர். ஆட்சி மாறினால், இவர்களுக்கு ஆதாயம்; மாறாவிட்டால், வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம். ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் இருப்பது, அந்தோ... பொது மக்கள் வாழ்வுதான்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், சினிமாக்காரர்கள் நலமுடன், வளமுடன் வாழ ஆவன செய்வர்; அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்; அது போதாதா? விலைவாசி ஏற்றத்தால், மக்கள் அவதிப்பட்டாலோ, மின் வெட்டு பிரச்னையால், மாணவர்கள் அல்லலுற்றாலோ நமக்கென்ன? திரைப்படத் துறையினருக்குக் குறையில்லாமல் பார்த்துக் கொண்டாலே, நாடு சுபிட்சம் அடையாதோ ?

நடுநிலையாளர்‌களே சிந்தியுங்கள்...


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், 
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

3/26/2011

விடியலின் விநாடிகள்....


டி மாதம்
எங்கள் ஊர் அம்மன்
திருவிழா காலங்களில்
ஓரு நாள்...!

முதல் பிரசவத்திற்காக
மருத்துவமனையில்
மனைவியுடன் 
இருக்க நேர்ந்த
ஓரு நாள்...!

னுபவித்திருக்கிறேன்
விடியலின் விநாடிகளை...!

நாளின் வேலைகளைப் போல்
கடந்து போகும்
தூக்கமும், விழிப்பும்
அலுப்பூட்டுகின்றன...!

மொத்த வாழ்வும்
ஒன்றிரண்டு நாட்களில்
நீள்வது போல்...!


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், 
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

3/25/2011

தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்?


தி.மு.க.,  மற்றும் அ.தி.முக.வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை,  இவர்களின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது. 
 
கடந்த ‌ ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்  தி.மு.க வின் சாதனைகள் தான் என்ன?  இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன? இதன் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விடுத்து ஒர் தேர்தல் அறிக்கையை வாசித்தார் முதல்வர்.  அதில் பல இலவச திட்டங்கள்.

மாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

இந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். 

பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! 

இன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தி.மு.க தலைவர்கள் தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால்,  மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பர். 

அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!

முந்தைய பதிவுகள்: 

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

அதிகாலையில் கனவு, நடக்குமா?


புறாக்கள் பார்ப்பது
அரிதாகிவிட்டது...!

புற்களைப் பார்க்க கூட
ஊருக்கு வெளியே
போகவேண்டியிருக்கிறது...!

ப்போதாவது
பயணங்களில் பார்க்கக்
கிடைக்கின்றன
ஆடுகளும்
வெள்ளைக் கொக்குகளைச்
சுமந்த மாடுகளையும்...!

நாற்று நட்டவா்களும்
வேர்கடலை பிடுங்கியவர்களும்
களை எடுத்தவர்களும்
என்ன செய்கிறார்களோ
ஜீவனத்திற்கு...!

னிதர்கள் பெயரில்
பதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ?

ஷியன்” வண்ணப்பூச்சுடன்
உயர்ந்து நிற்கும்
கோபுரம் மட்டும் இன்னும்
ஊரைச் சுமந்து கொண்டிருக்கிறது...!

தூசிபடியாத நவீன விட்டில்
வாழ்க்கை பழகிக் கொண்டது...!

ன்றாவது
அதிகாலையில் கனவு வருகிறது
காட்டுச் செடிகளுக்கிடையில்
கலாப்பழம் தேடிப்போவது  போல்...!

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

3/24/2011

இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் ஆதரிப்போம் : சீமான்


நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர்  சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.

இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.

நாளை எனது பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரச்சாரம் செய்வேன்.    

தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும்.
 
இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும்.   காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.

காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.

நன்றி - படங்கள்  நக்கீரன்.

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    
 

வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்


வாழ்கையை
வாடகைக் கனவுகளுக்கு விற்று
வெளிநாட்டுக்குச் செல்வோர்
திரும்பி வருகின்றனர்
சில, பல ஆண்டுகளைத் தின்று...!

கிளம்பிச்  சென்ற
நாளிலேயே நின்றுகொண்டு
நாம் மறந்தே போன
அநேக விஷயங்களை
ஞாபகமூட்டி  கேட்கிறார்கள்...!

விட்டது, தொட்டது
எல்லாம் பேசி முடித்து
எப்போது வந்தாலும்
அதே கோப்பையில் தரும்
தேநீரை
முகஞ்சுளித்து குடித்துவிட்டு
விடைபெறுகிறார்கள்
மாறிப் போன
அவர்களின் மொழியைப் பற்றி
கவலைப்படாமல்...!

பார்வையில் படாத
மண்ணில்
அவர்களுக்கு
வாழ்வு எப்படியோ?!

வ்வொரு முறை
வரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
 
 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

3/23/2011

மனம் எனும் சாக்கடை...!


ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?




ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


ன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?

 
ன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?




ந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?

ந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?

ன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும்   என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
 ன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது 
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?


ம்முடைய முகவரிகள் 
பொய்யானவை,
நம்முடைய முகங்கள் 
பொய்யானவை,

நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?


தனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க  முடிவதில்லை.....




முகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...

நாம்
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.



 
ம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

 யாரும்  அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????


இது மீள்பதிவு..


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
 
 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!




யாருடைய மனதையும்  புன்படுத்த அல்ல இக்கவிதை.. 
சிரிப்பதற்க்காக மட்டுமே..

ன்..
உருப்பெருக்கி
ஓவியமே...!

ஞ்சகமில்லாமல்
வளர்ந்து விட்ட  உன்
உடலுக்கு என்
முதல் வணக்கம்...!

செவிக்கு
உணவில்லாதபோது
சிறிது வயிற்றிக்கும்
ஈயப்படும்-  அது குறள்
வயிற்றிக்கு உணவுபோக
மீதியிருந்தால்- செவிக்கு
கொடுப்போம்  இதுவே
எனது  புதுக் குறள்...!

விரலுக்கெற்ற வீக்கமாம்
இருக்கட்டும்
அது விரலுக்குத் தான்
கண்ணெ! உன் உடலுக்கு இல்லை...!

சைக்கிளில் சென்றால்கூட
பார்த்தம்மா பார்த்து
‌அந்தச் சக்கரத்தோடு
அழுத்திவிடாதே
என்னையும் சேர்த்து...!

ரண்டு பேர்
அமரும் இருக்கையில்
நீ.. ஒருத்தியே போதுமடி...!

னக்குள்
ஓரு ஆசை உண்டு
என்றாவது ஒரு நாள்
உன் உணவின் அளவை
ஒளிந்திருந்து
பார்க்கவேண்டும்  என்று - உனைப் போல
என் உடம்பையும்  ஓரளவிற்கு
வளா்க்க வேண்டும் என்று ...!

ன் உயிரே...
உலகே அழிந்தாலும்
உன் உடலை
இளைக்க வேணாமடி...

டி,
தளிர்கொடியே
தலைமுடி கலைகிறது
மெதுவாய்
நீ மூச்சுவிடு...

டல் இளைத்துவிட போகிறது 
இன்று ஒரு நாள் மட்டும்
ஓய்வு எடு...!

**********************************************************************************
திவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000  ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
**********************************************************************************
முந்தைய பதிவுகள்:     முடிவெடுக்கக் கற்கலாமா? -2 
                                                 கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க!
 யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

3/22/2011

கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க!!!

டற்பயிற்சி குறித்த ஆர்வத்தைத் தூண்டவும், ஆரோக்கியக் கல்விக்கு வழிவகுக்கவும் பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் தொடங்கப்பட்டன. 

பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் பள்ளி சார்பில் அணியை உருவாக்குவதே பிரதானப் பணியாகும். ஆனால், அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனி அணிகள் கொண்ட பள்ளிகள் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு சிலவே இருக்கின்றன.அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பின்வரும் விளையாட்டுப் பாடவேளைகளை அறிவியல், கணிதம் என ஏதேனும் ஒரு துறை ஆசிரியர் ஆக்கிரமித்துக் கொள்வதும் கண்கூடு. 

இதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருக்கும் கிடுக்கிப்பிடி மேலும் அதிகம்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதால்தான் தேர்வுக் கூடங்களில் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
இதனால்தான் நூற்றுக்கணக்கான சச்சின்களும், தன்ராஜ்பிள்ளைகளும், பி.டி.உஷாக்களும் சமூகத்துக்குத் தெரியாமலேயே வேறு துறைகளுக்குள் நீர்த்துப்போய் விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்கத்தை அடைவது இயலாததாகவே ஆகிவிடும்.

கல்வித் துறையில் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். சமச்சீர்கல்வி முழுமையாக்கப்பட உள்ள தமிழகத்தில், விளையாட்டு விதிமுறைகளும் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவது அவசியம்.

தேர்தல் ஜுரம் பற்றியிருக்கும் தமிழகத்தில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறையையும் கருத்தில் கொண்டால்(  கலைஞரின் கதாநாயகியில் இல்லை), தேசிய அணிகளில் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.

காணும் பெண்களெல்லாம்...


வெளி தேசத்தின் ஒரு நகரம்... மகளிர் மன்றக் கூட்டம்.... இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேச அழைக்கப் பட்டிருந்தார்.   அப்போது அவருக்கு முப்பது வயது.  அந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர் என்ன  பேசிவிடப் போகிறார் என்ற இளக்காரத்துடன் அமர்ந்திருந்தனர். 

அவன் பேசத் தொடங்கினான்.  இந்திய பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி என்றநிலை, பெண்மையை போற்றும் பண்பு என அவனுடைய  முழக்கம் இந்திய  மண்ணின்  மகத்துவத்தை பேசி முடித்தது.

கூடியிருந்த அத்தனை பெண்களும் வியந்து கைதட்டினர். அந்தக் கூட்டத்தில் இருந்த பதினெட்டு வயதுப் பெண்ணொருத்தி அந்த முழக்கத்தைக் கேட்டு தன்னை இழந்தாள்!!!.

அதன்பின் அந்த தேசத்தில் அவன் எங்கு பேசினாலும் முன்வரிசையில் ஓடிச் சென்று அமர்ந்தாள். ஆம் !  அவனுடைய அறிவுக்குத் தலைவணங்கிய அவள், மெல்ல மெல்ல அவனுடைய அழகுக்கு அடிமையானாள். அவன் பல மாதங்கள் அந்த தேசத்தில் தங்கி பல இடங்களில் பேசினான். அவன் சென்ற அனைத்து கூட்டங்களுக்கும் அவளும் சென்றாள். முடிவில் அவனைச் சந்திக்க அவள் விரும்பினாள். அவளுடைய  முயற்சிகள் எல்லாம் தோற்றன.

ஒருநாள் அவன் அந்தத்  தேசத்திலிருந்து விடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாக செய்தி அறிந்து அவளுடைய விருப்பத்தை  சொல்லிவிட விமான நிலையம்  விரைந்தாள்.

அங்கு அவனைச் சந்தித்து “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றால் அவள்! அப்படியா? என்றான் அவன்! என் அழகும் உன் அறிவும் சேர்ந்து உலகமே வியக்கும் குழந்தை நமக்கு பிறக்கும் என்றாள் அவள்.

இதைக் கேட்டு சிரித்த அவன், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை அறிவாளியா எனத் தெரிய குறைந்தது இருபது வருடமாவது ஆகலாம். ஒருவேளை  நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்.

அந்தப் பெண் பதில் கூற இயலாமல் தலைகுனிந்து நின்றாள்.


ம்!! கண்ட  பெண்களையெல்லாம் தாயாகக் கண்டு மகிழ்ந்த அந்த  மகான் யார்?  அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.


முந்தைய வரலாற்றுப்  பதிவிற்கான விடை :   இடி அமீன் .

மிகச் சரியான விடைச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


முந்தைய பதிவு:     முடிவெடுக்கக் கற்கலாமா? -2 

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

3/21/2011

முடிவெடுக்கக் கற்கலாமா? -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)


முடிவெடுப்பதற்கு நம்முன் இருக்கும் விஷயங்களை மூன்று கட்டங்களில் அடக்கிவிடலாம். 
1. உடனே...உடனே...
2. இப்போதைக்கு வேண்டாம்.
3. வேண்டவே வேண்டாம்... 
உதாரணங்கள் மூலம் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

சிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம்  காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர்  ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். எனவே இதைப்போல் உள்ளவற்றை “  உடனே... உடனே ” கட்டத்தில் போடவேண்டும்.

ரு கட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் வருகிற  எண்ணங்களுள் ஒன்று காதல். அதாவது ஈர்ப்பு. இது படிப்புச் சிந்தனையைக் கலைக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம். படிக்கிற வயதில் “நட்பு ”  என்கிற உறவைத் தாண்டி வேறு பக்கம் போகவே கூடாது. இதை  “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்.

ந்தப் பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடியதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே வரும். ஆனாலும் மிகவும் முக்கியமானது தீய நட்பால் புகைப்பிடித்தல், போதை போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். அப்பழக்கம் அம்மாணவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையே சீரழித்துவிடும்.
 இதை “ வேண்டவே வேண்டாம் ” கட்டத்தில் போட்டு விடுங்கள்.

ந்தக் கட்டங்களில் உள்ள விஷயங்களை நாம் திரும்பி பார்க்ககூடாது. குப்பைத் தொட்டி சமாச்சாரங்கள்  என்று ஒதுக்கிவிட வேண்டும்.
மேலும் சில முடிவுகளை அடுத்த தன்னம்பிக்கை பதிவில் காண்போம்.
                          
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

வாக்களிக்க விரும்பாத பெருமக்களே...!


தோ வந்துவிட்டார்கள்  வீதிகளில் "வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன. 

என்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.

கனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.இன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.

தேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான்.குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்துவிட்டது.

இதற்கெல்லாம் அசராதவர்கள் ஒருதரப்பு உண்டு. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று வேதாந்தம் பேசும் வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அத்தகையோரில் பெரும்பாலோர் படித்தவர்களாகவும், நேர்மையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பதுதான் வேடிக்கை. 

அரசியல் விவகாரங்களை அக்கு வேறு, ஆணி வேறாகப் பேசும் இவர்கள், நாமஓட்டு போட்டுத்தானா அவர்(அவர் நினைக்கும் நல்லவர்) ஜெயிக்கப் போகிறார்? என்ற போக்கில் பேசாமல் இருந்துவிடுவது வாடிக்கை. தேர்தல் முடிவுகள் இவரது எண்ணம்போல் அமையாவிட்டாலோ, "இந்த நாடு உருப்படாது. மீண்டும் வெள்ளைக்காரன் வந்தால்தான் உருப்படும்' என்று பேசத் தொடங்கி விடுவார்கள்.

இன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி விடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. 

இதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.இடப்பெயர்ச்சி, உடல் நலக்குறைவு, தவிர்க்க முடியாத சூழல் போன்றவற்றால் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையில் மிகச்சொற்ப அளவே இருப்பர். மற்றவர்கள் பெரும்பாலும் பேச்சுடன் நிறுத்திக்கொண்டு, செயலில் இறங்காதவர்களாகவே இருப்பர்.

ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.

அதுவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். 
Thanks dinamani..
முன்தினப் பதிவுகள்:

1. ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்
2. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி 
3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!

யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....

3/19/2011

ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்

 ப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. அந்த இயற்கை சீற்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள்.

இதற்கு அனுதாபம் தெரிவித்து ஜப்பான் பிரதமருக்கு, நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் மூலம் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில், ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: 

ப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜப்பான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆற்றலை கடவுள் கொடுக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். என் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்காக இருக்கும். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
 Thanks Nakkeran.

                                              2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை
                                              3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!
                                             4.  தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்! 
                                             5. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி                   
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....

கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????


ராஜா உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் கிரீன் ஹவுஸ் புரோமட்டர் நிறுவனம், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த நன்கொடை வழங்கியுள்ளது.சென்னையிலுள்ள வோல்டாஸ் நிறுவன நிலம், டாடா வசம் இருந்தது. தற்போது அது, ஆளுங்கட்சி குடும்ப தரப்புக்கு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

பல்வா தரப்பு, 214 கோடி ரூபாயை ஆளுங்கட்சி நடத்தும், "டிவி'க்கு கடனாக வழங்கியுள்ளது."ராஜா மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது' என, முதல்வர் கூறியதற்கு, மேற்கண்ட விவகாரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

குப்பை மேடு உயர்ந்து, கோபுரம் தாழ்ந்ததைப் போல, ஊழல் உயர்ந்து, ஜனநாயகம் தாழ்ந்து போனது.

குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும். 

ம்பளத்தை 50 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என உயர்த்தினாலும், "ஊழல் செய்து தான் அரசியல் நடத்துவேன்' என, அரசியல் தலைவர் பலர் நடந்து கொண்டு, பகுத்தறிவை கேள்விக்குறியாக்குகின்றனர்.


குரு பாடம் நடத்தும் போது, ஒருவன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தானாம். அங்கு ஒரு பல்லி, ஓட்டின் இடுக்கில் நுழைந்து கொண்டிருந்ததாம். ஆசிரியர் அவனைப் பார்த்து, "நான் நடத்திய பாடம் (காதில்) நுழைந்ததா?' என கேட்டாராம். அதற்கு அவன், "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' என பதில் அளித்தானாம்.

ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றோர் பகுத்தறிவு பாடம் நடத்திய போது, சரியாக கவனித்திருந்தால், பகுத்தறிவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக  படிக்காதது ஏன்?
Thanks dinamalar.
                                                            2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை
                                                            3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!
                                             4.  தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்!                      
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....

3/18/2011

தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்!

ஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு  விழா கொண்டாடினோம்..  பார்க்கப் பார்க்க பேரதிசயமாக இருக்கிறது பெருவுடையார் கோயில். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஓர் அற்புதத்தைப் படைத்தவர்கள் தமிழர்கள் எனும்  பெருமையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!


றங்கும் விழிகள்
ரசிக்கின்றன
கனவுக் காட்சிகளை...!

**********************************************************************************


சுயமிழந்து
உலாவருகிறேன்
ஒப்பனை முகத்தோடு...!

**********************************************************************************


த்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலேயே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை...!

**********************************************************************************


நேசிக்கும் பறவைக்கு
உணவு தருவோம்
கூண்டுக்குள் வைத்து...!

**********************************************************************************


குழந்தை பராமரிப்பு
கலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!

***********************************************************************************

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல் 
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....