1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்” என்ற பத்திரிக்கை வெளிவந்தது. இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சார்லஸ் டயானாவுடன் ஏற்கெனவே அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்ததால் அவருடைய கோரிக்கையை லண்டன்வாசி ஏற்றுக்கொண்டார்.
அந்த லண்டன் வாசி ஜெர்மனியில் பிறந்து ஆளும் வர்கத்தின் தொல்லைகளால் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் லண்டனில் வாழ்ந்தவர். இந்தவேளையில்தான் சார்லஸ் டயானா நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில் அவரை எழுதத் தூண்டினார்.
இந்தக்கால கட்டத்தில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழக மக்களின் நிலையை, வெள்ளையர்களின் அடாவடித் தனங்களை இந்தக்கால கட்டத்தில் வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக சான்று இல்லை. ஏன் இந்திய அறிஞர்கள்கூட தமிழக நிலைமையை பதிவு செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதர், 1857 ஆகஸ்ட் 28 தேதியிட்ட நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில், “ இந்தியாவின் நிகழ்ந்த சித்திரவதைகளைப் பற்றிய விசாரனை” என்ற கட்டுரையில் ,
சென்ற ஆண்டில் மழையில்லாது எங்களது நெற்பயிர் காலியானதால் வரி கட்டமுடியவில்லை. ஆனால் தாசில்தாரோ கட்டாயமாக எங்களை வலி கட்டச் சொல்லி கொடுமைபடுத்தினார்.
பின்பு எங்களை சிலரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தினா். குனியவைத்து முதுகில் கருங்கற்களை தூக்கிவைத்தார்கள்.கொதிக்கும் மணலில் அவற்றைச் சுமந்து கொண்டு நின்றோம். ஒர் நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கொடுத்தார்கள். இத்தகைய கொடுமை மூன்று மாதகாலம் நீடித்தது.
பிறகு எங்களது சொத்துகளை வரிபாக்கிக்காக பறித்தார்கள். எங்களது பெண்களும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் - என்று தமிழர்களும், தமிழச்சிகளும் வெள்ளையர்களால் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள், உரிமைகளை இழந்தார்கள் என்பதை ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதி உலகறியச் செய்தான் அந்த அறிஞன்.
ஆம்! அவன் அறிஞர்கெல்லாம் அறிஞன், அதனால்தான் தேசம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, அவனால் மக்களுக்காகச் சிந்திக்கமுடிந்தது. சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லமுடிந்தது.
அந்தப் பேரறிஞன் யார்? அடுத்தப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முந்தைய பதிவுகள்: 1. தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
அடடா..அவர் பேரைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே..
ReplyDeleteஇவ்வளவு கொடுமை சித்திரவதையா ? தொடருங்கள் :)
ReplyDeleteவரலாற்றைப் புரட்டியிருக்கிறீர்கள். விடை தெரியவில்லை. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteஎன்னது சஸ்பென்ஸா கமா வச்சிட்டீங்க?
ReplyDeleteFrederick A என்பது சரியான விடை.
ReplyDeleteநிரூபன் சொன்னது…
ReplyDeleteFrederick A என்பது சரியான விடை.
///ஸாரி.. தவறான விடை.
வாத்தியாரே இந்த மாதிரி கேள்வில்லாம் அறிவாளிங்களுக்கு மட்டுமே!
ReplyDeleteAwaiting !!!
ReplyDeleteசத்தியமா நான் இல்லை
ReplyDeleteரைட்டு
ReplyDelete..<<<பிறகு எங்களது சொத்துகளை வரிபாக்கிக்காக பறித்தார்கள். எங்களது பெண்களும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் -
ReplyDeleteம் ம்
மனிதாபிமானம் மொழி, இனம், நாடு பார்ப்பதில்லை.
ReplyDeleteயாருன்னு தெரியலேன்னாலும் மனிதாபிமானமுள்ள அந்த அறிஞருக்கு ஒரு சல்யூட்!
ReplyDeleteநல்ல மனிதன்
ReplyDeleteya, we will wait
ReplyDeleteஆம்! அவன் அறிஞர்கெல்லாம் அறிஞன், அதனால்தான் தேசம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, அவனால் மக்களுக்காகச் சிந்திக்கமுடிந்தது. சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லமுடிந்தது.
ReplyDeleteவேணாம் என்னைப் பத்தி எழுத எதுக்கு இவ்வளவு அவசரம்?
உங்க ப்ளாக் ல வேர்ட் வெரிபிகேசன் வச்சிருக்கிறது எனக்குப் புடிக்கல! உங்களுக்கு இது அவசியமும் இல்ல!
ReplyDeleteநான் உங்கள வலைப்பூவுக்கு அடிக்கடி வர்றதில்ல னு உங்களுக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்குல்ல! இன்னிக்கு எனக்கு லீவு! இருங்க விட்ட குறை தொட்ட குறை எல்லாத்தையும் முடிச்சுடுறேன்!! ஹா......ஹா......ஹா...............!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteதொடரா தாக்கறீங்க அப்படிப்போடு !
ReplyDeleteஆங்கிலேயர் காலத்தில் நடந்த கொடுமைகளையே மறந்துவிட்டு அவர்கள் உருவாக்கிய இரயில் பாதைகளையும் , கட்டிய அணைகளையும் பாலங்களையும் பெருமையாக பேசி " இங்கிலீஸ்காரனுங்கதான் பெஸ்ட் " என்று சொல்பவர்கள், அவரைப் பற்றி மறந்து போயிருப்பார்கள்.
ReplyDeleteஇலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ReplyDeleteஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html
காரல் மார்க்ஸ் தானே அது?
ReplyDeleteraji சொன்னது…
ReplyDeleteகாரல் மார்க்ஸ் தானே அது?
---
வாழ்த்துக்கள் தோழி.. சரியான விடை...
அந்த பேரறிஞன் கார்ல் மாக்ஸ்.
ReplyDeleteஹிட்லர் தன் சொற்பொழிவால் ஜெர்மன் மக்களைக் கவர்ந்தவன். ஹிட்லரின் அந்த சொற்பொழிவுகளை விரிவாகத் த்ருமாறு கேட்டுக்கொள்கிறேன்.அவரது வாழ்க்கை வரலாறும் படங்களும் இணையத்தில் கிடைத்தன.சொற்பொழிவு கிடைக்கவில்லை. உதவுங்கள்.
ReplyDelete