தமிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 13-ந்தேதி தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு மும்முரமாக தயாராகும் நேரம் ஆகும்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு என்னவோ மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 13-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ந்தேதியாக இருந்தாலும் அதற்கு ஒரு மாதம் முன்பே மாணவர்கள் தேர்வுக்காக கன்டிப்பாக தயாராவார்கள்.
இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். மைக் செட்டுகள் வைத்து தானைத் தலைவர்களின் புராணம் பாடுவார்கள். ஓட்டு பிச்சைகளுக்காக விடுவீடாக கையேந்துவார்கள்.
வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் சிந்தனைகள் சிதறும். இதனால் பல மாணவர்களுடைய எதிர்காலம் பாழாகும் அபாயம் இருக்கிறது.
மேலும் பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 2-ந் தேதி முடிகிறது. தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடத்தப்பட்டால் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்து இருக்க வேணடும்.
அரசியல்வாதிகளே உங்கள் அரசியல் விளையாட்டுகளை நாளைய சாதனையாளர்கள் மேல் தினிக்காதீர்கள்.. இதிலாவது ஒன்றுபட்டு தேர்தல் தேதியை தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள்...
( இந்த படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா நம்பனும்)
2 . இந்திய வெளியுறவுத் துறை 3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
mudha முத வெட்டு
ReplyDelete>>>வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
ReplyDeleteஉண்மைதான்
சரியான நேரத்தில் கரெக்டாச் சொன்னீங்க வாத்யார்!
ReplyDeleteதக்காளி இந்த கிரிக்கெட்டும், அரசியலும் நம்ம மாணவங்கள கொலையா கொல்லுதே!
ReplyDeleteகொஞ்சம் கூட திருந்த மாட்டானுங்கள!
தக்காளி இந்த கிரிக்கெட்டும், அரசியலும் நம்ம மாணவங்கள கொலையா கொல்லுதே!
ReplyDeleteகொஞ்சம் கூட திருந்த மாட்டானுங்கள!
//வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும்.//
ReplyDeleteகுத்தாட்டம் வேறு இருக்கும் எப்படித்தான் படிக்கப்போறாங்களோ
நம்ம சொல்றது தேர்தல் அதிகாரிங்க காதுல விழும்ன்னு நினைக்கிறீங்களா?
ReplyDeleteவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
எவன் குடி கெட்ட இவனுங்கலுக்கென்ன?
ReplyDeleteஎந்த தலைவர் நாயாவது இதுவரைக்கும் ஏதாவது இதப்பத்தி அறிக்கை விட்டிருக்கானா?
தேர்தல் பிரச்சார டைம்ல இவனுக கொடுக்கிற அலும்புக்கு சும்மா இருக்குறவனுக்கே தலை சுத்தும் பாவம் படிக்கிற புள்ளைங்க என்ன செய்யும்.
ithu thaan india
ReplyDeleteபள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்து இருக்க வேணடும்.
ReplyDelete....... I agree with you.
நல்ல பதிவு !
ReplyDeleteதேர்தல் மே 10 தான் சரியான நாள் !
தேர்தல் அறிவித்ததில் அரசியல்வாதிகளுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.இது முழுக்க முழுக்க தேர்தல் கமிசனின் வேலை. தேர்தல் ஆணையம் சுயேச்சையான அமைப்பு, யாரிடமும் ஆலோசனை கலக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.அதில் யாரும் தலையிட முடியாது. கலைஞர், கம்யூனிஸ்ட், பி.ஜே.பி-போன்ற கட்சிகள் கூட நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
ReplyDeleteஅக்கறையுடன் கூடிய ஆலோசனை.
ReplyDeleteஇவங்க நல்லதுதான் பண்ண மாட்டாங்க
ReplyDeleteகெடுதலாச்சு செய்யமா இருக்கமாட்டாய்ங்களா
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஎவன் குடி கெட்ட இவனுங்கலுக்கென்ன?
எந்த தலைவர் நாயாவது இதுவரைக்கும் ஏதாவது இதப்பத்தி அறிக்கை விட்டிருக்கானா?////
விட்டிருக்கிறார்கள் நண்பரே....
பார்க்க....
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=49574
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=49532
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=49538
எம்மவர் சக்தி பலருக்கு தெரிவதில்லை...
ReplyDelete//வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்//
ReplyDeleteவாத்தியாரின் ஆதங்கம் நியாயமானதுதான்....
நல்லதொரு கருத்தை சொல்லி உள்ளிர்கள்... ஆனால் இவர்கள் கேட்பார்களா?
ReplyDeleteபதிவுக்கு ரொம்ப நன்றி சார், இந்த விஷயம் பற்றி ஏன் அரசாங்கம்
ReplyDeleteகவலைப்படவில்லை. பெட்டிஷன் ஆன்லைன் போன்று தேர்தலைத்
தள்ளிப்போட ஏதும் செய்ய முடியுமா.
சரியான நேரத்தில், நல்லதொரு கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்..! ஆனால். .. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன.. நானும் என் அரசியலும், என் குடும்பமும், என்னைச் சார்ந்தவர்களும் பிழைத்தால் போதும்.. என்று தற்கால அரசியல்வாதிகளின் எதுச் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய்தான் ஒலிக்கும்..! ம்.. இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்போது? ஆதங்கத்துடன்.. உங்கள் தங்கம் பழனி.
ReplyDeleteஉங்கள் கவலை நியாயமானதே
ReplyDeleteஇது ஒரு அவசரமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் போல இருக்கிறது
ReplyDeleteஅப்பறங்க?????
ReplyDeleteமாணவனுங்க எக்கேடு கெட்டா நமக்கென்னங்க?? நம்ம வேலை காசு கொடுத்தாவது ஓட்டு வாங்கிடனும். இளிச்சவாயனுங்க ஐநூறு ரூவாய்க்கு அஞ்சு வருசத்தை வித்துட்டு இருக்க, மாணவனாவது படிப்பாவது....மண்ணாங்கட்டி!!!
இது எல்லாமே இந்த அரசியழர்க்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் நம் இளஞர்கள் நன்கு படித்து முன்னேறிவிட்டால் இந்த போலி அரசியலர்களுக்கு பல்லக்கு தூக்குவது யார் ? இரண்டாவது எல்லோரும் அறிவு பெற்றுவிட்டால் இங்கு கொலை அடித்து பொருளீட்ட இயலாதே ?
ReplyDeleteபள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்து இருக்க வேணடும்.
ReplyDeleteஉண்மைதான்
>>>வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
ReplyDeleteஉண்மைதான்
செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
ReplyDeleteநல்ல பதிவு
மாணவர்களின் நிலைதான் ஐயோ பாவம்.
ReplyDeletecorrect ah sonninga :)
ReplyDeleteசமூகப் பொறுப்புள்ள பதிவு
ReplyDeleteகிரிக்கெட் பயங்கரவாதத்தை வேணும்னே விட்டுட்டீங்களா தலை??
ReplyDeleteநான் சொன்னால் சொன்னதுதான் என்ற இறுமாப்பில் தமிழ் நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தேதியை அறிவித்துள்ளனர்.மேலும் இப்போது திருமணங்கள் அதிகம் நடைபெறும் காலம்:வங்கிகளில் பணம் எடுக்க வருமானத்துறையை விட்டு பயமுறுத்தினால் நடுத்தர மக்கள் கல்யாண செலவுகளுக்கு எப்படி பணம் எடுக்க முடியும்?
ReplyDelete