Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/25/2011

தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்?


தி.மு.க.,  மற்றும் அ.தி.முக.வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை,  இவர்களின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது. 
 
கடந்த ‌ ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்  தி.மு.க வின் சாதனைகள் தான் என்ன?  இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன? இதன் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விடுத்து ஒர் தேர்தல் அறிக்கையை வாசித்தார் முதல்வர்.  அதில் பல இலவச திட்டங்கள்.

மாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

இந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். 

பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! 

இன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தி.மு.க தலைவர்கள் தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால்,  மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பர். 

அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!

முந்தைய பதிவுகள்: 

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

42 comments:

  1. புதுப்பதிவா போட்டு தாக்குங்க

    ReplyDelete
  2. தமிழ்நாடு மூழ்கினாலும் சரி,இவங்க முதல்வரா வந்தா போதுமாம்

    ReplyDelete
  3. கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சிருச்சு கூட்டம் சேராது தல

    ReplyDelete
  4. நானும் வந்துட்டேன்..

    ReplyDelete
  5. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    புதுப்பதிவா போட்டு தாக்குங்க -- வழக்கம் தானே..

    ReplyDelete
  6. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    தமிழ்நாடு மூழ்கினாலும் சரி,இவங்க முதல்வரா வந்தா போதுமாம்
    ----- நாம மாத்தனும்..

    ReplyDelete
  7. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சிருச்சு கூட்டம் சேராது தல
    --- இதுலஇது ஒன்னு இருக்கோ?

    ReplyDelete
  8. அதனாலதான் சிபி விமர்சனம் போடாம எஸ்கேப்பா...

    ReplyDelete
  9. @பாட்டு ரசிகன் சொன்னது…

    பாட்டு எங்கப்பா?

    ReplyDelete
  10. மக்கள் பணத்தை எடுத்து அவர்களுக்கே அதில் ஒரு பங்கை அளிக்கும் பிசைக்காரக்கூட்டம்!

    ReplyDelete
  11. FOOD சொன்னது…

    இருந்தாலும் ரொம்ப பொறாமையா இருக்கு. தொடர்ந்து பதிவிடுவது எப்படி என்றொரு பதிவு போடுங்களேன்.---பசங்களுக்கெள்ளாம் எக்ஸாம் டைம் அதனாலதான் தலைவா...

    ReplyDelete
  12. விக்கி உலகம் சொன்னது…

    மக்கள் பணத்தை எடுத்து அவர்களுக்கே அதில் ஒரு பங்கை அளிக்கும் பிசைக்காரக்கூட்டம்! -- வந்தாச்சா?

    ReplyDelete
  13. இவனுங்க தேர்தலின் போதுதான் மக்களை பற்றி கவலைபடுவாங்க.........

    ReplyDelete
  14. "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!///
    சும்மா நச்சுன்னு ஒரு போடு போட்டுருக்கீங்க

    ReplyDelete
  15. இலவசங்கிற வார்த்தையே அருவருப்பா இருக்கு.

    ReplyDelete
  16. ஏழைகள் பாவம் இல்லை. நடுத்தர மக்கள்தான் பாவம்... அட்லீஸ்ட் ஏழைக்காவது அரசாங்கம் ஏதாவது செய்றது மாதிரி நடிக்கவாவது வேண்டி இருக்கு. ஆனா இந்த நடுத்தர வர்க்கம் தான் உண்மைலயே பாவம் செஞ்சது.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  17. நர்மதன் சொன்னது…

    இவனுங்க தேர்தலின் போதுதான் மக்களை பற்றி கவலைபடுவாங்க........ --கவலைபடுவானுங்க...

    ReplyDelete
  18. ரஹீம் கஸாலி சொன்னது…

    சும்மா நச்சுன்னு ஒரு போடு போட்டுருக்கீங்க - அப்படியா?

    ReplyDelete
  19. தமிழ் உதயம் சொன்னது…

    இலவசங்கிற வார்த்தையே அருவருப்பா இருக்கு. -- என்ன செய்ய..

    ReplyDelete
  20. Sankar Gurusamy சொன்னது…

    ஏழைகள் பாவம் இல்லை. நடுத்தர மக்கள்தான் பாவம்... அட்லீஸ்ட் ஏழைக்காவது அரசாங்கம் ஏதாவது செய்றது மாதிரி நடிக்கவாவது வேண்டி இருக்கு. ஆனா இந்த நடுத்தர வர்க்கம் தான் உண்மைலயே பாவம் செஞ்சது.
    -- முதல்முறை வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  21. பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! //
    Good advise.

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! //
    Good advise. --இதெல்லாம் எங்க கேட்கபோராங்க..

    ReplyDelete
  23. please give your phone number to vbvvvmv@gmail.com

    ReplyDelete
  24. அதான் ரஜினி அண்ணன் அப்பவே சொல்லிட்டாரே ஏழைகள் இன்னும் ஏழை ஆகிறான் பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்'ன்னு...

    ReplyDelete
  25. //விக்கி உலகம் சொன்னது…
    please give your phone number to vbvvvmv@gmail.com//

    எலேய் போன் பண்ணி திட்ட போராம்லேய் சாக்குரதை...

    ReplyDelete
  26. விக்கி உலகம் சொன்னது…

    please give your phone number to vbvvvmv@gmail.com
    --கொடுத்துட்டா போச்சு...

    ReplyDelete
  27. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    அதான் ரஜினி அண்ணன் அப்பவே சொல்லிட்டாரே ஏழைகள் இன்னும் ஏழை ஆகிறான் பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்'ன்னு...
    ----கரெக்ட்

    ReplyDelete
  28. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //விக்கி உலகம் சொன்னது…
    please give your phone number to vbvvvmv@gmail.com//

    எலேய் போன் பண்ணி திட்ட போராம்லேய் சாக்குரதை.-- அவரு மாப்ள திட்டலாம்..

    ReplyDelete
  29. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!


    .... :-(

    ReplyDelete
  30. அடகு மட்டுமே வைப்பாங்க.. விக்கனும்னா .......

    ReplyDelete
  31. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக அரசின் கருவூலம் காலியாவது உறுதி.

    ReplyDelete
  32. // தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். //

    நல்லா கேட்டீங்க..! தாத்தாவுக்கு வயசானதுனால இது எல்லாம் கேட்காது எது எப்படியோ இந்த வருடம் தமிழக அரசியலில் ஒரு நகைச்சுவை நாடகம் அரங்கேறபோவது நிச்சயம்..!

    ReplyDelete
  33. தமிழ்நாட்டில் என்ன நடக்குதுனே தெரியவில்லை.. கொம்மா - கொய்யா இவர்ளை விட்டால் வேறு யாரும் இல்லையா... குஜயகாந்து, குய்கோ, கூமான், ரோமபாஸ், குருமாவளவன், குரங்கிரஸ், கோமானிஸ்ட், இன்னபிற சிந்தினது சிதறினது எல்லாம் இந்த ரெண்டில ஒன்னில ஐக்கியமாச்சு .. சோ நமக்கு வேற சாய்ஸே இல்லாமப் போச்சு ... என்ன செய்யலாம்னே தெர்ல ... அந்தந்த தொகுதியில் இருக்கிறவங்கள் எவன் கொஞ்சம் கம்மி கெட்டவன்னு பார்த்து வோட்டுப் போடுங்க .. இது தான் ஒரே வழி ...

    ReplyDelete
  34. கருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை. அவராவது 19 இலட்சம் பேரைதான் பரம ஏழையாக பாவித்தார். ஆனால் ஜெயலலிதா மாதம் 20 கிலோ அரிசி அனைவருக்கும் இலவசம் என்று ஒட்டு மொத்த தமிழக மக்களையே ஏழை என்று கூறுகிறார். அண்ணா கருணாநிதி 19 இலட்சம் குடும்பம் ஏழை என்று கூறியதை எடுத்து கூறிய நீங்கள் இதற்கு என்ன பதில்? ஊருல எவனுமே பணக்காரன் இல்லையா?

    ReplyDelete
  35. கருணாநிதி 19 இலட்சம் குடும்பங்களை பரம ஏழை என்றார். ஆனால் இதற்கு முன் பத்து வருடம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழகத்தையே பரம ஏழை என்று கூறி தமிழகத்தை மானத்தை வாங்கிவிட்டார். (குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதம் 20 கிலோ அரிசி இலவசம்)

    ReplyDelete
  36. அட பாவமே, அவர்கள் சொந்த இடத்தை அவர்கள் விற்பதால் உங்களுக்கு என்னாங்க?

    என்ன புரியலையா, நல்லா பாருங்க இனி யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியை தவிர மற்ற அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானதுதான்?

    ReplyDelete
  37. இந்தத்தேர்தலின் அய்யா-அம்மா அறிக்கைகளில் ,
    அய்யாவின் அறிக்கை-
    கடந்த தேர்தலின் இலவசங்களால் தமிழகத்திற்கு ஏற்பட்ட ஒரு லட்சம் கோடிக் கடனை பல லட்சம் கோடியாக (திருப்பித்தர உத்தேசமில்லாத)உயர்த்தத் திட்டமிடுவது.
    ஆயிரக்கணக்கில் வாங்கிக் குடிக்கும் தமிழனுக்கு ரூபாய்க்கணக்கில் ஊறுகாய் வாங்கித்தருவது போன்ற மோசமான பரிமாற்றம்.
    அம்மாவின் அறிக்கை-
    1.இலவசங்க்கள் தருவது உற்பத்தியைத் தூண்டுவதற்காகவே.
    2.அம்மா அறிக்கையின் முக்கிய அம்சங்களைப் பாருங்கள்-
    அதிமுகவின் தேர்தல் அறிக்கை (திமுகவின் 'யாசக மற்றும் சொதப்பல்'அறிக்கையை விட) முற்போக்கானது.
    கீழ்கண்டவைகள் திமுக அறிக்கையில் இல்லாத முதல்வர் சொல்ல மறந்தவை-
    நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
    * * வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
    * வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.
    * வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
    * பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.
    * அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
    .
    * இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.
    * 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.
    * ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
    * அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
    * கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும் 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
    * பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.

    * கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.
    * வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
    * தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
    * திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
    * அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
    சென்ற ஆட்சியின் இலவச அலங்க்கோலமான (திமுக சொல்ல மறந்த)ரூபாய் ஒரு லட்சம் கோடி கடனை அடைத்து தமிழகத்தைத் தலை நிமிர வைப்பதாக அதிமுக அறிக்கை சவாலாக எதிர்கொள்கிறதே,
    இதை வாக்காளர்கள் பெருமையாக உணர வேண்டும்.
    தற்போது நாடு சிரிக்க, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும்-
    கொலை/கொள்ளை/சிறுவர் கடத்தல்- ஆகியவைகளை நிறுத்தி முடிவுக்குக் கொண்டுவர(திமுக அறிக்கையில் சொல்ல மறந்த)அதிமுக அறிக்கையில் திட்டமாவது சொல்லப்பட்டிருக்கிறதே.
    தமிழக நடுநிலை பத்திரிக்கைகள் - இரண்டு அறிக்கைகளின் இலவசங்களை மட்டும் ஒப்பீடு செய்து கொச்சைப்படுத்தாமல்- தமிழக் எதிர்கால நலனை (மட்டுமே ) கருத்தில் கொண்டு வாக்காளர்களுக்கு பசுமையான வழி காட்ட வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  38. \\அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது.\\கிலோ ஒரு ரூபாய் கொடுத்து 25 கிலோ அரிசி வாங்க கையாலாகாதவன், கிரைடரையும் மிக்சியையும் வாங்கி என்ன பண்ணுவான்? யாருக்காச்சும் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு விற்ப்பான். மானங்கெட்ட தமிழன். எது நடந்தாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரியேதான் இருப்பான்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"