Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/07/2011

அரசியல்வாதிகளே.! அப்ப நீங்க எதுக்கு?




விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எதுவும் எங்களிடம் இல்லை.

யங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு, மாநிலங்களுக்கே அதிகம்.

ணவீக்கம் குறைய, பொது வினியோக முறையை, மாநிலங்கள் தான் பலப்படுத்த வேண்டும்.

திநீர் இணைப்பு, சாத்தியமில்லாத ஒன்று! - இவை, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் கூறியவை.

ல்லா பிரச்னைகளையும் மாநில அரசே தீர்க்க வேண்டுமென்றால், மத்திய அரசின் பணி என்ன? எல்லா அதிகாரங்களையும் டில்லியில் குவித்து வைத்து, எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?

விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் போன்றவைகள் நடந்து கொண்டிருப்பதை, பிரதமர் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார். நன்றி  தினமலர்.

னால், பிரச்னைகளை மட்டும், மாநிலங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ல்ல தலைமை ஆசிரியரான மன்மோகன் சிங் தான், இதற்கு வழி காண வேண்டும்.


முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                               3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

27 comments:

  1. >>முதல் மழை என்னை நனைத்ததே....

    ReplyDelete
  2. இதோ வந்துட்டேன்..
    அவங்களுக்கு நிறைய வேலையிருக்கு இதைப்பத்தியெல்லாம் யோசிக்க இவ்ஙகளுக்கு என்ன கவலை..

    ReplyDelete
  3. >>>மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
    நல்ல தலைமை ஆசிரியரான மன்மோகன் சிங் தான், இதற்கு வழி காண வேண்டும்.

    உங்க ஆசிரியர் பணி + நாட்டின் பிரதமர் பணி ரெண்டையும் லிங்க் பண்ணி மெசேஜ் பண்ணுன ஐடியா சூப்பர் கருண்

    ReplyDelete
  4. அரசியல்வாதிகளே... அப்ப நீங்கள் எதற்கு ///

    நல்ல கேள்வி.

    ReplyDelete
  5. சமூக ஆர்வத்தோடு இடப்பட்ட பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //அரசியல்வாதிகளே... அப்ப நீங்கள் எதற்கு//

    என்ன நண்பரே இப்படி ஒரு கேள்வி கேட்டிட்டீங்க!

    நமக்கு,

    அரசியல்ய கிடைக்கிற பல கோடிகளை நிர்வாகம் பண்ணத்தெரியுமா?

    பல கோடிக்கு ஊழல் பண்ணத் தெரியுமா?

    கண்டவன் காலில் எல்லாம் விழ தெரியுமா?

    மனங்கெட்ட தனமா சிரிக்கத் தெரயுமா?

    இதுக்குத்தான் அரசியல்வாதிகள்...

    ReplyDelete
  7. மன்மோகன் சிங் நல்ல தலைமை ஆசிரியரா?
    வெளங்கிருச்சு...

    ReplyDelete
  8. விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.


    .....என்ன கொடுமை சார், இது?

    ReplyDelete
  9. விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

    ..... என்ன கொடுமை சார், இது?

    ReplyDelete
  10. ஆட்சியாளர்களின் கையில் எதுவுமில்லை.
    பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை தவிர.

    ReplyDelete
  11. அண்ணே! இந்த அரசியல்வாதிகள இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க?

    எனது வலைபூவில் இன்று:
    இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

    ReplyDelete
  12. சார், சமூக சிந்தனையுள்ள நீங்க, நல்ல மாணவர்களை அரசியலுக்காக உருவாக்கி அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

    ReplyDelete
  13. தலைமை ஆசிரியரான மன்மோகனுக்கு மேல் E.O.,D.E.O.,என்று சோனியா,ராகுல் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  14. பூவோடு சேர்ந்த நாறு மணக்கம்

    சேற்றில் விழுந்த செந்தாமரை மணக்காது

    ReplyDelete
  15. ////
    அரசியல்வாதிகளே.! அப்ப நீங்க எதுக்கு?////

    தண்டத்திற்கு

    ReplyDelete
  16. அவர் நல்ல தலைமை ஆசிரியரா என்பதே சந்தேகமாக இருக்கிறதே!

    ReplyDelete
  17. இதுக்குத்தான் இந்த விளையாட்டுக்கு நான் வர்றதே இல்லை.. !

    ReplyDelete
  18. //மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?//

    karun, good

    ReplyDelete
  19. //எல்லா பிரச்னைகளையும் மாநில அரசே தீர்க்க வேண்டுமென்றால், மத்திய அரசின் பணி என்ன? எல்லா அதிகாரங்களையும் டில்லியில் குவித்து வைத்து, எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?//

    இது சரியான கேள்வி....வாத்தி'னா சும்மாவா....!

    ReplyDelete
  20. அஞ்சி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலுவ மத்திய அரசாங்கம்...

    ReplyDelete
  21. சசி தரூர்'ன்னு ஒரு நாதாரி மந்திரி இருந்தானே அந்த பன்னாடை பரதேசி செய்த ஊழல் பற்றி, அவன் கொள்ளை அடிச்ச பணத்தை பற்றி ஜனங்களும் மறந்துட்டாங்க [[மத்திய அரசு மறைத்து விட்டது]]

    ReplyDelete
  22. நல்லா கேட்டீங்கையா டீட்டெய்லு. செம கேள்விகள்.

    ReplyDelete
  23. காங்கிரஸ்காரர்களே அப்ப நீங்க எதுக்கு? என்று தலைப்பு வைத்தால் சரியாக இருக்குமா?

    எதுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்களே? இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருப்பதற்கு இவர்கள்தான் காரணம். சுவிஸ் பேங்க்கில் அதிகமாக இருப்பது இந்தியர்களின் பணம்தானாம்.

    ReplyDelete
  24. நல்லா இருக்கு சூப்பர்

    அரசியலே ஒரு சாக்கடை தான்

    ReplyDelete
  25. எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?

    என்ன கொடுமை சார், இது?

    ReplyDelete
  26. //அரசியல்வாதிகளே... அப்ப நீங்கள் எதற்கு //

    வேற எதுக்கு கொள்ளையடிக்கத்தான்!

    மக்கள் ரொம்ப சலிச்சிட்டாங்க. பொறுமையின் எல்லைன்னு சொல்வாங்களே அதிலதான் இப்போ நிக்கிறாங்க.

    நாம சிந்திக்க வேண்டிய விசயம் ஒண்ணுதாங்க, உண்மையிலேயே ஒட்டுமொத்தமா ஒரு நல்ல மாற்றத்த கொண்டுவர முடியாதுங்க. இதான் யதார்த்தம். நாடு முழுவதும் லஞ்சத்த ஒழிச்சு நதிநீர இணைச்சு ஊழல ஒழிச்சு அரசியல் வியாதிங்கள குணமாக்கிறது மதப்பேய்ங்கள ஓட்டுறது எங்கிறது நடைமுறைக்கு சாத்தியம் இல்லீங்க. நாம அரசியல் வாதிங்கள பார்த்து எத்தின கேள்வி கேட்டாலும் சரி எதுவும் நடக்காது. நாலு மாநிலத்துக்காரனும் விரும்பினாத்தாங்க நதிநீர இணைக்க முடியும். நாம கேட்கலாம் மத்திய அரசு ஏன் இந்த பிரச்சனைய தீர்க்க முடியாதுன்னு ஆனா அதே நாலு மாநிலத்துக்காரனும் விரும்பினத்தாங்க மத்திய அரசே இருக்க முடியும். அவங்க மட்டுமில்ல அம்பானிங்களும் விரும்பணும். இப்படியே போய்கிட்டிருந்த ஒருவன ஒருவன் அடிச்சு திங்கிறது தான் விதின்னும் சரின்னும் நிலம வரும். தமிழன் இந்தியன்னு சொல்லிக்கிட்டு வடநாட்டவர்களையோ கன்னடர் மலையாளி தெலுங்கர்களையோ திருத்த முடியாது. அவனவன் தன்னோட எல்லைக்குள்ளார முதல்ல திருந்தணும் அப்புறமா இந்தியன திருத்தமுடியும்.

    ReplyDelete
  27. http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_1506.html

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"