Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/22/2011

காணும் பெண்களெல்லாம்...


வெளி தேசத்தின் ஒரு நகரம்... மகளிர் மன்றக் கூட்டம்.... இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேச அழைக்கப் பட்டிருந்தார்.   அப்போது அவருக்கு முப்பது வயது.  அந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர் என்ன  பேசிவிடப் போகிறார் என்ற இளக்காரத்துடன் அமர்ந்திருந்தனர். 

அவன் பேசத் தொடங்கினான்.  இந்திய பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி என்றநிலை, பெண்மையை போற்றும் பண்பு என அவனுடைய  முழக்கம் இந்திய  மண்ணின்  மகத்துவத்தை பேசி முடித்தது.

கூடியிருந்த அத்தனை பெண்களும் வியந்து கைதட்டினர். அந்தக் கூட்டத்தில் இருந்த பதினெட்டு வயதுப் பெண்ணொருத்தி அந்த முழக்கத்தைக் கேட்டு தன்னை இழந்தாள்!!!.

அதன்பின் அந்த தேசத்தில் அவன் எங்கு பேசினாலும் முன்வரிசையில் ஓடிச் சென்று அமர்ந்தாள். ஆம் !  அவனுடைய அறிவுக்குத் தலைவணங்கிய அவள், மெல்ல மெல்ல அவனுடைய அழகுக்கு அடிமையானாள். அவன் பல மாதங்கள் அந்த தேசத்தில் தங்கி பல இடங்களில் பேசினான். அவன் சென்ற அனைத்து கூட்டங்களுக்கும் அவளும் சென்றாள். முடிவில் அவனைச் சந்திக்க அவள் விரும்பினாள். அவளுடைய  முயற்சிகள் எல்லாம் தோற்றன.

ஒருநாள் அவன் அந்தத்  தேசத்திலிருந்து விடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாக செய்தி அறிந்து அவளுடைய விருப்பத்தை  சொல்லிவிட விமான நிலையம்  விரைந்தாள்.

அங்கு அவனைச் சந்தித்து “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றால் அவள்! அப்படியா? என்றான் அவன்! என் அழகும் உன் அறிவும் சேர்ந்து உலகமே வியக்கும் குழந்தை நமக்கு பிறக்கும் என்றாள் அவள்.

இதைக் கேட்டு சிரித்த அவன், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை அறிவாளியா எனத் தெரிய குறைந்தது இருபது வருடமாவது ஆகலாம். ஒருவேளை  நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்.

அந்தப் பெண் பதில் கூற இயலாமல் தலைகுனிந்து நின்றாள்.


ம்!! கண்ட  பெண்களையெல்லாம் தாயாகக் கண்டு மகிழ்ந்த அந்த  மகான் யார்?  அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.


முந்தைய வரலாற்றுப்  பதிவிற்கான விடை :   இடி அமீன் .

மிகச் சரியான விடைச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


முந்தைய பதிவு:     முடிவெடுக்கக் கற்கலாமா? -2 

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

55 comments:

  1. வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா

    ReplyDelete
  2. டக்கால்டி சொன்னது…

    வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா
    ---மாப்ள கதை எப்போ ?

    ReplyDelete
  3. டக்கால்டி சொன்னது…

    விவேகானந்தர்? --- அப்படியா?

    ReplyDelete
  4. வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா
    ---மாப்ள கதை எப்போ ?//

    இன்னும் ரெடி பண்ணலை...வேற இடுகை போட்டுட்டேன்

    ReplyDelete
  5. டக்கால்டி சொன்னது…

    வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா
    ---மாப்ள கதை எப்போ ?//

    இன்னும் ரெடி பண்ணலை...வேற இடுகை போட்டுட்டேன்--- Ok..ok..

    ReplyDelete
  6. விவேகானந்தர் நண்பா

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. விக்கி உலகம் சொன்னது…

    விவேகானந்தர் நண்பா

    பகிர்வுக்கு நன்றி --- Thanks..

    ReplyDelete
  8. விவேகனாந்தர்...எனக்கு தெரியுமே... சூப்பர் நல்லா இருக்கு இந்த பதிவு...கடைசில எங்கள உங்க மாணவர்கள் ஆக்கிடேங்க... சரிதானே வாத்தியாரே... ஹி ஹி அப்பறம் நண்பா ஒரு சிறு பிழை என் கண்ணில் பட்டது உங்களிடம் சொல்கிறேன் அந்தத் தெசத்திலிருந்து... மாற்றிக் கொள்ளுங்கள்... .

    ReplyDelete
  9. ///ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! ///

    ஏங்க, அந்த பெண்ணை இப்படி ஏமாத்திட்டிங்க.....ஹி..ஹி..ஹி..

    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  10. ரைட்! ரைட்!

    இன்டர்வியூல தான் கேள்வி கேட்குறாங்கன்னு இங்கே வந்தா இங்கேயும் கேள்வி கேட்குறாங்கப்பா!

    ReplyDelete
  11. தமிழ்மனத்துல 8 வது ஓட்டு.. அடடா.. ஒரு நெம்பர்ல போச்சே...

    ReplyDelete
  12. FOOD சொன்னது…

    வந்துட்டேன். வாசிச்சுட்டு வருகிறேன்.
    --- வாங்க...

    ReplyDelete
  13. FOOD சொன்னது…

    அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்.//
    விவேகானந்தரின் விவேகமே விவேகம்தான். பகிர்விற்கு நன்றி.
    --- நன்றி நண்பா...

    ReplyDelete
  14. விவேகானந்தரின் விவேகமான சிந்தனை.

    ReplyDelete
  15. ரேவா சொன்னது…

    விவேகனாந்தர்...எனக்கு தெரியுமே... சூப்பர் நல்லா இருக்கு இந்த பதிவு...கடைசில எங்கள உங்க மாணவர்கள் ஆக்கிடேங்க... சரிதானே வாத்தியாரே... ஹி ஹி அப்பறம் நண்பா ஒரு சிறு பிழை என் கண்ணில் பட்டது உங்களிடம் சொல்கிறேன் அந்தத் தெசத்திலிருந்து... மாற்றிக் கொள்ளுங்கள்...--- நன்றி தோழி..

    ReplyDelete
  16. தமிழ்வாசி - பிரகாஷ் சொன்னது…

    ///ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! ///

    ஏங்க, அந்த பெண்ணை இப்படி ஏமாத்திட்டிங்க.....ஹி..ஹி..ஹி.. ------ ????

    ReplyDelete
  17. சங்கவி சொன்னது…

    :) --- வந்திருக்கிங்க..

    ReplyDelete
  18. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    நானும் உள்ளேன் ஐயா..
    --- இங்க என்ன அட்டென்டன்ஸ்சா எடுக்கரோம்?

    ReplyDelete
  19. தமிழ் 007 சொன்னது…

    ரைட்! ரைட்!

    இன்டர்வியூல தான் கேள்வி கேட்குறாங்கன்னு இங்கே வந்தா இங்கேயும் கேள்வி கேட்குறாங்கப்பா! --- கேள்வின்னா பயமா?

    ReplyDelete
  20. விவேகானந்தர்தான் கருன்.

    ReplyDelete
  21. ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்//\
    சூப்பர் பஞ்ச்

    ReplyDelete
  22. கலக்குறாரு தினம் ஒரு கதைன்னு

    ReplyDelete
  23. Kalpana Sareesh சொன்னது…

    Vivekanandhar..
    -------------------------- நன்றி..

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    தமிழ்மனத்துல 8 வது ஓட்டு.. அடடா.. ஒரு நெம்பர்ல போச்சே...
    --- பொட்டாச்சா நன்றி..

    ReplyDelete
  25. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    விவேகானந்தர்தான் - அப்படியா?

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    விவேகானந்தரின் விவேகமான சிந்தனை. --- Thanks..

    ReplyDelete
  27. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    விவேகானந்தர்தான் கருன். ---அப்படியா தோழி்...

    ReplyDelete
  28. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்//\
    சூப்பர் பஞ்ச் -- இது அவரு‌டையது..

    ReplyDelete
  29. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    கலக்குறாரு தினம் ஒரு கதைன்னு
    ---- இது கதையல்ல நிஜம்..

    ReplyDelete
  30. விவேகானந்தர். சரிதானே கருன்.

    வித்தியானமானமுறையில் இடுகையிடுறீங்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. விவேகானந்தர்தானே!
    இதைப் படிக்கும் போது பெர்னார்ட் ஷா பற்றி ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.ஒரு அழகி ஷாவிடம் சொன்னாள்’நாம் மணந்து கொள்ளலாம்.என் அழகுடனும் உங்கள் அறிவுடனும் குழந்தை பிறக்கும்” என்று.ஷா கேட்டார்’மாறாக என் அழகுடனும் உன் அறிவுடனும் பிறந்தால் “ என்று!

    ReplyDelete
  32. ரஹீம் கஸாலி சொன்னது…

    vivekaananthar ---அப்படியா?

    ReplyDelete
  33. அன்புடன் மலிக்கா சொன்னது…

    விவேகானந்தர். சரிதானே கருன்.

    வித்தியானமானமுறையில் இடுகையிடுறீங்க வாழ்த்துக்கள்.. - நன்றி..

    ReplyDelete
  34. சென்னை பித்தன் சொன்னது…

    விவேகானந்தர்தானே!
    இதைப் படிக்கும் போது பெர்னார்ட் ஷா பற்றி ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.ஒரு அழகி ஷாவிடம் சொன்னாள்’நாம் மணந்து கொள்ளலாம்.என் அழகுடனும் உங்கள் அறிவுடனும் குழந்தை பிறக்கும்” என்று.ஷா கேட்டார்’மாறாக என் அழகுடனும் உன் அறிவுடனும் பிறந்தால் “ என்று! --- ok..ok.

    ReplyDelete
  35. //ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்//விவேகானந்தர்.

    ReplyDelete
  36. போளூர் தயாநிதி சொன்னது…

    //ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்//விவேகானந்தர். -- அப்படியா?

    ReplyDelete
  37. விவேகானந்தர்....

    ReplyDelete
  38. விவேகானந்தர் என நினைகிறேன்.............

    ReplyDelete
  39. முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. சூப்பர்....
    நல்லா இருக்கு இந்த பதிவு...

    ReplyDelete
  41. பாரத்... பாரதி... சொன்னது…

    விவேகானந்தர்.... --- அப்படியா?

    ReplyDelete
  42. நர்மதன் சொன்னது…

    விவேகானந்தர் என நினைகிறேன்.............
    -- அடுத்த வரலாற்றுப் பதிவில் பார்க்கலாம்..

    ReplyDelete
  43. நர்மதன் சொன்னது…

    முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் - நன்றி..

    ReplyDelete
  44. பாரத்... பாரதி... சொன்னது…

    சூப்பர்....
    நல்லா இருக்கு இந்த பதிவு... // Thanks 4 ur comments..

    ReplyDelete
  45. உண்மையான சன்யாசியை போய் அந்த பெண் இப்படி கேட்டது தப்புதான் .இன்னைக்கு உள்ள எந்த சந்நியாசி களையும் கேட்டிருந்தால் அந்த பெண்ணை ஒரு சின்ன வீடு செட்டப் பன்னிருப்பார்கள் .அந்த உத்தமன் விவேகானந்தர் உண்மையின் ஊற்று .

    ReplyDelete
  46. உண்மையான சன்யாசியை போய் அந்த பெண் இப்படி கேட்டது தப்புதான் .இன்னைக்கு உள்ள எந்த சந்நியாசி களையும் கேட்டிருந்தால் அந்த பெண்ணை ஒரு சின்ன வீடு செட்டப் பன்னிருப்பார்கள் .அந்த உத்தமன் விவேகானந்தர் உண்மையின் ஊற்று

    ReplyDelete
  47. நெறய பேருக்கு பதில் தெரிஞ்சிருக்கு போல!பரவால்ல

    ReplyDelete
  48. நல்லா இருக்கு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. இந்து (இந்திய) மதம் (அதாவது சைவம், வைணவம்) எல்லாமே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், பூலோக எல்லையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் தத்துவங்கள். உதாரணமாக, கர்மா என்பது இந்து மத தத்துவம். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்". இதுதான் கர்மா. சேலை அணிவதும் பொட்டு வைத்துக் கொள்வதும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் இந்திய மத பாரம்பரியங்கள். இது கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

    ஒருவனுக்கு ஒருத்தி என்பது நல்ல தத்துவம்தான். ஆனால் உதாரணமாக இன்று கேரளாவில் ஆண் பெண் விகிதம் ஒன்றுக்கு மூன்று என்று இருக்கும்போது மீதம் இருக்கும் பெண்களின் கதி என்ன? அல்லது ஒருவன் மனைவி தீராத நோயாளியாக இருக்கும் போது, அவள் வாழ்க்கையுடன் சேர்த்து அவனும் வேறு மனம் புரியாமல் வாழ்க்கையை வீணடிக்க வேண்டியதுதானா? வைப்பாட்டி வைத்துக் கொள்வதைவிட சட்டபூர்வமாகத் திருமணம் செய்வது சிறந்தது அல்லவா?

    பெண்மையையை போற்றும் நாடென்றால் ஏன் விதவைக்கு மொட்டை அடித்து வெறும் தரையில் படுக்க வைத்தீர்கள். சதி என்ற கொடுமையில் இருந்து பெண்களுக்கு விடுதலை அளித்தது அந்த வெள்ளைக்காரன்தானே அய்யா.

    விவேகாந்தர் சில விஷயங்களில் நல்ல கருத்துக்களைக் கூறி இருக்கலாம். அதற்காக அவரை சும்மா இந்தியாவின் அடையாளமாக காட்டுவது அனாவசியமானது. மேலை நாட்டானுக்கு நாம் குறைந்தவன் அல்ல என்கிற நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மையை இது காட்டுகிறது. நாம் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல நிறைந்தவர்களும் அல்ல. நாம் நாம்தான்.

    ReplyDelete
  50. விவேகானந்தர்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"