Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/01/2011

தனியார் கல்வி நிறுவன பயங்கரங்கள் - ஓர் அலசல்

மிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றாலும், இது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

துபோன்ற பிரச்னைகளைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நேரத்தில் கல்வி நிறுவனங்கள் எழுப்புவதும், அரசும் இந்தப் பிரச்னையை ஏனோதானோ என்று முடித்துவிடவும், ஓரளவு உயர்த்திக்கொள்ள அனுமதிப்பதுமாக இருக்கிறதே தவிர, இதனை ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே விவாதித்து, முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

இதனால் அரசுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளுக்கோ பெரிய இழப்பு இல்லை. பொருளிழப்பும் அதே நேரத்தில் மனஉளைச்சலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் ஏற்படுகின்றன.

ல்விக் கட்டணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் சுமையாக இருக்கிறது என்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் உணரக்கூடியதுதான். அது மழலையர் பள்ளி என்றாலும், மருத்துவக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரி என்றாலும் அபரிமிதமான கட்டணமாகவே இருக்கின்றன.


ந்தச் சுமையைக் குறைக்க வேண்டியது அரசின் மிகப்பெரும் கடமை. இந்தச் சுமையை இரு வழிகளில் குறைக்க முடியும். ஒன்று, கல்லூரிகளின் கட்டணத்தை அதன் தரத்துக்கு ஏற்ப குறைப்பது. இரண்டாவது, மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிப்பது.

ற்போது தனியார் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. கலந்தாய்வின் கடைசிநாள் வரை இடங்கள் காலியாக இருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டணமும், முதல் நாளிலேயே இடங்கள் நிரம்பிவிடுகிற கல்லூரிக்கும் ஒரே விதமான கல்விக் கட்டணத்தைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் என்றால், கல்வியின்  தரத்தைப் பற்றி பல்கலைக்கழகம் அல்லது அரசின் கருத்துதான் என்ன?

ற்போது வெறுமனே தேர்ச்சிபெற்றிருந்தாலே போதும் என்கிற அளவுக்குப் பொறியியல் கல்விக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டு, அனைவரும் தனியார் கல்லூரியில் சேரும் வாய்ப்பை விரிவுபடுத்திக் கொடுத்திருக்கும் தமிழக அரசு, இந்தக் கல்லூரிகளை ஏன் தரப்படுத்தி, கட்டணத்தை வகைப்படுத்தக்கூடாது?

லந்தாய்வு தொடங்கிய 5 நாள்களில் எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் இடம் நிரம்பி விடுகிறதோ அவர்களுக்கு மட்டும் அதிகபட்சக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கலாம். அடுத்த 5 தினங்களில் இடங்கள் நிரம்பிவிடும் கல்லூரிகள் அல்லது அக் கல்லூரியின் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 20 விழுக்காடு கல்விக் கட்டணத்தைக் குறைக்கலாம்.


தே போன்று பல அடுக்குகளில் கல்விக் கட்டணம் அமைக்கப்படுமேயானால், மாணவர்கள் பயன்பெறுவதுடன், கல்லூரிகளும் தங்கள் பாடப்பிரிவைத் தரமாக மாற்றி மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிகள் செய்யும். கல்வியின் தரம் தானே உயரும்.

ல்லது மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கல்விக் கட்டணத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு மாணவர் "கட்-ஆப்' மதிப்பெண் 190 இருந்தும்கூட, அவர் விரும்பிய பாடப்பிரிவு, அரசுக் கல்லூரிகளில் இல்லை என்பதாலேயே தனியார் கல்லூரியைத் தேர்வு செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். 


ரசு போதுமான அளவு கல்லூரிகளை உருவாக்காத குற்றத்துக்காக, தனியார் கல்லூரிகளை அனுமதித்திருக்கிறது என்பதற்காக, நன்றாகப் படித்த ஒரு மாணவரும் அதிகபட்சக் கல்விக் கட்டணத்தைச்  செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

துபற்றிய முடிவுகளை, மாணவர் சேர்க்கை தொடங்கிய பின்னர் அவசர அவசரமாகக்  கூட்டம் நடத்தித் தீர்மானிப்பதைக் காட்டிலும், இப்போதே இந்தப் பிரச்னையைப் பேசி, மக்களுக்கும் மாணவர்களும் பயன்படும் வகையில் கட்டணத்தைத் தீர்மானிப்பது அரசின் கடமையல்லவா?


நன்றி தினமணி.
 

முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                  2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                3. இனி சன்டேன்னா சினிமாதான்...

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

26 comments:

  1. >>>
    இதனால் அரசுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளுக்கோ பெரிய இழப்பு இல்லை. பொருளிழப்பும் அதே நேரத்தில் மனஉளைச்சலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் ஏற்படுகின்றன.

    100% கரெக்ட்

    ReplyDelete
  2. இப்பவெல்லாம் தினமணி அரசுக்கு எதிராக.. சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் நிறைய போடுது...

    ReplyDelete
  3. நல்லாத்தான் அலசியிருக்கீங்க.....
    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

    ReplyDelete
  4. ..பொருளிழப்பும் அதே நேரத்தில் மனஉளைச்சலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் ஏற்படுகின்றன...

    சத்தியமான உண்மை... ஏழை மாணவர்களின் படிப்பு பகல் கனவு தான் இன்றும்... லோன் கேட்க போன அவ கேக்கற கேள்வி இருக்கே...

    ReplyDelete
  5. சமூகத்திற்கு விழிப்புணர்வை தரக்கூடிய விழிப்புணர்வு பதிவு.

    வடை போச்சுன்னு தெரியும்.

    இப்போ நான் எத்தனையாவது ஆள்?

    ReplyDelete
  6. கலந்தாய்வின் கடைசிநாள் வரை இடங்கள் காலியாக இருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டணமும், முதல் நாளிலேயே இடங்கள் நிரம்பிவிடுகிற கல்லூரிக்கும் ஒரே விதமான கல்விக் கட்டணத்தைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் என்றால், கல்வியின் தரத்தைப் பற்றி பல்கலைக்கழகம் அல்லது அரசின் கருத்துதான் என்ன?
    ---------------------------------------------------------
    சத்தியமான வரிகள், கலந்தாய்வு நாளைப் பொறுத்து கட்டணம் விதித்தால் அது சரியான முடிவு.
    பல கொள்ளையர்களின் பிடியில் இருந்து இந்த மாணவ சமுதாயமே காப்பாற்றப் படும்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி - இது போன்ற எண்ணங்கள் சில நல்ல உள்ளங்களுக்கு தான் வரும்
    மகேஷ்...வ்வ்வ்.http://maheskavithai.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  7. இதையும் படிச்சு பாருங்க...
    http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_2224.html

    ReplyDelete
  8. நல்ல அலசல். தனியார் பொறியியல் கல்லூரிகள் என்பது பணம் கொழிக்கும் தொழிலாகி விட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பொறியியல் கல்லூரி நடத்துகிறார்கள். இதன் மூலம் கல்லூரி என்னும் தொழிலின் ருசி எப்படி இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்..

    ReplyDelete
  9. ...இப்போதே இந்தப் பிரச்னையைப் பேசி, மக்களுக்கும் மாணவர்களும் பயன்படும் வகையில் கட்டணத்தைத் தீர்மானிப்பது அரசின் கடமை... கண்டிப்பாக அரசின் கடமையே....பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. அரசு போதுமான அளவு கல்லூரிகளை உருவாக்காத குற்றத்துக்காக, தனியார் கல்லூரிகளை அனுமதித்திருக்கிறது என்பதற்காக, நன்றாகப் படித்த ஒரு மாணவரும் அதிகபட்சக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?///

    மிக நல்ல பதிவு. கல்வி எப்பொழுது வியாபாரம் ஆனதோ அப்பொழுதே நியாய அநியாயங்கள் போய்விட்டன!!! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  11. அரசு போதுமான அளவு கல்லூரிகளை உருவாக்காத குற்றத்துக்காக, தனியார் கல்லூரிகளை அனுமதித்திருக்கிறது என்பதற்காக, நன்றாகப் படித்த ஒரு மாணவரும் அதிகபட்சக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?///

    மிக நல்ல பதிவு. கல்வி எப்பொழுது வியாபாரம் ஆனதோ அப்பொழுதே நியாய அநியாயங்கள் போய்விட்டன!!! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  12. இலவசங்களின் அரசுக்கு ஏன் கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை ?
    அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கும் நிறுவனங்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் .
    கல்வி உதவித் தொகை , ஊக்கத்தொகை , வட்டியில்லாக் கல்விக் கடன் இதெல்லாம் தான் கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் .
    சிந்திக்குமா அரசு?

    ReplyDelete
  13. நல்ல அலசல். நல்ல பகிர்வு. அரசு, எல்லா தனியார் கல்லூரிகளுக்கும் ஒரு standard level செட் செய்ய வேண்டும். :-)

    ReplyDelete
  14. நல்லாத்தான் அலசியிருக்கீங்க

    ஆலோசனையும் நல்லா இருக்கு

    ReplyDelete
  15. உண்மையில் அருமையான அலசல் ...............

    ReplyDelete
  16. சிறப்பான பதிவுக்கு என் பராட்டுக்கள்..

    ReplyDelete
  17. பஸ் டே கொண்டாடும் மாணவர்கள், இந்தமாதிரி விஷயங்களுக்குப் போராட்டம் நடத்தினால் மக்களிடமும், தங்கள் பெற்றோர்களிடமும் நல்ல பெயர் வாங்கலாம்.

    ReplyDelete
  18. நல்ல அலசல் கல்விக்கட்டணங்களால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete
  19. பஸ் டே கொண்டாடும் மாணவர்கள், இந்தமாதிரி விஷயங்களுக்குப் போராட்டம் நடத்தினால் மக்களிடமும், தங்கள் பெற்றோர்களிடமும் நல்ல பெயர் வாங்கலாம். சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  20. கட்டண கொள்ளையை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படின்னு தெரியல

    ReplyDelete
  21. பள்ளிகளும் கல்லூரிகளும் கொள்ளைக்கூடாரங்களாகிவிட்டன.பாதிக்கப்படும் பொதுமக்கள்தான் விழிபிதுங்கிப்போகிறார்கள்.

    நல்ல பகிர்வு கருன்!

    ReplyDelete
  22. வழிமொழிகிறேன்,கருன்

    ReplyDelete
  23. இந்த வருடத்தில் இருந்து ஒரு கல்லூரியின் அடிப்படை கட்டமைப்பு வசதி , ஆசிரியர்களின் தகுதி போன்ற விவரங்களை AICTE WEB siteல் பார்க்கமுடியும். தரமான கல்லூரியை தேர்வு செய்ய மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"