புறாக்கள் பார்ப்பது
அரிதாகிவிட்டது...!
புற்களைப் பார்க்க கூட
ஊருக்கு வெளியே
போகவேண்டியிருக்கிறது...!
எப்போதாவது
பயணங்களில் பார்க்கக்
கிடைக்கின்றன
ஆடுகளும்
வெள்ளைக் கொக்குகளைச்
சுமந்த மாடுகளையும்...!
நாற்று நட்டவா்களும்
வேர்கடலை பிடுங்கியவர்களும்
களை எடுத்தவர்களும்
என்ன செய்கிறார்களோ
ஜீவனத்திற்கு...!
மனிதர்கள் பெயரில்
பதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ?
“ஏஷியன்” வண்ணப்பூச்சுடன்
உயர்ந்து நிற்கும்
உயர்ந்து நிற்கும்
கோபுரம் மட்டும் இன்னும்
ஊரைச் சுமந்து கொண்டிருக்கிறது...!
தூசிபடியாத நவீன விட்டில்
வாழ்க்கை பழகிக் கொண்டது...!
என்றாவது
அதிகாலையில் கனவு வருகிறது
காட்டுச் செடிகளுக்கிடையில்
கலாப்பழம் தேடிப்போவது போல்...!முந்தைய பதிவுகள்:
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....! தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
///மனிதர்கள் பெயரில்
ReplyDeleteபதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ?///
பூமி மட்டுமில்லாமல் வேறு கண்டங்களையும் நம்மாளுக விட்டு வைக்கல...
மாப்ள கனவே பொழப்பா போச்சியா!
ReplyDeleteஅருமை...தொடர்ந்து கவிதையா கலக்குறீங்க...
ReplyDelete>>காட்டுச் செடிகளுக்கிடையில்
ReplyDeleteகலாப்பழம் தேடிப்போவது போல்...!
அதென்ன கலாப்பழம்? பலாப்பழம் தெரியும், கிலாக்காய், கிலாப்பழம் தெரியும்.. இது புதுசா இருக்கே..
எல்லாவற்றையும் அழித்துவிட்டு, எதை வைத்து வாழ போகிறோம். நல்ல கவிதை.
ReplyDeleteமன்னிக்கவும் உங்கள் கனவு பலிப்பது கஷ்டம்தான்.
ReplyDeleteமனிதர்கள் பெயரில்
ReplyDeleteபதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ?
......ம்ம்ம்ம்...... கூகிள் எதற்கு இருக்கிறது? தேடி கண்டு பிடிச்சிருவோம்! :-))))
அசத்தல் கவிதை...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteபூமி மட்டுமில்லாமல் வேறு கண்டங்களையும் நம்மாளுக விட்டு வைக்கல... --- அப்படியா?
FOOD சொன்னது…
ReplyDeleteவந்துட்டேன், வாசிச்சிட்டு வருகிறேன். --- ஓகோ..
FOOD சொன்னது…
ReplyDeleteஎன்ன ஆசிரியரே! நீங்களுமா? பதிலே இல்ல! -- பதிவு போட்டுட்டு டியூஷன் எடுக்க போய்ட்டேன்... மன்னிக்கவும்..
@FOOD சொன்னது… --வருகைக்கு நன்றி..
ReplyDeleteவிக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteமாப்ள கனவே பொழப்பா போச்சியா!
--- மாப்ள வேர என்ன பன்னசொல்ர..
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteஅருமை...தொடர்ந்து கவிதையா கலக்குறீங்க...
--------------அப்ப எதைத்தான் எழுதுவது?
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteஅதென்ன கலாப்பழம்? பலாப்பழம் தெரியும், கிலாக்காய், கிலாப்பழம் தெரியும்.. இது புதுசா இருக்கே..- அது கருப்பா சின்னதா இருக்கும்..
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteஎல்லாவற்றையும் அழித்துவிட்டு, எதை வைத்து வாழ போகிறோம்.------ உண்மைதாங்க...
பாலா சொன்னது…
ReplyDeleteமன்னிக்கவும் உங்கள் கனவு பலிப்பது கஷ்டம்தான். -- கனவுதானே..
Chitra சொன்னது…
ReplyDelete......ம்ம்ம்ம்...... கூகிள் எதற்கு இருக்கிறது? தேடி கண்டு பிடிச்சிருவோம்! :-)))) - சீக்கிரம் கண்டுபிடிங்க..
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteஅசத்தல் கவிதை... -- நன்றி..
FOOD சொன்னது…
ReplyDeleteகனவு காணுங்கள். அது உங்களை உயர்த்தும். நன்றி.
காலையில் கண்டாலும் இக்கனவு வெறும் கனவுதான் கருன்!
ReplyDeleteNagasubramanian சொன்னது…
ReplyDeletefantastic // Thanks 4 ur comments..
அழகோ அழகு!
ReplyDeleteகனவுகாணூங்கள், அது உங்களை உயர்த்தும்னு சொன்னவங்க, காலைக்கனவா, இரவு கனவான்னு சொல்லவே இல்ல்யே?
ReplyDelete//“ஏஷியன்” வண்ணப்பூச்சுடன்
ReplyDeleteஉயர்ந்து நிற்கும்
கோபுரம் மட்டும் இன்னும்
ஊரைச் சுமந்து கொண்டிருக்கிறது...!//
வெகுவாக ரசித்தேன் இந்த சிந்தனையை
சிறப்பான ஆக்கம்..!
சுகமான கவிதை சாறல்
ReplyDeleteமனிதர்கள் பெயரில்
ReplyDeleteபதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ//
செவ்வாய் கிரகத்துல?
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteகாலையில் கண்டாலும் இக்கனவு வெறும் கனவுதான் கருன்!
---ஆம் தோழரே...
ராஜ நடராஜன் சொன்னது…
ReplyDeleteஅழகோ அழகு! - எதுப்பா?
Lakshmi சொன்னது…
ReplyDeleteகனவுகாணூங்கள், அது உங்களை உயர்த்தும்னு சொன்னவங்க, காலைக்கனவா, இரவு கனவான்னு சொல்லவே இல்ல்யே?-- ஆமாம்மா..
ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
ReplyDeleteசிறப்பான ஆக்கம்..! -- Thanks 4 ur comments..
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteசுகமான கவிதை சாறல் --அப்படியா?
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteமனிதர்கள் பெயரில்
பதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ//
செவ்வாய் கிரகத்துல? -- நிஜமாகவா?
செங்கோவி சொன்னது…
ReplyDeleteநல்ல சிந்தனை.--- நன்றி...
யதார்தாமான, நிதர்சனமான உண்மை. நெஞ்சை தொட்ட வரிகள்
ReplyDelete\\என்றாவது
அதிகாலையில் கனவு வருகிறது
காட்டுச் செடிகளுக்கிடையில்
கலாப்பழம் தேடிப்போவது போல்...\\
உங்களின் எல்லா ஆதங்கமுமே வார்த்தைகளில்.எது அழகு எது தப்பென்றே சொல்லமுடியவில்லை கருன்.இனி அந்தக் காலங்கள் கனவில்தான்.இன்றைய சந்ததியினருக்கு அந்தக் கனவும் இல்லை !
ReplyDeleteகனவும்,படமும் அழகு.
ReplyDelete