ஐந்து ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசுக்கு கைகொடுக்குமா ?
நகர்ப்புறங்களில் தீவிரப்படுத்திய திட்டங்களை, கிராமப்புறங்களில் கட்சியினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். விரைவில் வெளியாகும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பல கவர்ச்சிகர சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
அனைத்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள அ.தி.மு.க.,வும், மக்களுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
கடந்த, 2006 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின், 7,000 கோடி கடன் தள்ளுபடி, இரண்டு ஏக்கர் இலவச நிலம், வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, இலவச காஸ் அடுப்பு, இலவச கலர் "டிவி' உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது.
பதவியேற்றதும் முதல்வரின் இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.சலுகைகள் கவர்ச்சிகரமாக இருந்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது. இருப்பினும், ஒரு சாரர் மட்டுமே பயன்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காலப்போக்கில், திட்டங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. இரண்டு ஏக்கர் நிலம், பெரும்பாலும் கரட்டு புறம்போக்கில் வழங்கப்பட்டதால், அவை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசு புறம்போக்கு நிலம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. தி.மு.க.,வினர் பலர் அவற்றை ஆக்கிரமிக்கும் சூழலும் ஏற்பட்டது.
ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோழிப்பண்ணைக்கும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச, "டிவி'க்கள் கடைகளில் வைக்கப்பட்டன. இலவச காஸ் அடுப்பு திட்டத்திலும், கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி பலவற்றை சுருட்டி விட்டதாக புகார் உள்ளது.
நகர்ப்புறங்களை மையப்படுத்திய கட்சியினர், கிராமப்புற மக்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலானோருக்கு, காஸ் அடுப்பு, "டிவி' போன்றவை இதுவரை வழங்கப்படவில்லை. டோக்கன் சிஸ்டமும் தோல்வியில் முடிந்துள்ளது.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அலைக்கழிக்கும் போக்கும், பணம் பிடுங்கும் செயலும் அதிகம் அரங்கேறியது. காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்காததால், அவசர சிகிச்சை மேற்கொள்வோர், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க இலவச திட்டங்களில், அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பால், கலைஞர் வீட்டு வசதித் திட்டமும் கிடப்பில் உள்ளது. அடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வராவிட்டால், இலவசங்களை நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
தி.மு.க., சார்பில், வரும் 19ம் தேதி வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், கடந்த தேர்தலை போல் கவர்ச்சிகர திட்டங்கள் பல அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மாதம் 20 கிலோ அரிசி இலவசம் என்ற, "பிரம்மாஸ்திரம்' போன்ற அறிவிப்பும் இடம்பெறும் என, கட்சியினர் பேசி வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையை, தி.மு.க., பிரசாரத்தில் தீவிரப்படுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.விவசாயிகள், பால் உற்பத்தியாளர், ஜாதி சங்கத்தினர் என, பல்வேறு அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களை குளிர்விக்கும் வகையில், சலுகை அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. இவை, வரும் தேர்தலில் தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க உதவுமா என்பது தான், தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
Thanks dinamalar.
முந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteமுத வெட்டு
//அட..
நிச்சயமா கொடுக்காது
ReplyDeleteமண்ணை கவ்வுவது உறுதி
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteநிச்சயமா கொடுக்காது
//அப்படியா?
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteமண்ணை கவ்வுவது உறுதி ----
--- உங்க கணிப்பு சரியா பாக்கலாம்..
மண்ணை கவ்வுவது என்ன கவ்வுவது நக்குவார்கள் என்பதுதான் பொருந்தும் இந்த நாதாரிகளுக்கு....
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteமண்ணை கவ்வுவது என்ன கவ்வுவது நக்குவார்கள் என்பதுதான் பொருந்தும் இந்த நாதாரிகளுக்கு....
////திட்டாதிங்க சார்..
வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?
ReplyDelete-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)
tharuthalai சொன்னது…
ReplyDeleteவை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. ///உங்கள் ஆசை நியாயமானதே..
நல்லதே நடக்கும் என நம்புவோம்!
ReplyDeleteஇலவச திட்டங்கள் கிராமங்களில் கொஞ்சம் எடுபடும். பார்ப்போம். கடைசி நேரத்தில் அதிரடி இலவசங்கள் ஏதும் வருகிறதா என்று. :-)
ReplyDeleteவாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். இலவசங்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை எந்தளவு உயர்த்தும் என்று.
ReplyDeleteநன்றாக அலசியுள்ளீர்கள்.இந்த தேர்தல் நகரமா கிராமமா என்ற பட்டிமன்றமே:)
ReplyDeleteசென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteநல்லதே நடக்கும் என நம்புவோம்!
/// Thanks..
சுவனப்பிரியன் சொன்னது…
ReplyDeleteஇலவச திட்டங்கள் கிராமங்களில் கொஞ்சம் எடுபடும். பார்ப்போம். கடைசி நேரத்தில் அதிரடி இலவசங்கள் ஏதும் வருகிறதா என்று. :-)
///கண்டிப்பா வரும்...
FOOD சொன்னது…
ReplyDeleteநல்லா அலசி அராய்ச்சி பண்ணிடுறீங்க ஆசிரியரே!
--- நன்றி..
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteவாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். இலவசங்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை எந்தளவு உயர்த்தும் என்று.
---ஆட்சி மாற்றம் ஏற்படும்..
ராஜ நடராஜன் சொன்னது…
ReplyDeleteநன்றாக அலசியுள்ளீர்கள்.இந்த தேர்தல் நகரமா கிராமமா என்ற பட்டிமன்றமே:)
//// thanks 4 ur comments..
good article
ReplyDeletejayakumar சொன்னது…
ReplyDeletegood article
// Thanks..
அவரு என்ன செஞ்சாலும் அதை மறைக்கிறதுக்கு மின்வெட்டு ஒண்ணு போதுமே.. இப்போ ஸ்பெக்ட்ரமும் சேர்ந்துகிச்சு.
ReplyDeleteபாலா சொன்னது…
ReplyDeleteஅவரு என்ன செஞ்சாலும் அதை மறைக்கிறதுக்கு மின்வெட்டு ஒண்ணு போதுமே.. இப்போ ஸ்பெக்ட்ரமும் சேர்ந்துகிச்சு.
///கரெக்ட் நண்பா...
poramai pidiththavatkale D.M .K. MUST AND SHOULD WIN THIS ELECTION. ALL TAMIL SPEAKING PEOPLE MUST VOTE FOR D.M.K. BOYCOTT KANNADIHA AND TELUGU POLITICIANS.
ReplyDeleteநம்ம மக்களை நம்பி எதையும் முடிவு பண்ண முடியாது....
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
கை கொடுக்கும்../ ஆனா ஸ்பெக்ட்ரம் காலை வாரிடும்
ReplyDeleteதமிழ்மண ஓட்டு ரொம்ப கம்மியா இருக்கே.. தமிழ்மணம் கூட சண்டையா?
ReplyDeleteபெயரில்லா சொன்னது…
ReplyDeleteporamai pidiththavatkale D.M .K. MUST AND SHOULD WIN THIS ELECTION. ALL TAMIL SPEAKING PEOPLE MUST VOTE FOR D.M.K. BOYCOTT KANNADIHA AND TELUGU POLITICIANS.
// Thanks..
தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteநம்ம மக்களை நம்பி எதையும் முடிவு பண்ண முடியாது....// Nandri..
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteகை கொடுக்கும்../ ஆனா ஸ்பெக்ட்ரம் காலை வாரிடும்
/ அப்படியா?
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteதமிழ்மண ஓட்டு ரொம்ப கம்மியா இருக்கே.. தமிழ்மணம் கூட சண்டையா?
---நேற்று தமிழ்மண ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை.
அ.தி.மு.க , தி.மு.க இரண்டிர்க்குமே வெற்றி வாய்ப்பு சமமாகத்தான் இருக்கிறது..
ReplyDeleteThe ruling party may loose only because of 2G scam.. But the opposition party will not do any thing grt when it comes to rule..because all party members r eagerly waiting to earn what they lost in last 5 yrs. Atleast ruling party has one man who had developed the industries in chennai and TN the best .. i know personally the benefits industries got from this man.. so if industry develops obv v r going to be developed so my prayers r only for this man n not for the others..that ruling party shd win..
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDeleteஅ.தி.மு.க , தி.மு.க இரண்டிர்க்குமே வெற்றி வாய்ப்பு சமமாகத்தான் இருக்கிறது..
///அப்படியா?
Kalpana Sareesh சொன்னது…
ReplyDeleteThe ruling party may loose only because of 2G scam /// Thanks for ur comments..
சந்தேகமதான்.
ReplyDeleteஸாதிகா சொன்னது…
ReplyDeleteசந்தேகமதான்.
// Late.
இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்
ReplyDeleteரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteஇன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்
--- நன்றி..