Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/08/2011

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி


திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.

10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார்.

இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.

வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.

என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். 

ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள
"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். 

இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன். இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார். நன்றி  தினமலர்.

இந்தசெய்தியுடன் 100 வது மகளிர் தினத்தைப் போற்றுவோம்... 

இன்று   உலகமகளிர் தினம்.    அவா்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்..
பெண்மையை போற்றுவோம்... 

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                               2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா 



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

22 comments:

  1. >>>என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்.

    வாழ்த்துக்கள் மானவிக்கு, நன்றி தினமலர்+ கருண்

    ReplyDelete
  2. Nagasubramanian சொன்னது…

    very glad to read this one..
    // Thanks 4 coming..

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    1?
    ///கேள்வி கேட்டாதான் வருவீங்களா?

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    வாழ்த்துக்கள் மானவிக்கு.. --- /// Thanks..

    ReplyDelete
  5. அந்த பொண்ணுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

    சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.

    ReplyDelete
  6. தமிழ் 007 சொன்னது…

    அந்த பொண்ணுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

    சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளது. --- நன்றி தங்களின் வருகைக்கு..

    ReplyDelete
  7. தன்னம்பிக்கை

    அது அவரை வெற்றிபெற செய்யும்

    ReplyDelete
  8. சுஜிதா வாழ்த்தவும், போற்றப்படவும் வேண்டியவர்.

    ReplyDelete
  9. திறமைக்கு குறை ஒன்னும் குறை இல்லை மேலும் முன்னேற வேண்டும் ...அருமையான பகிர்வு ...கண்ணிருந்தும் குருடராக இருப்பவர்கள் இனியாவது திருந்துங்கப்பா.

    ReplyDelete
  10. சுஜிதா மேன்மேலும் சாதனை செய்து இமயமாய் உயர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். அனைவருக்கும் தெரிய வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  12. தன்னமிக்கைக்கு பலன் பிருமாண்டமானது என்ற உண்மையை இந்த நிகழ்வு மூலம் மீண்டும் உறுதிப்ப்டுத்தி உள்ளது.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சுஜிதா

    ReplyDelete
  14. தன்னம்பிக்கை பெண் சுஜிதா வாழ்க

    ReplyDelete
  15. தன்னம்பிக்கை அவரை வெற்றிபெற செய்யும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மகளிர்தினத்தன்று நல்ல ஒரு தகவல்.. சுஜிதாவுக்கு வாழ்த்தும், உங்களுக்கு நன்றியும்..

    ReplyDelete
  17. திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    ..... Thats a great news!!! We wish her the best!

    ReplyDelete
  18. மாணவிக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
  19. மனம் கசிகிறது.எத்தனை முயற்சி தேவை இந்த உயர்ச்சிக்கு.வாழ்த்துகள் அவர் அம்மாவுக்கும்கூட !

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"