Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

1/31/2011

என்னடா உலகமிது...

கிழிந்த  சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!

ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!

பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!

நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்...!

1/29/2011

தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

நான் தமிழன் என்றும், அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், மத்திய அரசின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவை சுற்றிய அனைத்து அண்டை நாடுகளும் நம்மிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்க, யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலைமை.ஒரு எதிரியை உருவாக்குவது பிரச்னை இல்லை. ஆனால், அந்த எதிரியும் நம் இன்னொரு எதிரியும் கூட்டு சேர்ந்தால், அவர்களின் பலம் அதிகரிக்கும். இதை உணர்ந்து தான், நடைமுறை வாழ்க்கையில் கூட, நாம் அவசரப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. 

எனவே, இலங்கை விஷயத்தில், இந்தியா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.ஆனால், ஒரு இந்திய பிரஜையை, இன்னொரு நாட்டு ராணுவம் சுட்டு கொன்றால், இங்கே இந்தியா அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லையே. இது, இந்தியாவின் பலவீனத்தை அல்லவா காட்டுகிறது. 

இதுபோன்ற அத்துமீறல்களை, இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா?விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை வேண்டாமா? இங்கே மத்திய அரசும், சொரணையற்ற அரசாக தெரிந்தாலும், அவர்களுக்கு, பல மாநில பிரச்னைகளில், இதுவும் ஒன்று. 

எனவே, தமிழக அரசு தான், தமிழர்களின் மரியாதையை காப்பாற்ற, மத்திய அரசை கடுமையாக எச்சரித்து, தேவையான, உறுதியான நடவடிக்கையை எடுக்க வைக்க வேண்டும்.


ஆனால், தி.மு.க., ஆட்சியின் இதுநாள் வரையிலான வரலாறை பார்த்தால், பதவியைத் தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக அதிமுக இரண்டு பேருக்கும் இதில் அதிக பொறுப்பு இருக்கின்றது. 
மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை.


ஒருவன் தவறு செய்தால், அதற்கான தண்டனையை அவன் அனுபவித்தால் தான் திருந்துவான். எனவே, சுயநலத்துக்காக தமிழனின் மானத்தை காற்றில் பறக்கவிடும் இந்த அரசியல்வாதிகளை, மக்கள் தேர்தலில் தண்டிக்காத வரையில், அவர்களும் திருந்தப் போவதில்லை; நாமும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.(நன்றி  சிவா -  தினமலர்)

இன்றைய  நிலையைப் பார்த்து மனவருத்தத்துடன் தலைப்பை வைத்தேன். மன்னிக்கவும் .
சி.பி.செந்தில் சார்  மற்றும் பிரபல பதிவர்கள்  இதைகுறித்து  உங்கள் பிளாகில் கண்டனங்களை தெரிவியுங்கள். உலகலவில் இப்பிரச்சனையின் தீவிரத்தை தெரியபடுத்துவோம்.


முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள்:  http://www.petitiononline.com/TNfisher/

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

1/28/2011

"மிஸ்டர் கிளீன்' - உண்மையா ? Mr., பிரதமர்.

 "மிஸ்டர் கிளீன்' -ன்னு உங்களை சொல்றாங்க அது உண்மையா ?
Mr., பிரதமர்
ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும், வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கறுப்புப்பணம் அல்ல... இந்திய நாட்டைக் கொள்ளையடித்து, தேசத்துரோகம் செய்திருக்கும் சொத்துக்கள்.

 இதை வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் சாட்டையடி, "சுளீர்' என இருந்திருக்கும்.

நம் அரசியல்வாதிகள் எத்தனை பேர் யோக்கியர்களாக இருக்கின்றனர் என்பதை, இந்தக் கறுப்புப்பணம் நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் கூட, இப்படி கொள்ளையடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அரசியல் நாகரிகம், தபால் - தந்தி, ரயில் போக்குவரத்து, பார்லிமென்ட் நடைமுறைகள் என, எத்தனையோ நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுத்தனர். ( நன்றி நண்பர் வளவன்).

நாகரிகமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தவர்கள், வெள்ளையர்கள் தான்.ஆனால், சுதந்திரத்திற்குப் பின் நம் நாடு, மொழியாலும், மதத்தாலும், ஜாதியாலும் பிளவுபட்டு, ரத்த ஆறு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 

குடிக்கத் தண்ணீர் தர மறுக்கின்றனர் பக்கத்து மாநில மக்கள்.கறுப்புப் பணம் பட்டியலை வெளியிட்டால், நம் அரசியல்வாதிகளின் வண்டவாளங்கள், நிச்சயம் தண்டவாளத்தில் ஏறிவிடும். ஏழைப்பங்காளர்கள் என்று வேஷம் போடும் தலைவர்களின் முகத்திரைகள் கிழிந்துவிடும். 

அதனால்தான், "மிஸ்டர் கிளீன்' என போற்றப்படும் பிரதமர் மன்மோகன் சிங், யோசிக்கிறாரோ, என்னவோ!?

நீங்க என்ன  யோசிக்கிரீங்க?

இந்த பதிவு  பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/26/2011

சலுகையா அல்லது சமாதியா?

ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.

 மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.

 பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த பிற வாடிக்கையாளர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேசி மகிழ பல்வேறு விதமான பூஸ்டர்  கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை உபயோகப்படுத்தி தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பவருக்கும் 1 நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில்கூட பேச முடிகிறது. செல்போன் சேவையை அதிகம் பயன்படுத்துவோர் இந்தச் சலுகைத் திட்டங்களில் உடனடியாக இணைந்து கொள்கின்றனர்.  

சில சாமானியர்கள் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்களின் தயவை நாட வேண்டிய சூழல் உள்ளது.  ஏனெனில், குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேரும் பண்டிகை காலத்தில், செல்போன் பேச்சுக்கு தற்போது பஞ்சமிருப்பதில்லை.  

 குடும்பத்தாரின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும், அதே நேரத்தில் பொருளாதாரச் சிக்கனம் கருதியும் குறிப்பிட்ட பணம் செலுத்தி சலுகைத் திட்டங்களில் சேர்பவர்கள் பலர்.  

ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் திட்டமிடுதலைத் தகர்க்கும் வகையில் பண்டிகைக்கு முந்தைய நாளில் சிறப்புக் குறுஞ்செய்தியை அனுப்புகின்றன.  அந்தக் குறுஞ்செய்தியில், வரும் இரண்டு நாள்களுக்கு மட்டும் நீங்கள் உபயோகப்படுத்திவரும் சலுகைக் கட்டணங்கள் நிறுத்தப்படுகிறது. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் அடிப்படைத் திட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவிக்கிறார்கள்.  

இதனால் நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசியவர்கள் கூட, அந்த இரு நாள்களும் நிமிஷத்துக்கு ரூ. 1 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் என்பவை உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ( நன்றி தினமணி)

லட்சங்களில் புரளும் தொழிலதிபர்களுக்கும், கோடிகளில் திளைக்கும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் சலுகை காட்டும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஏழைகள் மிகுந்த தமது வாடிக்கையாளர் வட்டத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

 விழாக்கால "சலுகை ஏமாற்றம்' அளிக்கும் செயல்களில் மட்டும் முன்னணியில் இருக்காமல்,   இனிவரும் பண்டிகைக் காலங்களிலாவது சலுகைக் கட்டணத்தில் வாடிக்கையாளர்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான இல்லையில்லை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.   

இதற்கு நீங்களும் குரல்கொடுக்க கருத்துரையிடுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
 

1/25/2011

என்னதது, சின்னபுள்ளதனமா இருக்கே!!!

"2020ல், இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, அறிஞர்களும், ஆன்றோர்களும், இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறை மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்

இந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள் கணக்காக விலைவாசி ஏற்றத்தை விவாதிக்கின்றனர்

பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.

இன்று கார்கள், குளிர்சாதன பெட்டி, இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, "டிவி ” ஆகியவை, முன்பு இருந்த விலையைவிட குறைந்த விலையில் கிடைக்கக் காரணம், அதிகமான உற்பத்தியே!

விவசாயிகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு அளித்தாலும், அவை முழு அளவில், உரிய நேரத்தில் சேராததாலேயே, உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவே விலையேற்றம்.

இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன் அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.

உங்களுக்கும் ஏதாவது ஐடியா தோன்றினால் பின்னூட்டம் இடவும்...

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/24/2011

அட.. சீ... மானங்கெட்டவனே..


ஜன் பத்து  ரூபாய்
கூவி கூவி  அழைத்தான்
தள்ளுவண்டிக்காரன்....!


ழு ரூபாய் வீதம்
இரண்டு டஜன் கொடு
பேரம்பேசினேன் அவனிடம்....!


ரை மணிநேரம்
வாதாடினேன் - இறுதியில் 
இரண்டு டஜன்  பதினைந்து ரூபாய்
என பரிமாறிக்கொள்ளப்பட்டது
பணமும்.... பொருளும்...

பீடியை எடுத்து
இயல்பாகத்தான்  துப்பினான்...
என்றாலும்
எனக்கு  உறுத்திக் கொண்டிருக்கிறது.


திர் கடையில்
குளுகுளு காற்றுவாங்கி
பிரிதிபளிக்கும் கண்ணாடி  கூண்டுக்குள்
திருப்தி இல்லையென்றாலும் 
சொன்ன விலைக்கு நான்
சட்டை வாங்கி வந்ததை
பார்த்திருப்பானோ?

ண்மைதான்
நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...


கவிதை பிடித்திருந்தால்  ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நீதிமன்றமா ? கட்ட பஞ்சாயத்தா ? வெட்கக்கேடு

நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று.

நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம்.

டந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும், நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் தெரிவித்த கருத்து நீதித்துறையையே ஒரு வினாடி அதிர வைத்தது.

"அலகாபாத் உயர் நீதிமன்றத்தைப் பற்றிப் பல புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் சிலரின் வாரிசுகளும் உறவினர்களும் பட்டம் பெற்று அந்த நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொகுசுக் கார்களும், பிரம்மாண்டமான பங்களாக்களும், வங்கிகளில் பெரும் சேமிப்புகளுமாகக் கோடீஸ்வரர்களாய் வளையவரத் தொடங்கி விடுகிறார்கள்.

ல்லோரும் அப்படி என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. சிலர் தங்கள்மீது களங்கத்தின் நிழல்கூடப் படிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், பலர் தங்களது உறவு முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு செல்வத்தில் கொழிக்கிறார்கள்'' என்பதுதான் அந்த நீதிபதிகள் தெரிவித்த அதிர வைக்கும் கருத்து.

லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த நிலைமையை மாற்றத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும்கூட அந்த நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். உத்தரப் பிரதேச நீதித்துறை கொதித்து எழுந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தங்களது உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தரக் களங்கம் கற்பித்துவிடும் என்றும் அதை நீதிமன்றக் குறிப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

ப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு உரிமையும் தகுதியும் உண்டு. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தாத்தா டாக்டர் கே.என். கட்ஜு, மோதிலால் நேருவுக்கு நிகரான வழக்குரைஞர் மட்டுமல்ல, ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும்கூட. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை எஸ்.என். கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். மாமா பி.என். கட்ஜு அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே இருந்தவர். 1991-ல் மார்க்கண்டேய கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கும்வரை, தனது தந்தையோ, மாமாவோ நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

அப்படி ஒரு பின்னணியுடைய நீதிபதிக்கு, சில நீதிபதிகளும் அவர்களது வாரிசுகளும் நீதித்துறையைக் கேவலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட பிறகும், உண்மை வெளிக்கொணரப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே மக்களுக்கு நீதித்துறைமீதும், ஆட்சிமுறை மீதும் நம்பிக்கை தொடர முடியும்?

ல்லா உயர் நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் இதேபோன்ற நிலைமைதான் தொடர்கிறதா? அப்படியானால், அதைத் தீர விசாரித்து நீதித்துறையின் கௌரவத்தையும், சாமானியனுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நிலைநாட்ட வேண்டாமா? பணம் கொடுத்துத் தீர்ப்பை வாங்குவது என்று வந்துவிட்டால் நீதித்துறையும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம்போல ஆகிவிடுமே, அதை நாம் அனுமதிக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சந்தித்து மத்திய அமைச்சர் பேசுகிறார் என்று தொலைபேசியைக் கொடுக்க வழக்குரைஞர் துணிந்தது எதனால், எதற்காக என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை மறைக்கப் பார்த்திருக்கிறாரோ என்கிற ஐயப்பாடல்லவா மேலோங்கி இருக்கிறது.

டைசிவரை தன்னிடம் யார் தொடர்புகொண்டு தனது நண்பர்களுக்காக சிபாரிசு செய்தது என்பதை நீதிபதி ரகுபதி தெரிவிக்கவே இல்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகஇருக்கும் ஹெச்.எல். கோகலே, அமைச்சர் ஆ. ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தி, அந்தக் கடிதத்தை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை இருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பாமல் என்ன செய்யும்?( நன்றி தினமணி).

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தார், உண்மையை மறைத்தார் என்றால், அவர் வகித்த பதவிக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தப் பிரச்னையில் எது உண்மை? உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை உறைபோட்டு மூடப் பார்த்தாரா என்பது வெளிப்படுத்தப்பட்டே தீரவேண்டும்.

ச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் பலர் ஊழல் பேர்வழிகள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷணையும் அவரது தந்தை சாந்திபூஷணையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கக்கூட முடியாத நிலையில் உச்ச நீதிமன்றம் தத்தளிக்கும் நிலைமை அதைவிடக் கொடுமை. இந்த நிலைமையும்  தொடரக்கூடாது.

நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும். எது நிஜம்? என்று கண்டறியத்தான் நீதித்துறை. அதனால், நீதித்துறை சுய பரிசோதனைக்குத் தயாராகியே தீரவேண்டும்!

1/22/2011

ஜெயலலிதா, விஜயகாந்த் எம்.எல்.ஏ., பதவி பறித்தால் என்ன ?

க்கள் பிரச்னைகளை, தொகுதி பிரச்னைகளை எடுத்து வைக்கும் இடமான சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கடந்த ஓராண்டாக வரவில்லை. அதேபோல, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் சட்டசபைக்கு வராமல் புறக்கணித்து வருகிறார். 
 
னநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கக்கூடிய சட்டசபை, மக்கள் மன்றமாக விளங்கி வருகிறது. தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி பிரச்னைகளில் துவங்கி, அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் கண்காணித்து, அவற்றிற்கு ஒப்புதல் கொடுக்கும் பொறுப்பு எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ளது. 

ட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வாதங்களை எழுப்பி, அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர்கள் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பது தமிழக அரசியலில் வழக்கமாகி வருகிறது.

திர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருந்த போது, சட்டசபைக்கு வருவதை தவிர்த்து வந்தார். விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவ்வப்போது சபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுச் சென்றார். காரணம், ஆறு மாதங்கள் தொடர்ந்து சபைக்கு வராமல் இருந்தால், எம்.எல்.ஏ., பதவி பறிபோகிவிடும் என்பது தான். 

.தி.மு.க.,வின் நிலை இப்படி என்றால், தே.மு.தி.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.,வான விஜயகாந்தும் சட்டசபைக்கு வருவதில்லை; எந்த விவாதத்திலும் பங்கேற்பதில்லை. ஆரம்பத்தில் இரண்டு முறை சட்டசபையில், எழுதி வைத்திருந்ததை வாசித்ததோடு சரி. "சட்டசபையில் பேசினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது' என்று இதற்கு ஒரு காரணத்தையும் விஜயகாந்த் கற்பித்து வருகிறார். 

து எப்படி இருந்தாலும், "ஆளுங்கட்சியானால் தான் சட்டசபைக்கு வருவேன்' என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கருதுவது ”, தமிழகத்தில் மட்டும் நடக்கும் வினோதம் என்பது உண்மை.

இதைப்பற்றி நீங்கள் என்ன  நினைக்கீரீா்கள்.. 
இந்த பதிவு பலரையும் சென்றடைய  ஓட்டு போடவும்....

பிளஸ் 2 படிக்கும் மாணவி

பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருப்பது, நம் இளைய தலைமுறை சீரழிந்து வருவதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு.இன்று, தவறான செக்ஸ் கலாசாரம், இந்த அளவுக்கு சிறுவர்களிடம் பரவியுள்ளதற்கு முக்கியக் காரணம், 

சமீபகாலங்களாக தமிழகத்தில் வெளிவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் காட்சிகளும் தான்.பள்ளிக் குழந்தைகளே காதலிப்பது போன்ற காட்சிகள் வருவதும், காதலர்களுக்கு தூது போக, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதும் இவைகளில் வழக்கமாகிவிட்டது. 

அதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டு வெற்றிகரமாக ஓடிய, "ரேணிகுண்டா' என்ற படத்தின் காட்சிகள் இருந்தன.இன்று, தமிழ் சினிமா காட்சிகள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இல்லை. தமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.இலவச, "டிவி'க்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் உட்புகுந்து, ஒன்றும் அறியாத இளம் பள்ளி மாணவ, மாணவியரின் மனதில் நஞ்சைக் கலந்து, அதுவே, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
( போட்டோவிற்கும், பதிவிற்கும்  சம்பந்தம் இல்லை)இந்த பதிவிற்கு நீங்க என்ன சொல்லபோறீங்க?

1/21/2011

அன்புள்ள வாக்காள பெருமக்களே...


ன்புள்ள வாக்காள 
பெருமக்களே...

நான் உங்கள் வேட்பாளர்,
நான் உங்கள் ஊரின் வேட்பாளர்...

நீங்கள் என்னை தோ்ந்தெடுத்தால்,
நான்,
ஜாதிகளை ஒழிப்பேன்,
விண்ணப்பங்களில்,
இருக்கும்,
ஜாதிக்கான இடமே இல்லாமல்,
செய்து விடுவேன்..

ஜாதி கட்சிகளையும்,
ஒழித்துவிடுவேன்....
ஜாதிகளுக்கான,
இடஒதுகீட்டையும்,
அழித்துவிடுவேன்....

னவே....
ஜாதிகள் இல்லாத,
சமுதாயத்தை,
அமைக்க,
எனக்கே ஓட்டு போடுங்கள்.

றக்காதீர்,
மறந்தும்  இருந்துவிடாதீர்...
நான் உங்கள் ஜாதிக்காரன்!!!?
(அந்த போட்டோவிற்கும் கவிதைக்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை, சொன்னா நம்பனும்).

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/20/2011

திரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி?


பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்
ன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ( நன்றி தினமலர்  )

னால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; 

னால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பதிவு பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு !!!

மிழன் தன்மானம் இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. எதை இலவசமாக கொடுத்தாலும், அதை கூச்சமின்றி வாங்க பழக்கப்பட்டு விட்டான்.


தனால் தான், தொழிலுக்காக வாங்கிய வங்கி கடனையும், வட்டியுடன் தள்ளுபடி செய்யும் அரசுக்கு ஓட்டளித்தான்.

இலவச வேட்டி - சேலைகள், சாப்பாட்டிற்கு உகந்ததோ, இல்லையோ, இலவச ஒரு ரூபாய் அரிசி; அதை பொங்கி சாப்பிட இலவச சிலிண்டர், காஸ் அடுப்பு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பார்த்து மகிழ, இலவச கலர், "டிவி...' வேறு, என்ன வேண்டும் தமிழனுக்கு?

"உழைத்து, உடம்பை பாழாக்கி கொள்ளாதே. உன்னை போன்றவர்கள் நலமாக, சுகமாக வாழத்தான், நாங்கள் இலவசங்களை அள்ளி தருகிறோம். ( ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற அறிவிப்பு வேறு ) நீ ஒப்புக்கு சம்பாதிக்கும் பணத்தை மட்டும், உன் மகிழ்ச்சிக்காக திறந்திருக்கும், “ டாஸ்மாக் “  கடையை மட்டும் மறந்து விடாதே, அங்குபோய் செலவழீ தமிழா என்கிறது அரசு.

உலகில் எவ்வளவோ வல்லரசு நாடுகள் உள்ளன; தமிழகத்தை போல், அந்த நாடுகளில் திட்டம் உண்டா? 

ஆமாம்...  அரசு ஏன் ஒவ்வொருவராக தேடி அலைந்து, இலவசங்களை வழங்க வேண்டும்? எல்லாருக்கும் கையில் பிச்சை எடுக்கும் ஓட்டை கொடுத்து, தங்குவதற்கு சத்திரத்தையும், ஒவ்வொரு தெருவிலும் கட்டி தந்தால், இன்னும் நலமாக இருக்குமே! 

இதை படிக்கும்  உங்களுக்கு தெரிகிறதா ?   
நான் சொல்வது உண்மையென்று ?  
நீங்கள் என்ன செய்யபோகீர்கள்?   


பதிவு பிடித்திருந்தால்  ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/19/2011

பிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம்

ருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்குக் கவலையோ, அச்ச உணர்வோ இருக்க கூடாது. இவைகளைப் போக்கி மகிழ்ச்சியான, எதையும் தாங்கும் சூழ்நிலையில் இருக்க வைக்க வேண்டும். 

மேலும் 7-வது மாத மருந்துகள் குழந்தையின் நாடித்துடிப்பு, உஷ்ணநிலை இருதய வளர்ச்சி, மூளை வளர்ச்சி, இருதய பலம் ஆகியவற்றைத் தடுகின்றது. 
 
இடையில் உண்டாகும் பிரச்சனைகள் 

 
இன்று சிசுவின் துடிப்பை, அசைவை அறிய ஸ்கேன் செய்து பார்க்க வேண்டி உள்ளது, அன்று எளிதாக பசு வெண்ணெயை வயிற்றில் தடவ அது உருகிவிடும். அப்போது பிள்ளை உயிருடன் நன்றாக உள்ளது, உருகாவிட்டால் சிசு இறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
ஏதோ காரணத்தால் வயிற்றில் சிசு இறந்து விட்டால், கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது. முக்கியமாக இன்று கர்ப்பப்பையில் உள்ள நீர் முதலில் வெளியேறி விடும். இது மிகவும் சிக்கலானது. முடிவில் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டி வரும். 

 னால் அன்று இவ்வளவு வசதியும், வளர்ச்சியும் இல்லை. இதற்கு முன்னோர்கள் எளிமையாக மருந்து கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர். பிரண்டை வேரையும், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தடவ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

 
இதுவரை குழந்தை உண்டாகி, பிறக்கும் வரை அன்றும், இன்றும் பார்த்தோம். இனி பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை வரும் நோய்களைப் பற்றி பார்ப்போம். இன்று எத்தனையோ மருத்துவ கருவிகள், எலக்ட்ரானிக் நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் துணையோடு குழந்தை பிறந்து குழந்தைக்கு (30 நாட்களுக்குள்) கழுத்து வீங்கி, முழங்கால், முழங்கை குளிர்ந்தால், அக்குழந்தை விடாமல் அழும். காரணம் வயிற்றில் வலி உண்டு என்று அர்த்தமாகும். குழந்தைக்கு தேவையான உடல் உஷ்ணம் இல்லை என்று அர்த்தமாகும். இதற்கு உடனே உஷ்ணம் ஏறவும் வயிற்றுவலி தீரும் மருந்து பயன்படுத்த வேண்டும். 
 
குணங்கள் : 

செங்கிரந்தி :
பிள்ளை பிறந்தவுடன் தொண்டை கட்டி பூனைகுரல் போல் அபம், மலம், ஜலம் போகாது , வயிறு ஊதும். கை, கால் சிவப்பாக மாறும்.
தருங்கிறந்தி :
குழந்தை அவ்வப்போது அலறியழும், முலைப்பாலுண்ணாது வயிறு ஊதும். கீழ் உதடு  கருப்பாக மாறும். 

 
கிரந்து : 
  
மல சிக்கல், வயிறு நொந்து, விடாமல் அழும். மலம் கடுமையான வலியுடன் வெளியே போகிற மாதிரி போக்கு காட்டி போகாது. இதனால் சிறுநீர் கட்டும், விக்கல் எடுக்கும், குடித்த பாலை உடனே வாந்தி பண்ணும். 18 வகையான வயிறு வலிகளும் வரும். 
 
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தால் இந்த நோய்தான் என்று கண்டறிகின்றனர். வாய் பேசும் குழந்தைகள் தங்களுக்கு வலிகள் உள்ளதை மட்டும், எங்கு வலிக்கின்றது என்று சொல்கின்றது. ஆனால் வாய் பேசாத குழந்தைகள் எப்படி சொல்லும் இதற்கு அன்று முன்னோர்கள் முனிவர்கள் ரிஷிகள், சித்தர்கள் ஞானிகள் குறிகளை சொல்லியுள்ளனர். அவற்றிற்கு தனித்தனியாகவும் மொத்தமாகவும் மருந்துகளை கூறியுள்ளனர். இனி வரும் நோய்களை பார்ப்போம்.
நோய் வரும் காரணம்
கிரந்தி, செங்கிரந்தி, கருங்கிரந்தி, தோஷம், மாந்தம், கணம் பிரளி, கரப்பான், செவ்வாப்பு, தொண்டை கட்டு, அக்கரம், வைசூரி, சளி, ஜலதோஷம் இன்னம் பல நோய்கள் வருகின்றன.
மாந்தம், முலைப்பாலாலும், கணம், கர்ப்ப மூட்டினாலும், மற்ற பினிகள், தாய் தந்தை புணர்ச்சியினாலும் கிரிமிகளாலும் உண்டாகின்றது.
மாந்தம் (மந்தம்)
எருமைபால், நெய், தக்காளி பழம், தேங்காய், இளநீர், கடலை, வெல்லம், சர்க்கரை, புளித்த மோர், தயிர் மாங்கனிகள், மலைத்துவரை, உளுந்து மொச்சை, பச்சைபட்டானி, உருளை, வாளை மீண், கொண்டை, சாகல், கரை வாயு பண்டங்கள் இவைகளை அதிகமாக சாப்பிட்டால், வாத மாந்தம் பித்த மாந்தம், சிலேஷ்ம மாந்தம், போர் மாந்தம், வாலைமாந்தம், சுரமாந்தம், நீர் மாந்தம், சொரி மாந்தம், கட்டு மாந்தம், எரிமாந்தம், தலை மாந்தம், கண் மாந்தம், வலிப்பு மாந்தம், சுழி மாந்தம், மூக்கு மாந்தம், சன்னி மாந்தம், ஊது மாந்தம், வீக்கமாந்தம் என 20 வகையான மாந்தங்கள் (மந்தம்) குழந்தைகளுக்கு நேரிடும். 

 
மாந்த குணங்கள் : 

 
குழந்தை உடல் சூடேறி வியர்க்கும். முலைபாலுண்ணாது வாந்தி பண்ணி மயங்கும், சீதமும், மலமுமாய் கழியும், அல்லது கெட்டபால் போலும் தெளிந்த நீர் போலும் கழியும், வயிறு பொருமும் , கொட்டாவி விடும். மூக்கில் புண் உண்டாகும், வலிப்பு மூச்சை (மயக்கம்) ஏற்படும். 
உடல் மந்தமாகி வியர்த்து குளிரும், நெஞ்சில் கபங்கட்டும், உடல் திடீரென்று ஊதும், வயிறு இரைந்து கழியும், கடுப்பு கழிச்சல், தொண்டை வலி, சுரம் ஏற்படும், தலைவலி, முகம் மிணு மிணுக்கும், மலம் சிறுத்து நீர் கருத்து இறங்கும். மார்பு புடைக்கு, நெற்றி நரம்பு புடைக்கும். 

தாகம் ஏற்படும், வயிறு ஊதி புளித்த நாற்றமாய் கழியும், வாந்தி பண்ணி பரிதவிக்கும் மாவு, கரைத்தாற் போல் கழியும். ஏப்பம் , கொட்டாவி விடும், நாசியில் நீர் வடியும், உடலை முறுக்கி கொட்டாவி விடும், தூங்காது சில சமயம் முக்கி முக்கி சீதமும், மலமுமாய் கழியும் உடல் மெலிந்து கொண்டே வரும் கடைசியில் வலிப்பில் வந்து நிற்கும்.

2010 ஊழல் ஆண்டு - 2011 தண்டனை ஆண்டு

முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு.


இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது?

1/18/2011

பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம்

லிதுவேனியா : லிதுவேனியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமான 13 வயது சிறுமியை , நேரில் வரவழைத்துக் கொலை செய்யதுள்ளது அம்பலமாகியுள்ளது. போலீசாரிடம் அந்தச்சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அந்தச் சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் தானா ? ஒரு சந்தேகம்

குடியரசு தினத்தன்று, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது. 

தைக் கேள்விப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா, "தேசியக்கொடியை காஷ்மீரில் ஏற்றினால், வன்முறை வெடிக்கும். 

1/17/2011

இறுதி இந்திய உலகக் கோப்பை அணி

உலகக் கோப்பை வெல்லப் போகும் அணி.

1. தோணி ,
2. சச்சின்,
3. சேவாக்,
4. காம்பிர்,
5. யுவராஜ்,

ஜெயசூர்யாவை சாதனையை முந்தும் சச்சின்


ச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில்  நடந்த 2வது ஒருநாள் போட்டி சச்சினின் 444 போட்டியாகும். 

1/16/2011

இலங்கையில் புறநகர் ரயில்சேவை - திருவள்ளூரில் சோதனை ஓட்டம்

லங்கையில் புறநகர் மின்சேவை ரயில்களுக்கான 96 ரயில்களை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து வருகிறது.

 இதில் முதலாவது ரயில் தயாரிக்கப்பட்டு திருவள்ளூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

இலங்கையில் புறநகர் ரயில் சேவைக்கான "டீசல், எலக்ட்ரீக் மல்டிபில் யூனிட்' (டி.இ.எம்.யு) ரயில்களை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்துள்ளது.

 ரூ. 105 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில்களுக்கான மோட்டார் கார் (இன்ஜின்) மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் சார்பு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐ,.சி.எஃப் நிறுவனத்துக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

 விமான முகப்பு வடிவிலான இன்ஜினுடன் 7 முதல் 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். இந்த ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும்.
மின்வசதியில்லாத பின்தங்கிய பகுதிகளிலும் ரயில் சேவையை வழங்கும் வகையில் இந்த ரயில் என்ஜின்கள் டீசலில் இயங்கும். இது போன்ற ரயில்கள் ஐதராபாத் புறநகர் ரயில்களாக இயங்கி வருகின்றன.

 

இந்த ரயில்பெட்டிகள் தயாரிக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலாவது ரயில் விரைவில் சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐ.சி.எஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1/15/2011

அதிமுக - தேமுதிக கூட்டணி CHO

சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் 41-வது ஆண்டு விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி பேசியது:  "நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. 

நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதற்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். 

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். 

திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிக்கு இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து அவர் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதனையும் சாதிக்க முடியாது.  திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. 

பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு? பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைவிட குழந்தைகளை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.  திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. 

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்று உச்சத்தில் உள்ள நடிகர்களே கூறுகின்றனர்.  அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான். 

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். 

குடும்பத்தில் அனைவரையும் அரசியலுக்குக் கொண்டு வந்ததால் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.  பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையைக் கொலை செய்து புதைத்து விட்டார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ. ராசாவை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. பிரதமர் பதவிக்காக நேர்மை, நாணயம் எல்லாவற்றையும் துறந்துவிட்டார். இனி 2ஜி அலைக்கற்றை ஊழலை மன்மோகன் சிங்கும், சோனியாவும் பார்த்துக்கொள்வார்கள். 

ராமஜென்ம பூமி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு, குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பிகார் தேர்தல் வெற்றி ஆகியவை பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள். 


ர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதுள்ள கரும்புள்ளி பாஜகவை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்வானியைப் போன்ற தலைசிறந்த தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. அவர் போன்றவர்களால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பாஜக மட்டுமே. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் அக்கட்சிக்கு சிக்கல். ஒரிசா, குஜராத்தில் காங்கிரஸூக்கு வேலையே இல்லை. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பிகாரில் ராகுல் காந்தி குடிசையில் உணவருந்தியும் பலனில்லை. இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார் சோ ராமசாமி. எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என்று துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்தார்.

1/13/2011

ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!

 ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!

ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம். ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம்.

இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்” என்கிறோம்.

பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், "ஊழல்' என்ற சொல், ஒரு கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.

எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.

பதிவு பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/12/2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?


ஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்
                         1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு.இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.
  
இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும். 

மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா! நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும்.

 
குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா?


திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. 

இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். 

மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. 


நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா? ""இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர். 

வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.

விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; 

 
எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. 
இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். 

கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! 


"இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான். இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. 


இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். 

இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். "இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி.


பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள்.(நன்றி தினமணி).

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

1/10/2011

மனம் எனும் சாக்கடை

மனம்  எனும் சாக்கடை
ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?
ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


ன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?

 
ன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?
ந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?

ந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?

ன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும்   என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
 ன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது 
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?


ம்முடைய முகவரிகள் 
பொய்யானவை,
நம்முடைய முகங்கள் 
பொய்யானவை,

நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?


தனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க  முடிவதில்லை.....
முகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...

நாம்
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம். 
ம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

 யாரும்  அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????


கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/09/2011

கங்குலி விலை போகாதது ஏன்?

 பெங்களூருவில் நடைபெற்ற  ஐ.பி.எல்., ஏலத்தில், இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை ரொம்ப பரிதாபம். இவரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று பெங்களூருவில் நடந்தது. தோனி(சென்னை), சச்சின்(மும்பை) போன்ற நட்சத்திர வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், 38 வயதான கங்குலியை, ஷாருக் கானின் கோல்கட்டா அணி தக்க வைக்க மறுத்தது. இதையடுத்து பொது ஏலத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் இவர் ரூ. 91 லட்சம் பிரிவில் தான் இருந்தார். பின் இவராகவே தனது அடிப்படை தொகையை ரூ. 1.84 கோடி பிரிவுக்கு மாற்றிக் கொண்டார். இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. இவருக்கு அதிக தொகை கொடுக்க எந்த ஒரு அணியும் தயாராக இல்லை.

இந்த முறை அனைத்து அணிகளும் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்தன. ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா போன்ற இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கின. ஆனால், மூத்த வீரர்களான கங்குலி, வெஸ்ட் இண்டீசின் லாரா(41 வயது) போன்றவர்களை நிராகரித்தன. இன்று நடக்கும் இரண்டாவது சுற்று ஏலத்தில் கங்குலியை யாராவது ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் முதல் நாளில் இவரை யாரும் வாங்காதது பெரும் பின்னடைவு தான். கும்ளே போல ஆரம்பத்திலேயே ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

இது குறித்து ஏலத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கங்குலி தனது அடிப்படை விலையை உயர்த்தியது தவறு. தவிர, கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் தனது திறமையை நிரூபிக்கவில்லை. டிராவிட், லட்சுமண் போன்ற வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், கங்குலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக தான் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதே நிலைமை தான் லாராவுக்கும். ஓய்வு பெற்ற இவரும் சர்வதேச போட்டிகளில் சுமார் மூன்று ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. இவர்கள் மீது கோடிகளை கொடுத்து "ரிஸ்க்' எடுக்க அணிகளின் நிர்வாகிகள் தயாராக இல்லை,''என்றார்.

இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமையாயுடிச்சா... ஒரே சோம்பல், யோசனைக்கு கூட இன்றைக்கு லீவு விட்டாச்சு அதான்.  

1/08/2011

IPL ஏலம் - 1 தரம்..2 தரம்..3 தரம்

ஐ.பி.எல் தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள்  ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது.

புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி – தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்-யும்,மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா வையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வார்னே, வாட்சனும்,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  விராத் கோஹ்லி,டெல்லி டேர்டெவில்ஸ்  அணி  சேவாக்கையும் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.


ற்போது நிலவரப்படி இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு :


வீரரின் பெயர்ஏலம் எடுத்த அணிவாங்கப்பட்ட விலை
கெளதம் கம்பீர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.11.04 கோடி
யூசுப் பதான்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.9.66 கோடி
ரோஹித் சர்மாமும்பை இந்தியன்ஸ்ரூ.9.2 கோடி
ராபின் உத்தப்பாபுனே சஹாரா வாரியர்ஸ்ரூ.9.66 கோடி
ராகுல் திராவிட்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.2.26 கோடி
ஆடம் கில்கிறிஸ்ட்பஞ்சாப் லெவன்ரூ.4.08 கோடி
ஜாக் கல்லிஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.5 கோடி
ஆன்ட்ரூ சைமண்ட்ஸ்மும்பை அணிரூ.3.85 கோடி
குமார் சங்ககராடெக்கான் சார்ஜர்ஸ்ரூ.3.17 கோடி
யுவராஜ் சிங்புனே வாரியர்ஸ்ரூ.8.28 கோடி
மஹேல ஜெயவர்தனாகொச்சி அணிரூ.6.75 கோடி
டிவில்லியர்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.5.06 கோடி
ஜகீர் கான்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.4.14 கோடி
ரோஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.4.6 கோடி
இர்பான் பதான்டெல்லி டேர் டெவில்ஸ்ரூ.8.62 கோடி
தினேஷ் கார்த்திக்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
டேவிட் ஹுஸ்ஸேகிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 6.44 கோடி
அபிஷேக் நாயர்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 3.68 கோடி
ஸ்டவுட் ப்ரோட்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 1.84 கோடி
ராஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.6 கோடி
ஜோகன் போத்னாராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.37 கோடி
விவிஎஸ் லட்சுமண்கொச்சி அணிரூ. 1.84 கோடி
பிரண்டன் மெக்கொல்லம்கொச்சி அணிரூ. 2.18 கோடி
ஸ்ரீசாந்த்கொச்சி அணிரூ. 4.14 கோடி
ஆர்.பி.சி்ங்கொச்சி அணிரூ. 2.3 கோடி
பார்தீவ் படேல்கொச்சி அணிரூ. 1.33 கோடி
ரவீநதிர ஜடேஜாகொச்சி அணிரூ. 4.37 கோடி
பிராட் ஹட்டின்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.49 கோடி
ஷாகிப் அல்ஹசன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.95 கோடி
டேவிட் ஜேக்கப்மும்பை இண்டியன்ஸ்ரூ. 87.4 லட்சம்
டேவிட் வார்னர்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 3.4 கோடி
நமன் ஓஜாடெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.24 கோடி
ஜேம்ஸ் ஹோப்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.16 கோடி
விரித்திமான் சாஹாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 46 லட்சம்
கிராம் ஸ்மித்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 2.3 கோடி
டிம் பெய்ன்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 1.24 கோடி
தில்ஷான் திலகரத்னேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.99 கோடி
டேனியல் வெட்டோரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.6 கோடி
செளரப் திவாரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 7.36 கோடி
கெவின் பீட்டர்சன்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 2.99 கோடி
கேமரூன் ஒயிட்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 5.06 கோடி
ஷிகார் தவான்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ஜே.பி.டுமினிடெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ட்வைன் பிரேவாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 93 லட்சம்

முழுமையான LIST  நளைய பதிவில் பாருங்கள்.