தமிழன் தன்மானம் இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. எதை இலவசமாக கொடுத்தாலும், அதை கூச்சமின்றி வாங்க பழக்கப்பட்டு விட்டான்.
அதனால் தான், தொழிலுக்காக வாங்கிய வங்கி கடனையும், வட்டியுடன் தள்ளுபடி செய்யும் அரசுக்கு ஓட்டளித்தான்.
இலவச வேட்டி - சேலைகள், சாப்பாட்டிற்கு உகந்ததோ, இல்லையோ, இலவச ஒரு ரூபாய் அரிசி; அதை பொங்கி சாப்பிட இலவச சிலிண்டர், காஸ் அடுப்பு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பார்த்து மகிழ, இலவச கலர், "டிவி...' வேறு, என்ன வேண்டும் தமிழனுக்கு?
"உழைத்து, உடம்பை பாழாக்கி கொள்ளாதே. உன்னை போன்றவர்கள் நலமாக, சுகமாக வாழத்தான், நாங்கள் இலவசங்களை அள்ளி தருகிறோம். ( ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற அறிவிப்பு வேறு ) நீ ஒப்புக்கு சம்பாதிக்கும் பணத்தை மட்டும், உன் மகிழ்ச்சிக்காக திறந்திருக்கும், “ டாஸ்மாக் “ கடையை மட்டும் மறந்து விடாதே, அங்குபோய் செலவழீ தமிழா என்கிறது அரசு.
உலகில் எவ்வளவோ வல்லரசு நாடுகள் உள்ளன; தமிழகத்தை போல், அந்த நாடுகளில் திட்டம் உண்டா?
ஆமாம்... அரசு ஏன் ஒவ்வொருவராக தேடி அலைந்து, இலவசங்களை வழங்க வேண்டும்? எல்லாருக்கும் கையில் பிச்சை எடுக்கும் ஓட்டை கொடுத்து, தங்குவதற்கு சத்திரத்தையும், ஒவ்வொரு தெருவிலும் கட்டி தந்தால், இன்னும் நலமாக இருக்குமே!
இதை படிக்கும் உங்களுக்கு தெரிகிறதா ?
நான் சொல்வது உண்மையென்று ?
நீங்கள் என்ன செய்யபோகீர்கள்?
பதிவு பிடித்திருந்தால் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
வெட்க்கக்கேடு
ReplyDeleteமக்களை முட்டாளாக்கி , நாட்டை சூறையாடும் செயல் ரொம்ப நாளைக்கு எடுபடாது .
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் .
//இதை படிக்கும் உங்களுக்கு தெரிகிறதா ?
ReplyDeleteநான் சொல்வது உண்மையென்று ?
நீங்கள் என்ன செய்யபோகீர்கள்?///
இவங்களை காப்பி அடிச்சி குவைத்திலும் எல்லாம் இலவசமா கொடுக்குறாங்களாம்...!!!
#நீ ஒப்புக்கு சம்பாதிக்கும் பணத்தை மட்டும், உன் மகிழ்ச்சிக்காக திறந்திருக்கும், “ டாஸ்மாக் “ கடையை மட்டும் மறந்து விடாதே, அங்குபோய் செலவழீ தமிழா என்கிறது அரசு.#
ReplyDeleteநச்சுனு சொல்லி இருக்குறிங்க
இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்.
ReplyDeleteஉண்மைதான்.
ReplyDeleteமக்களை சோம்பேறிகள் ஆக்கி தான் அரசியல்வாதிகள் மேலே வருகிறார்கள்
ReplyDeleteஇலவசம் இல்லாத, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, தேசிய உணர்வுள்ள, ஊழல் இல்லாத நல்ல அரசியல் வாதி இனிமேல் பிறந்தால் தான் உண்டு. அதுவரையில் இலவசத்திற்கு மயங்கி தம்மை தாமே அடகு வைப்பது என்பது நடந்துகொண்டேதான் இருக்கும்.
ReplyDelete>>>>தமிழன் தன்மானம் இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. எதை இலவசமாக கொடுத்தாலும், அதை கூச்சமின்றி வாங்க பழக்கப்பட்டு விட்டான்.
ReplyDeleteஓப்பனிங்க்லயே அட்டாக்கா?ம் ம்
பெயரில்லா.. அப்படீன்னு கருத்துரை சொல்லாம... தைரியமா உங்க கருத்தை சொல்லுங்க பாஸ்.
ReplyDelete>>>>ஆமாம்... அரசு ஏன் ஒவ்வொருவராக தேடி அலைந்து, இலவசங்களை வழங்க வேண்டும்? எல்லாருக்கும் கையில் பிச்சை எடுக்கும் ஓட்டை கொடுத்து, தங்குவதற்கு சத்திரத்தையும், ஒவ்வொரு தெருவிலும் கட்டி தந்தால், இன்னும் நலமாக இருக்குமே!
ReplyDelete100% கரெக்ட்
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஇவங்களை காப்பி அடிச்சி குவைத்திலும் எல்லாம் இலவசமா கொடுக்குறாங்களாம்...!!! //
அப்படியாண்னே..
NKS.ஹாஜா மைதீன் சொன்னது…
ReplyDeleteநச்சுனு சொல்லி இருக்குறிங்க//
எப்படிதான் சொன்னாலும் ஹிட்ஸ் கிடைக்கல நண்பா!!!
சூப்பர் கருண்.அருமையா சொல்லிருக்கீங்க....வாழ்த்துக்கள். நான் ஒட்டுப்போட்டுட்டேன். ஏதாவது கமிசன் தருவீங்களா? ஓட்டுக்கு ஏதாவது வாங்கி பழக்கப்பட்டு போச்சுப்பா....
ReplyDeleteஎன்ன தலைவரே...நம்ம கடை பக்கம் ரொம்ப நாளைக்கப்பறம் வந்து இருக்கிங்க... கமிநன் தானே கொடுத்துவிட்டால் போச்சு...
ReplyDeleteநன்றி..
நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்! இதெல்லாம் உரியவங்களுக்கு புரியுமா?
ReplyDeleteஎன்ன பண்ரது, வழக்கம் போல நாமளும் ஒரு பதிவு போட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான், சாமானியனால வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க?
ReplyDeleteஎதாவது பன்னனும் பாஸ்..
ReplyDeleteSpeed Master சொன்னது…
ReplyDeleteவெட்க்கக்கேடு //
நிஜமாகவே speed. நன்றி
Jana சொன்னது…
ReplyDeleteஉண்மைதான்.//
நன்றி...
இதை படிக்கும் உங்களுக்கு தெரிகிறதா ?
ReplyDeleteநான் சொல்வது உண்மையென்று ?
நீங்கள் என்ன செய்யபோகீர்கள்? //
வேறென்ன தெருவோடு கையில் திருவோடு.
அருமையான பதிவு இலவசங்களை வேண்டாம் என மக்கள் நினைத்தாலே ஒழிய இலவசங்களை தடுத்து நிறுத்த முடியாது
ReplyDeleteஒட்டு போட்டுட்டன் தலைவா
தமிழனை பிச்சகாரனாக ஆகீட்டு தமிழ் நாட்டை தன் குடும்பத்துக்காக கூறு போட்டாச்சி...........
ReplyDeleteபின்னுட்டம இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteelavasam = pichi ethu pureyamal tamilan tadumarukeeran tadam marukerran purenthu trundha entanai kalam aakumoo nadpudan nakkeeran
ReplyDeleteநண்பா உண்மைய சொன்னீங்க
ReplyDeleteஉள்ளதை சொன்னீங்க
சபாஷ்
நண்பா உண்மைய சொன்னீங்க
ReplyDeleteஉள்ளதை சொன்னீங்க
சபாஷ்
உலகத்தின் பார்வைக்கு உண்மையை சொல்லும்!பதிவர்கள் அவசியம்!சரியான பதிவு!
ReplyDeleteஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!என்றார் நம் முதல்வர்!
கருநாநிதிஇருக்கும் வரை ஏழைகளும் இருப்பார்கள்!நடிகர்.விஜயகாந்த்!
எது எப்படியொ!நாடும் நாட்டு மக்களும்.....
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி,ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
http://theeranchinnamalai.blogspot.com/
எல்லாம் சரி.. இதற்க்கு தீர்வு என்ன...?
ReplyDeleteஅதை சொல்லவில்லையே நண்பரே..
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை.இலவசம் என்ற பெயரில் முதலில் தொழில் நிறுவனங்கள் ஏமாற்றி கொண்டு இருந்தன.இப்போது அரசியல்வாதி ஏமாற்றி கொண்டு இருக்கிறான். நன்றி நண்பரே.வாழ்க தமிழ்
ReplyDelete///ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற அறிவிப்பு வேறு //
ReplyDeleteஇது ஏதோ ஊமை குத்து போல் அல்லவா இருக்கிறது .....
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற அறிவிப்பு வேறு
ReplyDeleteஇது ஏதோ ஊமை குத்து போல் அல்லவா இருக்கிறது .....
http://buildappu.blogspot.com/2011/03/3.html