Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/09/2011

கங்குலி விலை போகாதது ஏன்?

 பெங்களூருவில் நடைபெற்ற  ஐ.பி.எல்., ஏலத்தில், இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை ரொம்ப பரிதாபம். இவரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று பெங்களூருவில் நடந்தது. தோனி(சென்னை), சச்சின்(மும்பை) போன்ற நட்சத்திர வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், 38 வயதான கங்குலியை, ஷாருக் கானின் கோல்கட்டா அணி தக்க வைக்க மறுத்தது. இதையடுத்து பொது ஏலத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் இவர் ரூ. 91 லட்சம் பிரிவில் தான் இருந்தார். பின் இவராகவே தனது அடிப்படை தொகையை ரூ. 1.84 கோடி பிரிவுக்கு மாற்றிக் கொண்டார். இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. இவருக்கு அதிக தொகை கொடுக்க எந்த ஒரு அணியும் தயாராக இல்லை.

இந்த முறை அனைத்து அணிகளும் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்தன. ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா போன்ற இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கின. ஆனால், மூத்த வீரர்களான கங்குலி, வெஸ்ட் இண்டீசின் லாரா(41 வயது) போன்றவர்களை நிராகரித்தன. இன்று நடக்கும் இரண்டாவது சுற்று ஏலத்தில் கங்குலியை யாராவது ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் முதல் நாளில் இவரை யாரும் வாங்காதது பெரும் பின்னடைவு தான். கும்ளே போல ஆரம்பத்திலேயே ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

இது குறித்து ஏலத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கங்குலி தனது அடிப்படை விலையை உயர்த்தியது தவறு. தவிர, கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் தனது திறமையை நிரூபிக்கவில்லை. டிராவிட், லட்சுமண் போன்ற வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், கங்குலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக தான் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதே நிலைமை தான் லாராவுக்கும். ஓய்வு பெற்ற இவரும் சர்வதேச போட்டிகளில் சுமார் மூன்று ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. இவர்கள் மீது கோடிகளை கொடுத்து "ரிஸ்க்' எடுக்க அணிகளின் நிர்வாகிகள் தயாராக இல்லை,''என்றார்.

இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமையாயுடிச்சா... ஒரே சோம்பல், யோசனைக்கு கூட இன்றைக்கு லீவு விட்டாச்சு அதான்.  

3 comments:

  1. மாற்றம் ஒன்றே மாறாதது

    ReplyDelete
  2. ஆனாலும் கங்கூலியின் சாதனை மகத்தானது.....அதற்காகவாது அவரை யாரவது எடுத்து இருக்கலாம்...

    ReplyDelete
  3. அவன் சரியில்லை!, இவன் சரியில்லை! யாரும் சரியில்லை?

    சரி நாம் என்ன செய்தோம்?.., யாராவது நல்லவன்(அவதார புருஷன்) வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்?

    யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!

    ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,

    ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???

    நம்மை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,

    நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,

    நல்லதும் பண்றதில்லை!

    விளைவு?????????????????????????.

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும்!



    இனி நம் அடுத்த தலைமுறையின் நலன் காக்க..,

    சிறு துளி பெருவெள்ளம்!

    எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!

    வாருங்கள்! கரம் சேருங்கள்!

    நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,

    தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,

    வலைத்தளம் முதல்... வடகோடி இமயம் வரை!!!

    வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!

    இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,

    தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்..,!!!

    நன்றியுடன், உங்கள் அன்பு சகோதரன்

    சாய் கோகுலகிருஷ்ணா!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"