Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/20/2011

திரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி?


பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்




ன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ( நன்றி தினமலர்  )

னால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; 

னால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பதிவு பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

29 comments:

  1. சிதம்பரம் சிந்திப்பாராக!

    சார் நீங்க சொன்னபடி ஓட்டு போட்டுட்டேன்! நீங்களும் அதையே செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  2. மாத்தி யோசி சொன்னது…

    சிதம்பரம் சிந்திப்பாராக!

    சார் நீங்க சொன்னபடி ஓட்டு போட்டுட்டேன்! நீங்களும் அதையே செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!///////கன்டிப்பாக சார்..

    ReplyDelete
  3. அருமையான பதிவு. ஒருவர் இத்தனை முறை தான் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று சிதம்பரம் அவர்கள் முன்னொரு காலத்தில் பத்திரிகையில் எழுதியதாக கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் சாகும் வரை பதவி என்பது தானே இன்றைய அரசியல்வாதிகளின் எண்ணம். இங்கும் ஒரு ஓய்வு வயதை நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  4. அருமையான பதிவு. ஒருவர் இத்தனை முறை தான் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று சிதம்பரம் அவர்கள் முன்னொரு காலத்தில் பத்திரிகையில் எழுதியதாக கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் சாகும் வரை பதவி என்பது தானே இன்றைய அரசியல்வாதிகளின் எண்ணம். இங்கும் ஒரு ஓய்வு வயதை நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  5. //அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர்///

    இப்போ இது நடக்குற காரியமாய்யா...

    ReplyDelete
  6. எனக்கு தமிழ்மணம் இன்ட்லி ஓட்டளிப்பு பட்டை வேண்டும். நான் எவ்வாறு அதை பெற முடியும். உதவுங்கள்.

    ReplyDelete
  7. இவராவது பரவாயில்ல , சில பேர் 90 வயசு இருந்துக்கிட்டு இன்னும் " தமிழ்நாடே என் பின்னால தான் இருக்குன்னு " சொல்லிக்கிட்டு நாற்காலிய விட்டு எறங்கவே மாட்டேங்குறாங்க ...

    ReplyDelete
  8. // "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே! //

    ஏன் அவரது மகனுக்கு பதவி கொடுக்கவா...

    ReplyDelete
  9. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை தலைவா..

    ReplyDelete
  10. அணைவரும் சுய நலவாதிகளே

    ReplyDelete
  11. இந்தாள பத்தி எழுதறதே வேஸ்ட்டு தல ...

    ReplyDelete
  12. செந்தில் குமார் சொன்னது…
    எனக்கு தமிழ்மணம் ஓட்டளிப்பு பட்டை வேண்டும். நான் எவ்வாறு அதை பெற முடியும். உதவுங்கள்.///////////


    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
    இந்த லிங்கில் சொல்லியவாறு செய்யவும்..

    ReplyDelete
  13. செந்தில் குமார் சொன்னது…
    எனக்கு இன்ட்லி ஓட்டளிப்பு பட்டை வேண்டும். நான் எவ்வாறு அதை பெற முடியும். உதவுங்கள்.///////////

    http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

    பிளாக்கர்.காம் தளங்களுக்கான இன்ட்லி ஓட்டளிப்பு பட்டைபெற இந்த லிங்கில் சொல்லியவாறு செய்யவும்..

    ReplyDelete
  14. "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!

    ReplyDelete
  15. >>>>அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது.

    100% true

    ReplyDelete
  16. கண்டிப்பா நடக்க வாய்ப்பில்லை இன்றைய அரசியல் வாதிகள் மக்களோடு மக்களாக பழக பேச்சு மட்டும் பேசுவாங்க சுருட்ட முடிஞ்சா சுடுகாட்டையும் விட்டு வைக்க மாட்டாங்க ........

    ReplyDelete
  17. நல்ல கேள்விதான்.....நல்ல பதிவு....

    ஓட்டும் போட்டாச்சு....

    ReplyDelete
  18. ஞாஞளஙலாழன் சொன்னது…
    அருமையான பதிவு.----
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..

    ReplyDelete
  19. அவர் எம்.பியானதே மோசடியின் மூலம் தானே. அதிமுக கட்சி சார்பில் நின்றவர் வெற்றி பெற்றதாக தொலைக்காட்சியில் செய்தி அறிவிக்கப்பட்டும் - கடைசியில் அசிங்கமாக ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவராவது பதவியை துறப்பதாவது. அவரது அருமை புதல்வர், வாக்குபதிவுக்கு முந்திய தினம் பெரும் தொகையான பணத்துடன் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது, நாட்டை பற்றி பேச.

    ReplyDelete
  20. Speed Master சொன்னது…
    அணைவரும் சுய நலவாதிகளே
    // Thanks.

    ReplyDelete
  21. உண்மையான ஆதங்கம்தான், ஆனால் இது வெறும் பேச்சளவில் மட்டும்தான் இருக்கும், அரசியல்வியாதிகள் செயலில் காட்ட மாட்டார்கள்..

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ கூறியது...
    இப்போ இது நடக்குற காரியமாய்யா...///// நடக்கனும்தான் எதிர்பார்கிறோம்..

    ReplyDelete
  23. NKS.ஹாஜா மைதீன் கூறியது...
    நல்ல கேள்விதான்.....நல்ல பதிவு....
    ஓட்டும் போட்டாச்சு...------------
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..

    ReplyDelete
  24. Vijay @ இணையத் தமிழன் சொன்னது… /////
    தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  25. எல்லாம் சும்மா பாஸ்.... இப்படியெல்லாம் பேசி தான் நல்லவன்னு காட்ட முயற்சி செய்ரார். இவங்களாம் திருந்தவே மாட்டாங்க....

    ReplyDelete
  26. இந்தாள பத்தி எழுதறதே வேஸ்ட்டு தல ...


    செந்தில் கையை கொடுங்க..............

    ReplyDelete
  27. சிதம்பரத்தின் தொகுதிதான் நமக்கும். ஓட்டு கேட்டு வரும்போது எங்க பக்கம் வந்தார். அதுக்கு பிறகு அவரும் சரி...அவரு மகனும் சரி வரவே இல்லை. பார்த்தால் கொஞ்சம் வரச்சொல்லுங்க கருண்.

    ReplyDelete
  28. வாழ்க..சிதம்பரம்..:))

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  29. good publication

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"