டஜன் பத்து ரூபாய்
கூவி கூவி அழைத்தான்
தள்ளுவண்டிக்காரன்....!
ஏழு ரூபாய் வீதம்
இரண்டு டஜன் கொடு
பேரம்பேசினேன் அவனிடம்....!
அரை மணிநேரம்
வாதாடினேன் - இறுதியில்
இரண்டு டஜன் பதினைந்து ரூபாய்
என பரிமாறிக்கொள்ளப்பட்டது
பணமும்.... பொருளும்...
பீடியை எடுத்து
இயல்பாகத்தான் துப்பினான்...
என்றாலும்
எனக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது.
எதிர் கடையில்
குளுகுளு காற்றுவாங்கி
பிரிதிபளிக்கும் கண்ணாடி கூண்டுக்குள்
திருப்தி இல்லையென்றாலும்
சொன்ன விலைக்கு நான்
சட்டை வாங்கி வந்ததை
பார்த்திருப்பானோ?
உண்மைதான்
நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...
வடை
ReplyDeleteபுரியவில்லை விளக்கவும்
ReplyDeletekavithaiya ? enga irukku?
ReplyDeletevadai...
ReplyDelete//வாதாடினேன்
ReplyDeleteஇறுதியில்,//
//கொடுத்துவிட்டு
பீடியை எடுத்து
//
இவ்விடங்களில் தவறு உள்ளது.. மேலும் சில இடங்களில் குறியீடுகள் இட்டிருந்தால் நல்லாயிருக்குமோ என்று தோன்றியது.. சொற்கள் வன்மையாக பொதிக்கபடுவது போல் உணர்கிறேன்.. இதையெல்லாம் சொல்வதன் காரணம்.. நானும் இதே தவறை செய்பவன் தான்.. திருத்திகொள்ளுங்கள்.. நானும் திருந்த முயற்சிக்கிறேன்...
நம்ம ஆளுங்களின் குணமே இதுதானே....
ReplyDeleteஆத்துல போறது தெரியாது...
நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....
ReplyDeleteநாட்டு நடப்பு!!!!
ReplyDeleteஅருமையா இருக்குது..
ReplyDelete.இதையும் பாருங்க
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_86.html
ஆனா பாருங்க நம்ம சம்சாரங்களுக்கு இந்தமாதிரி உறுத்தலே வர்றதில்லை! காசு நம்மளோடது தானே!
ReplyDeleteநல்ல கருத்து! நடைபாதை வியாபாரிகளிடம்தானே நமது பேரமெல்லாம்!
ReplyDeleteநட்புடன்
வெங்கட் நாகராஜ்
நல்ல கவிதைன்னு சொல்ல வந்தேன்... அப்புறம்தான் கூர்மதியின் பின்னூட்டத்தை பார்த்தேன்... இருப்பினும் சொல்ல வந்த கருத்து நன்று...
ReplyDeleteகரேக்ட் ;)
ReplyDeleteவியர்வைசிந்தும் உழைப்பாளிகளிடம் தான் நாம் பேரம் பேசுகிறோம் என்பதை அருமையாக விளக்கிறது .வாழ்த்துக்கள்
ReplyDeleteSpeed Master கூறியது...
ReplyDeleteவடை ----
வடை உங்களுக்கே..
Speed Master கூறியது...
ReplyDeleteபுரியவில்லை விளக்கவும்----
கவிதை கொஞ்சம் மாற்றியுள்ளேன் , இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.
athu கூறியது...
ReplyDeletekavithaiya ? enga irukku ---
இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்ககூடாது.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeletevadai...---
வடை போச்சு
கவிதை சூப்பர், உண்மையிலேயே அருமை
ReplyDeleteதம்பி கூர்மதியன் கூறியது...
ReplyDelete//வாதாடினேன்
இறுதியில்,//
//கொடுத்துவிட்டு
பீடியை எடுத்து
//
இவ்விடங்களில் தவறு உள்ளது.. மேலும் சில இடங்களில் குறியீடுகள் இட்டிருந்தால் நல்லாயிருக்குமோ என்று தோன்றியது.. சொற்கள் வன்மையாக பொதிக்கபடுவது போல் உணர்கிறேன்.. இதையெல்லாம் சொல்வதன் காரணம்.. நானும் இதே தவறை செய்பவன் தான்.. திருத்திகொள்ளுங்கள்.. நானும் திருந்த முயற்சிக்கிறேன்..//////////////////தவறுகள் முடிந்தவரை சரிசெய்துள்ளேன்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteநம்ம ஆளுங்களின் குணமே இதுதானே....
ஆத்துல போறது தெரியாது...
/// thanks anna.
உண்மைதான்
ReplyDeleteநாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...
நிதர்சனம்
சரிதான்.. இளநீர்க்கு பேரம் பேசுகிற நாம்.. பெப்ஸிக்கும் கோக்கிற்கும் பேரம் பேசுவதில்லையே.. அதே மனநிலைதான்
ReplyDeleteமுத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
உண்மைதான்
ReplyDeleteநாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...///
நிதர்சனமான உண்மை நண்பா........
இதை நான் உணர்ந்து பேரம் பேசுவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றது :)
உண்மைதான்
ReplyDeleteநாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...
உங்கள் கவிதையின் முடிவு...... சுடும் உண்மைகள்...வாழ்த்துக்கள் நண்பா
வியர்வைகளுடன் விவாதம்... நல்ல ஒரு வார்த்தைப் பிரயோகம் சகோதரா...
ReplyDeleteThanks and Warm Welcome to you dear Karun.
ReplyDeleteசைக்கிளில் வந்தாலும் சக்திக்கான பூஸ்ட் கொடுத்தீர் நண்பரே :)
விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
நல்ல கருத்தை கவிதையா வடிச்சு இருக்கீங்க...
ReplyDeleteஆனால்,பேரம் பேசுவது அதிகம் பேசுவது ஆணா? அல்லது பெண்ணா? என்ற விஷயத்தை சேர்த்து இருக்கலாம். பேரம் பேசுவதைப்பற்றி கீரை விற்கும் பெண்மணியிடம் கேட்டால் பல பதிவுகள் போடலாம்...
உண்மை தான் தல!
ReplyDeleteஎளியவர்களிடம் மட்டுமே நாம் வீரத்தை காட்டி கொண்டிருக்கிறோம்!
நச் வரிகள்!
நல்லா இருக்குது, சட்டமும் சங்கடங்களும் என்றும் ஏழைகளுக்கு மட்டும்தான்
ReplyDeleteநன்னாருக்கு ....................
ReplyDelete//உண்மைதான்
ReplyDeleteநாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...//
நச்!
kalakkal
ReplyDeleteடைட்டிலைப்பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னைத்தாக்கித்தான் பதிவு போட்டிருக்கீங்களோன்னு.. நல்ல வேளை...
ReplyDeleteமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.தொடர்க உங்கள் கவிதை போர்.
ReplyDeleteயதார்த்தத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், கவிதையின் கருப்பொருள் அருமை... அதெல்லாம் சரி பதிவின் டெரர் தலைப்பு யாரைக் குறிக்கிறது?
ReplyDeletesuper
ReplyDeleteரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteஉண்மைதான்
நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...
நிதர்சனம்
/// Thanks for comments.