Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/28/2011

"மிஸ்டர் கிளீன்' - உண்மையா ? Mr., பிரதமர்.

 "மிஸ்டர் கிளீன்' -ன்னு உங்களை சொல்றாங்க அது உண்மையா ?
Mr., பிரதமர்
ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும், வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கறுப்புப்பணம் அல்ல... இந்திய நாட்டைக் கொள்ளையடித்து, தேசத்துரோகம் செய்திருக்கும் சொத்துக்கள்.

 இதை வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் சாட்டையடி, "சுளீர்' என இருந்திருக்கும்.

நம் அரசியல்வாதிகள் எத்தனை பேர் யோக்கியர்களாக இருக்கின்றனர் என்பதை, இந்தக் கறுப்புப்பணம் நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் கூட, இப்படி கொள்ளையடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அரசியல் நாகரிகம், தபால் - தந்தி, ரயில் போக்குவரத்து, பார்லிமென்ட் நடைமுறைகள் என, எத்தனையோ நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுத்தனர். ( நன்றி நண்பர் வளவன்).

நாகரிகமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தவர்கள், வெள்ளையர்கள் தான்.ஆனால், சுதந்திரத்திற்குப் பின் நம் நாடு, மொழியாலும், மதத்தாலும், ஜாதியாலும் பிளவுபட்டு, ரத்த ஆறு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 

குடிக்கத் தண்ணீர் தர மறுக்கின்றனர் பக்கத்து மாநில மக்கள்.கறுப்புப் பணம் பட்டியலை வெளியிட்டால், நம் அரசியல்வாதிகளின் வண்டவாளங்கள், நிச்சயம் தண்டவாளத்தில் ஏறிவிடும். ஏழைப்பங்காளர்கள் என்று வேஷம் போடும் தலைவர்களின் முகத்திரைகள் கிழிந்துவிடும். 

அதனால்தான், "மிஸ்டர் கிளீன்' என போற்றப்படும் பிரதமர் மன்மோகன் சிங், யோசிக்கிறாரோ, என்னவோ!?

நீங்க என்ன  யோசிக்கிரீங்க?

இந்த பதிவு  பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

44 comments:

  1. எல்லாருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்

    ReplyDelete
  2. அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே பா!

    ReplyDelete
  3. யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்...
    அம்மா பூமியிலே யாவும் பஞ்சம்...

    பதிவுல கில்புதியதாய் வந்திருக்கிறேன்என்னையும் ஆதரி நண்பா...
    நான் ஓட்டு போட்டாச்சி..

    ReplyDelete
  4. MR.CLEAN என்பது உண்மைதான் நண்பா.....பாவம், சோனியாவின் சொல்லுக்கு தலையாட்டும் கட்டாயம் அவருக்கு. அரசியலை பொறுத்த வரையில் மன்மோகன் ஒரு GOOD PERSON. BUT, WRONG PARTY. THATSALL

    ReplyDelete
  5. இவரை வீட்டுக்கு போக சொல்லி ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கப்பூ..

    ReplyDelete
  6. அதனால்தான், "மிஸ்டர் கிளீன்' என போற்றப்படும் பிரதமர் மன்மோகன் சிங், யோசிக்கிறாரோ, என்னவோ!?

    நீங்க என்ன யோசிக்கிரீங்க?"

    நாம என்னத்த யோசிக்கிறது பாஸ்? இவிங்க எப்ப திருந்துவானுக னு தான் யோசிக்கிறோம்!

    ReplyDelete
  7. சரியான கேள்வி..? என்று மாறுவார்கள் தம் தலைவர்கள்

    ReplyDelete
  8. மிஸ்டர் கிளீன் நாடே அவரால் கிளீன்.....

    ReplyDelete
  9. என்னத்த யோசிச்சி என்னத்த பண்றது சகோ
    வெளியிட்டாளும் வெளியாடடியும்
    எப்படியும் எமாறபோறது வழமைப்போல மக்கள் தான் :(


    //அலோ..பாஸ்... உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"//
    அப்போ madams கருத்து தேவையில்லையா ???? ha ha ha lol
    பொதுமை படுத்துங்க பாஸ்

    ReplyDelete
  10. Even if a Honest person like Dr Manmohan Singh is not able to cure this menace, who else can cure this. God alone can save us now...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  11. எல்லாருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

    ReplyDelete
  12. மிஸ்டர் கிளீன் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்றால் அவர் ஏதவது நடவடிக்கை எடுத்து அவரை கிளீன் பண்ணிட்டாங்கன்னா! என்ன பண்றது அதான் யோசிக்கிறார். மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல தலைவன் இதனால் தன் பதவி பறிபோனாலும் பரவயில்லை என்று இந்தமாதிரி கருப்பு பணம் வைத்திருப்பவர்களை நாட்டிற்கு காட்டிக் கொடுத்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  13. அதிகாரம் இல்லாத பதவியில் ஒட்டிக்கொண்டு, தனக்கு கீழ் இருக்கும் அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஒருவரை மிஸ்டர் கிளீன் என்று சொல்ல எனது மனம் ஒப்ப வில்லை. அவர் செய்து கொண்டிருப்பது பிரதமர் பதவிக்கே வெட்ககேடான விசயம்.

    ReplyDelete
  14. Speed Master கூறியது...

    எல்லாருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்/// correct.

    ReplyDelete
  15. Nagasubramanian கூறியது...

    அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே பா!//வருக.. வருக..

    ReplyDelete
  16. பாட்டு ரசிகன் கூறியது...

    யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்...
    அம்மா பூமியிலே யாவும் பஞ்சம்...

    பதிவுல கில்புதியதாய் வந்திருக்கிறேன்என்னையும் ஆதரி நண்பா...
    நான் ஓட்டு போட்டாச்சி. // Thanks for comments..

    ReplyDelete
  17. வேடந்தாங்கல் நல்ல தலைப்பு.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தனிமனித சினம் அரசியல்வாதிகளை ஏதும் செய்வதில்லை... செய்யமுடிவதில்லை....

    ReplyDelete
  19. உங்க உணர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  20. பதிவு அருமை எனக்குதான் இந்த மாதிரி யோசிக்க வரமாட்டேன்குது. கலக்குங்க தோழரே. நீங்க எப்படி 24 மணி நேரமும் ஆன்லைன் ல இருப்பிங்களா.

    ReplyDelete
  21. உண்மை தான்.. அரசியல் ஒரு பெரிய பாதிப்பாகவே இருக்கிறது.. நம்மோட பதிவ அரசியல்வாதிங்கபடிக்கிறது அதிசயம்.. ஆனா எதிர்கால அரசியல்வாதியும், இக்கால இளைஞனும் படிப்பது அதிகம்.. அதனால நாம ஏன் இப்ப இருக்குறவங்களோட குறைய மட்டும் சொல்லாம, நாம அரசியலுக்கு போக வேண்டிய கட்டாயம், அதனாலான பயன் இன்னும் அரசியல் எதிர்பார்ப்புகள்.. என்ன நல்ல விசயம் செய்தால் என்ன பயன் வரும் போல ஒரு ஒரு பதிவாக நீங்கள் எழுதினால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.. நான் தான் முதல்ல எழுதனும்னு இருந்தன்.. ஆனா இது நீங்க எழுதினா நல்லாயிருக்குமோன்னு நினைக்கிறேன்.. என்ன சொல்றீங்க..???

    ReplyDelete
  22. நல்லா உரைக்குற மாதிரி கேளுங்க...

    ReplyDelete
  23. உங்களுக்கு சரியா எழுத வர மாட்டேங்குது. படிக்குரதொட நிப்பாட்டிக்க வேண்டியதது தான. எல்லா பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களில் ஸ்பாம் அடிக்குற வேலையை நிப்பாட்டுங்க.

    எல்லோருக்கும் எல்லா வேலையும் சரி வராது. உங்களுக்கு எழுத வரலை. ப்ளீஸ் நிறுத்திக்கோங்க

    ReplyDelete
  24. சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவில்லை என்றால் பொய்க்கு துணை போனதாகத்தான் அர்த்தம். செய்யவேண்டியதை செய்ய தவறுவதும் தவிர்ப்பதும் அந்த தவறுக்கு துணை போவதாகத்தான் அர்த்தம்.
    இவர் Mr. கிளின் இல்லை Mr. வேஸ்ட்

    ReplyDelete
  25. அவர விட்டா ஓடிடுவாரு, ஆன பிடிச்சு உட்கார வச்சுருக்காங்க..

    ReplyDelete
  26. உலகிலேயே மிகவும் மெத்தப் படித்த பொருளாதார மேதை ....

    நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலை படாமல்
    மௌனியாய் இருந்தால் எப்படி "Mr. கிளீன் ?"

    ReplyDelete
  27. ஆட்சிக்கு வருவது பணம் சாம்பாதிக்கதான்

    ReplyDelete
  28. கருப்புப்பணம் பட்டியலை வெளியிடும் இடத்தில உள்ளவர்களே பட்டியலிலும் இருக்கிறார்கள். வெகு நிச்சயமாக பட்டியல் வெளி வராது.

    ReplyDelete
  29. ம்ம்ம் மிஸ்டர் கிளீன் கொஞ்சம் மனசு வச்சி லிஸ்ட ரெடி பண்ணலாமே

    ReplyDelete
  30. தலைவா!நம்ம பிரதமர் நம்ம வரைக்கும் சரிதான்!
    என்ன வெள்ளையர்களிடம் போராடி சுதந்திரம் பெற்றோம்!ஆனால்,லஞ்சம்,ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்!தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை!
    தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி.

    ReplyDelete
  31. Nagasubramanian கூறியது...

    அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே பா!// Thanks

    ReplyDelete
  32. பாட்டு ரசிகன்// thanks for comments

    ReplyDelete
  33. சி. கருணாகரசு கூறியது...

    உங்க உணர்வுக்கு நன்றிங்க...// thanks..

    ReplyDelete
  34. sulthanonline கூறியது...

    மிஸ்டர் கிளீன் ஏன் தயக்கம் காட்டுகிறார் என்றால் அவர் ஏதவது நடவடிக்கை எடுத்து அவரை கிளீன் பண்ணிட்டாங்கன்னா! என்ன பண்றது அதான் யோசிக்கிறார். மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல தலைவன் இதனால் தன் பதவி பறிபோனாலும் பரவயில்லை என்று இந்தமாதிரி கருப்பு பணம் வைத்திருப்பவர்களை நாட்டிற்கு காட்டிக் கொடுத்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.//
    thanks..

    ReplyDelete
  35. ஞாஞளஙலாழன் கூறியது...

    அதிகாரம் இல்லாத பதவியில் ஒட்டிக்கொண்டு, தனக்கு கீழ் இருக்கும் அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஒருவரை மிஸ்டர் கிளீன் என்று சொல்ல எனது மனம் ஒப்ப வில்லை. அவர் செய்து கொண்டிருப்பது பிரதமர் பதவிக்கே வெட்ககேடான விசயம்.// thanks for coming.

    ReplyDelete
  36. ரஹீம் கஸாலி கூறியது...

    MR.CLEAN என்பது உண்மைதான் நண்பா.....பாவம், சோனியாவின் சொல்லுக்கு தலையாட்டும் கட்டாயம் அவருக்கு. அரசியலை பொறுத்த வரையில் மன்மோகன் ஒரு GOOD PERSON. BUT, WRONG PARTY. THATSALL// correct

    ReplyDelete
  37. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இவரை வீட்டுக்கு போக சொல்லி ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கப்பூ..// nanbenda..

    ReplyDelete
  38. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    சரியான கேள்வி..? என்று மாறுவார்கள் தம் தலைவர்கள்// tanks for visit

    ReplyDelete
  39. rk guru கூறியது...

    மிஸ்டர் கிளீன் நாடே அவரால் கிளீன்.....// Thanks...

    ReplyDelete
  40. Harini Nathan சொன்னது…

    என்னத்த யோசிச்சி என்னத்த பண்றது சகோ
    வெளியிட்டாளும் வெளியாடடியும்
    எப்படியும் எமாறபோறது வழமைப்போல மக்கள் தான் ///
    Thanks for comments.

    ReplyDelete
  41. சங்கர் குருசாமி சொன்னது…

    Even if a Honest person like Dr Manmohan Singh is not able to cure this menace, who else can cure this. God alone can save us now...// thanks

    ReplyDelete
  42. ஆயிஷா சொன்னது…

    எல்லாருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.
    /// Thanks..

    ReplyDelete
  43. அரசியல்வியாதிகளைக்களைய வரும் டாக்டர் யாரோ..?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"