Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/25/2011

என்னதது, சின்னபுள்ளதனமா இருக்கே!!!

"2020ல், இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, அறிஞர்களும், ஆன்றோர்களும், இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறை மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்

இந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள் கணக்காக விலைவாசி ஏற்றத்தை விவாதிக்கின்றனர்

பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.

இன்று கார்கள், குளிர்சாதன பெட்டி, இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, "டிவி ” ஆகியவை, முன்பு இருந்த விலையைவிட குறைந்த விலையில் கிடைக்கக் காரணம், அதிகமான உற்பத்தியே!

விவசாயிகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு அளித்தாலும், அவை முழு அளவில், உரிய நேரத்தில் சேராததாலேயே, உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவே விலையேற்றம்.

இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன் அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.

உங்களுக்கும் ஏதாவது ஐடியா தோன்றினால் பின்னூட்டம் இடவும்...

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

48 comments:

  1. ரேவா கூறியது...
    me tha first///

    வடை உங்களுக்கே...

    ReplyDelete
  2. ஊழலை ஒழிக்க ஏதாவது ஊழல் பண்ணலாமா என்று யோசிச்சுபாருங்க..

    ReplyDelete
  3. உருப்படியான யோசனை கேட்டா வடை எனக்கு வடை உனக்குங்கர இவங்கள நம்பியா யோசனை கேட்டீங்க..?

    ReplyDelete
  4. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

    அவசியமான ஆய்வு

    மிக அருமை .......
    /// Thanks

    ReplyDelete
  5. சிறிய விஷயமா தெரிஞ்சாலும் ரொம்பச்சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா இதுகூட நம்மை ஆளுர பெரிய பொருளாதார மேதைகளுக்கு புரியலியே?

    ReplyDelete
  6. //இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன் அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்//

    ஆமாமா செயல்ல இறங்குற மூஞ்சிய பாத்தா தெரியாதா என்ன.....
    நாதாரிங்க இவனுங்க பாக்கெட்டையும் சுவிஸ்லையும் நெரச்சிட்டு,
    மீட்டிங் போடுராணுவ கபட நாடகதாரிகள்...

    ReplyDelete
  7. //நம்மை ஆளுர பெரிய பொருளாதார மேதைகளுக்கு புரியலியே?//


    கண்ணு இருந்தாதானே தெரியுரதுக்கு....

    ReplyDelete
  8. //ஊழலை ஒழிக்க ஏதாவது ஊழல் பண்ணலாமா என்று யோசிச்சுபாருங்க////

    அடடடே இது நல்ல யோசனையா இருக்கே பரிசீலிக்கனுமே....

    ReplyDelete
  9. கலைஞரை கடிதம் எழுத சொல்லலாம். ஜெயலலிதாவை அறிக்கைவிட சொல்லலாம்.. ஹி..ஹி.. இல்லைனா நமீதாவை போராட சொல்லலாம்..

    ReplyDelete
  10. Jana சொன்னது…

    ஊழலை ஒழிக்க ஏதாவது ஊழல் பண்ணலாமா என்று யோசிச்சுபாருங்க..
    /// Thanks for comments.

    ReplyDelete
  11. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

    சிறிய விஷயமா தெரிஞ்சாலும் ரொம்பச்சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா இதுகூட நம்மை ஆளுர பெரிய பொருளாதார மேதைகளுக்கு புரியலியே?
    //என்னுடைய பழைய பதிவுகளும் பாருங்க...

    ReplyDelete
  12. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன் அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்//

    ஆமாமா செயல்ல இறங்குற மூஞ்சிய பாத்தா தெரியாதா என்ன.....
    நாதாரிங்க இவனுங்க பாக்கெட்டையும் சுவிஸ்லையும் நெரச்சிட்டு,
    மீட்டிங் போடுராணுவ கபட நாடகதாரிகள்...
    /// Thanks

    ReplyDelete
  13. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //நம்மை ஆளுர பெரிய பொருளாதார மேதைகளுக்கு புரியலியே?//


    கண்ணு இருந்தாதானே தெரியுரதுக்கு....
    //// Correct.

    ReplyDelete
  14. Jana சொன்னது…

    ஊழலை ஒழிக்க ஏதாவது ஊழல் பண்ணலாமா என்று யோசிச்சுபாருங்க..
    /// Good Idea..

    ReplyDelete
  15. Vinoth சொன்னது…

    உருப்படியான யோசனை கேட்டா வடை எனக்கு வடை உனக்குங்கர இவங்கள நம்பியா யோசனை கேட்டீங்க..?
    /// Fun தலைவரே..

    ReplyDelete
  16. //ஊழலை ஒழிக்க ஏதாவது ஊழல் பண்ணலாமா என்று யோசிச்சுபாருங்க////

    அடடடே இது நல்ல யோசனையா இருக்கே பரிசீலிக்கனுமே.... /// Again thanks.

    ReplyDelete
  17. கவிதை காதலன் சொன்னது…

    கலைஞரை கடிதம் எழுத சொல்லலாம். ஜெயலலிதாவை அறிக்கைவிட சொல்லலாம்.. ஹி..ஹி.. இல்லைனா நமீதாவை போராட சொல்லலாம்..
    /// Good .. joke..

    ReplyDelete
  18. //இப்பவே இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர். //
    2020இலும் அதைத் தக்கவைப்பார்கள் என்பதும் கண் கூடு.
    அரசியல் வாதிகளைத் தெரிவு செய்யும் மக்களின் மனப்போக்கு மாறவேண்டும் .அதுவே மாற்றத்திற்கான வழி.

    ReplyDelete
  19. விவசாயம் என்பதை அரசாங்க வேலையாக மாற்றலாம்.. அதாவது எப்படியிருந்தாலும் லாபமோ நஷ்டமோ சம்பளம் வரும்.. அதே சமயம் அரசாங்க வேலையென பலரும் விவசாயத்தில் இறங்க வாய்ப்பிருக்கு..

    ReplyDelete
  20. malgudi சொன்னது…

    //இப்பவே இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர். //
    2020இலும் அதைத் தக்கவைப்பார்கள் என்பதும் கண் கூடு.
    அரசியல் வாதிகளைத் தெரிவு செய்யும் மக்களின் மனப்போக்கு மாறவேண்டும் .அதுவே மாற்றத்திற்கான வழி // Thanks.

    ReplyDelete
  21. தம்பி கூர்மதியன் சொன்னது…

    விவசாயம் என்பதை அரசாங்க வேலையாக மாற்றலாம்.. அதாவது எப்படியிருந்தாலும் லாபமோ நஷ்டமோ சம்பளம் வரும்.. அதே சமயம் அரசாங்க வேலையென பலரும் விவசாயத்தில் இறங்க வாய்ப்பிருக்கு..
    // Good Idea, அந்த கவிதையை பற்றி ஒன்னும் சொல்லலையே...

    ReplyDelete
  22. ஊழல் தனியாக அதுவே எப்படி ஒழியும்.அரசியல்வாதிகளின் ஒதுழைப்பு வேனும். அது கிடைக்காது என்பது தெர்ஞ்ச விஷயம். அதனால அதுக்கு பழகிக்க வேண்டியதுதான் .

    ReplyDelete
  23. Lakshmi சொன்னது…

    ஊழல் தனியாக அதுவே எப்படி ஒழியும்.அரசியல்வாதிகளின் ஒதுழைப்பு வேனும். அது கிடைக்காது என்பது தெர்ஞ்ச விஷயம். அதனால அதுக்கு பழகிக்க வேண்டியதுதான் .
    /// Thanks for comments..

    ReplyDelete
  24. கருத்துடன், ஓட்டும் போடவும், அப்போதுதான் இது பலரையும் சென்றடையும்...

    தங்களின் மேலான கருத்துகளுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  25. இவனுங்கள திருத்த முடியாது பாஸ்

    ReplyDelete
  26. //இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர். //

    உண்மையான கருத்து

    ReplyDelete
  27. FARHAN சொன்னது…

    இவனுங்கள திருத்த முடியாது பாஸ்
    /// Thanks boss.

    ReplyDelete
  28. ஆமினா சொன்னது…

    //இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர். //

    உண்மையான கருத்து
    // Thanks.

    ReplyDelete
  29. விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.


    ....செயல்படுத்துவதை - தடுக்காமல் இருந்தாலே போதுமே!

    ReplyDelete
  30. சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு...நறுக்குன்னு நாலு ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  31. உண்மைக் கருத்துடனான பதிவு..

    ReplyDelete
  32. தங்கள் பார்வை சரியே..
    இடைத்தரகர்களை, பதுக்கல்காரர்களை கட்டுப்படுத்தாமல்
    விலைவாசியை எப்படி கட்டுப்படுத்த முடியும்.

    ReplyDelete
  33. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் விவசாயியாவது அதிகம் பணம் பெறுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. உழைக்காத ஒரு கூட்டம் விலைவாசி உயர்வின் லாபத்தை அனுபவித்துக்கொண்டிருக்க, கஷ்டப்பட்டவர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைதான் இங்கே இருக்கிறது.

    ReplyDelete
  34. என்ன பாஸ் அந்த கவிதைய பத்தி தான் நான் உங்களுக்கு மெயில் பண்ணிட்டேனே.!!

    ReplyDelete
  35. sorry sakthi naan 38vathu. next time firsta vara try panren.

    ReplyDelete
  36. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    ReplyDelete
  37. \\பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.\\

    அட அத கூட இவங்க படிச்சாதான பாஸ்...

    அப்படியே இதையும் பாருங்க
    http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html

    ReplyDelete
  38. @ கோநா
    // sorry sakthi naan 38vathu. next time firsta vara try panren. //

    இங்க என்ன ரன்னிங் ரேசா நடக்குது #டவுட்

    ReplyDelete
  39. எதோ ஒரு சக்தி உங்க தளத்தின் வேகத்தை குறைக்கிறது...

    ReplyDelete
  40. >>>>இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்.



    uNmaiஉண்மை

    ReplyDelete
  41. அருமையான பதிவு.
    ஒட்டு போட்டாச்சு போட்டாச்சு

    ReplyDelete
  42. அரசியல்வாதிகள் என்பவர்கள் பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பே! எனக்குத் தெரிந்த வரையில் நிறைய பேர் வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்பவர்களாகவே இருக்கிறார்கள். காவல் துறையினருக்கு கையூட்டு கொடுக்காமல் (ரூபாய் 50 முதல் 200 வரை) பாஸ்போர்ட் பெற்றவர்கள் இங்கே எத்தனை பேர் என்று கணக்கிட்டுப் பாருங்களேன், வியந்து போவீர்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"