Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/16/2011

இலங்கையில் புறநகர் ரயில்சேவை - திருவள்ளூரில் சோதனை ஓட்டம்

லங்கையில் புறநகர் மின்சேவை ரயில்களுக்கான 96 ரயில்களை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து வருகிறது.

 இதில் முதலாவது ரயில் தயாரிக்கப்பட்டு திருவள்ளூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 





இலங்கையில் புறநகர் ரயில் சேவைக்கான "டீசல், எலக்ட்ரீக் மல்டிபில் யூனிட்' (டி.இ.எம்.யு) ரயில்களை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்துள்ளது.

 ரூ. 105 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில்களுக்கான மோட்டார் கார் (இன்ஜின்) மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் சார்பு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐ,.சி.எஃப் நிறுவனத்துக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

 விமான முகப்பு வடிவிலான இன்ஜினுடன் 7 முதல் 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். இந்த ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும்.
மின்வசதியில்லாத பின்தங்கிய பகுதிகளிலும் ரயில் சேவையை வழங்கும் வகையில் இந்த ரயில் என்ஜின்கள் டீசலில் இயங்கும். இது போன்ற ரயில்கள் ஐதராபாத் புறநகர் ரயில்களாக இயங்கி வருகின்றன.

 

இந்த ரயில்பெட்டிகள் தயாரிக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலாவது ரயில் விரைவில் சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐ.சி.எஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. இந்தவாரம் தமிழ்மணத்தில் 12-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்தவாரம் தமிழ்மணத்தில் 12-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்தவாரம் தமிழ்மணத்தில் 12-ஆவது இடம் பிடித்தமைக்கு வாக்களித்தும், பின்னூட்டம் இட்டும் ஆதரவளித்த அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் இதயப்பூர்வ நன்றியை
    காணிக்கையாக்குகின்றேன்..

    ReplyDelete
  4. விமான முகப்பு போன்ற வடிவிலா? இங்க தமிழ்நாட்டுல ஓடறது மட்டும் டப்பா டிரெயின்ஸா இருக்கே...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"