Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts

2/15/2011

பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு?


பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால்  நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள்.  இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.

சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.

பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.

கா
லையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால், உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது. 

காதலைச் சொல்லவும், முத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும். 

பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.

ட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்;  மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்;  நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல  வேண்டும். 

துதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள், எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

ந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி, கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால், அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.

ப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம்.

ன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும்.  இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?

ற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. 

ந்தப் புகைப்படங்கள் அனைத்தும் முக உணர்வை அடையாளங் காணும் மென்பொருளின் உதவியுடன் வகைப்படுத்தப்பட்டு இவர் இப்படிப்பட்டவர், இவருடன் டேட்டிங் செல்ல அணுகவும் என்கிற ரீதியில் சேவை அளிக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் எல்லோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடுகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் முயற்சி இது என்று இந்த டேட்டிங் இணையதள உரிமையாளர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். (பதிவு தந்த தினமணிக்கு  நன்றி).

னால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை, அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் முகநூலில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

1/19/2011

பிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம்

ருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்குக் கவலையோ, அச்ச உணர்வோ இருக்க கூடாது. இவைகளைப் போக்கி மகிழ்ச்சியான, எதையும் தாங்கும் சூழ்நிலையில் இருக்க வைக்க வேண்டும். 

மேலும் 7-வது மாத மருந்துகள் குழந்தையின் நாடித்துடிப்பு, உஷ்ணநிலை இருதய வளர்ச்சி, மூளை வளர்ச்சி, இருதய பலம் ஆகியவற்றைத் தடுகின்றது. 
 
இடையில் உண்டாகும் பிரச்சனைகள் 

 
இன்று சிசுவின் துடிப்பை, அசைவை அறிய ஸ்கேன் செய்து பார்க்க வேண்டி உள்ளது, அன்று எளிதாக பசு வெண்ணெயை வயிற்றில் தடவ அது உருகிவிடும். அப்போது பிள்ளை உயிருடன் நன்றாக உள்ளது, உருகாவிட்டால் சிசு இறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
ஏதோ காரணத்தால் வயிற்றில் சிசு இறந்து விட்டால், கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது. முக்கியமாக இன்று கர்ப்பப்பையில் உள்ள நீர் முதலில் வெளியேறி விடும். இது மிகவும் சிக்கலானது. முடிவில் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டி வரும். 

 னால் அன்று இவ்வளவு வசதியும், வளர்ச்சியும் இல்லை. இதற்கு முன்னோர்கள் எளிமையாக மருந்து கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர். பிரண்டை வேரையும், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தடவ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

 
இதுவரை குழந்தை உண்டாகி, பிறக்கும் வரை அன்றும், இன்றும் பார்த்தோம். இனி பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை வரும் நோய்களைப் பற்றி பார்ப்போம். இன்று எத்தனையோ மருத்துவ கருவிகள், எலக்ட்ரானிக் நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் துணையோடு குழந்தை பிறந்து குழந்தைக்கு (30 நாட்களுக்குள்) கழுத்து வீங்கி, முழங்கால், முழங்கை குளிர்ந்தால், அக்குழந்தை விடாமல் அழும். காரணம் வயிற்றில் வலி உண்டு என்று அர்த்தமாகும். குழந்தைக்கு தேவையான உடல் உஷ்ணம் இல்லை என்று அர்த்தமாகும். இதற்கு உடனே உஷ்ணம் ஏறவும் வயிற்றுவலி தீரும் மருந்து பயன்படுத்த வேண்டும். 
 
குணங்கள் : 

செங்கிரந்தி :
பிள்ளை பிறந்தவுடன் தொண்டை கட்டி பூனைகுரல் போல் அபம், மலம், ஜலம் போகாது , வயிறு ஊதும். கை, கால் சிவப்பாக மாறும்.
தருங்கிறந்தி :
குழந்தை அவ்வப்போது அலறியழும், முலைப்பாலுண்ணாது வயிறு ஊதும். கீழ் உதடு  கருப்பாக மாறும். 

 
கிரந்து : 
  
மல சிக்கல், வயிறு நொந்து, விடாமல் அழும். மலம் கடுமையான வலியுடன் வெளியே போகிற மாதிரி போக்கு காட்டி போகாது. இதனால் சிறுநீர் கட்டும், விக்கல் எடுக்கும், குடித்த பாலை உடனே வாந்தி பண்ணும். 18 வகையான வயிறு வலிகளும் வரும். 
 
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தால் இந்த நோய்தான் என்று கண்டறிகின்றனர். வாய் பேசும் குழந்தைகள் தங்களுக்கு வலிகள் உள்ளதை மட்டும், எங்கு வலிக்கின்றது என்று சொல்கின்றது. ஆனால் வாய் பேசாத குழந்தைகள் எப்படி சொல்லும் இதற்கு அன்று முன்னோர்கள் முனிவர்கள் ரிஷிகள், சித்தர்கள் ஞானிகள் குறிகளை சொல்லியுள்ளனர். அவற்றிற்கு தனித்தனியாகவும் மொத்தமாகவும் மருந்துகளை கூறியுள்ளனர். இனி வரும் நோய்களை பார்ப்போம்.
நோய் வரும் காரணம்
கிரந்தி, செங்கிரந்தி, கருங்கிரந்தி, தோஷம், மாந்தம், கணம் பிரளி, கரப்பான், செவ்வாப்பு, தொண்டை கட்டு, அக்கரம், வைசூரி, சளி, ஜலதோஷம் இன்னம் பல நோய்கள் வருகின்றன.
மாந்தம், முலைப்பாலாலும், கணம், கர்ப்ப மூட்டினாலும், மற்ற பினிகள், தாய் தந்தை புணர்ச்சியினாலும் கிரிமிகளாலும் உண்டாகின்றது.
மாந்தம் (மந்தம்)
எருமைபால், நெய், தக்காளி பழம், தேங்காய், இளநீர், கடலை, வெல்லம், சர்க்கரை, புளித்த மோர், தயிர் மாங்கனிகள், மலைத்துவரை, உளுந்து மொச்சை, பச்சைபட்டானி, உருளை, வாளை மீண், கொண்டை, சாகல், கரை வாயு பண்டங்கள் இவைகளை அதிகமாக சாப்பிட்டால், வாத மாந்தம் பித்த மாந்தம், சிலேஷ்ம மாந்தம், போர் மாந்தம், வாலைமாந்தம், சுரமாந்தம், நீர் மாந்தம், சொரி மாந்தம், கட்டு மாந்தம், எரிமாந்தம், தலை மாந்தம், கண் மாந்தம், வலிப்பு மாந்தம், சுழி மாந்தம், மூக்கு மாந்தம், சன்னி மாந்தம், ஊது மாந்தம், வீக்கமாந்தம் என 20 வகையான மாந்தங்கள் (மந்தம்) குழந்தைகளுக்கு நேரிடும். 

 
மாந்த குணங்கள் : 

 
குழந்தை உடல் சூடேறி வியர்க்கும். முலைபாலுண்ணாது வாந்தி பண்ணி மயங்கும், சீதமும், மலமுமாய் கழியும், அல்லது கெட்டபால் போலும் தெளிந்த நீர் போலும் கழியும், வயிறு பொருமும் , கொட்டாவி விடும். மூக்கில் புண் உண்டாகும், வலிப்பு மூச்சை (மயக்கம்) ஏற்படும். 
உடல் மந்தமாகி வியர்த்து குளிரும், நெஞ்சில் கபங்கட்டும், உடல் திடீரென்று ஊதும், வயிறு இரைந்து கழியும், கடுப்பு கழிச்சல், தொண்டை வலி, சுரம் ஏற்படும், தலைவலி, முகம் மிணு மிணுக்கும், மலம் சிறுத்து நீர் கருத்து இறங்கும். மார்பு புடைக்கு, நெற்றி நரம்பு புடைக்கும். 

தாகம் ஏற்படும், வயிறு ஊதி புளித்த நாற்றமாய் கழியும், வாந்தி பண்ணி பரிதவிக்கும் மாவு, கரைத்தாற் போல் கழியும். ஏப்பம் , கொட்டாவி விடும், நாசியில் நீர் வடியும், உடலை முறுக்கி கொட்டாவி விடும், தூங்காது சில சமயம் முக்கி முக்கி சீதமும், மலமுமாய் கழியும் உடல் மெலிந்து கொண்டே வரும் கடைசியில் வலிப்பில் வந்து நிற்கும்.

1/17/2011

ஜெயசூர்யாவை சாதனையை முந்தும் சச்சின்


ச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில்  நடந்த 2வது ஒருநாள் போட்டி சச்சினின் 444 போட்டியாகும். 

1/16/2011

இலங்கையில் புறநகர் ரயில்சேவை - திருவள்ளூரில் சோதனை ஓட்டம்

லங்கையில் புறநகர் மின்சேவை ரயில்களுக்கான 96 ரயில்களை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து வருகிறது.

 இதில் முதலாவது ரயில் தயாரிக்கப்பட்டு திருவள்ளூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 





இலங்கையில் புறநகர் ரயில் சேவைக்கான "டீசல், எலக்ட்ரீக் மல்டிபில் யூனிட்' (டி.இ.எம்.யு) ரயில்களை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்துள்ளது.

 ரூ. 105 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில்களுக்கான மோட்டார் கார் (இன்ஜின்) மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் சார்பு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐ,.சி.எஃப் நிறுவனத்துக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

 விமான முகப்பு வடிவிலான இன்ஜினுடன் 7 முதல் 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். இந்த ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும்.
மின்வசதியில்லாத பின்தங்கிய பகுதிகளிலும் ரயில் சேவையை வழங்கும் வகையில் இந்த ரயில் என்ஜின்கள் டீசலில் இயங்கும். இது போன்ற ரயில்கள் ஐதராபாத் புறநகர் ரயில்களாக இயங்கி வருகின்றன.

 

இந்த ரயில்பெட்டிகள் தயாரிக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலாவது ரயில் விரைவில் சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐ.சி.எஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1/08/2011

IPL ஏலம் - 1 தரம்..2 தரம்..3 தரம்





ஐ.பி.எல் தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள்  ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது.

புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி – தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்-யும்,மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா வையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வார்னே, வாட்சனும்,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  விராத் கோஹ்லி,டெல்லி டேர்டெவில்ஸ்  அணி  சேவாக்கையும் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.


ற்போது நிலவரப்படி இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு :


வீரரின் பெயர்ஏலம் எடுத்த அணிவாங்கப்பட்ட விலை
கெளதம் கம்பீர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.11.04 கோடி
யூசுப் பதான்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.9.66 கோடி
ரோஹித் சர்மாமும்பை இந்தியன்ஸ்ரூ.9.2 கோடி
ராபின் உத்தப்பாபுனே சஹாரா வாரியர்ஸ்ரூ.9.66 கோடி
ராகுல் திராவிட்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.2.26 கோடி
ஆடம் கில்கிறிஸ்ட்பஞ்சாப் லெவன்ரூ.4.08 கோடி
ஜாக் கல்லிஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.5 கோடி
ஆன்ட்ரூ சைமண்ட்ஸ்மும்பை அணிரூ.3.85 கோடி
குமார் சங்ககராடெக்கான் சார்ஜர்ஸ்ரூ.3.17 கோடி
யுவராஜ் சிங்புனே வாரியர்ஸ்ரூ.8.28 கோடி
மஹேல ஜெயவர்தனாகொச்சி அணிரூ.6.75 கோடி
டிவில்லியர்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.5.06 கோடி
ஜகீர் கான்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.4.14 கோடி
ரோஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.4.6 கோடி
இர்பான் பதான்டெல்லி டேர் டெவில்ஸ்ரூ.8.62 கோடி
தினேஷ் கார்த்திக்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
டேவிட் ஹுஸ்ஸேகிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 6.44 கோடி
அபிஷேக் நாயர்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 3.68 கோடி
ஸ்டவுட் ப்ரோட்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 1.84 கோடி
ராஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.6 கோடி
ஜோகன் போத்னாராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.37 கோடி
விவிஎஸ் லட்சுமண்கொச்சி அணிரூ. 1.84 கோடி
பிரண்டன் மெக்கொல்லம்கொச்சி அணிரூ. 2.18 கோடி
ஸ்ரீசாந்த்கொச்சி அணிரூ. 4.14 கோடி
ஆர்.பி.சி்ங்கொச்சி அணிரூ. 2.3 கோடி
பார்தீவ் படேல்கொச்சி அணிரூ. 1.33 கோடி
ரவீநதிர ஜடேஜாகொச்சி அணிரூ. 4.37 கோடி
பிராட் ஹட்டின்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.49 கோடி
ஷாகிப் அல்ஹசன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.95 கோடி
டேவிட் ஜேக்கப்மும்பை இண்டியன்ஸ்ரூ. 87.4 லட்சம்
டேவிட் வார்னர்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 3.4 கோடி
நமன் ஓஜாடெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.24 கோடி
ஜேம்ஸ் ஹோப்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.16 கோடி
விரித்திமான் சாஹாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 46 லட்சம்
கிராம் ஸ்மித்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 2.3 கோடி
டிம் பெய்ன்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 1.24 கோடி
தில்ஷான் திலகரத்னேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.99 கோடி
டேனியல் வெட்டோரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.6 கோடி
செளரப் திவாரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 7.36 கோடி
கெவின் பீட்டர்சன்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 2.99 கோடி
கேமரூன் ஒயிட்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 5.06 கோடி
ஷிகார் தவான்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ஜே.பி.டுமினிடெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ட்வைன் பிரேவாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 93 லட்சம்

முழுமையான LIST  நளைய பதிவில் பாருங்கள்.                        

12/22/2010

Today Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

இன்றைய  இளைய தலைமுறையினர் கணித மேதை பற்றி தெரிந்துகொள்வதற்காக இப் பதிவினை பெரியதாகவே தருகிறேன்.

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.


இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 

எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 

12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. 

முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை

பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினான். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். 

கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.

ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. 

 அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. 

தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.

1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். 

ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். 

சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் 

‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.
ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது சுற்றுச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.

கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. 

நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. 

இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான் விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.


இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.


சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. 

பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. 

இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919-20 இல் செய்த ஆராய்ச்சிகள்.
ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:


மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913-1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது.

பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.


இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். 

அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். 

இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். 

அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:
x2 − 10y2 = + 1or − 1
மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\dotsb}}}}

இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு
3 + 1/6 = 19/6.
x =19, y = 6 இரண்டாவது விடை.
192 − 10 * 62 = 361 − 360 = 1
மூன்றாவது ஒருங்கு:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6}}

இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது.

சிறப்புக்கள்

  • 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
  • ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
  • இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இராமானுசன் கணிதத்துளிகள்

16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம்.
  • மஹலனோபிஸ்ஸை வியக்க வைத்த தொடரும் பின்னமும் அதை ஒட்டிய வரலாறும்.
  • எண் பிரிவினைக்கு ஒரு வாய்பாடு.
  • இரண்டாவது நோட்புக்கில் அடிக்கப்பட்ட ஒரு குறிப்பிலும் உயர்ந்த கணிதம். 
  • ரீமான் சரத்தை யூகித்தறிதல். 
  • தொலைந்த நோட்புக்கிலிருந்து ஒரு விந்தைச்சமன்பாடு. 
  • எண் பிரிவினைச் சார்பைப் பற்றி ஒரு யூகம்.
  • τ-சார்பு. 
  • டௌ-சார்பைப்பற்றிய புகழ்பெற்ற யூகம்.

12/21/2010

வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

2010 - ரிச்சர்டு ஃகெக் (Richard F. Heck - அமெரிக்கர்), ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi - நிப்பானியர் (சப்பானியர்)), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki - நிப்பானியர் (சப்பானியர்)).
2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan - இந்திய அமெரிக்கர்), தாமஸ் ஸ்டைட்ஸ் (Thomas Steitz - அமெரிக்கர்), அடா யோனத் (Ada Yonath - இஸ்ரேலியர்).
2008 - ஓசாமு ஷிமோமுரா (Osamu Shimomura - ஜப்பானிய அமெரிக்கர்), மார்ட்டின் சால்ஃபி (Martin Chalfie - அமெரிக்கர்), ரோஜர் சியேன் (Roger Tsien - அமெரிக்கர்).
2007 - கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl  ஜெர்மனி).

2006 - ரோஜர் கோர்ன்பெர்க் (Roger D. Kornberg  ஐக்கிய அமெரிக்கா).
2005 - இராபர்ட் ஃகிரப்ஸ் (Robert Grubbs), இரிச்சர்ட் ஷ்ராக் (Richard Schrock), யெஸ் ஷெளவின் (Yves Chauvin).
2004 - ஆரோன் சீசனோவர் (Aaron Ciechanover), அவ்ரம் ஹெர்ஷ்கோ (Avram Hershko), இர்வின் ரோஸ் (Irwin Rose).
2003 - பீட்டர் ஆக்ரெ (Peter Agre), ரோடெரிக் மெக்கினோன் (Roderick MacKinnon).
2002 ஜான் B. ஃபெண் (John B. Fenn), கொய்ச்சி டனாகா (Koichi Tanaka), குர்ட் உத்ரிச் (Kurt Wüthrich).
2001 வில்லியம் எஸ். நோல்ஸ் (William S. Knowles), உருயோஜி நோயோரி(Ryoji Noyori), கே. பேரி ஷார்ப்லெஸ் (K. Barry Sharpless).
2000 - ஆலன் ஹீகர் (Alan Heeger), ஆலன் G. மெக்டியர்மிட் (Alan G. MacDiarmid), ஹிடேகி ஷிரகாவா (Hideki Shirakawa).


1999 அஹமது ஸெவயில் (Ahmed Zewail)
1998 Walter Kohn, John Pople
1997 Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou
1996 Robert F. Curl Jr., Sir Harold Kroto, Richard E. Smalley
1995 Paul J. Crutzen, Mario J. Molina, F. Sherwood Rowland
1994 George A. Olah
1993 Kary B. Mullis, Michael Smith
1992 Rudolph A. Marcus
1991 Richard R. Ernst
1990 Elias James Corey
1989 Sidney Altman, Thomas R. Cech
1988 Johann Deisenhofer, Robert Huber, Hartmut Michel
1987 Donald J. Cram, Jean-Marie Lehn, Charles J. Pedersen
1986 Dudley R. Herschbach, Yuan T. Lee, John C. Polanyi
1985 Herbert A. Hauptman, Jerome Karle
1984 Bruce Merrifield
1983 Henry Taube
1982 Aaron Klug
1981 Kenichi Fukui, Roald Hoffmann
1980 Paul Berg, Walter Gilbert, Frederick Sanger
1979 Herbert C. Brown, Georg Wittig
1978 Peter Mitchell
1977 Ilya Prigogine
1976 William Lipscomb
1975 John Cornforth, Vladimir Prelog
1974 Paul J. Flory
1973 Ernst Otto Fischer, Geoffrey Wilkinson
1972 Christian Anfinsen, Stanford Moore, William H. Stein
1971 Gerhard Herzberg
1970 Luis Leloir
1969 Derek Barton, Odd Hassel
1968 Lars Onsager
1967 Manfred Eigen, Ronald G.W. Norrish, George Porter
1966 Robert S. Mulliken
1965 Robert B. Woodward
1964 Dorothy Crowfoot Hodgkin
1963 Karl Ziegler, Giulio Natta
1962 Max F. Perutz, John C. Kendrew
1961 Melvin Calvin
1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard F. Libby)
1959 Jaroslav Heyrovsky
1958 Frederick Sanger
1957 Lord Todd
1956 Sir Cyril Hinshelwood, Nikolay Semenov
1955 Vincent du Vigneaud
1954 Linus Pauling
1953 Hermann Staudinger
1952 Edwin M. McMillan, Glenn T. Seaborg
1951 Max Theiler
1950 Otto Diels, Kurt Alder
1949 William F. Giauque
1948 Arne Wilhelm Kaurin Tiselius
1947 Sir Robert Robinson
1946 James B. Sumner, John H. Northrop, Wendell M. Stanley
1945 Artturi Virtanen
1944 Otto Hahn
1943 George de Hevesy
1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939 Adolf Butenandt, Leopold Ruzicka
1938 Richard Kuhn
1937 Albert Szent-Györgyi
1936 Norman Haworth, Paul Karrer
1935 Peter Debye
1934 Harold C. Urey
1933 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1932 Irving Langmuir
1931 Carl Bosch, Friedrich Bergius
1930 Hans Fischer
1929 Arthur Harden, Hans von Euler-Chelpin
1928 Adolf Windaus
1927 Heinrich Wieland
1926 The Svedberg
1925 Richard Zsigmondy
1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923 Fritz Pregl
1922 Francis W. Aston
1921 Frederick Soddy
1920 Walther Nernst
1919 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1918 Fritz Haber
1917 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915 Richard Willstätter
1914 Theodore William Richards
1913 Alfred Werner
1912 Victor Grignard, Paul Sabatier
1911 Maria Skłodowska-Curie
1910 Otto Wallach
1909 Wilhelm Ostwald
1908 எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (Ernest Rutherford)
1907 எடுவர்டு பூக்னர் (Eduard Buchner)
1906 Henri Moissan
1905 Adolf von Baeyer
1904 Sir William Ramsay
1903 Svante Arrhenius
1902 Emil Fischer
1901 Jacobus H. van 't Hoff

VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS - உங்களுக்குத் தெரியுமா ?

 VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS - உங்களுக்குத் தெரியுமா ?


  • அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக 2010 ஆம் ஆண்டை ஐ.நா. அறிவித்துள்ளது;
  • 1842 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் 1947ஆம் ஆண்டு வரை இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
  • லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்.
  • ஒரு மின்னல் கீற்று வளிமண்டலத்தை 50,000 டிகிரி பாரன்ஹைட் வரையில் சூடேற்றுகிறது.
  • முதல் சிப்கோ இயக்கம் (1974)கார்வாலில் நடைபெறவில்லை; 1730 -ஆம் ஆண்டில் ஜோத்பூர் மாவட்டத்தின் கேஜார்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்கள் அவர்களின் புனித மரமான கேஜ்ரியைக் (வன்னி மரம்) கட்டியணைத்தவாறு உயிர் துறந்தனர்.
  • காவலூரிலுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறிய கோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis (Plegadis falcinellus) என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.
  • தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட பரிதிமாற்கலைஞர் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
  • சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
  • ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
  • சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.
  • 1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
  • துருக்கி யைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோய். இங்கு வசிப்பவர்கள் சீழ்க்கை அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக சீழ்க்கை மொழி வழக்கத்தில் இருக்கிறதாம்.
  • தனித்தனியே எடைபோடப்பட்ட ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதை ஆர்க்கிமிடிசு தத்துவத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
  • சூரியவொளி யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
  • உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.
  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
  • ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு ஒளியாண்டு எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.
  • பூமி உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.
  • வவ்வால்கள் புறவொலி அலை களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வலைகள் தடைகளின் மீது பட்டு, வவ்வால்களுக்கேத் திரும்பி வருகின்றன. இதன் மூலம் வழி அறியும் வவ்வால்கள் இருளிலும் பறக்கின்றன.
  • பெப்ரவரி 29 அன்று பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி” எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
  • கல்திட்டைகள் எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.
  • ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரட்டைச்சதம் அடித்த பெண் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க். இவர் டென்மார்க் பெண்கள் அணியை எதிர்த்து ஆடி 226 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார்.
  • தமிழகத்தின் மரபுக்கலைகளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும்  நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
  • ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் சனத் ஜெயசூரியா (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).
  • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.
  • கடலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  • நிலநடுக்கத்தால் மாபெரும் பாதிப்பிற்குள்ளான ஹெய்ட்டி மக்களுக்கு உதவுவதற்காக வீ ஆர் த வோர்ல்ட் 25 ஃபார் ஹெய்ட்டி என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது.

12/20/2010

கிரிக்கெட் கடவுளை வணங்கி வாழ்த்துவோம்

சச்சினின் டெஸ்ட் சதங்கள்

      
              இதுவரை சச்சின் எடுத்துள்ள 50 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது:
 1990 
1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை).

1992
2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)
3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)
4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)
இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.

1993
5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)
6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி).

1994
7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)
8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை).

1996
9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)
10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை).

1997
11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)
12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)
13. ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)
14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை).

1998
15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)
16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)
17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி).

1999
18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)
முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)
20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)
21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)
22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி).

2000
23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)
24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை).

2001
25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)
26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)
27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை).

2002
28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)
29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.
30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)
31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை).

2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை.

2004
32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)
33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)
34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி).

2005
35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.
இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்.

2006
2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.

2007
36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)
37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி).

2008
38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்
39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)
40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)
41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.
இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்.

2009
42. மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது
43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை).

2010
44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)
45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)
46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)
47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)
48. சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)
49. அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)
50. டிசம்பர் 19 சென்சுரியன் ‌ தென்ஆப்ரிக்கா.

அப்படியே என்னோட புதியபதிவை படித்து கருத்தை சொல்லுங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

12/19/2010

இந்திய மாநிலங்கள்

இந்திய மாநிலங்கள்

இன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள் போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. 


கடலோரமாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.

நாடு விடுதலை அடைந்தபோது ஹைதராபாத் நிஜாம் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன்இணைக்க மறுத்தபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின்இரும்பு கரத்தினால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கானாகம்யூனிஸ்ட் பேரெழுச்சியை தொடர்ந்தும் தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன்கட்டாயமாக இணைக்கப்பட்டது. 

காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு, தெலுங்குபேசும் மாநில கோரிக்கை காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாகஅன்று சென்னை ராஜஸ்தானத்திலிருந்து மொழிவழி மாநிலமாக 1953-இல்பிரிக்கப்பட்டது. அப்போது கர்னூல்தான் அதற்கு மாநிலம் என்ற அடிப்படையில்தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட ஆந்திரப் பிரதேசமாக 1956-இல்ஒருங்கிணைக்கப்பட்டது. 

தெலுங்கானா சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தில் இருந்த நிலபிரபுக்கள் ஆந்திராவுடன் இணைபடுத்தி, தனிமாநிலமாக்க கோரினர். அதன் பின்னர், 1961 தேர்தலுக்கு பிறகு உருவானஅம்மாநில சட்டமன்ற பெரும்பான்மையும் ஆந்திரபிரதேசத்தில் இணைவதாகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிராந்தியத்துடன் இணைப்பது, இல்லையேல் தனிமாநிலம் அமைப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைசெய்தது.

அவ்வொப்பந்தங்களை மத்திய அரசு கைவிட்டது. இதனால் தெலுங்கானா மக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாகவெளியானது. பலகாலமாகவே அரசில், அரசியலில் தெலுங்கானா மக்களுக்கானமுக்கியத்துவம் குறைந்து வந்ததால் 1969-இல் தெலுங்கானா பகுதியினர்தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் கைதுசெய்யப்பட்டு கடும் அடக்குமுறைக்கு பிறகு அந்தப் போராட்டம் படிப் படியாககுறைந்து போனது. 

பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரராவ் ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியை 2001-இல் உருவாக்கினார்,தெலுங்கானா என்பதே அந்த கட்சி யின் மையமான கோரிக்கை ஆனது.
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் முடிவெடுக்கும்என அறிவித்த தன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங் களும் இத்தகையகோரிக்கையை எழுப்பி வருகின்றன. 

தமிழ கத்தை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு,கொங்கு நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை எழ ஆரம்பித்தது. உத்திரபிரதேச மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி கோருகிறார். அதேபோல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போடோலாந்து,உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து பிண்டேல் கண்ட், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து குடகு மாநிலம், ஒரிசாவிலிருந்துமகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து பூர்வாஞ்சல்,குஜராத்திலிருந்து சௌ ராஷ்டிரா எனத் தேசிய அடிப்படை யிலும், சாதி அடிப்படையிலும் தனி மாநில கோரிக்கை கள் முன் வைக்கப்படுகின்றன.

மாநிலங்கள் உருவானவிதம்

சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒன்பது பிரிட்டீஷ் மாகாணங்களும், 562சிறு மன்னராட்சி பகுதி களும் (Princity States) நிலவில்இருந்தன. சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பின் முதல்கட்டத்தையடுத்து மாநிலங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. 

அவை:

“A’ Category: உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம்.ஒரிசா, மத்திய பிரதேசம், மெட்ராஸ் தற்போதைய தமிழ்நாடு +ஆந்திரம்), பம்பாய்(தற் போதைய மகாராஷ்டிரம்+குஜராத்). இவை ஆளுனரின் ஆட்சியின் கீழ்செயல்பட்டன.

“B’ Category: PEPSU, , மத்திய இந்தியா, மைசூர் (தற்போதைய கர்நாடகம்),சௌராஷ்டிரம், ராஜஸ்தான், ஹைதராபாத், திருவிதாங்கூர், கொச்சி. இவை மாநிலத்தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

“C’ Category: அஜ்மீர், கட்ச், கூர்க், தில்லி, பிலாஸ்பூர், போபால்,திரிபுரா, இமாசலப் பிரதேசம், மணிப் பூர், விந்தியப் பிரதேசம் இவைலெப்டினட் கவர்னரால் ஆட்சி செய்யப்பட்டன.

“D’ Category : அந்தமான் நிகோபார் தீவுகள். மத்திய அரசின் நேரடி நிர்வாகம்.

மாநில மறுசீரமைப்பு கமிஷன்:

* இரண்டாம் கட்ட மாநில சீரமைப்பு வட்டாரக் கூறுகள், மொழி, கலாச்சாரம்மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.

* மொழியடிப்படையில் மாநிலங்களை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் எனும்கோரிக்கை பற்றி ஆராய் வதற்காக அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டஎஸ்.கே. தர் கமிஷனும், காங்கிரசின் ஜெ.வி.பி. கமிட்டியும் (நேரு, படேல்,பட்டாபி சீதாராமைய்யா) மொழி வழிப் பிரிவினைக்கு உடன்படவில்லை.

* ஆனால் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக ஒரு தனி மாநிலம் உருவாக்கியேஆகவேண்டும் என்னும் கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுஎனும் தெலுங்கர் மரண மடைந்ததையடுத்து 1953, அக்டோபர் ஒன்றாம் தேதிஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. (தெலுங்கானாப் பகுதிகளும்சேர்க்கப்பட்ட புதிய ஆந்திரப்பிரதேசம் 1956, நவம்பர் ஒன்றாம் தேதிஉருவானது)
ஆந்திரப்பிரதேசமே இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்
* இதையடுத்து மேலும் பல மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்என்னும் கோரிக்கை வலுத்தபோது 1953-இல் ஸயீத் ஹஸன் அலி தலைமையில் ஒருகமிஷன் நியமிக்கப்பட்டது.

* 1956, செப்டம்பர் 30-இல் கமிஷன் தனது அறிக் கையை தாக்கல் செய்தது.இந்தியா 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும் என அது பரிந்துரைத்தது. இதன் பெரும்பகுதியை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு 15 மாநிலங்கள், ஏழு மத்திய ஆட்சிப் பகுதிகள் அமைய ஒத்துக் கொண்டது.

* இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மாநில மறு சீரமைப்பு சட்டத்தை(1956) நிறைவேற்றிய பாராளுமன்றம் 14 மாநிலங்கள், ஆறு மத்திய ஆட்சிப்பகுதிகளை உருவாக்கியது.

பல்வேறு மாநிலங்கள்

* மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்கள்ஏற்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மாநிலப் பாகுபாட்டில் பல்வேறுமாற்றங்கள் நிகழ்ந்தன.

* 1957 – அசாமின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு சர்ழ்ற்ட் ஊஹள்ற் எழ்ர்ய்ற்ண்ங்ழ் ஆஞ்ங்ய்ஸ்ரீஹ் என மாற்றம் செய்யப் பட்டது.

* 1961, மே-1 – பம்பாய் மாகாணம் குஜராத், மகாராஷ்டிரம் என இரண்டாக பிரிக்கப் பட்டது.

* 1961 டிசம்பர் 16- போர்த்துக்கீசிய காலனிகளான கோவா, டாமன், டையூ அன்னியசக்திகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதிகளாக இந்தியன்யூனியனில் இணைக்கப்பட்டன.

* 1963 டிசம்பர் 1 – நாகா மலைப்பகுதி “நாகாலாந்து’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (1961) தனி மாநிலமானது.

* 1966 நவம்பர் 1 – பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன.

* 1971 ஜனவரி 2 – பஞ்சாப் மாநிலத்தின் சில மலைப் பகுதிகள் இமாசலப் பிரதேசத்திற்குள் உட்படுத்தப் பட்டு அது தனி மாநிலமாக்கப்பட்டது.

* 1972 – மணிப்பூர் ஒரு முழு மாநிலமானது.

* 1972 ஜனவரி 21 – அசாம் மாநிலத்திற்குள்ளேயே ஒரு தன்னாட்சி மாநில அந்தஸ்துடன் மேகாலயா மாநிலம் அமைக்கப்பட்டது.

* 1972 – திரிபுரா தனி மாநிலமானது. இது முதலில் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு (1947)

* பிற்பாடு 1956-இல் மத்திய அரசு நிர்வாகப் பகுதியானது.

* 1973-இல் மைசூர் மாகாணம், கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது (1956-இல் உருவாக்கப் பட்டது)

* 1974 – இந்தியாவின் ஒரு பகுதியான சிக்கிம்பிற்பாடு இந்தியாவின் ஒரு கூட்டமைப்பு மாநிலமானது. 1975 ஏப்ரல் 14 அவசரக்சட்டத்தை யடுத்து இது இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

* 1987 பிப்ரவரி 20 –  அருணாசலப் பிரதேசம் எனும் புதிய பெயர் சூட்டப்பட்டு தனி மாநிலமானது.

* 1987 பிப்ரவரி 20 – மிசோரம் தனி மாநிலமானது (இது 1972 வரை அசாமின் ஒரு மாவட்டமாக இருந்தது)

* 1987, மே 30 – கோவா தனி மாநிலமானது. (இது 1961-இல்போர்த்துக்கீசியரிடமிருந்து விடுவிக்கப் பட்டது). அதே வேளையில் டாமனும்,டையூவூம் மத்திய ஆட்சிப் பகுதியாகவே தொடர்ந்தன.

* 1991 – தில்லி தேசிய தலைநகரப் பகுதியானது.

* 2000 நவம்பர் 1 – மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது (இந்தியாவின் 26-வது மாநிலம்)

* 2000 நவம்பர் 4 – உத்திரப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள் அடங்கியஉத்தராஞ்சல் மாநிலம் உரு வாக்கப்பட்டது. (இந்தியாவின் 27-வது மாநிலம்)

* 2000 நவம்பர் 15 – பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. (இந்தியாவின் 28-வது மாநிலம்).