VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS - உங்களுக்குத் தெரியுமா ?
- அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக 2010 ஆம் ஆண்டை ஐ.நா. அறிவித்துள்ளது;
- 1842 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் 1947ஆம் ஆண்டு வரை இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
- ஒரு மின்னல் கீற்று வளிமண்டலத்தை 50,000 டிகிரி பாரன்ஹைட் வரையில் சூடேற்றுகிறது.
- முதல் சிப்கோ இயக்கம் (1974)கார்வாலில் நடைபெறவில்லை; 1730 -ஆம் ஆண்டில் ஜோத்பூர் மாவட்டத்தின் கேஜார்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்கள் அவர்களின் புனித மரமான கேஜ்ரியைக் (வன்னி மரம்) கட்டியணைத்தவாறு உயிர் துறந்தனர்.
- காவலூரிலுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறிய கோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis (Plegadis falcinellus) என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.
- தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட பரிதிமாற்கலைஞர் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
- சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
- ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
- சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.
- 1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
- துருக்கி யைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோய். இங்கு வசிப்பவர்கள் சீழ்க்கை அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக சீழ்க்கை மொழி வழக்கத்தில் இருக்கிறதாம்.
- தனித்தனியே எடைபோடப்பட்ட ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதை ஆர்க்கிமிடிசு தத்துவத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
- சூரியவொளி யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
- உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.
- ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
- ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு ஒளியாண்டு எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.
- பூமி உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.
- வவ்வால்கள் புறவொலி அலை களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வலைகள் தடைகளின் மீது பட்டு, வவ்வால்களுக்கேத் திரும்பி வருகின்றன. இதன் மூலம் வழி அறியும் வவ்வால்கள் இருளிலும் பறக்கின்றன.
- பெப்ரவரி 29 அன்று பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி” எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
- கல்திட்டைகள் எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரட்டைச்சதம் அடித்த பெண் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க். இவர் டென்மார்க் பெண்கள் அணியை எதிர்த்து ஆடி 226 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார்.
- தமிழகத்தின் மரபுக்கலைகளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும் நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
- ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் சனத் ஜெயசூரியா (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).
- சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.
- கடலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கத்தால் மாபெரும் பாதிப்பிற்குள்ளான ஹெய்ட்டி மக்களுக்கு உதவுவதற்காக வீ ஆர் த வோர்ல்ட் 25 ஃபார் ஹெய்ட்டி என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"