Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/17/2010

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்


 அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்


அமைதிக்கான நோபெல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.


நோபெல் பரிசுப் பதக்கம்

ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. 

மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.

முழுப்பட்டியல்:

2010 லியூ சியாபோ (Liu Xiaobo)
2009 பராக் ஒபாமா (Barack Obama),
2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari)
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
1977 சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
1976 பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan)
1975 ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov)
1974 ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato)
1973 ஹென்ரி கிசிங்கர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
1972 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1971 விலி ப்ராண்ட் (Willy Brandt)
1970 நார்மன் பர்ளௌக் (Norman Borlaug)
1969 சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization)
1968 ரெனே கேசின் (René Cassin)
1967 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1966 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1965 ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
1964 மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King)
1963 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies)
1962 இலைனஸ் பௌலிங் (Linus Pauling)
1961 டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld)
1960 ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli)
1959 பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker)
1958 ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire)
1957 இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson)
1956 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1955 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1954 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1953 ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall)
1952 ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer)
1951 இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux)
1950 ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche)
1949 பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr)
1948 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1947 நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee)
1946 எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott)
1945 கார்டல் ஹள் (Cordell Hull)
1944 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross)
1943 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1938 நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees)
1937 இராபர்ட் செசில் (Robert Cecil)
1936 கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas)
1935 கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky)
1934 ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson)
1933 சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell)
1932 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1931 ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler)
1930 நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom)
1929 ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg)
1928 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1927 ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde)
1926 அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann)
1925 சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes)
1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1922 ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen)
1921 ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange)
1920 இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois)
1919 ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson)
1918 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1917 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross)
1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1914 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1913 ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine)
1912 எலிஃகூ இரூட் (Elihu Root)
1911 டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried)
1910 சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau)
1909 அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant)
1908 க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer)
1907 எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault)
1906 தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt)
1905 பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner)
1904 சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law)
1903 இராண்டல் க்ரெமர் (Randal Cremer)
1902 எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat)
1901 ஹென்ரி உடுனன்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy).

2 comments:

  1. நோபல் பரிசு பெற எளிய வழிகள்
    என்ன உள்ளது?




    ஒன்று நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும், எதுவும்

    செய்திட வேண்டாம், சொன்னால் போதும், சொன்னதற்கு நேர் மாறாக

    நடந்தாலும் கவலையில்லை. ஒபாமா போல அதிர்ஷ்டம் இருந்தால்

    பதவியில் இருக்கும் போதே கிடைக்கும். இல்லையென்றாலும் கண்டிப்பாக செத்துப் போவதற்கு முன்பாக கிடைக்கும் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஒரு நோபல் பரிசு பார்சல்)


    அமெரிக்க ஜனாதிபாதியாக முடியாத துரதிர்ஷ்டசாலிகள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கும் வாய்ப்பு உண்டு.

    என்ன நீங்கள் கடுமையான கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க

    வேண்டும். கம்யூனிச நாடுகளில் மனித உரிமை மீறல்

    நடக்கிறது என்று பினாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    அந்த பினாத்தலை அபுகாரிப் அல்லது குவாண்டனமோ

    சிறைச்சாலை வாசல்களிலிருந்து செய்தால் உத்தமம்.


    சந்தேகமிருந்தால் இந்த பட்டியலைப் பாருங்கள்


    ஆண்ட்ரே சகரோவ்,

    லெக் வாலேசா,

    தலாய் லாமா,

    மிகையில் கோர்பசேவ்




    இந்த வரிசையில் லியு ஜென்போ என விருது கொடுத்து

    நோபல் பரிசுகுழு தனது கம்யூனிச எதிர்ப்பு நிலையை

    மீண்டும் நிலை நாட்டி விட்டது.




    யாசர் அராபத்திற்கும் நெல்சன் மாண்டேலாவிற்கும் கூட

    விருதளித்தபோது கூடவே இஸ்ரேல் மற்றும் தென் ஆப்பிரிக்க

    அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து விருதளித்து இவர்களுக்கு தனி

    முக்கியத்துவம் கிடைக்காமல் பார்த்துக்கொன்டவர்கள்தானே

    இவர்கள்!




    இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை அடுத்து பெற

    தகுதியானவர் மம்தா பானர்ஜிதான். மாவோயிஸ்டுகளோடு இணைந்து

    கம்யூனிஸ்டுகளை கொடூரமாக கொன்று குவிக்கும் அவரைத் தவிர

    இந்த விருதைப் பெற யாருக்கு தகுதி உள்ளது ?




    தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர் என்ற முறையில் நரேந்திர மோடியை விட மம்தாவிற்குத்தான் கூடுதல் மதிப்பெண்கள்.

    ReplyDelete
  2. ஒட்டு போட்டாச்சு

    பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"