இன்று - டிசம்பர் 14
நிகழ்வுகள்
- 1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
- 1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
- 1884 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
- 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
- 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
- 1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
- 1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
- 1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
- 1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
- 1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
- 1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
- 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
- 1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
- 2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
- 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
பிறப்புக்கள்
- 1503 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
- 1546 - டைக்கோ பிரா, டேனியப் பிரபு (இ. 1601)
- 1895 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (இ. 1952)
- 1924 - ராஜ் கபூர், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 1988)
- 1946 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)
- 1953 - விஜய் அமிர்தராஜ் இந்திய டென்னிஸ் வீரர், நடிகர்.
- 1979 - சாமர சில்வா, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர்
இறப்புகள்
- 1799 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முதலாவது அரசுத் தலைவர். (பி. 1732)
- 2006 - அன்டன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)
சிறப்பு நாள்
- இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"