Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/13/2010

இவரை தெரிந்துகொள்வோம் - ஜூலியன் அசான்ச் (Julian Assange)

 இவரை தெரிந்துகொள்வோம் -  

ஜூலியன் அசான்ச் (Julian Assange)

பிறப்பு 1971 (age 38–39)
டவுன்ஸ்வில், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
விருதுகள் Economist Index of Censorship Award (2008), பன்னாட்டு மன்னிப்பு அவையின்  ஊடக விருது (2009), சாம் ஆடம்ஸ் விருது (2010)
தொழில் விக்கிலீக்ஸ் ஆசிரியர், பேச்சாளர்.
பிள்ளைகள் டானியெல் அசான்ச்.


ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும்ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.

அசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் தொடர்பான அண்மைய செய்திகள்

  • 30 நவம்பர் 2010: விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அடைக்கலம் தர எக்குவடோர் முன்வந்தது
  • 28 நவம்பர் 2010: விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை
  • 21 நவம்பர் 2010: விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை
  • 23 அக்டோபர் 2010: ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' வெளியிட்டது.
  • 3 டிசம்பர் 2010: விக்கிலீக்ஸ்: ஈழப்போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ச பொறுப்பு என அமெரிக்கா கருதுகிறது.
  • 7 டிசம்பர் 2010: விக்கிலீக்ஸ் யூலியன் அசான்ச் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் 

    0 comments:

    Post a Comment

    அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"