Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/20/2010

கிரிக்கெட் கடவுளை வணங்கி வாழ்த்துவோம்

சச்சினின் டெஸ்ட் சதங்கள்

      
              இதுவரை சச்சின் எடுத்துள்ள 50 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது:
 1990 
1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை).

1992
2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)
3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)
4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)
இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.

1993
5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)
6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி).

1994
7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)
8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை).

1996
9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)
10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை).

1997
11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)
12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)
13. ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)
14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை).

1998
15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)
16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)
17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி).

1999
18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)
முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)
20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)
21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)
22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி).

2000
23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)
24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை).

2001
25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)
26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)
27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை).

2002
28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)
29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.
30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)
31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை).

2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை.

2004
32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)
33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)
34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி).

2005
35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.
இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்.

2006
2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.

2007
36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)
37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி).

2008
38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்
39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)
40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)
41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.
இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்.

2009
42. மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது
43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை).

2010
44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)
45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)
46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)
47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)
48. சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)
49. அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)
50. டிசம்பர் 19 சென்சுரியன் ‌ தென்ஆப்ரிக்கா.

அப்படியே என்னோட புதியபதிவை படித்து கருத்தை சொல்லுங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"