Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/22/2011

கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க!!!

டற்பயிற்சி குறித்த ஆர்வத்தைத் தூண்டவும், ஆரோக்கியக் கல்விக்கு வழிவகுக்கவும் பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் தொடங்கப்பட்டன. 

பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் பள்ளி சார்பில் அணியை உருவாக்குவதே பிரதானப் பணியாகும். ஆனால், அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனி அணிகள் கொண்ட பள்ளிகள் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு சிலவே இருக்கின்றன.அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பின்வரும் விளையாட்டுப் பாடவேளைகளை அறிவியல், கணிதம் என ஏதேனும் ஒரு துறை ஆசிரியர் ஆக்கிரமித்துக் கொள்வதும் கண்கூடு. 

இதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருக்கும் கிடுக்கிப்பிடி மேலும் அதிகம்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதால்தான் தேர்வுக் கூடங்களில் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
இதனால்தான் நூற்றுக்கணக்கான சச்சின்களும், தன்ராஜ்பிள்ளைகளும், பி.டி.உஷாக்களும் சமூகத்துக்குத் தெரியாமலேயே வேறு துறைகளுக்குள் நீர்த்துப்போய் விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்கத்தை அடைவது இயலாததாகவே ஆகிவிடும்.

கல்வித் துறையில் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். சமச்சீர்கல்வி முழுமையாக்கப்பட உள்ள தமிழகத்தில், விளையாட்டு விதிமுறைகளும் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவது அவசியம்.

தேர்தல் ஜுரம் பற்றியிருக்கும் தமிழகத்தில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறையையும் கருத்தில் கொண்டால்(  கலைஞரின் கதாநாயகியில் இல்லை), தேசிய அணிகளில் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.

43 comments:

  1. இருங்க மூச்சு விட்டுக்குறேன்..................
    இனி போயி படிச்சுட்டு வாரேன் என்ன....

    ReplyDelete
  2. @ MANO நாஞ்சில் மனோ

    ஏன் இந்த கொலைவெறி பாஸ்

    ReplyDelete
  3. //இதனால்தான் நூற்றுக்கணக்கான சச்சின்களும், தன்ராஜ்பிள்ளைகளும், பி.டி.உஷாக்களும் சமூகத்துக்குத் தெரியாமலேயே வேறு துறைகளுக்குள் நீர்த்துப்போய் விடுகின்றனர்//

    மிகவும் சரியாக சொன்னீர்கள் மக்கா.....

    ReplyDelete
  4. அழுகுண வாதிங்களுக்கு அவங்க வெலயாட்டே பெருசா இருக்குறதுனால இதை காணுவதில்லை போல நண்பா!

    ReplyDelete
  5. இப்படித்தான் முன்பு மதிப்பெண் பெற்றுத்தரும்
    பாடங்களுககு முக்கியத்துவம் கொடுக்க
    நீதிபோதனை வகுப்புகளில் கை வைப்பார்கள்
    இப்போது விளையாட்டு வகுப்புகளுக்கு
    விடைகொடுக்கிறார்கள்
    நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //கல்வித் துறையில் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். சமச்சீர்கல்வி முழுமையாக்கப்பட உள்ள தமிழகத்தில், விளையாட்டு விதிமுறைகளும் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவது அவசியம்.//

    அருமை.நம்ம ஆட்சியில நீங்கதான் விளையாட்டுத்துறை அமைச்சர்!

    ReplyDelete
  7. சூப்பர் நண்பா!

    இன்னிக்கு ஈவ்னிங்கே இதப்பத்தி டிரங் கால் புக் பண்ணி டெல்லியில பேசிடுறேன். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க.

    ReplyDelete
  8. நாஞ்சில் மனோ செம மப்பு போல.. ஹா ஹா

    ReplyDelete
  9. டும்டும்...டும்டும்...

    அரசியல் ஒரு முட்டாள்களின் விளையாட்டுக்களம்
    அந்த விளையாட்டில் இந்த விளையாட்டு எடுபடாது...
    நாம் எல்லோரும் வேடிக்கை பார்க்கும் அதிக பயங்கர.......

    ReplyDelete
  10. அரசியல் ஒரு முட்டாள்களின் விளையாட்டுக்களம்

    ReplyDelete
  11. //நர்மதன் சொன்னது…
    @ MANO நாஞ்சில் மனோ

    ஏன் இந்த கொலைவெறி பாஸ்//

    வடை கிடைச்ச சந்தோசத்துல கையும் ஓடலை கம்பியூடரும் ஓடலை அதனால வந்த வெறி இது ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  12. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    நாஞ்சில் மனோ செம மப்பு போல.. ஹா ஹா//

    யாருலேய் அங்கே பிச்சிபுடுவேன் பிச்சி ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  13. //தமிழ் 007 சொன்னது…
    சூப்பர் நண்பா!

    இன்னிக்கு ஈவ்னிங்கே இதப்பத்தி டிரங் கால் புக் பண்ணி டெல்லியில பேசிடுறேன். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க.//

    சோனியாராஜீவ்கான்'னுக்குதானே...?

    ReplyDelete
  14. நூற்றுக்கணக்கான சச்சின்களும், தன்ராஜ்பிள்ளைகளும், பி.டி.உஷாக்களும் சமூகத்துக்குத் தெரியாமலேயே வேறு துறைகளுக்குள் நீர்த்துப்போய் விடுகின்றனர்//

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  15. என் பள்ளி நாட்களில் ’compulsory games’ என்று ஒரு வகுப்பு உண்டு!

    ReplyDelete
  16. நான் நல்லா பம்பரம் விடுவேன் என் விளையாட்டு ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிட்டார்கள் ...................

    ReplyDelete
  17. தேர்தல் ஜுரம் பற்றியிருக்கும் தமிழகத்தில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறையையும் கருத்தில் கொண்டால்( கலைஞரின் கதாநாயகியில் இல்லை), தேசிய அணிகளில் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.//

    வணக்கம் சகோதரம், எப்படி நலமா?
    சமூகத்தில் விளையாட்டுத்துறையினூடாக மாணவர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தி, அகில இந்திய ரீதியிலே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனும்ம் உங்களின் விழிப்புணர்வு வரவேற்கத்தக்கதே. ஆனால் சமூக அக்கறை இல்லாமல், உழைக்கும் மக்களையும், சிந்திக்கும் மக்களையும் பின் தங்க வைத்து முன்னேற விடாமல் எல்லாம் இலவசம், இலவசம் என வழங்கும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதிர்கால இந்தியா பற்றிச் சிந்திக்காது என்பதே என் கருத்து. எதிர்கால இந்தியா பற்றி இந்த இலவசங்கள் சிந்தித்தால் அகில இந்திய ரீதியில் இந்தியாவின் சனத் தொகைக்கு ஈடாக இன்று வரை இந்தியா பெரு முன்னேற்றம் கண்டு, பல சாதனைகளைப் படைத்திருக்கும்.

    ReplyDelete
  18. //அஞ்சா சிங்கம் சொன்னது…
    நான் நல்லா பம்பரம் விடுவேன் என் விளையாட்டு ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிட்டார்கள்//


    நீ என் இனமடா சிங்கம்....

    ReplyDelete
  19. நல்ல விஷயம்,கருன்.வாழ்த்துக்கள்.தமிழ் 10 கெடைக்கல.

    ReplyDelete
  20. சென்னை பித்தன் சொன்னது…

    என் பள்ளி நாட்களில் ’compulsory games’ என்று ஒரு வகுப்பு உண்டு!..//

    உண்மை

    ReplyDelete
  21. //தேர்தல் ஜுரம் பற்றியிருக்கும் தமிழகத்தில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறையையும் கருத்தில் கொண்டால்( கலைஞரின் கதாநாயகியில் இல்லை), தேசிய அணிகளில் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.//

    பேட் மிட்டனில் மாவட்ட அளவில் பல போட்டிகளில் பள்ளி சார்பாக கலந்து கொண்டு சில போட்டிகளில் வென்றும் இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வாக்குறுதிகளை இருவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

    சிறந்த பதிவு.

    ReplyDelete
  22. தேவையான பதிவுதான். பெரும்பாலும் இது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை.

    ReplyDelete
  23. குடும்ப நிறுவனத்திற்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்னு சொல்லுங்க அப்பறம் பார்ப்போம் ஒதுக்கீடு விஷயத்தை.

    ReplyDelete
  24. கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  25. யாரும் கவனிக்காத விஷயத்தை நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கீங்க..நன்றி வாத்யார்.

    ReplyDelete
  26. நல்ல கருத்து.

    ReplyDelete
  27. கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"