Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/26/2011

விடியலின் விநாடிகள்....


டி மாதம்
எங்கள் ஊர் அம்மன்
திருவிழா காலங்களில்
ஓரு நாள்...!

முதல் பிரசவத்திற்காக
மருத்துவமனையில்
மனைவியுடன் 
இருக்க நேர்ந்த
ஓரு நாள்...!

னுபவித்திருக்கிறேன்
விடியலின் விநாடிகளை...!

நாளின் வேலைகளைப் போல்
கடந்து போகும்
தூக்கமும், விழிப்பும்
அலுப்பூட்டுகின்றன...!

மொத்த வாழ்வும்
ஒன்றிரண்டு நாட்களில்
நீள்வது போல்...!


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், 
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

20 comments:

  1. தல...புரியல..கொஞ்சம் விளக்குங்க...

    ReplyDelete
  2. யதார்த்தமான விஷயம்யா மாப்ள கலக்கிட்ட

    ReplyDelete
  3. //மொத்த வாழ்வும்
    ஒன்றிரண்டு நாட்களில்
    நீள்வது போல்...!
    // azakiya witharsanamaana varigal

    ReplyDelete
  4. சனிக்கிழமையை சமாளிச்சாச்சு,, ஹா ஹா

    ReplyDelete
  5. கவிதை அருமை! உண்மைதான் இரவு நீண்டது, வித்தியாசமானது! பகலின் போலி வேசங்கள் இல்லாதது!

    ReplyDelete
  6. இது தான் வாழ்க்கையின் நீளம்...

    ReplyDelete
  7. //மொத்த வாழ்வும்
    ஒன்றிரண்டு நாட்களில்
    நீள்வது போல்...!//

    Attakaasam!! ;-)) super!! ;-)

    ReplyDelete
  8. நாளின் வேலைகளைப் போல்
    கடந்து போகும்
    தூக்கமும், விழிப்பும்
    அலுப்பூட்டுகின்றன...!

    எனக்கும்தான்! எனி ஐடியா?

    ReplyDelete
  9. தனித்திருக்கும் இரவுகளில் சிந்தனையின் வேகம் கடந்து வந்த நாட்களை அசை போட்டு, எதிர் வரும் நாட்களை எடை போட்டும் விடியல் வாராத நீண்ட இரவாகக் காட்டும். நெடு நாள் கழித்து ஊர் திரும்பும் முந்தைய நாளும் இப்படித்தான் இருக்கும். அழகான நினைவூட்டல் நன்றி.

    ReplyDelete
  10. தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
    நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
    பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
    ஓட்டு போட மறக்காதீர்கள்..//
    சார் ஒரு குறையை சுட்டி காட்டுறேன்..இந்த ஸ்லோகனை அடிக்கடி பார்த்து போரடிக்குது மாத்துங்க ஹிஹி

    ReplyDelete
  11. அருமையான கவிதைகள்

    ReplyDelete
  12. நல்லாருக்கு வாத்யாரே

    ReplyDelete
  13. என்னய்யா வாத்தி சிம்பிளா சொல்லி முடிச்சிட்டீங்க....

    ReplyDelete
  14. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    சனிக்கிழமையை சமாளிச்சாச்சு,, ஹா ஹா//

    அப்போ திட்டம் போட்டுதான் நடக்குதோ....

    ReplyDelete
  15. // ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
    நாளின் வேலைகளைப் போல்
    கடந்து போகும்
    தூக்கமும், விழிப்பும்
    அலுப்பூட்டுகின்றன...!

    எனக்கும்தான்! எனி ஐடியா?//

    ஐடியாவா ஒ இருக்கே தற்கொலை செய்து கொள்ளவும் ஹே ஹே ஹே ஹே எப்பூடி.....

    ReplyDelete
  16. ரொம்ப நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  17. //முதல் பிரசவத்திற்காக
    மருத்துவமனையில்
    மனைவியுடன்
    இருக்க நேர்ந்த
    ஓரு நாள்...!//

    வாழ்வின் விடியல் அல்லவா அது!

    ReplyDelete
  18. அவ்வப்போது வலைத்தளம் சிறந்த கவிஞர்களை அடையாளம் காட்டிப்போகிறது அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பிடித்த கவிதைகள் உங்களுடைய கவிதைகள்.. இந்தக்கவிதை ஒவ்வொரு நாளையும் யுகமாக கடத்தும் என் போன்ற வெளிநாட்டில் வசிக்கும் நபர்களுக்கும் ஒற்றுப்போகும்..!

    //முதல் பிரசவத்திற்காக
    மருத்துவமனையில்
    மனைவியுடன்
    இருக்க நேர்ந்த
    ஓரு நாள்...!//

    ஒவ்வோரு கணவனும் அனுபவித்த அனுபவிக்கப்போகும் தருணங்கள்..!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"