Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/28/2011

அடிமையாக்கும் “சினிமா” எனும் கனவுத் தொழிற்ச்சாலை.


 “சுழன்றும் ஏர் பின்னது உலகம் ” என்றார் வள்ளுவர். இன்று எல்லாரும் திரைப்படத் துறையின் பின்னே என்பது நிதர்சனம். வியாபாரம் செய்ய வந்த அயல் நாட்டுக்காரன், நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாகத் தோன்றிய திரைப்படம், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்.

திரைப்படத்தில் ராமன், கிருஷ்ணன் என்று வேடமிட்டு வந்தவரை, தெய்வமாகவும், அட்டைக் கத்திப் பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும், ஏழை, விவசாயி, உழைப்பாளி என நடித்தவர்களை, தங்களில் ஒருவராக, ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ, அன்றையிலிருந்து நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும், தங்கள் செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி, மெல்ல, மெல்ல அரசியலில் அடி எடுத்து வைத்து, ஆட்சி பீடத்தைப் பிடிக்கத் துவங்கினர்.விபத்தாக நிகழ்ந்தது, விதியாக மாற்றப்பட்டது. நாளடைவில், அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை. 

அதற்குப்பின் நடந்து வருவதெல்லாம், திரைப்படத்துறையினருக்காக, திரைப்படத்துறையினரைக் கொண்டு, திரைப்படத்துறையினரால் நடத்தப்படும், "சினிநாயகம்!'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது போல், ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும், நண்பர்களும், பல்வேறு வகைகளில், திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர். 

அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சியில் தஞ்சம் அடைகின்றனர். ஆட்சி மாறினால், இவர்களுக்கு ஆதாயம்; மாறாவிட்டால், வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம். ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் இருப்பது, அந்தோ... பொது மக்கள் வாழ்வுதான்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், சினிமாக்காரர்கள் நலமுடன், வளமுடன் வாழ ஆவன செய்வர்; அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்; அது போதாதா? விலைவாசி ஏற்றத்தால், மக்கள் அவதிப்பட்டாலோ, மின் வெட்டு பிரச்னையால், மாணவர்கள் அல்லலுற்றாலோ நமக்கென்ன? திரைப்படத் துறையினருக்குக் குறையில்லாமல் பார்த்துக் கொண்டாலே, நாடு சுபிட்சம் அடையாதோ ?

நடுநிலையாளர்‌களே சிந்தியுங்கள்...


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், 
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

15 comments:

  1. நண்பர்களே...பத்தாம் வகுப்பு தேர்வுப் பணிக்கு செல்வதால் கருத்துகளுக்கு பதில் கூற வாய்ப்பில்லை... மாலை சந்திப்போம்...

    ReplyDelete
  2. சினிமா வீரர்களை சீனுக்கு கையேந்துபவர்களாக சித்தரித்திருப்பது பெரிய துரோகம் மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  3. I think the only country in the World which drowned very deeply into the imaginary word called "Cinema" is India. One can easily find the extent of sucess of this medium from the disability of an average Indian mentality to differentiate the reality which is entirely different from what the 70mm screen shows him. And, the worst part of it is that the affected community is not willing to realize that.

    Even we can see these kind of things here and there across the globe, like Arnold in US. But it's damn sure but those will be never like such nonsensical as we do.

    Nowadays, this charismatic admirations become so superstitious even in this modern world. We all are responsible for such ugliest development for which we should be ashamed of ourselves.

    A well penned, thoughtful and much required words at this juncture, Karun...!

    ReplyDelete
  4. சிந்திக்கட்டும் மக்கள்.

    ReplyDelete
  5. சூப்பர் மேட்டருங்க!

    இந்த கருத்துக்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன்

    ReplyDelete
  6. இவுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ் . திரைத்துறையில் இருந்த M.R.ராதா தான் சொன்னார் " நாங்களெல்லாம் கூத்தாடிகள் . நீங்கள் கொடுக்கும் பணத்திற்காக நடிகிறோம் . நீங்க செய்வதைப்போல இதுவும் ஒரு தொழில் . அவ்வளவுதான் . இதற்கு மேல் எதுவுமில்லை , அப்புறம் ஏன் கூத்தாடியை தலைவன்னு கொண்டாடுறீங்க . பிடித்த நடிகர் படம் படம் வருகிறதா ,போய் பாருங்க , கைதட்டுங்க . அதுக்கப்புறம் தலைவன் தலைவன்னு அலையாதீங்க " . ஊடகங்களும் இதற்கு முக்கிய காரணம் . சினிமா , அரசியல் இதைத் தவிர்த்து மற்ற விசயங்களில் எந்த ஊடகமும் ஆர்வம் காட்டுவதில்லை . எல்லா வார இதழ்களின் அட்டைப்படங்களிலும் சினிமா துறை சார்ந்தவர்களின் படங்கள் தான் இடம் பெறுகின்றன . அவர்கள் என்னோவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . அவர்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அதிகமாக எழுதுகின்றன . அரசியல்வாதிகளாக இருந்தாலும் , சினிமாக்காரர்களாக இருந்தாலும் , கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் முதலில் அவர்களெல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் . இந்த மன நிலை எல்லோருக்கும் வர வேண்டும் . பள்ளிகளில் இருந்து நாம் இதைத் தொடங்க வேண்டும் ...

    கருண் அவர்களுக்கு வணக்கம் , அரசியல் மேடை எனது வலைப்பதிவு . இதுநாள் வரை எனது வலைப்பதிவை தொடர்ந்ததற்கு நன்றி . அரசியல் மேடை வலைப்பதிவை எனது முந்தய வலைப்பதிவான செல்வராஜ் http://www.jselvaraj.blogspot.com/ உடன் இணைத்து விட்டேன் . பிடித்திருந்தால் உங்கள் ஆதரவைக் கொடுங்கள் . நன்றி .

    ReplyDelete
  7. அய்யோ ஏன் சார்?

    ReplyDelete
  8. பொழுதுபோக்கு அம்சமாகத் தோன்றிய திரைப்படம், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்.
    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  9. மனதில் புரிந்து பிரித்தெடுக்கும் பக்குவம் வந்துவிட்டால் எதுவும் யாரையும் அடிமைப்படுத்த முடியாது !

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"