Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label இவரை தெரிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label இவரை தெரிந்து கொள்வோம். Show all posts

4/08/2011

கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்!


மிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடகங்களில் வெளிவந்திருந்தது. 

இதுவரை ரமேஷ் தொடர்பாக 6 காணொளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த காணொளிகள் பொய்யானது எனவும் ரமேஷ் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இறந்துவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
செய்திஉதவி கிங்தமில்.காம். 

12/19/2010

ஒரு வெற்றி பயனத்தின் கதை

அம்பானியின் வெற்றி 



தலித்துகளை பின்பட்டவர்களாக வைத்திருப்பது பிறப்பு இல்லை என்பதை திருபாய் அம்பானி உரத்துச் சொன்னது மட்டுமில்லை, தான் சொன்னதை நிரூபித்தும் காட்டினார். வார்ட்டன் டான் பதக்கத்தை 1998இல் பெறும்போது, திருபாய் அம்பானி, 'பிறப்பு என்பது இன்றைய ஜனநாயக இந்தியாவில் ஒரு முக்கியமான விஷயம் இல்லை.
 

திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் ' என்று சொன்னார். ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் மகனாக குஜராத்தில் சோர்வாத் நகரத்தைச் சார்ந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்த அம்பானி, இன்றைக்கு லட்சக்கணக்கான தலித்துகள் செய்வது போல, காய்கறி விற்க ஆரம்பித்துத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஆனால் அவர் அதிலேயே உழலவில்லை. பிறகு வளைகுடாவில் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஊற்றும் பணியாளராக ஆனார். பிறகு குமாஸ்தா ஆனார். அந்த பாதுகாப்பான வேலையை விட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்து தன்னுடைய எல்லா சேமிப்பையும் போட்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார்.

அவர் இறக்கும்போது, ரிலயன்ஸ் குரூப், மத்திய அரசாங்கத்தின் வருட வருமானத்தில் சுமார் 5 சதவீதத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக, பிறப்பு மட்டுமே நமது முன்னேற்றத்தை நிர்ணயிக்குமென்றால், இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது.



ஆனாலும், அதே திருபாய், பிறப்பு ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று நம்பினார். 'பிஸினஸ் மஹாராஜாக்கள், புரட்சிகரமான மாறுதலை மேலாண்மை செய்வது எப்படி ' என்ற புத்தகத்தை எழுதிய கீதா பிரமால் கூற்றுப்படி, திருபாய் சொல்வது இது: 'ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு சுழலுக்குள் பிறக்கிறார், தன் வாழ்நாள் முழுவதும் அந்தச் சுழலுக்குள் தான் அவர் இருக்கிறார்.

உலகம் என்பது ஏராளமான சுழல்களால் ஆனது, கீழே பியூன்களும், குமாஸ்தாக்களும் நிறைந்தும், மேலே தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் நிறைந்தும் இது இருக்கிறது. வெற்றிகரமாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் சுழலை நீங்கள் உடைத்துவிட்டு, உங்களுக்கு மேலே இருக்கும் ஒரு சுழலுக்குள் நுழைய வேண்டும். அந்தச் சுழலுக்குள் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, அதனையும் உடைத்து அதற்கு மேலே இருக்கும் சுழலுக்குள் நுழைய வேண்டும். உச்சிக்குப் போகும்வரை மேலே இருக்கும் சுழல்களை உடைத்து நுழைந்துகொண்டே இருக்க வேண்டும். '

         ஆகவே, பிறப்பு முக்கியமில்லை ஆனால் முக்கிய்மானதும்தான். ஒருவர் பள்ளிவாத்தியாருக்குப் பிள்ளையாகப் பிறக்கலாம். ஆனால் அவரே பெரும் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் ஆகலாம். இருப்பினும், ஒருவர் ஒரு சுழலுக்குள்தான் பிறக்கிறார். ஒருவரின் வாழ்க்கைப் பயணம், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்று சொல்லலாம். திருபாய் பிறக்கும்போதே பெரும் தொழிலதிபராக ஆகும் கனவுடன் பிறந்தவர்.

அவர் தன்னுடைய கனவை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருந்தார். மனத்தில் பிறக்கும் நோக்கம், உள்மன பரம்பரைச் சொத்து, குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்தே, ஏன் கருப்பப்பையிலிருந்தே, பெரும் தொழிலதிபராகும் கனவு அவர் மனத்தில் விதைக்கப்பட்டுவிட்டது.

எகானமிக் டைம்ஸ் இதழின் பரிசை பெற்றுக்கொள்ளும்போது, 'இந்த பரிசை, ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் மகனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்த மட்டில் இந்த பரிசுக்கு ஒரு எளிய அர்த்தம்தான் இருக்கிறது. கனவு காண்பவர்கள், உலகத்தையே வெற்றிபெறலாம் என்பதுதான் அது ' கத்தியவாடிப் பகுதிக்காரர்களுக்கே எதையும் துணிந்து கனவு காணும் உணர்வு இருக்கிறதோ என்னவோ. அது தான் திருபாய்க்கும் தொத்திக் கொண்டதோ என்னவோ ? இந்தக் கனவைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருந்தார். இந்தக் கனவு, ஒரு மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட கட்டையைப்போல, அவரது சுழலில் சுற்றவைத்தது.

பரம்பரைச் சொத்து என்பது இரண்டு பரிமாணம் கொண்டது. சமூகப்பரிமாணம், உள்மனப் பரிமாணம். திருபாயின் தந்தை பள்ளிக்கூட வாத்தியார். அந்த சமூக பரிமாணத்தை தாண்டிவிடலாம். ஆனால் உள்மனப் பரிமாணத்தை தாண்டவியலாது. இந்த பிரிவு இன்றைய தலித்துகளுக்கு பெரும் முக்கியமான விஷயம். அவர்கள் சமூகம் சொல்லும் பிறப்பால் வரும் பாரபட்சத்தைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில இடங்களில்,   டீக்கடைகளில் தனி டம்ளரில்
டீ குடிக்க வேண்டும். இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும், இது போன்ற தீய பழக்கங்களை தீய பழக்கங்கள் என்று ஒத்துக்கொண்டு அதனை நீக்க முயலும் இந்திய சமூகத்தைப் பாராட்டவேண்டும்.

ஆனால், உள்மனப் பரம்பரைச் சொத்து என்னவாயிற்று ? எந்த விதமான மேல்ஜாதி ஆட்களும், தலித்துக்களை திருபாய் போலக் கனவு காணக்கூடாது என்று தடுக்கவில்லையே ?
தமிழ்நாட்டில், தலித் அறிவு ஜீவிகள் நடத்திய கூட்டம் ஒன்றில், ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் இந்தியாவில் தலித் கோடாஸ்வரர்கள் இல்லை ? கார்களில் பெட்ரோல் போடும், எண்ணெய் டாங்கர்கள் சாரி சாரியாகச் செல்வதை பார்க்கும் லட்சக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள்.

ஏன் அவர்களில் யாரும், திருபாய் போல பெட்ரோலிய எண்ணெய் தொழிலதிபர்களாக ஆகக் கனவு காணவில்லை ? காரணம், உள்மனப் பரம்பரைச் சொத்து. அவர்களது பெற்றோர்கள் இப்படிக் கனவு காண தங்கள் குழந்தைகளை உந்தவில்லை.



அவர்களது பெற்றோர்கள் தங்களுக்கு ரிசர்வேஷன் பெற்றுக்கொள்ளவும், பிரமோஷன்களில் முன்னுரிமை வாங்குவதிலும் மும்முரமாக இருந்தார்கள். தலித் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் கனவு, அரசாங்க வேலையை பெற்றுக்கொண்டு இறுதிவரை இன்பமாக வாழ்வது. இதன் விளைவு, இவர்கள் எப்போதும் அம்பானியாக முடியவே முடியாது.

அதிகபட்சம், பெருமையான வேலைக்காரர்களாக ஆகலாம். தங்களது வேலைக்காரத்தனத்தின் சுழலிலிருந்து விடுபடவே முடியாது. அதாவது தலித் , தாழ்வு மனப்பான்மை. இதைத்தாண்டி வைஸ்ய மனப்பான்மைக்குப் போக முடியாது. தலித்துகளின் உண்மையான விடுதலை, பெருமையான வேலைக்காரர்களாக ஆகாமல், வியாபாரம், அரசியல் போன்ற சுழல்களில் ஏறுவது. நமக்கு நிறைய அம்பேத்கார்களும், மாயாவதிகளும் வேண்டும்.


முக்கியமாக வியாபாரத்தில் இது போன்ற முயற்சி கொண்ட தலித்கள் தாவை. இந்த வேலை தலித் தாய்மார்கள் செய்ய வேண்டிய வேலை இது. தங்கள் குழந்தைகளின் மனத்தில் இந்தக் கனவுகளை ஏற்ற வேண்டும். இது மட்டுமே தலித்துகளை உண்மையாய் விடுதலை செய்யும்.

கனவுகளே ஒருவரது வர்ணத்தை நிர்ணயிக்கிறது. மறைகளில் இருக்கும் சரியான வார்த்தை வாஸனா அல்லது, ஆழமான ஆசைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவுகளுடனும் ஆசைகளுடனும் பிறக்கிறார்கள். இவை பிறப்பின் போது கூட வந்தவையா, அல்லது சென்ற பிறப்பில் பெற்றதா, சிறுவராக இருக்கும்போது பெற்றதா என்பதெல்லாம் முக்கியமில்லாதது. திருபாய் சொல்வது போல, இப்படிப்பட்ட ஆசைகளே, ஒருவரது சுழலை நிர்ணயிக்கின்றன. அவரது வாஸனா, பெரும் தொழிலதிபராக ஆவது. அதுவே அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நிர்ணயித்தது.


அரசாங்க வேலைகளில் கிடைக்கும் ரிசர்வேஷன் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி. ஒரு புறம், தலித்துகள் சுயமரியாதை பெற உதவுகின்றன. ஒரு தலித் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் பல மேல்ஜாதி குமாஸ்தாக்களை மேலாண்மை செய்வது ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது. ஆனால், ஒரு ஐஏஎஸ் ஆபீஸரும் ஒரு தலித் தான். அவரால் சொந்தமாக ஒரு கொள்கையை வரையறுக்க முடியாது. பெருமை
படைத்த வேலையாள் அவ்வளவே.

திருபாய்க்கு ரிசர்வேஷன் கிடைத்திருந்தால், அவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் அமைச்சருக்கு உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். இந்த ரிசர்வேஷன்கள் தலித்துகளை இன்று பின்னால் இழுக்கின்றன - தலைமைப் பொறுப்புக்கு பதில் பின்செல்லச் செய்கின்றன. தலித்துகள் இதைவிட்டு வெளியேறவேண்டும். அவர்கள் கனவு காணவேண்டும், அவர்கள் கனவு நனவாவதற்கும் , முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது.

12/16/2010

கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்


கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
Sachin Ramesh Thendulkar
பிறப்பு - ஏப்ரல் 24, 1973
  
            தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

           சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது 

   
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது.
     
   1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் இது வரை 14,366 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,598 (டிசம்பர் 2010 வரை) ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

கிரிக்கெட் வாழ்க்கை

  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
  • 1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
  •  
  •  1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார்  
  • 1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

  • 1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
  • 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார். அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
  •  2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணமானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
  • 2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
 
  • 2007-2008-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
  • 2008 அக்டோபர்17-ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 40 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.
  • ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2010 -இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல். 
  • 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார். 
  • ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134, டெஸ்ட் போட்டிகளில் 106. மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின். 
சோதனைகள்
  • இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
  • 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார். ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.(இந்தியப் பாராளுமன்றம் வரை இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது).
  • 2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
  • 2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.
 விருதுகள
  • இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 2008 -க்கான பத்ம விபூஷன் (Padma Vibhushan)
  • ஐசிசி ஒருநாள் சர்வதேச உலக கோப்பை XI (ICC World ODI XI): 2004, 2007
  • 2003 உலக கோப்பை கிரிக்கெட் (2003 Cricket World Cup) போட்டிகளில் தொடர் நாயகன்
  • 1997ஆம் ஆண்டுக்கான விஸ்டென் கிரிக்கெட் வீரர் (Wisden Cricketer of the Year) 
 
  • இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான 1999ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri)
  • கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான சாதனைகளுக்காக 1994 -ல் இந்திய அரசால் அர்ஜூனா விருதால் (Arjuna Award) கௌரவிக்கப்பட்டார்
  • விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக 1997-98 இந்தியாவின் உயர்ந்த கௌரவமான ராஜீவ்காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது அளிக்கப்பட்டது

ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்

2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!

   “இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

புகழுரைகள்

  • உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.
  • ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
   
Sachin Tendulkar Cricket Statistics
Batting Records Tests ODI’s T20’s
Matches 174 442 1
Innings 284 431 1
Runs Scored 14366 17598 10
Batting Averages 56.55 45.12 10.00
Strike Rates
86.26 83.33
100s 49 46 0
50s 59 93 0
6s 61 185 0
Highest Score 248* 200* 10
Bowling Records
Balls Overs Bowled 4018 8020 15
Wickets 44 154 1
Bowling Average 52.77 44.26 12.00
Economy Rate 3.46 5.10 4.80
Best Bowling 3/10 5/32 1/12
Catches 106 134 1


சச்சினின் விருப்பம்

     “இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட… முறியடிக்க முடியாத சாதனை என்று எதுவும் இல்லை. முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனது சாதனைகளை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார் டெண்டுல்கர்.


சச்சினிக்கு 200 ரன்னுக்கு கிடைத்த ‌கௌரவம்


சச்சின் சாதனை செய்ததை கவுரவிக்கும் விதத்தில்  குவாலியரில் உள்ள ஹூரவாலி சாலைக்கு  சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார். 



இனி கடைசி விருப்பமாக சச்சின் அணியில் இருக்கும் போதே உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்...

வரும் 2011 உலகக்கோப்பையை நம் அணி வென்று விட்டால் சச்சின் கிரிக்கட்டின் பிதாமகன் என்ற உச்சியில் இருந்து யாராலும் இறக்கமுடியாது...


அப்படியே என்னோட புதியபதிவை படித்து கருத்தை சொல்லுங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

12/15/2010

இந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவு பல போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் எனவே  பெரிய பதிவாகவே தருகிறேன். 

VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7000 கி.மீ. நீண்ட கடல் எல்லைக் கொண்டது . வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லையைப் பகிரிந்துக்கொண்டுள்ளது . இலங்கையும், மாலத்தீவும் இந்திய கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக் கடலையும் தெற்கில்இந்தியப் பெருங்கடலையும் கொண்ட ஒரு தீபகற்பம் ஆகும்.

நூறுக் கோடி மக்கள்த் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும்.

இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின .பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 , அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது. 
இந்தியாவின் வரலாறு :

கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 வருடங்களுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக் குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. 

காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இப்பிரதேசத்தில் மிக முக்கியத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. 

முந்தைய, பரவலாகப் பரிச்சயமான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை ஆக்கிரமிப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது.

வடமேற்கிலிருந்து எந்த பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும் , சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்த கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் நிரூபிக்கப் படவில்லை. இது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.

மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.

அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.

முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. 

தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
Sanchi2.jpg
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய பலங்களில் சிலவாகும். பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.

அரசியல் அமைப்பு

இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒருங்கிணைந்த பிரதேசங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன. 

இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

அரசியல்


இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. 

மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 

1977 க்கு முன் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.

1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும்.

இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. 

இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது.

வெளியுறவும், இராணுவமும்


1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. 
 இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும்,
அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது.

இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. சிறப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம்.


அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. 

எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுக்கருச் சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. 

இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றுடன், துணை இராணுவப் படைகள், கரையோரப் பாதுகாப்புப் படை என்பனவும், இராணுவத்தின் கீழ் வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார்.

1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் நடவடிக்கை (Operation Smiling Buddha) எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

மாநிலங்களும் பிரதேசங்களும்


இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. 

ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது.

மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.

இந்திய தேசப்படம்

  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி

புவியியல்


பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமாலய மலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சண்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்கான் பீடபூமி. தக்கான் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பொரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. 

 கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாப்பி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. 

இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.

இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.

இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன.

பொருளாதாரம் 


விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. 

ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது.

மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். 

இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. 

விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

வறுமை நிலை

இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன்
மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள்.இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%  மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது. 
மக்கள்தொகை


உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். பலதரப்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் சாதி, சமயம், மற்றும் மொழி ஆகியவை சமுதாய மற்றும் அரசியல் குழு நிறுவுதலில் முக்கியக் காரணிகளாக உள்ளன.

ஏறத்தாழ 70% இந்தியர்கள் நாட்டுப்புறங்களில் வாழ்கிறார்கள். அண்மைப் பத்தாண்டுகளில் நாட்டுப் புறங்களிலிருந்து மக்கள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்வதனால் நகர்ப்புற
மக்களின் தொகை பெருமளவு அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பெரிய நகரங்களுள், கொல்கத்தா, மும்பாய், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் என்பன அடங்குகின்றன.
ஆப்பிரிக்காக் கண்டத்துக்கு அடுத்தபடியாக, பண்பாடு, மொழி, மரபுரிமை அடிப்படையில் அதிகம் பல்வகைமைத் தன்மை கொண்ட புவியியல் பகுதி இந்தியாவேயாகும்.
மொழி

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுள் அடங்கும். அவை இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக்குடும்பங்கள். தேவநாகரி எழுத்துருவில் வழங்கப்படும் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். எனினும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. 

 அவை கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, மராத்தி, உருது, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, அசாமிய மொழி, காஷ்மீரி, சிந்தி, நேபாளி, கொங்கனி, சமஸ்கிருதம் முதலியன. நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. 

தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். பின்னர் தெலுங்கும் கன்னடமும் செம்மொழிகளாக ஏற்றுகொள்ளப்பட்டன. இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.

சமயம்

உலகின் தொன்மையான மதங்களுள் அடங்கக்கூடிய இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன இந்தியாவில் தோன்றியவை. இவற்றுள் இந்து சமயத்தின் தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாது.

இந்து சமயத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்றான ரிக்வேதம் உலகின் மிகப் பழைய நூல்களுள் ஒன்று. எனினும் இந்தியாவுக்கு வெளியே இதன் பரவல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆனால், பௌத்தம் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இன்றுவரை நிலைபெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து சமயங்கள் வெளிநாடுகளுக்குப் பரவியது ஒருபுறமிருக்க, வெளிச் சமயங்களும் இந்தியாவுக்கு வந்து நிலை பெற்றுள்ளன.

இயேசு கிறித்துவின் சீடர்களில் ஒருவராகிய புனித தோமா கேரள கடற்கரையில் அமைந்துள்ள பண்டைய சேர நாட்டு முசிறிப்பட்டினத்தில் (கொடுங்களூர்) கி.பி. 52/53இல் வந்திறங்கி, கிறித்தவ சமயத்தைப் பரப்பினார் என்றொரு மரபு கேரள கிறித்தவர் நடுவே உறுதியாக நிலைத்துள்ளது. புனித தோமா மயிலாப்பூரில் உயிர்துறந்தார் என்றும் மரபுவழி அறியப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவம் இந்தியாவில் வேரூன்றியிருந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 

பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர் இந்தியாவில் கிறித்தவம் பரவ வழிவகுத்தனர். 1498இல் வாஸ்கோ தெ காமா இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தபின் போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்பினர்.

13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்து அரசுகளையும், பேரரசுகளையும் நிறுவிய இஸ்லாமியர்கள் மூலமாக இஸ்லாம் சமயம் இந்தியாவுக்குள் வளரத் தொடங்கியது.

2001இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி, இந்தியாவில் 80.5% மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். உலகிலேயே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. கிறித்தவம், சீக்கியம், சமணம், அய்யாவழி, பௌத்தம், யூதம், பார்சீகம் ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்படும் மற்ற சமயங்கள். இந்திய மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமியர்; 2.5% கிறித்தவர் உள்ளனர்.

பண்பாடு

இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. 

இவை தவிர நாட்டார் இசை, தமிழிசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.

உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.

கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.

சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.

இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

விளையாட்டு

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு எனினும் கிரிக்கெட் விளையாட்டே மிகப் பிரபலமாக உள்ளது.டென்னிஸ், செஸ், கால்பந்து (குறிப்பாக கேரளா, வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்) ஆகியவை பிரபலமான பிற விளையாட்டுகளாகும். கபடி ( சடுகுடு ), மல்யுத்தம், கில்லி தண்டா ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். 

ஒலிம்பிக் போட்டிகளில், தனி நபர் மற்றும் தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை. ஹாக்கியில் மட்டும் சில முறைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரையில் உலக அளவிலான இரட்டையர் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சதுரங்கம், கேரம், போலோ, ஸ்னூக்கர், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இந்தியாவிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.
Indian national Anthem





Indian Song


குறிக்கோள்

சத்யமேவ ஜெயதே
சமஸ்கிருதம் : வாய்மையே வெல்லும்,
 
பரப்பளவு
மொத்தம் :  3,287,590 கிமீ² (7ஆவது) , 1,269,346 சது. மை , நீர் (%) 9.56,
இணைய குறி  :    .in ,
தொலைபேசி   :    +91,
மின்னழுத்தம்  :     230 V,
அலையெண்    :  50 Hz.

குடிமக்களுக்கான கௌரவம்
  • பாரத ரத்னா
  • பத்ம விபூஷண்
  • பத்ம பூஷண்
  • பத்ம ஸ்ரீ
JAI HIND...



நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால்  மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.