Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
3/13/2013
8/10/2011
ஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்
கறுப்புயூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்றுமுன்புதான் கடந்து போயிருக்கிறது.கறுப்புயூலை என்பதுகாலகாலமாக தென்னிலைங்கையில் வேர்ஆழப்பதிந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்கள்மீதும், தென்னிலைங்கையில் வே லை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள்மீதும் நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் மட்டுமல்ல.அது ஒரு கலவரம் அல்ல.அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு.
8/06/2011
“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்”
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.
8/04/2011
சென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரபரப்பு தகவல்.
சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களசென்னையில் சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.
7/27/2011
இலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? பகிர் தகவல்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வட பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 18 மாகாண சபைகளை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடபகுதியில் இரண்டு மாகாண சபைகளை மட்டுமே பெற்றுள்ளது.
7/16/2011
இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர்.
போன வாரம் , 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விழித்தேழுமா அரசு??
7/13/2011
காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.
6/26/2011
இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா ?
மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று திருச்சியில் ஹோட்டல் பெமினாவில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.
இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார்.
அவர், ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள்
மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது... நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம்....
ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்...எத்தனையோ கஷ்டங்களை
சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்....
தனி நாடு கேட்டார் பெரியார்...சுய ஆட்சி கேட்டார் அண்ணா .... நாங்கள் அப்படி கேட்கவில்லை.... ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....
ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது...ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்... என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே .... எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான்...ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா .....எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.
குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு ... என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு...
சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது...பல கொடுமைகள் நடத்தப்படும்
காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது... இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே
தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..
இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் ... அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள்... ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள்... இதற்க்கு தீர்வு என்ன...சுதந்திரமான தனி ஈழம் தான்... அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும்... என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..
உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள்... ஈழம் எப்போது.... சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள்.... நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ?
வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம்...தன் மானத்தோடு வாழ்வோம்....’’ என்று பேசினார். உதவி நக்கீரன்.
6/21/2011
இரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா?
சமூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல்.
உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:
ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன?
ஐக்கிய நாடுகள் அவை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று. உள்நாட்டுப் போர், நாடுகளுக்கு இடையிலான போர், வறுமை, உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு காரணங்களால் வாழ்வைத் தேடவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் - எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு - இருப்பையும், பிழைப்பையும் தேடி நாடற்று அலையும் மக்களை ஐ.நா. பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது.
எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி, அவர்களுக்கு அகதிகள் என்ற நிலையை அளிப்பதன் மூலம், அவர்களையும் மானுட பற்றோடும், உரிமைகளோடும் அரவணைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் 2000ஆவது ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஒப்புக்கொண்டு ஏற்ற தீர்மானம் எண் 55/76 படி இந்நாள் உலக அகதிகள் நாள் ஆனது.
6/17/2011
அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!
இந்தப் பதிவு நண்பர் வைகை அவர்களின் மனக்குமுறல் .. இதை படிக்கும் போது நமக்கும் இதே மனநிலைதான்.. நண்பர்களே தயவு செய்து முழுவதும் பொறுமையாக படித்து தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
சிங்கிள் மேனுக்கு பொறக்காத சிங்கள நாய்கள்!
குறிப்பு - இந்த பதிவு எப்போதும்போல் சாதாரண மனநிலையில் எழுதிய பதிவல்ல.. சிங்கள நாய்களின் வெறியாட்டங்களை படம்பிடித்த காணொளிகளை பார்க்க வேண்டாம் என்று இரண்டுநாள் கடத்தி.. நேற்று இரவு அதை பார்த்தேன்..
அதன் வெளிப்பாடுதான் இந்த குமுறல்! இதில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருக்கலாம்.. உங்களுக்கு தவறென்று தோன்றினால் இத்தோடு தவிர்த்துவிட்டு சென்று விடுங்கள்! நான் சொல்வது சரி என்று தோன்றினால் தொடர்ந்து செல்லுங்கள்!
அதன் வெளிப்பாடுதான் இந்த குமுறல்! இதில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருக்கலாம்.. உங்களுக்கு தவறென்று தோன்றினால் இத்தோடு தவிர்த்துவிட்டு சென்று விடுங்கள்! நான் சொல்வது சரி என்று தோன்றினால் தொடர்ந்து செல்லுங்கள்!
சிங்கள பேடி நாய்களே!
எம் குலப்பெண்கள் வீரத்தோடு போராடும்போது அவள் துப்பாக்கிக்கு பதில் சொல்லதெரியாத பேடிகள்... இறந்துகிடக்கும் என் சகோதரியின் மார்புகளை அறுப்பேன் என்கிறாய்?.. உனக்கு பாலூட்டிய உன் தாயின் மார்புகளை அறுத்து எறிய வேண்டியதுதானே?
உயிரோடு இருக்கும் வரை என் சகோதரியின் தலை மயிரை கூட தொட முடியாத நீ?.. அவள் இறந்த பிறகு ஆடை களைந்து பார்க்கிறாய்.. வெட்க்கமாக இல்லை?.. பிணத்தோடு புணர்ச்சி கொள்ளும் ------------- மகன்களா?
இது யார் கொடுத்த தைரியம்? உன் ராஜபக்சேயா?.. அவன் மனைவியும் ஒரு நாள் இறப்பாள்.. அவனிடம் சொல்லிவிட்டு அவள் ஆடைகளையும் கலைந்துபார்! அவளுக்கும் அதுதான் இருக்கும்! இன்னும் முனங்கி கொண்டிருக்கிறாள் என்று கேலி பேசும் நாய்களே.. அவள் அப்போது முனங்கியதுகூட வலியால் இருக்காது!
வெறி நாய்களின் வேட்டையை தடுக்காமல் செல்கிறோமே என்ற ஆற்றாமையில் இருக்கும்! இறந்து கிடக்கும் பிணங்களில் கூட இவள்தான் அழகு என்கிறாயே? என் சகோதரிகள் அத்தனை பேரும் அழகுதாண்டா! உன் சகோதரி அழகாக இல்லையென்றால் போய் ராஜபக்சேவிடம் கேள்! அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!
ஏன்டா ராஜபக்சே நாயே? உனக்கு யார்கொடுத்த தைரியம் இது? வேசியாக பிறக்க வேண்டியவன் ஆண்மகனாய் பிறந்துவிட்டாய்! வேசிதான் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டாள்! அதுபோலதான் நீயும்.. சீனா..பாகிஸ்தான்..இந்தியா.. இப்படி உன் நாட்டின் கற்ப்பை கூறு போட்டு விற்கும் வேசி நீ!
இந்த கானோளிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? நீ ஏன் சொல்ல வேண்டும்? அதான் உன் அடிமை இந்தியா இருக்கிறதே? இப்போது பார் நான் உன்னை திட்டுவதற்கு கூட இந்திய இறையாண்மைக்கு ஊறு என்று ஏதோ ஒரு அல்லக்கையோ இல்லை கதர்சட்டையோ பாய்ந்துவரும்! பரதேசிகள்..
நீ வீசும் எலும்பு துண்டை நக்குவதற்கு இந்தியாவில் ஆள் இருக்கும்வரை நீ இப்பிடித்தான் எம் பெண்களின் ஆடைகளை களைந்து கொண்டிருப்பாய்.. நீ என் சகோதரிகளின் பாதங்களை நக்கி கழுவும் காலமும் வரும்! கட்டபொம்மன் காலத்தில் இருந்து தமிழனின் சாபக்கேடு காட்டிக்கொடுப்பது! எட்டப்பனில் இருந்து கருணா வரை! அட அல்லக்கைகளா... நான் இலங்கை கருணாவை சொன்னேன்! பெயரில்கூட என்ன ஒற்றுமை?
தமிழின தலைவரே! நீங்கள் இந்த காணொளிகளை பார்த்தீர்களா? அதுசரி.. உங்களுக்கு ஏது நேரம்? திஹார் ஜெயிலில் ஒரு பூவை வைத்தால் கூட வாடிவிடும்" இது நீங்கள் சொன்னது! ஊழல் செய்து சிறையில் இருக்கும்போதே இப்படி பேசுகிறீகளே? என் சகோதரிகள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் அப்பனுக்கு பிறந்ததுதான் அவள் தவறா?
நானும் நேற்றிலிருந்து பார்க்கிறேன்.. இதைப்பற்றி ஒரு அறிக்கை கூட வரவில்லை.. அது எப்படி வரும்? இதை பற்றி பேசினால் உங்கள் மௌனங்களையும் பேச வேண்டும்! சிங்கள நாய்கள் இப்படி வேட்டையடியதுதான்..
நீங்கள் சொன்ன மழை விட்டும் தூவானம் விடாதா? பார்வைக்கு வந்த தூவானமே இத்தனை என்றால்? பார்வைக்கு வராத கொடுமையெல்லாம் எத்தனையோ? கேவலம் பதவிக்காத்தானே அமைதி காத்தீர்கள்?
அந்த பதவியை நாங்கள் பறித்து விட்டோமே? இனியாவது மௌனம் கலைக்க கூடாதா? ஓ ..மத்தியில் இருக்கிறதோ? அட அல்லக்கைகளா.. எல்லோரும் சொம்பு தூக்கிட்டு போங்க ஐயா டெல்லில இருந்து தீர்த்தம் வாங்கி கொடுப்பாரு.. மறக்காம வாங்கிட்டு வாங்க!
நீங்கள் சொன்ன மழை விட்டும் தூவானம் விடாதா? பார்வைக்கு வந்த தூவானமே இத்தனை என்றால்? பார்வைக்கு வராத கொடுமையெல்லாம் எத்தனையோ? கேவலம் பதவிக்காத்தானே அமைதி காத்தீர்கள்?
அந்த பதவியை நாங்கள் பறித்து விட்டோமே? இனியாவது மௌனம் கலைக்க கூடாதா? ஓ ..மத்தியில் இருக்கிறதோ? அட அல்லக்கைகளா.. எல்லோரும் சொம்பு தூக்கிட்டு போங்க ஐயா டெல்லில இருந்து தீர்த்தம் வாங்கி கொடுப்பாரு.. மறக்காம வாங்கிட்டு வாங்க!
அன்னை சோனியாவே! இந்தியாவுக்காக உயிர் துறந்தார் என் புருசன்னு சொல்லியே.. ஒரு இனத்தையே அழிக்க துணை போனதை எப்படி எடுத்துக்கொள்வது? உமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர்கள சொன்னேன்! ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்கு மேல உச்சா போனாக்கூட சொல்லிட்டு போற நல்லவர்கள்! இந்த காணோளிக்கும் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்!
உலக நாடுகளே விழித்துக்கொண்டு கண்டிக்கும்பொழுது ராஜபக்சேவுக்கு தடுக்கு தூக்க வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் இந்திய பாதுகாப்பு என்பார்கள்.. 500 இந்திய மீனவர்களை இதே இலங் கைதான் கொன்றது... நீங்கள் எங்களை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்? அந்த பக்கம் சீனா அணைகட்டுவதை கண்டிக்க வக்கில்லாமல் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்! நீங்கள் எதிர்காலத்தில் எங்களை பாதுகாப்பீர்கள் என்று நம்பிக் கை இல்லை! ஆனால் நிழல் காலத்தில் எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள்.. அது போதும்!
கடைசியாக தமிழக முதல்வரே! உங்கள் தீர்மானத்தை வரவேற்கிறோம்.. இருண்டுபோன வாழ்வில் இது ஒரு வெளிச்சப்புள்ளி.. ஆனால் இந்த வெளிச்சத்தையும் காகிரசு டன் கூட்டணி என்ற காற்றை வைத்து அணைத்து விடாதீர்கள்! போர் என்றால் பொது மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று சொன்னவர்தான் நீங்கள்.. ஆனால் இன்றைக்கு உங்களை நம்பித்தான் ஆகவேண்டும்..வேறு வழியில்லை! காங்கிரசுடன் கூட்டணி என்று சின்ன ஊசலாட்டம் இருந்தால் தயவுசெய்து அந்த காணொளிகளை பாருங்கள்..பிறகு முடிவெடுங்கள்!
ஊழல் செய்த பணத்தில் ஊடகங்கள் வைத்திருந்தால் இப்போது தமிழ் நாட்டில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்! மன சாட்சி இல்லாத மர மண்டைகள்! வட இந்திய ஊடகங்களை பத்தி சொல்லவே வேண்டாம்.. நடிகை உள்ளாடை போடலைனா ஒன்றை பக்கம்.. சமாதில குத்தாட்டம் போட்டா கவர் ஸ்டோரி!
ராகுல் காந்தி குடிசைல சாப்ட்டா ஸ்கூப் நியூஸ்!
ராகுல் காந்தி குடிசைல சாப்ட்டா ஸ்கூப் நியூஸ்!
அட பதர்களா? ஹிட்லர் கொன்னாரு.. கொதருனாருன்னு வரலாற படிக்கிறீங்களே? அத ஒருத்தன் அப்பிடியே செய்யிறானே அத ஏன்டா எவனுமே சொல்ல மாட்டேங்கிறிங்க? கருப்பு பணம் வச்சிருக்க பத்திரிக்கைகாரன் கருப்பு பணத்த மீட்ப்போம்னு நியூஸ் போடறான்! உங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்கடா.. என் சகோதரிகளின் இந்த கோலத்த பார்த்துட்டு முடிவெடுங்கடா... !
இதை பார்த்துட்டு எந்த அல்லக்கை.. கதர்சட்ட வந்து குதிச்சிங்க.. இந்த பதிவுல இல்லாத அசிங்கமான வார்த்தையெல்லாம் சேர்த்து திட்டுவேன்! போங்கடா..போய்.. உன் வீட்ல உள்ள பொம்பள புள்ளைகலாவது பத்தரமா பார்த்துக்கங்க!
6/14/2011
ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி விரக்தியுடன் கேட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது மத்திய அரசில் அங்கும் வகித்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று ஈழத் தமிழர்கள் கூக்குரல் எழுப்பியபோது செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் இருந்தார் கருணாநிதி.
தற்போது இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 1977 ஆம் ஆண்டு சென்னையிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி நடத்தினேன், 1983ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறும் கருணாநிதி, ஆட்சியில் இருந்தபோது 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம் உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று கூறி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணாநிதி, சில மணி நேரத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் என்று சொல்லிவிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடமே பாதுகாப்பு வளையத்தில் இருந்த தமிழ் மக்களை அந்நாட்டு இராணுவம் தடை செய்யப்பட்ட குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து வருகிறதே என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, “மழை விட்டுவிட்டது, ஆனால் துவானம் விடவில்லை” என்றார்.
சிந்தியுங்கள் உறவுகளே.......
5/24/2011
ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(வீடியோ)
ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சினர். (வீடியோ).
இந்த வீடியோவை ஒரு நண்பர் எனக்கு கொடுத்தார் . இதை பார்க்கும் போது எனக்கு பதிவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும்...
இந்த வீடியோவை ஒரு நண்பர் எனக்கு கொடுத்தார் . இதை பார்க்கும் போது எனக்கு பதிவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும்...
5/02/2011
கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!
இந்த செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...
நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.
4/28/2011
40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு: ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு
இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது.
இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.
தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ள வில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.
அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.
4/27/2011
இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
"போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.
அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
இலங்கையில் இறுதி கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட நம் இரத்த சொந்தங்களின் புகைப்படங்கள் தற்போது இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்துள்ளது.
4/24/2011
தமிழக மீனவர் உயிரை விட சிறிலங்க அரசின் நட்பு பெரியது - இந்திய அரசு !
இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், “மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
“4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் (நெடுந்தீவில்) கரை ஒதுங்கியுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம். இதுவரை போதிய தகவல்கள் கிடைக்கவில்லை, மேற்கொண்டு தகவல்கள் கிடைக்குமா என்பதை அறிய தமிழக அரசின் தலைமை செயலருடன் பேசியுள்ளேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
நிருபமா ராவின் வார்த்தைகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும், நாளிதழ்களில் படிப்பவர்களும் அவர் மிக அக்கறையுடன் பேசுகிறார் என்றே முடிவு செய்வார்கள். ஆனால், அவருடைய வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே, எவ்வளவு லாவகமாக அவர் பிரச்சனையை இழுத்தடிக்கும் உத்தியை கையாள்கிறார் என்பது புரியும்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யப்பட்டபோது, அவர்களைத் தேட மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. அவர்களில் ஒரு மீனவர் உடல் 4 நாட்ளுக்குப் பிறகு இலங்கையை அடுத்த நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த உடலில் வெளியிலும் உட்பகுதியிலும் காயங்கள் இருந்தன. விக்டர்ஸ் என்ற அந்த மீனவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்டார் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.
“4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் (நெடுந்தீவில்) கரை ஒதுங்கியுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம். இதுவரை போதிய தகவல்கள் கிடைக்கவில்லை, மேற்கொண்டு தகவல்கள் கிடைக்குமா என்பதை அறிய தமிழக அரசின் தலைமை செயலருடன் பேசியுள்ளேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
நிருபமா ராவின் வார்த்தைகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும், நாளிதழ்களில் படிப்பவர்களும் அவர் மிக அக்கறையுடன் பேசுகிறார் என்றே முடிவு செய்வார்கள். ஆனால், அவருடைய வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே, எவ்வளவு லாவகமாக அவர் பிரச்சனையை இழுத்தடிக்கும் உத்தியை கையாள்கிறார் என்பது புரியும்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யப்பட்டபோது, அவர்களைத் தேட மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. அவர்களில் ஒரு மீனவர் உடல் 4 நாட்ளுக்குப் பிறகு இலங்கையை அடுத்த நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த உடலில் வெளியிலும் உட்பகுதியிலும் காயங்கள் இருந்தன. விக்டர்ஸ் என்ற அந்த மீனவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்டார் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு கரை ஒதுங்கிய மீனவர்கள் உடல்களிலும் காயங்கள் இருந்தன. ஒரு மீனவரின் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்தது. ஆக, அவர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அப்படமாக தெரிகிறது. ஆனால், நிருபமா என்ன கூறுகிறார் என்று பாருங்கள்; “4 மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று கூறுகிறார்.
டெட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், கில்ட் என்றே சொல்லியிருக்க வேண்டும். அதற்கான ஐயத்திடகிடமற்ற ஆதாரங்கள் கரை ஒதுங்கிய உடல்களில் இருந்தது. ஆனால், டெட் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். டெட் என்றால்தான் துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தை பொருந்தும், சித்தரவதை என்றால் அந்த வார்த்தை பொருந்ததாது அல்லவா?
இது ஒரு துருதிருஷ்டவசமான சம்பவம் அல்ல, மாறாக, திட்டமிட்ட படுகொலை. இதையே ஒப்புக்கொள்ளாமல் வார்த்தைகளால் மறைக்கிறது டெல்லி!
இந்த மீனவர்கள் 4 பேரும் கொல்லப்பட்டது இலங்கை கடற்பகுதியில் என்பது மீனவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறிலங்க அரசிடம் விளக்கம் கேட்போம் என்று...
இது ஒரு துருதிருஷ்டவசமான சம்பவம் அல்ல, மாறாக, திட்டமிட்ட படுகொலை. இதையே ஒப்புக்கொள்ளாமல் வார்த்தைகளால் மறைக்கிறது டெல்லி!
இந்த மீனவர்கள் 4 பேரும் கொல்லப்பட்டது இலங்கை கடற்பகுதியில் என்பது மீனவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறிலங்க அரசிடம் விளக்கம் கேட்போம் என்று...
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள். சிறிலங்க கடற்படை சுட்டுக்கொன்றது என்று மீனவர்கள் கூறினால், அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் சிறிலங்க கடற்படை படகுகளோ அல்லது கப்பல்களோ செல்லவில்லை என்றுதான் ஒவ்வொரு முறையும் சிறிலங்க அரசு கூறுகிறது. பிறகு, அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து புலனாய்வு செய்யப்படும் என்று சிறிலங்க அரசு இந்தியாவிற்குத் தெரிவிக்கும். அதை இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும். அத்தோடு முடிந்தது. அதற்குப் பிறகு மற்றொரு மீனவர் கொல்லப்படுவார், அதற்கு இதே வியாக்யானம் சொல்லப்படும். இந்த அரசின் அயலுறவுச் செயலரும் புன்னகை பூத்த முகத்துடன் அதனை ஏற்றுக்கொள்வார்.
கழுத்தில் சுறுக்குப்போட்டு, கடல் நீரில் இழுத்து ஜெயக்குமார் என்ற மீனவரை சிறிலங்க கடற்படையினர் கொன்றார்களே, அதற்கு இதுநாள்வரை சிறிலங்க அரசு விளக்கம் ஏதும் தந்துள்ளதா? அதற்கு முன்னர் வீரபாண்டியன் என்ற மீனவர் கொல்லப்பட்டாரே அதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்துக் கூறினார்களா?
எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஒருமுறை கூட, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்திய அரசும் அதனை ஏன் என்று கேட்கவில்லை. ஜெயக்குமார்
கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பினால் கொழும்பு சென்ற நிருபமா, அந்நாட்டு அயலுறவு செயலருடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் கூட ‘அது குறித்து விசாரிக்கப்படும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே ஒருபோதும் சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்தியாவும் வற்புறுத்தவில்லை. அதனால்தான் மீனவர்கள் படுகொலை தொடர்கதையாகிறது.
தங்கள் கண் முன்னால் சக மீனவர்கள் சுடப்படுவதை பார்த்துவிட்டு, கரை திரும்பிய மீனவர்கள் புகார் மனு அளித்தபோதே கண்டுகொள்ளாத டெல்லி, ஒரு படகில் சென்ற 4 மீனவர்களும் சாட்சிகளின்றி கொல்லப்பட்டதற்கா விளக்கம் கேட்கப்போகிறது?
செத்த மீனவரின் குடும்பத்திற்கு ‘உடனடியாக’ ரூ.5 இலட்சம் கொடுத்து தனது மனிதாபிமானப் பணியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் முடித்துக்கொள்கிறார். அந்தச் ‘சம்பவம்’ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று சொல்வதுடன் மத்திய அரசின் பொறுப்பு முடிந்துவிடுகிறது. மீனவர் படுகொலை மட்டும் தொடர்கதையாகத் தொடர்கிறது.
ஏனென்றால், தமிழ் மீனவனின் உயிரை விட இந்திய அரசுக்கு சிறிலங்க அரசின் நட்பு பெரியது.
4/20/2011
தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை!?
இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன. அவர்கள் விசாரணையை முடித்து 196 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளனர்.
இந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இருதரப்பினருமே போர் விதிமுறைகளை மீறினார்கள். இருதரப்பும் போர் குற்றங்களை செய்தன என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இறுதிப் போரின்போது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் தப்பி செல்ல முடியாமல் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிரைப்பற்றி கவலைப் படாமல் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இரு தரப்பினரும் தாக்கினார்கள்.
* இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
* தாக்குதல் நடத்தப்படாத இடம் என அறிவித்து விட்டு அந்த பகுதிகளிலும் குண்டு வீசினார்கள்.
* போரில் தடை செய்யப்பட்ட குண்டுகளும், ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. மக்கள் உயிரிழப்பை பற்றி கவலைப்படாத அரசு குண்டு வீச்சை ஊக்கப்படுத்தியது.
* ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை பொதுமக்களுக்கு உதவி செய்ய விடாமலும், சிகிச்சை அளிக்கவிடாமலும் ராணுவம் தடுத்து விட்டது.
* அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பெரிய குண்டுகளை வீசி தகர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை.
* போரில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதால் பத்திரிகை நிருபர்கள் அங்கு செல்லவிடாமல் தடுக்கப் ட்டனர். பொதுமக்கள் இறப்பு குறித்து விமர்சனம் செய்தவர்கள் கடத்தப்பட்டனர். மிரட்டப்பட்டனர்.
* ராணுவம் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
* இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் சிக்கி கொண்டு பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். பெண்கள், குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.
* ஏராளமான தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்தனர். அவர்கள் பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் சிலரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கொன்றனர்.
* போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை குறுகிய பகுதிகளுக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்த பெண்களும் கற்பழிக்கப்பட்டனர்.
* வெளியே வந்த மக்களை விடுதலைப் புலிகள்தானா? என கண்டறிய எந்த அளவு கோளையும் வைக்கவில்லை. சந்தேகப்பட்ட அனைவரையும் அழைத்து சென்று சித்ரவதை செய்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள்.
* போர் பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்தனர்.
* விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட நபர்களை ராணுவத்தினர் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
* போரில் தப்பி வந்த மக்களுக்கு போதிய வசதி செய்து தராமல் கடும் கஷ்டங்களை கொடுத்தனர். சித்ரவதைகளும் நடந்தன.
* போரில் காயம் அடைந்து வெளியே தப்பி வந்தவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வில்லை.
* ராணுவ நீதிமன்றங்கள் ராணுவத்தினர் அத்துமீறல் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உதவி மாலை மலர்
உதவி மாலை மலர்
Subscribe to:
Posts (Atom)






































