இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது.
இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.
தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ள வில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.
அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.
மாமிசம் தின்னும் மிருகங்கள்.. வேற என்ன சொல்ல..
ReplyDeleteபோன உயிர்கள் திரும்ப போவதில்லை..
இவனுங்க புத்தியும் மாற போவது இல்லை..
http://karadipommai.blogspot.com/
ஆணவம்.. அழிவுக்கே...
ReplyDeleteஅவனுகளுக்கு கொழுப்பு அதிகமா இருக்கு கொஞ்சம் ஆப்பு வச்சதான் அடங்குவானுங்க
ReplyDeleteசந்தைக்கு புதுசு...
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html
கொத்துக் குண்டு
ReplyDeleteஷெல்
ReplyDelete50 கலிபர்
ReplyDeleteபீரங்கி
ReplyDeleteஏ கே 47
ReplyDeleteஏ கே எல் எம் ஜி
ReplyDeleteநச்சு வாயு
ReplyDeleteகிபிர்
ReplyDeleteசுப்பர் சொனிக்
ReplyDeleteஅன்ரனோவ்
ReplyDeleteமிக் 27
ReplyDeleteபுக்காரா
ReplyDeleteபல் குழல்
ReplyDeleteரொக்கட் லோஞ்சர்
ReplyDeleteடொங்கான்
ReplyDeleteபிஸ்டல்
ReplyDeleteமைக்ரோ பிஸ்டல்
ReplyDeleteசினைப்பர்
ReplyDeleteஇம்ப்புட்டு ஆயுதங்கள் மூலமாயும்
ReplyDeleteஅப்பாவிகளை கொன்னு போட்டு, நாம பயங்கரவாதிகளை மட்டும் தான் யுத்தத்தின் மூலம் கொன்றோம், பொது மக்களைப் பாதுகாத்தோம் என்று அறிக்கை விடும் நம்ம சிகப்பு சால்வைக்காரங்களுக்கு இந்த அறிக்கை எல்லாம் தூசு சகோ.
இந்த் அறிக்கையினையும், அவர்களின் இனவாத திமிர் மூலம் எப்பூடியாவது அவோய்ட் பண்ணி தப்பிடுவாங்க.
ReplyDeleteஅநீதிகள் தண்டிக்கப்பட்டால்த்தான் வாழ்வியிலின்மீது உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அதேவேளை அந்த பிரச்சினைகளுக்கான காரணத்தை அறிந்து ஒரு நிரந்தரமான நீதியான தீர்வை முன்வைப்பதே இப்போது சர்வதேசத்தின் கடமை.
ReplyDeleteஇந்தியாவின் நிலை தெரியவேண்டும். சர்வதேசம் இன்னும் நேர்மையாக விடை சொல்ல வேண்டும்.
ReplyDeleteவெளிநாடு எங்கையும் போறதில்ல உள்ளூரிலேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருக்கிறார்கள் அந்த திமிர்ல பேசறானுங்க. வெளியில வந்து பாக்கட்டும் அந்த ............... பசங்க
ReplyDeleteஏன் இப்படி இருக்காங்களோ ? அவுங்க பண்ணினது ரொம்ப சரின்னு மறுபடி மறுபடி பேட்டி வேற குடுக்குறாங்க ? கொடுமை
ReplyDeleteஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடைங்கிடுவே மனிதா...........!
ReplyDeleteகொய்யால திமிரை பாரு, எட்றா அந்த வீச்சருவாளை......
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇதற்கான விடை தற்போது இந்தியாவிடம் இருக்கிறது.இந்தியாவின் முந்தைய நிலைப்பாடு நாம் அறிந்த ஒன்று என்பதால் நமக்கு சாதகமான நிலையை எடுக்கும் என எதிர்பார்க்க இயலாது.ஆனால் இலங்கைக்கு சாதகமாய் எடுக்கும் நிலையால் உலகரங்கில் இந்தியாவின் பெயர் கெடும் என்பதோடு தமிழகத்தின் நிரந்தர எதிரி காங்கிரஸ் என்பதை இன்னும் அதிகமாக உறுதி செய்யும்.
ReplyDeleteமுந்தைய பின்னூட்டம் மாதிரியெல்லாம் போடக்கூடாது,அண்டை நாடுகள் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று புதிய ஐ.டி சட்டங்களை இந்தியா செயல் முறைக்கு கொண்டு வருதாம்.கருத்துரிமையும்,சுய சிந்தனையும் மாந்தர்க்கு அழகல்ல:)
ReplyDeleteஅடங்கமறுக்கும் இலங்கை ரத்த வெறியர்களுக்கு, இந்தியா துணை நிற்கும் என்ற செய்திகள் தான் மிகவும் கோபப்படுத்துகிறது.
ReplyDeleteFirst we unite . . . Them only we expect some fruitful solution for Eelam tamil.
ReplyDelete