நான்
தூங்கும்போது
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து இம்சிக்கிறது...!
நினைவில்
வந்து இம்சிக்கிறது...!
தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?
முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!
படிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!
எத்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!
எத்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...
இனி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?
aduththa nimidam nammudayathaa, illai vithiyin vasamaa?
ReplyDeleteஏன்யா காலைல இப்படி அழுவாச்சி கவித........மாப்ள இருந்தாலும் இது வலி நிறைந்த அந்த குடுபத்துக்கு சமர்ப்பிப்போமாக..........
ReplyDeleteNalla Vasanam sorry Kavithai eazhuthurika karun. . .
ReplyDeleteகருண் காலைலயே கவிதை.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteMay 13 um eppati than azhuthu kavithai poda poreka
ReplyDeleteரசித்த மலைக்க வைத்த கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ஒரு இளைஞனின் கண்ணீர் க(வி)தை.
ReplyDeleteமலர்ந்தும் மலராத அந்த பாதி மலருக்கு எனது அஞ்சலி
ReplyDeleteதெரிந்தவர் மரணம் தான்
ReplyDeleteபாதிக்குமென்று
யார் சொன்னது?
.....சரியான கேள்வியும் கருத்தும்.
superb!
ReplyDeleteஉணர்ச்சிப் பிரவாகமாய் ஒரு கவிதை!
ReplyDeleteநன்று,கருன்!
நல்ல கவிதை... உணர்ச்சிகரமான வரிகள்
ReplyDelete//எத்தனை நம்பிக்கையோடு
ReplyDeleteஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...//
உண்மைதான்!!! விபத்தில் உயிர் விடுபவனின் சொந்தங்களின் நிலை கடினம்தான்
நல்லாருக்கு கருன்..
ReplyDeleteமனதை உலுக்கிய கவிதை.
ReplyDelete//எத்தனை மனிதர்களோடு
ReplyDeleteஅந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!//
ஐயோ.....
ஒன்னுமே எழுத தோணவில்லை, மனசுக்கு பாரமாக இருக்கு....
ReplyDeleteகவிதை சூப்பர் வலை பதிவின் டோனி என்ற பட்டத்த உங்களுக்கு சுட்டுகிறேன்
ReplyDeleteபெயரில்லா சொன்னது…
ReplyDeleteகவிதை சூப்பர் வலை பதிவின் டோனி என்ற பட்டத்த உங்களுக்கு சுட்டுகிறேன்
-இதுல உள்குத்து ஏதும் இருக்கா?
இல்ல அண்ணை உள் குத்து ஒன்றுமே இல்ல உங்க பதிவு நான் நெடுநாள வாசிக்கிறனான் அதனால் தான் சொன்னான் வாழ்த்துக்கள் நல்ல இருக்கு உங்க பதிவுகள் எல்லாமே சூப்பர்
ReplyDeleteரொம்ப அருமையான கவிதை கருன், அப்படியே உணரமுடிகிறது!
ReplyDeleteஅன்பின் கருண் - அருமை அருமை - கவிதை அருமை.நம்முடைய முடிவு நம் கையில் இல்லை. அதிலும் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் - துயரம் தாளாது. பரிதாபப் படுவதை விட வேறொண்றும் செய்ய இயலாது கருண். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகவிதை மனதை பாதித்தது..!
ReplyDeleteஉங்களுக்கு ஒரு கோடி வாழ்த்துக்கள் கருண்.. !
உணர்வுகளை சுமந்த வரிகள்
ReplyDeleteவார்த்தைகளின் தொடுப்பு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது . வலிகள் அதிகம்
ReplyDelete