Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/13/2011

கண்ணீர் விட்டு அழுதார் வடிவேலு !?


ழக்கம்போல வேடந்தாங்களில் மாலை ஒரு செய்தி உங்களுக்காக...

நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார் என நடிகர் வடிவேலு பேசினார்.  விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் வடிவேலு நேற்று  முன்தினம் பிரசாரம் செய்தார். 

அப்போது வடிவேலு பேசுகையில், ‘‘எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும்போது வடிவேலு  அழுதார். 

மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கூறி வடிவேலு அழுதார். இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என நா தழுதழுக்க கூறினார். 

27 comments:

  1. கலைஞர் காப்பீட்டு திட்டம் - helped my Brother also.
    Good Scheme for Poor/Rural village people.

    ReplyDelete
  2. சினிமாவை விட மேடையில் நல்லா நடிச்சிருப்பார் போலும்.

    ReplyDelete
  3. அந்த காப்பீட்டு திட்டத்தின் கார்டை காட்டியும் சிகிச்சை தராத ஆஸ்பத்திரியும் இருக்கு தெரியுமா....

    ReplyDelete
  4. ரைட்டு நல்ல திட்டம் தான் .................

    ReplyDelete
  5. நடிப்புக்கு வடிவேலுவை மிஞ்ச முடியுமா...

    ReplyDelete
  6. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    நடிப்புக்கு வடிவேலுவை மிஞ்ச முடியுமா...///////////
    மக்கா என்னதான் நடிச்சாலும் பாமரமக்கள் கிட்ட 108 திட்டத்தை இவர் அளவுக்கு யாரும் கொண்டு சேர்க்கவில்லை .............

    ReplyDelete
  7. enna solla andha comedianin sondha sogam kooda nadippagi ponathe? athai oru katchi pracharathil sonnathaal avarin andha yelmai naatkal, appodhu patta kastangal nadippa ungallukku, ithu nallave ille so called padicha blog wrtierskku. Padichavan pattai mattum illa ellame keliyum kindalumma pakkura intha kodumayai enna solla

    ReplyDelete
  8. வடிவேலு நாரவாய் என்று நிருபித்துவிட்டான். அவனை சொல்லி குற்றமில்லை. சேர்ந்த இடம் அப்படி.
    இதையெல்லாம் பார்க்கும்பொழுது, நன்றி கெட்டவன், பச்சோந்தி என்று தெரிகிறது.

    ReplyDelete
  9. Raja=Theking சொன்னது…

    Where is your Election duty --- po in thirunallur

    ReplyDelete
  10. பெரியார்,அண்ணா போன்றோர் தண்ணீர் விட்டு வளர்த்த இயக்கம்,இன்று வடிவேலு கண்ணீர் விட்டால்தான் வளருவேன் என்கிறது.நான் வடிவேலுவை குறை சொல்லவில்லை,கலைஞரை விட்டால் அந்த இயக்கத்தில் உணர்ச்சிகரமாக பேசக்கொடிய நல்லப்பேச்சாளர் இல்லை.ஸ்டாலினுக்கும்,ஜெ க்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ஸ்டாலின் எழுதிவைத்துப் படிப்பதில்லை அவ்வளவுதான்.

    ReplyDelete
  11. ஒரு மாதம் கழித்து இன்னும் அதிகமாக அழவேண்டுமோ என்னவோ!

    ReplyDelete
  12. கஷ்டம்தான் பாவம்.

    ReplyDelete
  13. 108 சேவையால் ஏழைகள் பெரும் பயனடைந்தது உண்மையே!

    ReplyDelete
  14. வடிவேலு...இதுக்கு...நீ....சரிபட்டு...வரமாட்ட...

    ReplyDelete
  15. ங்கொக்காமக்கா.... இது ஒலகநடிப்புடா சாமி......!

    ReplyDelete
  16. அடடா,தந்தையை காப்பாற்ற முடியாத தனயன்.ராஜாஜி மருத்துவமனை
    அன்றைக்கு இல்ல போலிருக்கு.

    ReplyDelete
  17. வாங்கிய சம்பளத்துக்கு மேல நடிக்காரே!

    ReplyDelete
  18. நான் அந்த பேச்சை நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை. அப்படி இருக்கும்போது ஒரு தனி மனிதனின் உணர்வை குறை சொல்வதில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை.ஒருவேளை நிஜமாவே வடிவேலு தன் தந்தையை நினைத்து அழுதிருந்தால்??

    ReplyDelete
  19. காப்பீட்டுத் திட்டத்தையும்,அதன் பின்னுள்ள இன்சூரன்ஸ் கொள்ளைகளையும் மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.அமெரிக்காவில் இது தோல்வியடைந்த திட்டம்.வளைகுடாவில் இதே திட்டத்தை சுமார் ரூ7500க்கு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி வரும் காலத்தில் 20000க்கு உயர்த்தப் போகிறார்கள்.இதே நிலை தமிழகத்திலும் எதிர்காலத்தில் வரும்.

    ReplyDelete
  20. நடிகருக்கு என்ன சொல்லியாதரனும் !

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  21. எல்லாமே நடிப்புதான் பாஸ்

    ReplyDelete
  22. வடிவேலுவின் ஆரம்ப கால குடும்ப நிலை பரிதாபகரமானது ஆனால் அதை கலைஞர் காப்பீட்டு திட்டத்துடன் இணைத்து பேசியது மிகவும் வேடிக்கையானது.கைப்புள்ளைக்கு தான் தெரியும் எவளவு காசு கைமாறியது எண்டு இந்த அழுகைக்கு

    ReplyDelete
  23. @Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள்

    If they would improve the facilities in Government Hospital with this fund, more people can benefit it.

    However, staff should be sincere and honest.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"