இன்று 14-வது சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களைத் தமிழகம் தேர்ந்தெடுக்க இருக்கும் நாள். 234 சட்டப்பேரவைக்கான இடங்களுக்கு 2,748 பேர் களமிறங்கி இருக்கிறார்கள்.
அசாமில், 75 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இது, மிகவும் பாராட்டத்தக்கது. 75 சதவீத மக்கள், தங்கள் கடமையைச் செவ்வனே செய்துள்ளனர். 25 சதவீத மக்கள், தங்களை மாக்கள் என நிரூபித்துள்ளனர்.தேர்தல் கமிஷனும், ஊடகங்களும் நினைவூட்டல் செய்த பின்பும், ஓட்டளிக்க முன் வராதவர்கள், மிருகங்களே!!!
நல்லவர்கள் யாரும் போட்டி போடவில்லையே, களத்தில் இருக்கும் இரண்டு பேருமே நல்லவர்கள் இல்லையே, இதற்கு அது மாற்று, அதற்கு இது மாற்று என்று நாங்கள் வாக்களித்து ஓய்ந்ததுதானே மிச்சம்... என்று 13 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்து சலித்தபடி 14வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.
நல்ல தலைவர்களை உருவாக்குவதும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், நல்லவர்களுக்குத்தான் வாக்களிப்பது என்று தீர்மானிப்பதும் வாக்காளர்களின் கையில்தானே இருக்கிறது? தோல்வி அடைவார் என்று கருதப்படும் நல்லவர், வல்லவராக இல்லாவிட்டாலும் வெற்றியடையச் செய்யும் சக்தி உங்களது வாக்குச் சீட்டுக்கு உண்டே, அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?
மாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை. தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவதற்கு ஒப்பானது. மத்தால் தயிர் கடையும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி கயிற்றை இழுத்துக்கொண்டே இருந்தால், உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தாலும், மக்களாட்சி முறை தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால், நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைத் தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்!
ஓட்டு போட்டு நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.....
வாக்களிக்க கிளம்பிட்டேன்..
ReplyDeleteவாக்களிக்க ஊருக்கு கிளம்பிட்டேன்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteமாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை.
ReplyDeleteஓட்டு போட்டு நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.
<<<<வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது
ReplyDeleteகுட்
ஓட்டு போட்டு நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.
ReplyDeleteவாக்களித்து விட்டேன்,அங்கும்,இங்கும்!
ReplyDeleteசரியான நெத்தியடி பதிவு
ReplyDeleteஓட்டு மட்டும் விற்காம இருந்துச்சு அதுக்கும் விலை வெச்சிட்டானுக
ReplyDeleteநிச்சயம் ஒரு நல்ல தலைவர் நமக்கு கிடைப்பார்
ReplyDeleteஇங்கு மட்டும் 3 ஓட்டு போட்டுட்டேன்
ReplyDeleteமறக்காமல் ஓட்டு போடுங்கள்...
ReplyDeleteமாப்ள 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி!
ReplyDeleteவிற்காதேன்னு நாமதான் சொல்லிகிட்டிருக்கோம்.
ReplyDeleteவிற்பனைக்கும் ஆளிருக்கு!வாங்கவும் ஆளிருக்குது.
மெல்ல எறியும் சிறுகற்கள்.அடுத்த முறை சிறு சலனத்தை ஏற்படுத்துகிறதா எனப் பார்ப்போம்.
கரெக்ட்டா நச்சுன்னு சொல்லிட்டீங்க........!
ReplyDelete